அறிவியல்-அறிவோம்

Discussion in 'General Discussion' started by Prabha_kannan, Oct 28, 2018.

 1. Prabha_kannan

  Prabha_kannan Well-Known Member

  Joined:
  Oct 25, 2017
  Messages:
  431
  Likes Received:
  272
  Trophy Points:
  63
  Location:
  trichy
  பொரி மற்றும் அவல் பற்றி அறிவோம்.​

  பழங்காலம் தொட்டு அரிசியில் இருந்து தயாரிக்கப்பட்ட சிற்றுண்டி உணவு பொருள்தான் பொரி. பொரியை இறைவனுக்கு படையலிடும் முக்கிய பொருளாகவும் இன்றைய நாளில் பலவிதமான சாட் உணவுகளில் வண்ணமயமாய் விற்கப்படும் உணவாகவும் பலர் கண்டு உள்ளனர்.

  பொரி செய்யும் முறை :

  பொரி என்பது அரிசியின் மூலம் உருவாகும் உணவுப்பொருள். இதற்கென பிரத்யோகமான நெல் வகைகளே பயன்படுத்தப்படுகிறது. மோட்டாரக நெல்லே பொரி செய்ய உசிதமானது. மேலும் சம்பா, பூஞ்சம்பி. பவானி ரக அரிசிகளும் பயன்படுத்தப்படுகிறது. சமைக்க பயன்படும் அரிசியில் பொரி தயார் செய்தால் சுவையாக இருக்காது. எனவே இதற்கென குறிப்பட்ட சிலரக நெல் ரகங்களே பயன்படுத்தப்படுகிறது. பொரியில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று நெற்பொரி, மற்றொன்று அரிசிபொரி.

  நெற்பொரி என்பது மோட்டாரக நெல்லை ஓர் இரவு முழுவதும் ஊற வைத்து பிறகு அதனை எட்டுமணி நேரம் காய விட வேண்டும். அதன் பின் நெல்லை அடுப்பில் காயும் சட்டியில் அடுமணலுடன் சேர்த்து கிளர வேண்டும். ஒரு நேரத்தில் நெல் வெடித்து நன்றாக அரிசி உப்பும் பிறகு இதனை புடைத்து உமியை நீக்கி விட்டு நெற்பொரியை பிரித்து எடுக்கலாம், ஒருபடி அரிசி கிடைக்கக்கூடிய நெல்லில் சுமார் 8 படி பொரியை தயார் செய்யலாம்.

  அரிசிபொரி என்பது புழுங்கலரிசையை தண்ணீரில் உப்பு சேர்த்தும், சேராமலும் ஊறவைத்து அடுமணலுடன் சூடாக்கி பொறித்து எடுப்பது. இது ஒரு அரிசியை விட 8 மடங்கு பெரியதாய் உப்பி வரும்.

  நெற்பொரியை காய்ச்சல் மற்றும் வயிற்று போக்கு உள்ளவர்களுக்கு கஞ்சியாக செய்து கொடுக்கலாம். மேலும் மோர், தயிர் வெல்லம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றுடன் கலந்து சிறு உணவாக உட்கொள்ளலாம்.

  மாலை நேர சிற்றுண்டியாய் மசாலாபொரி :

  சாட் உணவுகளில் அதிக அளவு பொரி பயன்படுத்தப்படுகிறது. மசாலா பொரி என்றவாறு மஞ்சள் வண்ணத்தில் பலவகையான உணவுகளுடன் இணைத்து இன்றைய நாளில் பொரி சார்ந்த உணவு வகைகள் நிறைய உள்ளன.

  குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வெல்லம் கலந்த பொரி உருண்டை ஆரோக்கியமான சிற்றுண்டி வகையை சார்ந்தது. இறைவனுக்கு படையலிட கண்டறியப்பட்ட நெற்பொரி தற் போது மின் இயந்திரங்கள் மூலம் சுலபமாக அதிகளவு உற்பத்தி செய்யப்படுகிறது.

