அசைவ சூப் வகைகள்

Discussion in 'Recipes' started by NATHIYAMOHANRAJA, Nov 8, 2018 at 5:24 PM.

  1. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    2,213
    Likes Received:
    74
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    செட்டிநாடு ஆட்டுக்கால் சூப்

    சமைக்க தேவையானவை

    • ஆட்டுக்கால் - 1 செட் (4 கால்)
    • மிளகு - 2- 3 டீஸ்பூன்
    • மல்லி - 2 டீஸ்பூன்
    • சீரகம் - 2 டீஸ்பூன்
    • பூண்டு - 6 பல்
    • மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
    • சின்ன வெங்காயம் - 100 கிராம்
    • தக்காளி - 1 (விரும்பினால்)
    • நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
    • உப்பு - தேவைக்கு
    • உப்பு - தேவைக்கு
    • மல்லி இலை - சிறிது
    • கறிவேப்பிலை - 2 இணுக்கு

    உணவு செய்முறை : செட்டிநாடு ஆட்டுக்கால் சூப்

    • Step 1.

      முதலில் கால்களை சுத்தம் செய்து துண்டுகளாக்கி கொள்ளவும். சின்ன வெங்காயத்தை உரித்து வைக்கவும். ஐந்து வெங்காயம் மட்டும் கட் செய்து வைக்கவும்.
    • Step 2.

      முதலில் கால்களை சுத்தம் செய்து துண்டுகளாக்கி கொள்ளவும். சின்ன வெங்காயத்தை உரித்து வைக்கவும். ஐந்து வெங்காயம் மட்டும் கட் செய்து வைக்கவும்.
    • Step 3.

      மீதியை அரைக்க முழுதாக வைக்கவும். மிளகு, சீரகம், மல்லி லேசாக வெதுப்பிக்கொள்ளவும். மிக்ஸியில் மூன்றையும் போட்டு, வெங்காயம், பூண்டு சேர்த்து அரைத்து எடுக்கவும்.
    • Step 4.

      குக்கரில் ஒரு லிட்டர் அளவுக்கு (கால் மூழ்கும் அளவுக்கு சிறிது கூட) தண்ணீர் வைத்து உப்பு போடாமல், அரைத்த மசாலா, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும்.
    • Step 5.

      இரண்டு விசில் வந்தவுடன் அரைமணி நேரம் சிம்மில் வைத்து இறக்கவும். ஆவி அடங்கியவுடன் திறக்கவும். உப்பு சேர்க்கவும்.
    • Step 6.

      என்றால் 2 டீஸ்பூன் அரிசிமாவு கரைத்து ஊற்றலாம். மல்லி இலை தூவவும். சுவையான, சத்தான ஆட்டுக்கால் சூப் ரெடி. இதனை அப்படியே பவுளில் ஸ்பூன் போட்டு பரிமாறலாம்.
     
  2. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    2,213
    Likes Received:
    74
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    கோழி தக்காளி சூப்

    சமைக்க தேவையானவை

    • தக்காளி - 4
    • கோழிக்கறி - ஒரு மார்பு துண்டு
    • நடுத்தரமான வெங்காயம் - அரை
    • பூண்டு - 3 பல்
    • இஞ்சி - சிறுதுண்டு
    • கொத்தமல்லித்தழை - சிறிது
    • முட்டை - 2
    • கார்ன்ஸ்டார்ச் - 2 மேசைக்கரண்டி
    • சிக்கன் ஸ்டாக் - 4 கப்
    • எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
    • தக்காளி சாஸ் - 4 மேசைக்கரண்டி
    • உப்பு - தேவையான அளவு
    • சீனி - ஒரு தேக்கரண்டி
    • மிளகுத்தூள் - அரைத்தேக்கரண்டி
    • அஜினோமோட்டோ - ஒரு சிட்டிகை
    • வினிகர் - 2 மேசைக்கரண்டி

    உணவு செய்முறை : கோழி தக்காளி சூப்

    • Step 1.

      முதலில் தக்காளி, பூண்டு, வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லித்தழை ஆகியவற்றை கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
    • Step 2.

      கோழிக்கறியினை துண்டங்களாக்கி நான்கரை கோப்பை தண்ணீர் விட்டு 5 நிமிடங்கள் வேகவிட்டு எடுத்துக் கொள்ளவும்..
    • Step 3.

