Lashmiravi's Serial Story Nesame Suvaasamaai | நேசமே சுவாசமாய் ..!!

Discussion in 'Lashmi Ravi Novels' started by lashmiravi, Jul 5, 2015.

  1. lashmiravi

    lashmiravi Active Member

    Joined:
    Aug 16, 2014
    Messages:
    189
    Likes Received:
    238
    Trophy Points:
    43
    Gender:
    Female


    ஹாய் ஹாய் ப்ரிண்ட்ஸ்:Friendsforever:



    அனைவர்க்கும் இனிய காலை வணக்கம்...


    இதோ எனது ஆறாவது கதையுடன் வந்து விட்டேன்.....


    கதையின் தலைப்பு : அன்புள்ள மான்விழியே!!!!!!!!



    கதை :

    உயிரில் பூக்கும் காதல் உணர்வின் ஆழ்நிலை! ஆதியும் அந்தமும் இல்லாத இதன் ஜனனத்தை ஆராய நினைத்தால் முடிவு சூன்யம் தான்.
    இருவர் ஒன்றாகி ஒருவர் என்று ஆனபிறகு உறவுகளில் சலனம் வந்தாலும் நேசத்தின் ஆழத்தில் அது கரைந்துவிடாதோ !!!!!!!!!



    வலி இல்லாத நினைவுகள் மனதில் நிலைப்பதில்லை ....வலி பெற்ற நினைவுகள் மனதை விட்டு அழிவதில்லை.....



    தெளிந்த நீரோடையில் தெரியும் அழகிய நிலவினை போல் உங்கள் மனதில் இந்த மான்விழியாள் இடம் பிடிப்பாள் என்ற நம்பிக்கையில் தொடங்குகிறேன் ப்ரிண்ட்ஸ்.



    எனது மற்ற கதைக்கு கொடுத்த ஆதரவை போல் இந்த கதைக்கும் நீங்கள் கொடுப்பீர்கள் என நம்பீஈஈ ஆரம்பிக்கிறேன்......



    ரெடி ஸ்டார்ட் மியூசிக் ..........

    நாயகி : உன்னை நினைத்து என்னை நான் மறப்பது
    உனக்குள்ளே என்னை நான் கரைப்பது
    அது தான் அன்பே காதல்...


    நாயகன் : அன்றாடம் நூறுவகை பூக்கள் பூக்கும்
    ஆனாலும் காயாகும் சில பூக்கள் தான்
    ........ மற்றவையாவும் குப்பைகள் தான்.. ...


    நாயகி : சோலையிலும் முட்கள் தோன்றும்
    நானும் நீயும் நீங்கினால்..
    பாலையிலும் பூக்கள் பூக்கும்
    நானுன் மார்பில் தூங்கினால்...


    நாயகன் :
    பார்த்த பொழுதே பூசல் தான்
    இனி போக போக ஏசல்தான்
    செம்மீன்கள் மாட்டுகின்ற
    வலை கொண்டு வீசினால்
    விண்மீன்கள் கையில் வருமா ??

    கேள்விகளால் வேள்வி நடக்க அதன் பதிலாக இருக்க போவது யார்?????யார்?????



    .

    இனி கதையில் காண்போம் தோழமைகளே !!!!!!!!!!:Smiley-(12):
     
    5 people like this.
  2. webadmin

    webadmin Administrator Staff Member

    Joined:
    Jan 1, 1970
    Messages:
    2,582
    Likes Received:
    1,100
    Trophy Points:
    113
    வணக்கம் லஷ்மி , தமிழ்சுரபியில் உங்கள் கதை வரவிருப்பதில் மிக்க மகிழ்ச்சி அண்ட் வாழ்த்துக்களுடன் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் . :)

    அறிமுகத்திலே இப்படி ஒரு கேள்விகளை கேட்டு , ஆர்வத்தைக் கூட்டி இருக்கிறீர்கள், மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன் , முதல் பதிவிற்கு .
     