  அரிசி பொரியை அன்றாட உணவாக பயன்படுத்தும் மேற்கு வங்காளத்தவர் இன்றும் உள்ளனர். பொரியை சாதாரணமாய் நினைத்து விட வேண்டாம் நெருப்பில் வெந்து தன்னை பெரிதாக்கி கொள்ளும் பொரி சத்துள்ள உணவில் தனித்துவம் பெற்றது

  அவல்:

  நெல்லிலிருந்து அதிக அளவு அடுத்து தயாரிக்கும் பொருள் அவல் ஆகும். ஊறவைத்த நெல்லை சூடு செய்து உடனடியாக தட்டையாக்கப்படும் இயந்திரத்தின் உதவியுடன் தட்டையாக்கப்படும்.

  அவல் நன்மைகள்.

  அவல் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. அவல் உடல் சூட்டை தணித்து நல்ல புத்துணர்ச்சியை தருகிறது. காலையில் அவல் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் அந்த நாள் முழுமையும் சுறுசுறுப்புடன் இருக்க செய்யும். குழந்தைகளின் வளர்ச்சிக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் உதவும் அவலை அப்படியே வேக வைக்காமல் வெல்லம் கலந்து சாப்பிட தரலாம். நீரிழிவு நோயாளிகள் அவ்வப்போது பசிக்கும்போது கொஞ்சம் அவலை வாயில் போட்டு மென்று தின்னலாம். தனித்து உண்ணும் போதே நல்ல ருசியாக இருக்கும் அவலை விதவிதமான உணவு வகைகளாக சமைத்து உண்ணலாம்.

  (S.Harinarayanan)
   
  Last edited by a moderator: Nov 2, 2018
 2. Prabha_kannan

  Prabha_kannan Well-Known Member

  Joined:
  Oct 25, 2017
  Messages:
  431
  Likes Received:
  272
  Trophy Points:
  63
  Location:
  trichy
  உலர்ந்த மணற்பகுதியை விட, ஈரமான மணற்பகுதியில் எளிதாக நடக்க முடிவது ஏன் ?


  எந்த ஒரு குறிப்பிட்ட பொருளின் மூலக்கூறுகட்கிடையேயும் ஒரு வகையான கவர்ச்சி விசை நிலவுகிறது.

  இவ்விசையினை பிணைப்பு விசை (cohesive force) என்பர்.

  ஆனால் இருவேறு பொருள்கள் ஒன்றோடொன்றுசேரும்போது, அவற்றின் மூலக்கூறுகட்கிடையேயும் ஒரு வகையான கவர்ச்சி விசை உண்டாகிறது. அதனை ஒட்டுவிசை (adhesive force) எனக்கூறுவர். மணலும் தண்ணீரும் கலந்த ஈரமணலின் மூலக்கூறுகட்கிடையே உண்டாகும் ஒட்டுவிசையானது, உலர்ந்த மணலின் மூலக்கூறுகட்கிடையே நிலவும் பிணைப்பு விசையைவிட மிகவும் வலிமையானதாகும்.
  தண்ணீரும் மணலும் கலந்த கலவையின் மூலக்கூறுகட்கிடையே உண்டாகும் இத்தகைய வலிமையான ஒட்டு விசையின் காரணமாக ஈர மணற்பரப்பில் போதுமான கெட்டித்தன்மை ஏற்பட்டு அதன் மீது எளிதாக ஓடவும், நடக்கவும் முடிகிறது. ஆனால் உலர்ந்த மணலின் மூலக்கூறுகட்கிடையே நிலவும் பிணைப்பு விசையானது மணலின் துகள்களை ஒன்றோடொன்று இறுக்கமாக ஒட்டவைப்பதற்குப் போதுமானதாக இல்லாத காரணத்தால் மணற்பரப்பானது கெட்டித்தன்மை குறைந்து தளர்ச்சியாக இருக்கும். இந்நிலையில் யாரேனும் நடந்தால், உடலழுத்தம் காரணமாக அவரது கால்கள் உலர்மணலில் ஆழமாகப் பதிந்து, மணற்பரப்பில் எளிதாக நடக்க இயலாமற்போகிறது
   
 3. Prabha_kannan

  Prabha_kannan Well-Known Member

  Joined:
  Oct 25, 2017
  Messages:
  431
  Likes Received:
  272
  Trophy Points:
  63
  Location:
  trichy
  டெங்குக் காய்ச்சல்:

  மழைக்காலம் தொடங்கிவிட்டது,இனி நோய்களும் பரவ ஆரம்பிக்கும் அதில் முக்கியமான நோய் டெங்கு.
  ‘டெங்கு’ (Dengue) எனும் வைரஸ் கிருமியால் ஏற்படும் காய்ச்சல் என்பதால், இதற்கு `டெங்குக் காய்ச்சல்’ என்று பெயர். `டெங்கு' என்ற ஸ்பானிய மொழிச் சொல்லுக்கு, `எலும்பு முறிவுக் காய்ச்சல்’ என்று பொருள். அதாவது இந்தக் காய்ச்சலின்போது, எலும்பு முறிவு ஏற்பட்டதுபோல கடுமையான வலி தோன்றும். அதனால்தான் இப்படி அழைக்கப்படுகிறது.

