அரசமரம்_என்கின்ற_விருட்சம்..

Discussion in 'Health tips For Women' started by NATHIYAMOHANRAJA, Jun 17, 2019.

 1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  6,170
  Likes Received:
  503
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  அரசமரத்தின் இலைக் கொழுந்தை அரைத்து மோருடன் கரந்து குடித்தால் வயிற்றுக்கடுப்பு குணமாகும்.
  ✍அரச இலைச் கொழுந்தைப் பசும் பாலில் இட்டுக் காய்ச்சி சர்க்கரை சேர்த்துக் குடிக்க சுரம் குணமாகும்.
  ✍அரச இலை, மாவிலை, நாவல் இலை, அத்தி இலை இவற்றைச் சம பங்கு எடுத்து நீர்விட்டுக் காய்ச்சி வடிகட்டி குடித்துவர பெண்களுக்க மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு கட்டுப்படும்.
  ✍அரச மரத்தின் பழுப்பு இலைகளை எரி;த்துத் தூளாக்கி, தேங்காய் எண்ணெயில் கலந்து தடவிவலி, தீப்புண், அதனால் ஏற்பட்ட தழும்புகள் குணமாகும்.
  ✍அரசம்பட்டையை வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டிவாய் கொப்பளித்து வர வாய்ப்புண் குணமாகும்.
  ✍இதன் பட்டையை வறுத்துத் தீய்ந்த பின்னர் தூளாக்கி தேங்காய்எண்ணெயில் குழைத்துப் பூசிவர ஆறாத புண், சொறி, சிரங்கு போன்றவை குணமாகும்.
  ✍இதன் பட்மையை இடித்துப் பொடியாக்கி 200 மில்லி லிட்டர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் தூளைப் போட்டு காய்ச்சி வடிகட்டி பால் சர்க்கரை சேர்த்துக் குடித்துவர இருமல் தணியும்.
  ✍அரசம்பட்டைத் தூளில் 10-15 கிராம் எடுத்துக் கொண்டு, அதைத் தண்ணீரில் கலந்து காய்ச்சிக் குடித்துவர சொறி, சிரங்குகள் குணமாகும்.
  ✍அரசமரக் குச்சியைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டி நீரில் விட்டுக் காய்ச்சி வடிகட்டி, அதில் தேன் சேர்த்துக் குடிக்க பித்தம் தணியும்.
  ✍அரச விதையைப் பாலில் கலந்து குடித்து வர ஆண்மை அதிகரிக்கும்.
  ✍அரசமரக் கொழுந்து, ஆலங்கொழுந்து அத்திக்கொழுந்து இவற்றைச் சம அளவில் எடுத்து அரைத்து உட்கொண்டு வந்தால் மூலத்தில் ரத்தம் வடிதல் நிற்கும்.
  ✍அரச விதை, ஆலம் விதை நம அளவு எடுத்து அரைத்து. அதைப் பாலில் கலந்து உண்ண ரத்த வாந்தி நிற்கும்.
  ✍அத்தி, இத்தி, ஆல், அரசு - இந்த நான்கு மரப்பட்டைகளையும் சேர்த்து நால்மரப்பட்டை என்று சொல்வார்கள். இவைகளைக் கொண்டு செய்யப்பட்ட நால்பமராதி தைலம் தோல் நோய்களுக்கு வெளிப்புற உபயோகமாகப் பயன்படுகிறது.
  ✍கலப்பட குங்குமம் இடுவதால் நெற்றியில் தோல் நீல நிறமாக மாறுவதுடன் அந்த இடத்தில் அரிப்பும் ஏற்படும். இதற்கு அரச மரத்தின் பட்டையை நீரில் கரைத்து. பாதிப்பு ஏற்பட்ட இடத்தில் பற்றிட்டு வந்தால், பாதிப்பினால் ஏற்பட்ட நீல நிறம் மாறி, பழைய ஒரிஜனல் நிறம் கிடைக்கும்.
  ✍அரச மரத்தைக் குத்துவதால் வடியும் பாலைக் காலில் உள்ள பித்த வெடிப்புகள் மீது தொடர்ந்து தடவி வந்தால் அது விரைவில் குணமாகும்.
  ✍இதன் பொருள் அரச மரம் குலம் தழைக்கச் செய்யும் பிள்ளைப்பேறை உண்டாக்கும். சூலகத்தை சீராக்கும். சூலகத்தில் உண்டான நோய்களை போக்கும் என்பதே.
  ✍அரச மரத்தின் காற்று கருப்பை கோளாறுகளை போக்கும் தன்மையுடையது. அதுபோல் மூளையின் செயல்பாடுகளை தூண்டி, மன அமைதியைக் கொடுக்கும் குணமும் இதற்கு உண்டு.
  ✍அரச இலை கொழுந்துகளை எடுத்து நீரில் கொதிக்க வைத்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வன்மை கொடுப்பதுடன் சுரக்காய்ச்சல் குறையும்.
  ✍ முக்குற்றத்தையும் அதாவது வாதம், பித்தம், கபம் போன்றவற்றை சீராக்கி உடலை சீராகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.
  ✍அரசமரத்தின் பட்டை, வேர், விதை இவற்றை பாலில் கொதிக்கவைத்து ஆறிய பின் அதில் தேன் கலந்து தொடர்ந்து 1 மண்டலம் அருந்தி வந்தால் தாது விருத்தியடையும். பெண்களுக்கு கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.
  ✍அரச விதைகளைக் காயவைத்து இடித்து பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் பாலில் கலந்து உண்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். மலத்துடன் இரத்தம் வெளியேறுதல் குணமாகும்.
  ✍அரசமரப் பட்டையை சிதைத்து நீரில் போட்டு கொதிக்க வைத்து குடிநீராக அருந்தி வந்தால் சொறி, சிரங்கு குணமாகும்.
  ✍உடல் வெட்கை குறையும். வியர்வை நாற்றம் நீங்கும். சருமம் பளபளப்பதுடன், சரும நோய்கள் அண்டாது. சருமத்தில் சுருக்கம் ஏற்படாது.
  ✍அரசமரப் பட்டையை சிதைத்து பொடியாக்கி நாள்பட்ட புண்களின் மீது தடவினால் புண்கள் விரைவில் குணமாகும்.
  ✍அரச மரப் பட்டையை நீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறிய பின் அந்த நீரால் வாய் கொப்பளித்து வந்தால் வாயில் உள்ள புண்கள் விரைவில் குணமாகும்.
  ✍வெள்ளைப்படுதல் நோய் கொண்ட பெண்கள் இந்த நீரால் பிறப்புறுப்பை கழுவி வந்தால் வெள்ளைப்படுதல் நோய் குணமாகும். அதனால் ஏற்படும் மற்ற பாதிப்புகள் குறையும்.
  ✍பண்டைய காலத்தில் இருந்தே நம் முன்னோர்கள் மரங்களை தெய்வமாக வழிபட்டனர். இந்துக்களின் வழிபாட்டில் வேம்பு, ஆல், அரசு என பல மரங்களுக்கு முக்கிய இடமுண்டு. அனைத்து மரங்களையும் விட அரசமரத்திற்கு தன் சிறப்பு அதிகம்.
   

Share This Page