    2 people like this.
  3. lashmiravi

    lashmiravi Active Member

    Joined:
    Aug 16, 2014
    Messages:
    189
    Likes Received:
    238
    Trophy Points:
    43
    Gender:
    Female
    தேங்க்ஸ் பாரதி....
     
  4. selvi

    selvi Well-Known Member Staff Member

    Joined:
    Dec 5, 2014
    Messages:
    6,515
    Likes Received:
    2,501
    Trophy Points:
    113
    Gender:
    Female
    வாழ்த்துக்கள் லஷ்மி ...
     
    4 people like this.
  5. deepu

    deepu Active Member

    Joined:
    Dec 4, 2014
    Messages:
    774
    Likes Received:
    186
    Trophy Points:
    43
    Gender:
    Female
    wowwwww laks akkaaa.... :) :) :)

    welcome welcome kaaa :) :)

    all the very best for your next story akkaa :)

    introve asathal pongo.... eagerly waiting for ur updates kaa :)
     
    2 people like this.
  6. lashmiravi

    lashmiravi Active Member

    Joined:
    Aug 16, 2014
    Messages:
    189
    Likes Received:
    238
    Trophy Points:
    43
    Gender:
    Female
    thank u selvi....
     
  7. lashmiravi

    lashmiravi Active Member

    Joined:
    Aug 16, 2014
    Messages:
    189
    Likes Received:
    238
    Trophy Points:
    43
    Gender:
    Female
    thank u dear......
     
  8. lashmiravi

    lashmiravi Active Member

    Joined:
    Aug 16, 2014
    Messages:
    189
    Likes Received:
    238
    Trophy Points:
    43
    Gender:
    Female
    ஹாய் ப்ரிண்ட்ஸ் [​IMG]

    அனைவர்க்கும் இனிய காலை வணக்கம் [​IMG]

    சொன்னது போல நான் வந்திட்டேன் ப்ரிண்ட்ஸ் [​IMG] ஆனால் ஒரு சிறிய மாற்றத்தோடு வந்திருக்கிறேன்.

    அதாவது அன்புள்ள மான்விழியே என்ற தலைப்பில் ஏற்கனவே அகிலா கோவிந்தன் கதை எழுதி இருக்காங்களாம். தலைப்பை தேர்வு செய்து விட்டு நான் கூகுள் ஆண்டவரிடம் இந்த பொறுப்பை ஒப்படைதிருந்தேன். ஆனால் அவர் எனக்கு சரியான பதிலை தராததால் இந்த குழப்பம்.

    பின்னர் தோழி உமா அவர்கள் சொன்ன பிறகே எனக்கு தெரியும். அதுவும் நேற்றுதான் தெரியும். அதனால் உங்களிடம் உடனே என்னால் இதை தெரிவிக்க முடியவில்லை.

    இப்போது கதையின் தலைப்பை மாற்றி உள்ளேன்

    நேசமே சுவாசமாய் ..!!!!

    இனி இந்த தலைப்பில் தான் கதை பதிவிட போகிறேன்.

    தொடர்ந்து உங்கள் ஆதரவை கொடுங்கள் [​IMG][​IMG][​IMG]
     
    4 people like this.
  9. lashmiravi

    lashmiravi Active Member

    Joined:
    Aug 16, 2014
    Messages:
    189
    Likes Received:
    238
    Trophy Points:
    43
    Gender:
    Female
    [BCOLOR=#800080] நேசமே சுவாசமாய் ..!!!![/BCOLOR]




    [​IMG]

    நேசமே சுவாசமாய் ...!!!!!




    அத்தியாயம் -1

    காலை கதிரவன் தன் சிறகினை விரித்து மெல்ல எழுந்து கொண்டிருக்க வரவேற்கும் விதமாக வானம்பாடிகள் சந்தோஷ கூக்குரலிட்டு விண்ணில் பறக்க தொடங்க மண்ணில் உள்ள மலர்களோ தான் காத்திருக்கும் செய்தியை இளம் காற்றில் தூதாக அனுப்ப அதற்கு மேலும் மெருகூட்டுவது போல் “பூவருகோனும் புரந்தரனும் பொற்பமையின்” என்ற திருவாசக பாடல் பவதாரிணியின் இனிமையான குரலில் ஒலித்துகொண்டிருக்க இந்த சுகந்தமான சூழ்நிலையில் அங்கு மலையடிவாரத்தில் இருந்த அந்த திருமண மண்டபம் திருவிழா கோலத்தில் நிறைந்திருந்தது.