  இந்த வைரஸ் கிருமிகளில் மொத்தம் நான்கு வகைகள் உள்ளன. ஒரு வகை வைரஸால் டெங்கு உண்டாகி குணமான பின்னர், வாழ்நாளில் திரும்பவும் அதே வைரஸால் பாதிப்பு இருக்காது. அதற்கான எதிர்ப்புச் சக்தி உடலில் உருவாகி இருக்கும். அதே நேரத்தில், மற்ற வகை வைரஸ் வகையால் டெங்கு ஏற்படலாம்.

  எப்படிப் பரவும்?

  கொசுவால் மட்டுமே பரவுகிறது. ‘ஏடிஸ் எஜிப்தி’ ( Aedes Aegypti) எனும் கொசுக்கள் நம்மைக் கடிக்கும்போது, டெங்கு உண்டாகிறது. கொசு கடித்த ஒரு வாரத்துக்குள் நோய் ஏற்படும்.

  எப்படிப் பரவாது?

  இது தண்ணீர், காற்று மூலம் பரவாது. டெங்கு பாதித்த ஒருவரின் இருமல், தும்மல் போன்றவற்றால் மற்றவருக்கும் அது பரவுவதில்லை.

  டெங்கு கொசு
  ஏடிஸ் கொசு

  ஏடிஸ் கொசு கறுப்பு நிறமுடையது. இதன் சிறகுகளில் வெள்ளை நிறப் புள்ளிகள் காணப்படும். இவற்றில் பெண் கொசு மட்டும்தான் மனிதனுக்கு இந்த நோயை பரப்புகிறது. இனச்சேர்க்கைக்குப் பின்னர், பெண் கொசுவுக்கு முட்டை முதிர்ச்சியடைய மனிதர்களின் ரத்தத்தில் உள்ள புரதச்சத்து தேவைப்படும். இதனால், மனித ரத்தத்தை உறிஞ்சும். இதனால் கொசுவின் வயிற்றில் முட்டைகள் வளர்ச்சியடையும். மூன்றாவது நாளில், நீரில் முட்டையிடும். ஆறாவது நாளில் லார்வா என்ற நிலையை அடையும். 11-வது நாளில் லார்வாவில் இருந்து பூச்சிநிலையை அடையும். 13-வது நாளில் முழுவையான கொசுவாக வளர்ச்சியடையும். இப்படி முதிர்ச்சியடையும் கொசு, வாழும் சூழலுக்கு ஏற்ப இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை உயிர் வாழும்.

  பொதுவாக, கொசுக்கள் என்றாலே சாக்கடை, அசுத்தமான குளம், குட்டை போன்ற நீர்நிலைகள், நீண்டகாலம் தேங்கியிருக்கும் தண்ணீர் போன்றவற்றில் வாழும் என்று அறிந்திருப்போம். ஆனால், டெங்குக் கொசுக்களோ அசுத்தமற்ற நீர்நிலைகளிலும் வளரக்கூடியவை. மற்ற கொசுக்கள் பெரும்பாலும் இரவில்தானே கடிக்கும்? ஆனால், இந்த கொசுக்களோ பெரும்பாலும் மாலை அல்லது பகலில்தான் கடிக்கும்.

  குழந்தைகளுக்கு காய்ச்சல்
  யாருக்கு ஆபத்து அதிகம்?

  குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து வயதினருக்கும் இந்த நோய் வரலாம். குறிப்பாக, குழந்தைகளுக்கும், நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்களுக்கும் எளிதில் வரும்.

  அறிகுறிகள்...