      இந்த வேக வைத்த நீர்தான் சிக்கன் ஸ்டாக். முட்டைகளை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி, நன்கு அடித்து கலந்து கொள்ளவும்
    • Step 4.

      அரை கப் சிக்கன் ஸ்டாக் உடன் கார்ன்ஸ்டார்சினை கலந்து கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடேறியதும் நறுக்கி வைத்துள்ள இஞ்சி பூண்டினை போட்டு லேசாக வதக்கவும்
    • Step 5.

      அத்துடன் நறுக்கின வெங்காயம் சேர்த்து மேலும் ஒரு நிமிடத்திற்கு வேகவிடவும். பிறகு தக்காளி சாஸ், நறுக்கின தக்காளி சேர்த்து.
    • Step 6.

      தீயை சற்று அதிகம் வைத்து மூன்று நிமிடங்களுக்கு வேகவிடவும். இப்போது சிக்கன் ஸ்டாக், சிக்கன் துண்டுகள், தேவையான உப்பு, அஜினோமோட்டோ, மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து கொதிக்கவிடவும்.
    • Step 7.

      பிறகு கார்ன்ஸ்டார்ச்சினை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலக்கவும். சூப்பானது சற்று கெட்டியாகும் வரை சேர்த்து விடாது கலக்கவும் .அதன் பின் வினிகரை ஊற்றவும். அடித்து வைத்துள்ள முட்டையினை சிறிது சிறிதாக ஊற்றி நன்கு கலக்கவும். முட்டையானது நன்கு வெந்து மிதக்கத் தொடங்கும்போது நறுக்கின கொத்தமல்லித் தழையினைத் தூவி இறக்கவும்.
     
  3. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    2,213
    Likes Received:
    74
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    ஆட்டுக்கால் பாயா

    சமைக்க தேவையானவை

    • ஆட்டுக்கால்- 2
    • வெங்காயம்-2
    • தக்காளி-4
    • பச்சைமிளகாய்-4
    • இஞ்சிபூண்டு விழுது-5 ஸ்பூன்
    • கொத்தமல்லி,புதினா-ஒரு கப்
    • மைதாமாவு-2 ஸ்பூன்
    • பட்டை,ஏலக்காய்,கிராம்பு பொடி- அரை ஸ்பூன்
    • மஞ்சள் தூள்- அரை ஸ்பூன்
    • சீரகத்தூள்- ஒரு ஸ்பூன்
    • மிளகுதூள்- ஒரு ஸ்பூன்
    • மிளகாய் தூள்- 2 ஸ்பூன்
    • தேங்காய் பால்- 2 கப்
    • உப்பு-தேவைக்கு
    • நல்லெண்ணெய்-2 குழிக்கரண்டி

    உணவு செய்முறை : ஆட்டுக்கால் பாயா

    • Step 1.

      முதலில் ஆட்டுக்காலை சுத்தம் செய்து வெட்டி வைக்கவும் பிரசர் குக்கரில் எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய் வதக்கவும் பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
    • Step 2.

      கொத்தமல்லி புதினாவை சேர்க்கவும். பின்னர் தாக்காளி சேர்த்து வதக்கி குழைந்ததும் தூள் வகைகள் அனைத்தையும் சேர்க்கவும்
    • Step 3.

      மசாலா வாசனை போனதும் ஆட்டுக்காலையும் சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கி ஒரு கப் நீர் விட்டு நன்கு வேகவிடவும். கால் நன்கு வெந்ததும் தேங்காய் பால் ஊற்றி கொதிக்க விடவும்.
    • Step 4.

      மைதாவில் நீர் ஊற்றி கரைத்து அதையும் சேர்த்து கொதிக்க விடவும் கெட்டியான பத்தில் வரும். பின் கொத்தமல்லி தூவி இறக்கவும்.
     
  4. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    2,213
    Likes Received:
    74
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    கோழி முட்டை சூப்

    சமைக்க தேவையானவை

    • கோழி (எலும்புடன்) - கால் கிலோ
    • முட்டை - ஒன்று
    • காரட், பீன்ஸ் - கால் கப்
    • வெங்காயம் - ஒன்று
    • தக்காளி - ஒன்று
    • பச்சை மிளகாய் - 2
    • பூண்டு - 2 பல்
    • இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
    • வெள்ளை மிளகுத் தூள் - அரை தேக்கரண்டி
    • சோம்பு தூள் - கால் தேக்கரண்டி
    • புதினா - சிறிது
    • பாதாம் தூள் (அ) விழுது - 2 மேசைக்கரண்டி
    • எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப

    உணவு செய்முறை : கோழி முட்டை சூப்

    • Step 1.