    “இன்னும் என்ன பண்றேள் ..நாழியாகிண்டே இருக்கு...சீக்கிரம் பொண்ணு மாப்பிளையும் அழைச்சிட்டு வாங்கோ.......நம்ம அங்க போறதுக்குள்ள மூகூர்த்த நேரமே வந்திடும்” என்ற ஐயர் சத்தம் போட்டு கொண்டிருந்தார்.

    “இதோ எல்லாரும் கிளம்பிட்டோம்........இன்னும் மாப்பிள்ளை வீட்டு ஆளுங்க வரலை ...அதுக்குதான் காத்துகிட்டு இருக்கோம்...வந்த உடனே கிளம்பிடலாம்...கொஞ்சம் பொறுங்க சாமி “ என அங்கிருந்த ஒருவர் தாமதத்திற்கான காரணத்தை சொன்னார்.

    “என்ன ஆச்சிரியமா இருக்கு...எப்பவும் கல்யாண பொண்ணுதான் கிளம்பறதுக்கு லேட் பண்ணுவா......இங்க எல்லாம் தலைகீழால இருக்கு” என அவர் வியப்புடன் கேட்கவும்

    “ம்க்கும் இதுக்கே ஐயர் இந்த ரியாக்சன் கொடுக்கிறாரே.......இன்னும் உன் கல்யாண கதையை கேட்டாருன்னா வச்சுக்கோ மயக்கம் போட்டே விழுந்திடுவாருபோல” என மணபெண்ணின் காதை கடித்தாள் அவளது உறவினரும் தோழியுமான தீபா.

    அவளோ பதட்டத்துடன் “என்ன தீபா நீ.... நானே அவரு வருவாரா வரமாட்டாரான்னு பதட்டத்தில இருக்கேன்....நீ இந்த நேரத்தில காமெடி பண்ணிட்டு இருக்க” என எரிச்சலுடன் சொல்ல

    “ஏண்டி இது என்ன உனக்கு புதுசா...ஐந்து வருஷமா இப்டிதான இருக்க.......எல்லாத்துக்கும் துணிஞ்சுதான இங்க வந்து நிக்கிற .....ஆனாலும் உனக்கு ரொம்ப தைரியம்டி...அமுக்குனி மாதிரி இருந்துகிட்டு நினைச்சத சாதிச்சுட்டியே” என அவளை புகழ்வது போல் அவளின் நிலையை கேலியாக சொன்னாள் தீபா.

    ஆனால் அதை எல்லாம் உணரும் நிலையில் அவள் இல்லை. கண்களோ மண்டபத்தின் வாசலை விட்டு அசையாமல் இருக்க மனமோ “சீக்கிரம் வந்திடு ...சீக்கிரம் வந்திடு...... இன்னும் என்னை காக்க வைக்காத” என மானசீகமாக அவனிடம் பேசிகொண்டிருந்தது.

    “ஏம்பா தர்மலிங்கம் இன்னுமா உன் மாப்பிள்ளை கிளம்பி வர்றாரு..... மலையில கும்பல் சேர்ந்திடும்பா...அப்புறம் நமக்கு இடம் கிடைக்காது......பாதி சொந்தகாரங்க முன்னாடி போய்ட்டாங்க.......சீக்கிரம் எல்லாரயும் வர சொல்லுங்கப்பா ” என ஒரு பெரியவர் சத்தம் போடவும்

    அவரோ வேகமாக தன் மனைவியிடம் வந்தவர் சற்று பதட்டத்துடன் “ “என்ன குணவதி மாப்பிள்ளை வீட்டுகாரங்க இன்னும் என்ன பண்றாங்க ...அங்க எல்லாரும் என்னை சத்தம் போடறாங்க...கொஞ்சம் சம்பந்திகிட்ட கேட்டு சொல்லு” என்றார்.