  திடீரென கடுமையான காய்ச்சல் (104 டிகிரி ஃபாரன்ஹீட்/ 40 டிகிரி செல்சியஸ்), அதிகமான தலைவலி, கண்களுக்குப் பின்புறம் வலி, கண் விழி சிவந்து, வெளிச்சத்தைப் பார்க்க முடியாமல் கண் கூசுதல், உடலில் சிவப்புப் புள்ளிகளும் தோன்றும். இதோடு, எலும்புகளை முறித்துப்போட்டதைப்போல கடுமையான வலி எல்லா மூட்டுகளிலும் ஏற்படுவது இந்த நோயின் முக்கிய அறிகுறிகள்.

  உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பு எப்போது?

  பெரும்பாலானோருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்ட ஏழு நாள்களில் சரியாகிவிடும். சிலருக்கு மட்டும் டெங்கு வைரஸ் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தலாம். டெங்கு வைரஸ் ரத்தத்தில் உள்ள தட்டணுக்களை (Platelets) அழித்துவிடும். இவை ரத்தம் உறைவதுக்கு உதவக்கூடியவை. ரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கை குறையும்போது, அது நுரையீரல், வயிறு போன்ற உறுப்புகளிலும் பல் ஈறு, சிறுநீர்ப் பாதையிலும் ரத்தக் கசிவை ஏற்படுத்தக்கூடும். உரிய மருத்துவச் சிகிச்சை கிடைக்கவில்லை என்றால் உயிரிழப்பும் ஏற்படலாம்.

  என்னென்ன பரிசோதனைகள்?

  ஆரம்ப அறிகுறிகள் வைரஸ் நோய்களில் காணப்படும் பொதுவான குணங்கள் என்பதால், உடனே டெங்குவை உறுதி செய்ய இயலாது. காய்ச்சல் மூன்று நாள்களுக்கு மேல் நீடித்தால், உடனே மருத்துவமனைக்கு சென்று, என்.எஸ் 1 ஆன்டிஜன் (NS1 Ag) டெங்கு ஐ.ஜி.எம். (Dengue IgM ) அல்லது டெங்கு ஐ.ஜி.ஜி (Dengue IGG) உள்ளிட்ட ரத்தப்பரிசோதனைகளைச் செய்துகொள்ள வேண்டும். பொதுவாக ஒருவருக்கு தட்டணுக்களின் எண்ணிக்கை சுமார் மூன்று லட்சம் வரை இருக்கும். டெங்குக் காய்ச்சல் வந்தவருக்கு தட்டணுக்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் கீழே குறைந்துவிடலாம். எனவே, அதே நாளில் ப்ளேட்லெட் (Platelet) என்னும் ரத்த அணுக்களின் எண்ணிக்கை மற்றும் ரத்தத்தின் நீர்ப்பளவு (Heamatocrit) உள்ளிட்ட பரிசோதனைகளை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இரண்டு அல்லது மூன்று நாள்கள் தொடர்ந்து செய்துகொள்ள வேண்டும்.

  என்ன சிகிச்சை?

  டெங்குக் காய்ச்சலுக்கு எனத் தனியாக சிகிச்சை எதுவும் இல்லை. காய்ச்சலைக் கட்டுப்படுத்த பாராசிட்டாமால் ( Paracetomol) மாத்திரையும், உடன் உடல்வலியைப் போக்க உதவும் மருந்துகளும் தரப்படும். சிலருக்கு மட்டுமே அதிர்ச்சிநிலை (Dengue Shock Syndrome) ஏற்படும். அதற்கு குளுக்கோஸ் மற்றும் சலைன் (Dextrose Saline) தேவையான அளவுக்கு ஏற்றப்பட வேண்டும். தட்டணுக்கள் குறைந்தவர்களுக்கு அதை ஈடுகட்ட நரம்பு மூலமாக தட்டணுக்கள் மிகுந்த ரத்தம் செலுத்தப்பட வேண்டும்.

  நோயுற்ற காலத்தில்...

  காய்ச்சல் பாதித்த காலத்தில் நோயாளி நன்றாக ஓய்வெடுக்க வேண்டும். உடலில் நீரிழப்பு ஏற்படும் என்பதால், அதிக அளவில் நீர்ச்சத்து உணவுகளை உட்கொள்ள வேண்டும். போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பால், பழச்சாறு, இளநீர், கஞ்சி போன்ற திரவ உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.
   