      முதலில் காய்கறிகளை சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
    • Step 2.

      நறுக்கிய காய்கறிகளுடன், நறுக்கிய தக்காளி, ஒரு பச்சை மிளகாய், சுத்தம் செய்த கோழி சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் வரை வேக விடவும்.
    • Step 3.

      பின்பு பாதாம் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
    • Step 4.

      தவாவில் எண்ணெய் ஊற்றி நசுக்கிய பூண்டு, மீதமுள்ள பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமானதும், இஞ்சி, பூண்டு விழுது, சோம்பு தூள் சேர்த்து வதக்கவும்.
    • Step 5.

      தாளித்தவற்றை சூப் கலவையில் சேர்த்து ஒரு கொதி விட்டு, முட்டையை உடைத்து ஊற்றவும். புதினா, வெள்ளை மிளகுத் தூள் சேர்த்து சூடாக பரிமாறவும்.
     
  5. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    2,213
    Likes Received:
    74
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    ரைஸ் சிக்கன் சூப்

    சமைக்க தேவையானவை

    • சிக்கனின் முழு மார்பகத்துண்டு - ஒன்று
    • சிக்கன் ஸ்டாக் - இரண்டு லிட்டர்
    • புழுங்கலரிசி சோறு - ஒரு கோப்பை
    • மிளகு - ஒரு தேக்கரண்டி
    • எலுமிச்சைச்சாறு - இரண்டு தேக்கரண்டி
    • பிரிஞ்சி இலை - ஒன்று
    • துருவிய எலுமிச்சை தோல் பகுதி - ஒரு தேக்கரண்டி
    • பெரிய வெங்காயம் - ஒன்று
    • இஞ்சி - ஒரு துண்டு
    • பூண்டு - இரண்டு பற்கள்
    • உப்புத்தூள் - ஒரு தேக்கரண்டி
    • காய்ந்த தைம் என்ற இலை - அரைதேக்கரண்டி
    • புதினா இலை - இரண்டு கொத்து
    • நறுக்கிய புதினா - கால் கோப்பை

    உணவு செய்முறை : ரைஸ் சிக்கன் சூப்

    • Step 1.

      முதலில் கோழியை சுத்தம் செய்து வைக்கவும். இஞ்சி, பூண்டு, மிளகு ஆகியவற்றை நசுக்கி வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.
    • Step 2.

      ஒரு பெரிய பாத்திரத்தில் சிக்கன் ஸ்டாக்கை ஊற்றவும். அதில் கோழியைப் போடவும். தொடர்ந்து வெங்காயம், இஞ்சி, பூண்டு, மிளகு, பிரிஞ்சி இலை, புதினா கொத்து, துருவிய எலுமிச்சை தோல் மற்றும் தைம் இலைகளை போட்டு நன்கு கலக்கி விட்டு கொதிக்க விடவும்.
    • Step 3.

      ஸ்டாக் கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது அடுப்பின் அனலை குறைத்து வைத்து மூடியைப் போட்டு வேகவிடவும். அரைமணி நேரம் கழித்து சிக்கன் நன்கு வெந்தவுடன் அதை கரண்டியின் உதவியால் எடுத்து தட்டில் தனியாக எடுத்து வைக்கவும்.
    • Step 4.

      பிறகு ஸ்டாக்கை வடிகட்டி வேறொரு பாத்திரத்தில் ஊற்றி மீண்டும் அதை அடுப்பின் அனலைக் கூட்டி கொதிக்கவிடவும். இதற்கிடையில் வெந்த சிக்கனை பொடியாக உதிர்த்து அதனுடன் சோறு, உப்பு, எலுமிச்சைசாறு மற்றும் நறுக்கிய புதினாவைப் போட்டு நன்கு கலக்கி விடவும். எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்து சிக்கன் சூப் தயாரானதும் இறக்கி கோப்பைகளில் ஊற்றி எலுமிச்சை துண்டுகளைப் போட்டு அலங்கரித்து பரிமாறவும்.
     