    குணவதியோ “நானும் சொல்லிட்டேங்க...இதோ கிளம்பிட்டோம்னு...வந்துகிட்டே இருக்கோம்னு ஒரு மணிநேரமா இந்த ஒரு பதிலதான் சொல்றாங்க என்றவர் தன் கணவரின் முகத்தில் தெரிந்த கவலை அவரை பயமுறுத்த “நீங்க எதுக்கும் கவலை படாதீங்க......... டாக்டர் நீங்க பதட்டபடகூடாதுன்னு சொல்லிருக்கார்....அவங்க வந்திடுவாங்க.....மண்டபம் வரைக்கும் வந்தாச்சு.....எல்லாம் நல்லபடியாதான் நடக்கும்...நீங்க மத்த வேலைய பாருங்க “ என அவரை சமாதானபடுத்தினார்..

    “இல்லை பார்வதி இந்த கல்யாணம் முடியற வரைக்கும் இந்த படபடப்பு குறையாது. என் பொண்ணோட கல்யாணத்தை எப்படி எல்லாம் செய்யணும்னு நினைச்சு இருந்தேன்.....ஆனா இவ இப்படி” என சொல்லிவிட்டு அவர் நீண்ட பெருமூச்சை இழுத்து விட

    “இப்போ எதுக்கு அதெல்லாம் பேசிட்டு இருக்கீங்க.....நம்ம பொண்ணு சந்தோசம் தான் நமக்கு முக்கியம்.....பழசை எல்லாம் பேசாம முன்னாடி போய் நின்னு பொண்ணுக்கு அப்பாவா எல்லாரயும் கவனிங்க” என மனைவிக்கு உரிய மிடுக்கோடு சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தவர் நேராக மண்டபத்தின் வாயிலில் இருக்கும் பிள்ளையார் கோவிலிற்கு சென்றார்.

    கைகூப்பி கண்ணை மூடி நின்றவர் “பிள்ளையாரப்பா இதுவரைக்கும் நடந்தது ஏதும் சரியில்லைனாலும் இனி நடக்க போறது எல்லாம் நல்லபடியா நடக்கணும்பா.......எங்க பொண்ணோ நாங்களோ மனசறிஞ்சு எந்த தப்பும் பண்ணலை.அவ இப்போ எடுத்திருக்க முடிவு தணல் மேல் நடக்கிறது தான் தெரியும்.எங்களுக்கும் வேற வழி இல்லை......இனியும் எங்க குடும்பத்துக்கு சோதனை வேண்டாம்.....கொஞ்சம் கருணை வைப்பா” என மனமுருக வேண்டிகொண்டிருந்தார்.
     
    ramasamy6 likes this.
  10. lashmiravi

    lashmiravi Active Member

    Joined:
    Aug 16, 2014
    Messages:
    189
    Likes Received:
    238
    Trophy Points:
    43
    Gender:
    Female
    அப்போது “ மாப்பிள்ளை வீட்டுகாரங்க வந்தாச்சு” என்ற குரல் கேட்கவும் மணபெண்ணின் அறையில் அலைபாய்ந்து கொண்டிருந்த விழிகள் சிலையான நிற்க,படபடத்த மனம் பனித்துளி போல் குளிர தாய் பசுவை தேடிய கன்றினை போல் கண்கள் அவனை தேட, உள்ளம் அலைபாய வாசலை நோக்கியவள் அங்கு பட்டுவேஷ்டி சட்டையில் மாப்பிள்ளை கோலத்தில் காரில் இருந்து அவன் இறங்கவும் அந்த நொடி அவள் பிறப்பின் பயனை அடைந்தது போல் உணர்ந்தாள்.

