அமெரிக்காவின் மிரட்டல், 'சைபர்' கொள்கை

Discussion in 'Technology News' started by NATHIYAMOHANRAJA, Oct 3, 2018.

 1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  6,340
  Likes Received:
  505
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  முதலில் விண்வெளி பாதுகாப்புப் படை. இப்போது, 'சைபர்' தாக்குதல் உத்தி. அமெரிக்கா ரொம்பவே உஷாராக இருக்கிறது.
  இணையத்தில் அமெரிக்கா மீது சைபர் தாக்குதல் நடந்த பின், பதிலடி தருவதற்கு மாறாக, இனி அமெரிக்காவே முதலில் சைபர் தாக்குதலை நடத்தும் என, அந்நாட்டின் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் அறிவித்துள்ளார்.
  இணையத்தில் பொறுப்பற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு, இணையத்தின் வழியாக அல்லது நேரடியாக தாக்குவதற்கு பாதுகாப்புப் படையினருக்கு அனுமதி அளித்திருப்பதாக, போல்டன் தெரிவித்துள்ளார்.
  வடகொரியா உட்பட பல நாடுகளிலிருந்து, அமெரிக்கா மீது அடிக்கடி அவதுாறு, தகவல் திருட்டு, அரசியல் தாக்குதல், இணைய தள முடக்கம் போன்றவை நிகழ்ந்து வருகின்றன.
  “இத்தகையோர், அடுத்த சைபர் தாக்குதல்களை நடத்தும் முன். நாங்களே முந்தி, முதல் தாக்குதலை நடத்துவோம்,” என, அவர் அறிவித்து உள்ளார். ஆக, இணையத் தொழில்நுட்பமும் ராணுவ மயமாகப் போகிறது
   

Share This Page