  6. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    2,213
    Likes Received:
    74
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    கிரீம் ஆஃப் சிக்கன் சூப்

    சமைக்க தேவையானவை

    • சிக்கன் - ஒன்று
    • மேகி சிக்கன் கியூப் - ஒன்று (சிறியது)
    • பட்டர் - இரண்டு மேசைக்கரண்டி
    • கார்ன் ஃப்ளார் மாவு - இரண்டு குழிக்கரண்டி
    • உப்பு - தேவைக்கேற்ப
    • கிரீம் ஆஃப் சிக்கன் சூப் பவுடர் - 1 1/2 பாக்கெட்
    • ஸ்வீட் கார்ன் - ஒரு டின்
    • வெள்ளை மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
    • சோயா சாஸ் - ஒரு துளி
    • இஞ்சி பூண்டு விழுது - இரண்டு தேக்கரண்டி
    • கருப்பு மிளகு தூள் - தேவைக்கேற்ப
    • வெங்காயம் - ஒன்று
    • மைதா மாவு - கால் கப்
    • பால் - 3/4 கப்
    • முட்டை - ஒன்று

    உணவு செய்முறை : கிரீம் ஆஃப் சிக்கன் சூப்

    • Step 1.

      முதலில் சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
    • Step 2.

      மற்ற தேவையான பொருட்களையும் தயாராக எடுத்து வைக்கவும்
    • Step 3.

      குக்கரில் சிக்கனை போட்டு நான்கு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் உப்பு, சோயா சாஸ், மேகி சிக்கன் ஸ்டாக், இஞ்சி பூண்டு விழுது போட்டு நான்கு அல்லது ஐந்து விசில் வரும் வரை வேக வைத்து எடுக்கவும்.
    • Step 4.

      பின்னர் தண்ணீர் தனியாக, சிக்கன் தனியாக எடுத்து வைத்து கொள்ளவும். மற்றொரு குக்கரில் ஸ்வீட் கார்ன், கால் கப் பால், ஒரு தேக்கரண்டி வெள்ளை மிளகு தூள் சேர்த்து வேகவைத்து மிக்ஸியில் அல்லது பிளன்டரில் ஒன்றிரண்டாக அரைத்து கொள்ளவும்.
    • Step 5.

      ஒரு கிண்ணத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் கிரீம் ஆஃப் சிக்கன் பவுடரை சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.இந்த பவுடர் கிடைக்காதவர்கள் மைதா மற்றும் சோள மாவை அதிகமாக சேர்த்துக் கொள்ளவும். சிக்கன் வேகவைத்த தண்ணீர், உதிர்த்து வைத்துள்ள சிக்கன், வேகவைத்துள்ள கார்ன் , ஒரு முட்டை எல்லாம் தயாராக வைத்து கொள்ள வேன்டும். ஒரு பெரிய வாயகன்ற பாத்திரத்தில் பட்டரை போட்டு உருகியதும் நறுக்கின வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
    • Step 6.

      அதில் மைதா மாவை ஒரு கையால் தூவி கொண்டே மறு கையால் கரண்டியை வைத்து கிளறவும் .அதனுடன் உடனே ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கட்டி பிடிக்காமல் கலக்கவும். அதன் பின்னர் வடித்து வைத்துள்ள சிக்கன் தண்ணீரை ஊற்றி மீண்டும் நன்கு கைவிடாமல் கிளறி விடவும்..இப்போது வேக வைத்து உதிர்த்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை போட்டு நன்கு கிளறி விட்டு கொதிக்க விடவும்.
    • Step 7.

      அடுத்து ஒன்றிரண்டாக அரைத்து வைத்துள்ள ஸ்வீட் கானை சேர்த்து கிளறி கொத்திக்க விடவும்.கார்னை ஊற்றி கிளறியதும், சோள மாவை கரைத்து ஊற்றவும். சோள மாவை ஊற்றிய பிறகு கட்டி பிடிக்கும் அதனால் தொடர்ந்து கிளறவும்.ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நுரை பொங்க அடித்து ஒரு கையால் ஊற்றி கொண்டே மறு கையால் ஒரு போர்க்கை வைத்து கிளறவும். இப்போது சிறிது கவனத்துடன் கிளற வேண்டும், கட்டி பிடித்தால் பொதபொதவென ஆகிவிடும். சுவையான கிரீம் ஆஃப் சிக்கன் சூப் ரெடி. .
     

Share This Page