    அவனை கண்டதும் மனதில் உற்சாகம் பொங்க அவை முகத்தில் எதிரொலிக்க ஆறடி உயரத்தில் அகன்ற தோள்களும், விரைப்பான உடல் தோற்றமும், சாந்தமான முகமும் அவளுக்கு பிடித்த அவள் மனதை கொள்ளைகொண்ட புன்னைகையுடன் அவன் நிற்க மன்னவனின் தோற்றத்தில் தன்னை மறந்து நின்றாள் அந்த மனையாள்.

    “என்னடி அதிசயம் இது ...........இவன் இவ்ளோ அழகா இருக்கான்..... ........இத்தன நாள் எங்க கூடத்தான் இருக்கான்......இப்போ எனக்கே புதுசா தெரியறான்..........ஆனாலும் நீ கொடுத்து வச்சவடி......உனக்கு எங்கையோ மச்சம் இருக்கு” என நக்கலும் ஆற்றாமையும் கலந்த குரலில் தீபா சொல்ல அதை கேட்ட அவள் முகமோ வெட்கத்தில் சிவந்து போனது.

    அனைவரும் குழுமி இருக்கும் இடத்திற்கு வந்தவன் “ எல்லாரும் வாங்க என வரவேற்றவன் மன்னிக்கணும் ...வர வழில கொஞ்சம் ட்ராபிக் ...அதான் லேட்டாகிடுச்சு என்றவன் .......ரொம்ப நேரமா காத்திருக்கீங்களா மாமா” என திரும்பி தனது மாமனாரிடம் கேட்டான்.

    “அவரோ அப்படி எல்லாம் இல்லை மாப்பிள்ளை.....கொஞ்சம் முன்னாடிதான் நாங்களும் வந்தோம்” என சமாளிக்க

    அப்போது அருகில் இருந்தவர் “பரவயில்லையே மரியாதை தெரிஞ்ச பையனா இருக்கார்......நீ எதுக்கும் பயப்படவேண்டாம் தர்மலிங்கம்...தங்கமான பையன் தான் ” என சொல்லவும் அவரின் முகத்தில் அப்போதுதான் சற்று தெளிவு வந்தது.

    அப்போது “அர்ச்சனைக்கு பொண்ணு மாப்பிள்ளை பெயரை சொல்லுங்கோ எழுதிக்கிறேன் என ஐயர் கேட்கவும் மாப்பிள்ளை பேரு மாதேஷ்வரன் பொண்ணு பேரு மலர்விழி” என குணவதி சொல்லவும்

    “பேஷ் பேஷ் பேர் பொருத்தம் அருமையா இருக்கே.......இரண்டு பேரும் அமோகமா வாழ்வாங்க” என அவர் சொல்ல மலர்விழியின் கண்கள் பெருமிதத்துடன் தன்னவனை நோக்க அவனோ அதை கண்டுகொள்ளாமல் அருகில் இருக்கும் தன் தோழனிடம் பேசிக்கொண்டு இருந்தான். அவன் மட்டுமில்லை அங்கு இருப்பவர்களும் அதை லட்சியம் செய்யாமல் இருக்க மலர்விழியின் மனம் மட்டும் இன்பத்தில் நிறைந்திருந்தது.

    “சரி சரி.....சீக்கிரம் எல்லாரும் வாங்க என்றபடி ஐயர் முன்னே செல்ல அனைவரும் அவர் பின்னே சென்றனர்.பாதிவிடிந்தும் விடியாத காரிருளில் அந்த திருச்செங்கோடு அர்த்தநாரிஸ்வரர் மலைமுன் அனைவரும் நிற்க மாதேஷ்வரனோ நிமிர்ந்து அந்த மலையை பார்த்தவன் ஏற்கனவே செந்நிறம் தோற்றம் கொண்ட அந்த மலை கதிரவனின் ஒளிபட்டு மேலும் ஜொலிக்க கண்களை மூடி அவனது இஷ்ட தெய்வமான அர்த்தநாரீஸ்வரறை நினைத்து மனதிற்குள் அவரது நாமத்தை ஜெபித்தவன் ஆதியும் நீயே அந்தமும் நீயே ....உன் பாதம் சரணடைந்தேன்.....தென்னாடு உடைய சிவனே போற்றி என்றவாறு தனது முதல் அடியை மலையின் முதல் படியில் வைக்க அவனை அறியாமல் அவனது உடல் ஒருமுறை சிலிர்த்து நின்றது.

