வணக்கம் நண்பர்கள், என்னுடைய முதல் கதையின் தலைப்பு இதோ "உள்ளமுதம் கண்ணம்மா" நாயகன்: கவிபாரதி நாயகி: சுமித்ரா ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நாயகனின் கரம் பிடித்த நாயகி. பின் அவர்களுகு இடையில் ஏற்பட்ட காதல் பற்றி என்னுடைய பாணியில் எழுதியுள்ளான்.
பக்கத்துக்கு கோவிலில் ஒலித்த விநாயகர் வழிபாடு பாடலில் கண் திறந்தாள் சுமி. ஏழுந்ததும் மனதின் ஒட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை அவளால், இன்னும் இரண்டு நாட்கள் கழித்து இந்த வழிபாட்டை கேட்க முடியாது. அது மட்டுமா இந்த வீட்டையே மறக்க வேண்டுமாம் .... அப்படி அவன் சொல்லும் போது "முடியாது" என்று சொல்லி விட்டு வெளியேர நினைத்தால்... அனால் நினைத்தது நடந்து விட்டால் கடவுளையே நாம் மறந்து விடுவோமே. தன் விதியை நினைத்து பெருமூச்செறிந்தி காலை கடனை முடித்தவாறு வேலைக்கு சென்றாள். சுமி பக்கத்து மெட்ரிக் பள்ளியில் 12ம் வகுப்புக்கு இயற்பியல் ஏடுக்கும் ஆசிரியை. "கண்டிப்பா நீ வேலைய விட்டு நீங்க போகிறாயா....." தலைமை ஆசிரியர் கேட்ட கேள்விக்கு "ஆம்" என்று மட்டும் சொல்லி கடிதத்தை நீட்டினாள். பின், அவரும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார், அவள் பாட்டி இறந்த பின்னர் இந்த அமைதி மட்டும்தான் அவள் முகத்தில் நீங்கா இடம் பெற்றுள்ளன. வீட்டிற்கு திரும்பி வரும் பொழுது தன் வீட்டு முன்னம் கார் நிற்பதே வைத்து அது யாரோடாது என்று தெரிந்து கோபத்தில் முகம் சிவக்க வீட்டுக்கு செல்ல முனைந்தால், அப்பொழுது காரில் இருந்து வந்த டிரைவர் "அம்மா சார் உங்களை உடனே அழைத்து வர சொன்னார்" என்றான். அதை கேட்டு முகம் சிவக்க "முடியாது" என்று உள்ளே சென்று கதவை சாதிவிட்டால். தன் பாட்டியின் படம் முன்னம் மண்டியிட்டு அழுது கொண்டு இருந்தாள். எவளவு நேரம் அழுத்தாலோ களையிப்பில் உறங்கியவள் கதவு வேகமாக தட்டும் சத்தம் கேட்டு எழுந்தாள். அவளுக்கு தெரிந்தது அது யாரு என்று அதனால் பதட்டம் படாமல் கதவை திறந்தவளின் கழுத்தை வலிய கரம் ஒன்று பிடித்து சுவச்சோடு பிடுத்து இறுகியது. அப்பொழுது அவன் கண்களை கண்ட பெண் அவள் நடுங்கி நின்றாள். அவள்எ கண்களில் இருந்து வந்த பயத்தில் தன் பிடியை தளரத்தினான் அக்காளையன். _ தொடரும்