Home Remedies to Get Rid of Black Neck

Discussion in 'Beauty Tips' started by saravanakumari, Dec 4, 2017.

  1. saravanakumari

    saravanakumari Administrator Staff Member Manager Manager Manager

    Joined:
    Nov 12, 2014
    Messages:
    2,191
    Likes Received:
    998
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    home maker
    Location:
    villupuram
    முகம் ஒரு நிறம் ! கழுத்து ஒரு நிறம் ! இது ஏன் ?

    பலருக்கு முகம் ஒரு நிறத்திலும், கழுத்துப் பகுதி ஒரு நிறத்திலும் இருக்கும். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், ஹார்மோன் குறைபாடுகளே மிக முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது. இதுமட்டுமில்லாமல் நம்மில் பலர், முகத்தை பராமரிக்க கொடுக்கப்படும் முக்கியத்துவம் ஏனோ கழுத்துப் பகுதியை பராமரிப்பதில் கவனம் செலுத்துவதில்லை. ஆனால் பல நேரங்களில் முகத்தைவிட கழுத்துப்பகுதியே அதிக அளவு பாதிப்படைகிறது. குறிப்பாக வாகனங்களில் பயணிக்கும் போது அசுத்தக் காற்று மற்றும் தூசிகள் சேர்வது கழுத்தில்தான்.

    எனவே கழுத்துப் பகுதியை முறையாக பராமரித்தால் மட்டுமே தோல் கருமை அடைவதையும், மற்ற தோல் பிரச்னைகளில் இருந்தும் நம் சருமத்தை பாதுகாக்க முடியும். வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எளிய இயற்கை வழியில் உங்கள் கழுத்தின் நிறத்தை பராமரிக்க முடியும்.

    1. உங்கள் உடலில் கழுத்துப் பகுதியானது மற்ற பாகங்களை விட மிக விரைவாக பழுப்பு நிறத்தை அடையும். வெளியே செல்லும் போது கழுத்தில் சிறிதளவு சன் கிரீன் தடவலாம்.
    2. தூங்கும் போது மென்மையான சுத்தமான தலையணைகள் பயன்படுத்தவும்.
    3. வாரம் 3 முறை, உங்கள் கழுத்துப் பகுதியில் பாலோடு பாதாம் எண்ணெயை கலந்து தடவி அதை சில நிமிடங்கள் கழித்தும் நீரால் சுத்தம் செய்யவும்.
    4. குளிக்கும் முன் உங்கள் கழுத்தில் வாஸ்லின் தடவிய பிறகு சில நிமிடங்கள் கழித்து குளிக்கவும்.
    5. ஒரு வாழைப்பழத்தை பிசைத்து கூழாக மாற்றி அதை பாலுடன் கலந்து முகத்தில் மற்றும் கழுத்தில் தடவலாம். பிறகு 10 முதல் 20 நிமிடங்களுக்கு கழித்து அதை சுத்தம் செய்யவும்
    6. எலுமிச்சை மற்றும் தக்காளி சாறு உங்கள் கழுத்துப் பகுதியை பளிச்சிட உதவும். மற்றும் தேவையற்ற வடுக்களை மறைக்க உதவும்.
    7. கழுத்து நிறத்தை பராமரிக்க ஆலோ வேரா ஜெல் பயன்படுத்தலாம்.
    8. கழுத்தை பராமரிக்க எந்த வடிவிலும் வெள்ளரி பயன்படுத்தலாம்.
     

Share This Page