    அப்போது அங்கு ஒருவர் “ஏம்பா சாமிநாதா இந்த காலத்து பசங்க எல்லாம் ஹோட்டல், மண்டபம்னு ஆடம்பரமா திருமணம் பண்றாங்க ....ஆனா உன் பையன் இந்த கோவில்லதான் கல்யாணம் வைக்கணும்னு சொன்னானு சொல்றிங்க...ஆச்சரியமா இருக்கே” என கேட்கவும்

    அவரோ “நம்ம எத்தன நாடு கடல் தாண்டி போனாலும் நம்ம வேர் சொந்த மண்ணுலதான இருக்கு ....,,,அதுவுமில்லாம என் மகன் மாதேஷ்க்கு கடவுள் பக்தி அதிகம்...சின்ன வயசில இருந்தே அவன் எந்த ஒரு காரியம் செய்தாலும் இங்க வந்து சாமி கும்பிட்டு போய்தான் ஆரம்பிப்பான். இது எல்லாம் அவனோட விருப்பம் தான் என என்றார்.அப்போது “ம்க்கும் ஆனா கல்யாணம் மட்டும் அவன் விரும்பினது இல்லையே” என அவரின் அருகில் நடந்து வந்து கொண்டிருந்த அவரது மனைவி கற்பகம் முனுமுனுத்தார்.


    அவரோ “அடியே எல்லாரும் சேர்ந்து இருக்க நேரத்துல இப்போ எதுக்கு இத பேசற......வாயை மூடிகிட்டு பேசாம வா” என குனிந்து அடிகுரலில் ஒரு அதட்டல் போட அதற்கு பின்பு அந்த இடம் அமைதியானது.

    படியில் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடிக்கும் அவன் சிவ நாமத்தை உச்சரிக்க அவன் பின்னால் அவனது பாதத்தை பின்பற்றி வந்து கொண்டிருந்த மலர்விழியோ அவன் பெயரை மட்டுமே உச்சரித்துக்கொண்டு வந்தாள்.

    “எப்படியோ குணவதி உன் பொண்ணு நினைச்சத சாதிச்சுட்டா.....நாங்க இந்த கல்யாணம் நடக்கும்னு நினைச்சு கூட பார்க்கலை.....கல்லையும் கரைய வச்சுட்டா......நம்ம சொந்தத்திலே இவ தைரியம் யாருக்கும் இல்லை” என அவருடன் நடந்துகொண்டிருக்கும் ஒரு பெண்மணி அங்கலாய்க்க

    அப்போது பின்னால் இருந்து “ம்ம்ம்ம் என்ன பண்றது என் தம்பி இளகின மனச சில பேர் தனக்கு சாதகமா பயன்படுத்திகிட்டாங்க..... அவனும் அது தெரியாம அவங்க வலையில விழுந்திட்டான்......ம்ம்ம் இல்லையனா என் தம்பி அழகுக்கும் படிப்புக்கும் நல்ல வசதியான இடத்தில அழகான பொண்ணா பார்த்து முடிச்சிருப்போம். எங்க கெட்ட நேரம் இந்த மாதிரி கும்பளுகுள்ள மாட்டிக்க வேண்டியதா போச்சு” என மாதேஷின் சகோதிரி உமா இடித்து பேச குணவதியோ எதுவும் பேசாமல் அமைதியாக வந்தார். எப்படி பேசுவார்......அவர் எதிர்த்து பேசுவது போலவா அவரது மகள் காரியம் செய்து வைத்து இருக்கிறாள். இந்த திருமணம் நடந்தால் போதும் ...அதற்காக எந்த அவமானனத்தை வேண்டுமானாலும் தாங்கி கொள்ளலாம் என்று தானே குணவதியும் தர்மலிங்கமும் முடிவெடுத்து இந்த திருமணத்தை நடத்துகின்றனர்.
     

Share This Page