  Shruthi likes this.
 4. Shruthi

  Shruthi Active Member

  Joined:
  Oct 31, 2015
  Messages:
  121
  Likes Received:
  52
  Trophy Points:
  28
  Gender:
  Female
  Excellent. Keep it up.
   
  Prabha_kannan likes this.
 5. jayalashmi

  jayalashmi Active Member

  Joined:
  Nov 12, 2017
  Messages:
  218
  Likes Received:
  186
  Trophy Points:
  43
  Gender:
  Female
  நல்லதகவல்
   
  Prabha_kannan likes this.
 6. Prabha_kannan

  Prabha_kannan Well-Known Member

  Joined:
  Oct 25, 2017
  Messages:
  431
  Likes Received:
  272
  Trophy Points:
  63
  Location:
  trichy
  காய்கறி, பழங்களில் ஒட்டப்படும் ஸ்டிக்கர் மற்றும் அதற்கான அர்த்தம் என்ன ?

  துரித உணவுகளை தவிர்த்து இயற்கை உணவுகளான காய்கறி பழங்களை உட்கொண்டால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால், இந்த காய்கறி, பழங்களே பல வகைகளில் தயாரிக்கப்படுகின்றன என்பது தான் வியப்பின் உச்சம்.


  மரபணு மாற்றம் செய்யப்பட காய்கறி, பழங்கள், நச்சுக்கொல்லி பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட காய்கறி, பழங்கள், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட காய்கறி, பழங்கள் என பல வகைகள் சந்தையில் கிடைக்கின்றன. இவற்றை கண்டறிய தான் பி.எல்.யு எனும் குறியீட்டு முறை கடைபிடிக்கப்படுகிறது.

  PLU என்றால் என்ன?

  பி.எல்.யு (PLU) என்பது “Price Look Up” நம்பர் எனப்படுகிறது. நாம் வாங்கும் காய்கறிகள் பழங்கள் பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்பட்டதா? மரபணு மாற்றம் செய்யபப்ட்டதா? அல்லது இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டதா என்பதை இந்த பி.எல்.யு குறியீட்டு எண்களை வைத்து எளிதாக கண்டறிந்துவிடலாம்.

  நான்கு இலக்க குறியீடு.

  பழத்தின் மேல் நான்கு டிஜிட் எண் மட்டும் 4011 என்று இருந்தால், (வாழைப்பழத்தின் கோட் எண் 4011) இயற்கையாக விளைந்தது என்று அர்த்தம். நான்கிற்கு முன்பு ஒரு எண் சேர்ந்து 84011 என்று இருந்தால், இயற்கையாக அல்லாமல், செயற்கை முறையில் (மரபியல் மாறி) விளைந்தது என்று பொருள். நான்கிற்கு முன்பு, 9 என்கிற எண் சேர்த்து, 94011 என்று இருந்தால், ஆர்கானிக் பண்டம் என்று அர்த்தம். குறிப்பாக இவ்வகையான வாழைப்பழங்களில் “4011” என்ற குறியீட்டு இலக்க எண் குறிப்பிடப்பட்டிருக்கும்.

  எச்சரிக்கை

  F P S (International Federation for Produce Standards) மூலம் பெறப்படும், இந்த உணவுப் பண்டங்களுக்குண்டான கோட் எண்களை 1990 முதல் உலகளாவிய முறையில், கடைகளில், உபயோகப்படுத்தி வருகிறார்கள். அதில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கரில் உள்ள மெழுகு, உண்ணப்பட்டு விட்டால், அதனால் எந்த பாதிப்பும் உண்டாகாது (edible gum). ஆகையால், தேவையான தின்பண்டங்களை, தெளிவுடன் வாங்கி சாப்பிடுங்கள்.

  இனிமேலாவது நீங்கள் பெரும் கடைகளில் காய்கறி, பழங்கள் போன்ற உணவுப் பொருட்களை வாங்கும் போது அது எவ்வகையானது என்பதை அறிந்துக் கொண்டு வாங்குங்கள்.

  புற்றுநோய் அபாயம்:

  மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறி உணவுகளை அன்றாடம் உட்கொள்வது நாள்பட புற்றுநோய் கட்டிகள் உடலில் உண்டாக பெரிய காரணியாக இருக்கிறது என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.
   

Share This Page