Hi friends, I come back with my another tutorial, இதுல நாம எப்படி ஸ்டோரீஸ் வோர்ட்ல டைப் செஞ்சு , அத pdf ஆக convert பண்ணி , ஆன்லைன் publishing க்கு , மற்றும் கூகிள் டிரைவ், Calameo ல மற்றும் பாதுகாப்பாக சேமித்து வைப்பது பற்றி பார்க்க இருக்கிறோம் . படி 1 : முதலில் ஏதேனும் ஒரு டெக்ஸ்ட் எடிட்டர் தேர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள் , டெக்ஸ்ட் எடிட்டர் (text editor) என்பது நாம் டைப்பிங் செய்ய உதவும் ஒரு சாப்ட்வேர் . எல்லா விண்டோஸ் சிஸ்டத்திலும் wordpad என்ற சாப்ட்வேர் நிறுவப்பட்டு இருக்கும் , இதையே கூட நீங்கள் எளிதான டைப்பிங் கிற்கு உபயோகிக்கலாம் . windows 7 - > Start -> search for "wordpad" View attachment 280 படி 2 : அல்லது microsoft word என்பதில் கொஞ்சம் advanced options இருக்கும் , ஆனால் இது MS Office எனப்படும் தொகுப்பு சாப்ட்வேரோடு சேர்ந்து இருக்கும் , எனவே இது இல்லாதவர்கள் , அதை இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும் . இதில் MS Office 2010 எனப்படும் தொகுப்பில் , PDF Convert Option இருக்கும் , எனவே நாம் அதற்கென்று வேறு சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்ய தேவை இல்லை ,அனைத்து சில Microsoft word Features, View attachment 281 View attachment 282 microsoft word இல் முக்கியாமாக பார்க்க வேண்டியது , "Paragagraph Options" மேலே இருக்கும் ரிப்பன் பகுதியில் , "Page Layout " என்பதை செலக்ட் செய்யும் போது அதற்கான options வரும் . எல்லாவற்றையும் தேவைக் கேற்ப மாற்றிக் கொள்ளலாம் . Indent Left Right Spacing Before After இந்த options கவனிக்கத்தக்கவை !! படி 3 : கதையினை பதிவு செய்து முடித்த பின் , அதை - சாதாரணமாக pdf format இல் save செய்வது வழக்கம் . ஆனால் இது உங்கள் விருப்பம் , File - Save As செலக்ட் செய்யும்போது எல்லாவகையான formats லிஸ்ட் காட்டப்படும் , உங்களுக்கு தேவையானதை செலக்ட் செய்து , save கொடுத்து விடுங்கள் . படி 4 இப்போது இதை ஏதேனும் ஆன்லைன் storage எனப்படும் , Cloud Service இல் சேமித்து வைத்துக் கொள்வது , எதிர்காலத்திற்கு உதவும் , சில இணையதளங்கள் இதற்கான சேவைகளை வழங்குகின்றன , முக்கியாமான மற்றும் சிறந்தவை இதோ , இதில் ஒன்றில் உங்கள் document ஐ upload செய்து கொள்ளுங்கள் . 1. https://onedrive.live.com/about/en-us/ 2. https://drive.google.com/drive/?rfd=1# Onedrive ~~~~~~~ One drive அக்கௌன்ட்டிற்கு , மைக்ரோசாப்ட் அக்கௌன்ட் தேவைப்படும் , http://live.com சென்று ஒரு மெயில் id create செய்து கொள்ளுங்கள் , இது ஜிமெயில் signup போன்று தான் View attachment 283 இதில் இருக்கும் - Upload எனும் option செலக்ட் செய்து , உங்கள் document சேமித்துக்கொள்ளலாம் . Google Drive இதற்கு ஜிமெயில் id தேவைப்படும் , முதலில் https://drive.google.com/ செல்லுங்கள் , பின் அங்கும் இதே போன்று , உங்களுக்கான dashboard ஒப்பன் ஆகும் . View attachment 284 அதில் "My Drive" கிளிக் செய்தால் , 3 options வரும் , அதில் Upload select செய்யவும். பின்னர் உங்களது document செலக்ட் செய்து ஓகே கொடுத்து விடுங்கள் . இப்போது .. document டைப் செய்து அதை ஆன்லைன் storage இற்கு save செய்தாயிற்று . இனி எப்படி , டவுன்லோட் லிங்க்ஸ் ஷேர் செய்வது , எந்த file கொடுப்பது என்பது பற்றி பார்க்கலாம் . மேலும் ஆன்லைன் publishing சைட்களான , Calameo ,மற்றும் அது போன்ற சர்வீஸ் களை பற்றி பார்க்கலாம்.