அறிவியல்-அறிவோம்

Discussion in 'General Discussion' started by Prabha_kannan, Oct 28, 2018.

  1. Prabha_kannan

    Prabha_kannan Well-Known Member

    Joined:
    Oct 25, 2017
    Messages:
    477
    Likes Received:
    291
    Trophy Points:
    63
    Location:
    trichy
    அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள்
    (Unidentified Flying Objects -UFO)


    அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் UFO எனப்படுகின்றது. வானில் திடீரென தோன்றும் பறக்கும் பொருட்கள் தனியாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு திடீரென தோன்றும் UFOக்கள் வேற்றுக்கிரகத்தில் வசிப்பவர்கள் பூமிக்கு வந்து செல்ல உபயோகிக்கும் பறக்கும் தட்டுகள் என்றே நம்பப்படுகின்றது.

    பறக்கும் தட்டுக்கள், அயல் கிரகவாசிகளின் வருகை போன்றவை நிஜம்தானா அல்லது பார்த்ததாகக் கூறுபவர்களின் கற்பனையா என்று இன்னமும் அறுதியிட்டுத் தீர்க்கமாகக் கூற முடியவில்லை- இது போல் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத, ஆராய்ச்சியினாலும் உறுதி செய்யப்படமுடியாத அன்னியத் தோற்றங்களை UFO ( Unidentified Flying Objects) என்று சொல்கிறார்கள் இப்படிப்பட்ட அபூர்வமான பொருட்கள் ஆங்காங்கே காட்சியளிப்பதாக பன்னெடுங்காலங்களாக செய்திகள் பரவிவந்தாலும் 1947ம் ஆண்டுக்குப் பிறகுதான் இதைப்பற்றிய அதிகமான செய்திகள் உலகின் பார்வைக்கு வரத் துவங்கின.

    விண்ணில் பறக்கும் தட்டுக்கள் போன்ற விண்வெளி வாகனங்கள் அதிவேகமாக பறப்பதாகக் கூறப்படுகின்றது. அதில் வேற்றுகிரகவாசிகள் பயணிப்பதாகவும் சிலர் நம்புகின்றனர்.

    UFO தினம்:

    ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 2 ம் தேதி உலக அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் தினம் 2001 ஆம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
    1947 ஜூலை 2 ல் ரோஸ்வெல்லின் அடையாளம் தெரியாத பொருள் விபத்து நடந்ததின் நினைவாக இந்த தினம் அதிகாரப்பூர்வமாக உலக அளவில் கடைபிடிக்கப்படுகிறது.

    வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள்? நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்களா? இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உணடு. வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு பெரும்பாலான விஞ்ஞானிகள் ஆம் என்றே பதில் கூறுகிறார்கள்.

    இன்னும் 25 ஆண்டுகளில் நாம் அவர்களை நேரில் சந்திக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

    வானியல் விஞ்ஞானிகள் விண்வெளியில் வரும் வேற்று கிரகவாசிகளின் சிக்னல்களை கண்டறிந்து உள்ளனர்.

    வேற்று கிரகங்களிலும் மக்கள் வாழ்கின்றனரா என்பது குறித்து அமெரிக்காவின் ’நாசா’ மையம் ஆய்வு மேற்கொண்டுள்ளது.

    இந்த ஆய்வுகள்
    குறித்து விசாரிக்க பல மில்லியன் டாலர் செலவிலான ரகசிய திட்டத்தை 'பென்டகன்' நடத்தி வந்ததாக அமெரிக்க பாதுகாப்புத்துறை ஒப்புக்கொண்டுள்ளது.

    கடந்த 2007 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த திட்டம் 2012 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்ததாம். இதுகுறித்து ஒருசில அதிகாரிகள் மட்டுமே அறிந்திருந்தனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    விசித்திரமான அதிவேக விமானங்கள் பறப்பது மற்றும் விண்ணில் சில பொருட்கள் நகர்வதை இத்திட்டத்தின் ஆவணங்கள் விவரிப்பதாக சர்வதேச பத்திரிகை ஒன்று குறிப்பிட்டுள்ளது.

    இதுகுறித்து விளக்கம் அளிக்கும் விஞ்ஞானிகள், இது மாதிரியான விவரிக்க முடியாத சில சம்பவங்கள், வேற்றுகிரகவாசிகள் வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்க வேண்டிய அவசியமில்லை என கூறுகின்றனர்.

    இந்த ஆய்வை முன் நின்று நடத்தியுள்ள ஓய்வுபெற்ற ஜனநாயக கட்சி செனட்டர் ஹேரி ரீட், "நான் இத்திட்டத்தை நடத்தியதற்கு சங்கடமோ அல்லது வெட்கமோ படவில்லை. இதற்கு முன் யாரும் செய்யாததை நான் செய்துள்ளேன்" என்று கூறியுள்ளார்.

    முன்னதாக இந்த ஆண்டில், அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பு, லட்சக்கணக்கான ஆவணங்களை இணையத்தில் வெளியிட்டது. விண்ணில், அடையாளம் தெரியாத பொருட்கள் மற்றும் பறக்கும் வட்டத்தட்டுகளை கண்டது குறித்த ஆவணங்களும் இதில் அடங்கும்.

    விரைவு ரேடியோ வெடிப்புகள் (Fast radio bursts) முதன் முதலாக 2007 ஆம் ஆண்டு வேற்று கிரகவாசிகளின் சமிக்ஞையை பதிவு செய்தது.ராயல் வானியல் கழகத்தின் மாதாந்திர அறிக்கையில் 4 புதிய சமிக்ஞைகள் ஆராய்ச்சிக்காக எடுத்து கொள்ளப்பட்டு உள்ளன என கூறபட்டு உள்ளது.

    இது குறித்து அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்து ஆராய்ச்சி செய்துவரும் நிகல் வாட்சன் கூறும் போது

    விண்வெளியில் இருந்து வரும் ஒவ்வொரு அபூர்வமான சமிக்ஞைகளும் எங்களுக்கு ஒரு வேற்று கிரக நாகரீகம் இருக்கும் என ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இந்த சமிக்ஞைகளை கேட்கும் போது இந்த பரந்த பிரபஞ்சத்தில் மனிதர்கள் நாம் தனியா இல்லை என எண்ண தோன்றுகிறது.


    [​IMG]
     
  2. Prabha_kannan

    Prabha_kannan Well-Known Member

    Joined:
    Oct 25, 2017
    Messages:
    477
    Likes Received:
    291
    Trophy Points:
    63
    Location:
    trichy
    ஆபத்தான மைதாமாவு உஷார்

    (S.Harinarayanan GHSS Thachampet)
    கோதுமையில் உள்ள நார்ச்சத்துகளை அகற்றியே மைதா மாவு தயாரிக்கப்படுகிறது. இந்த மைதா மாவில் பல ஆபத்தான ரசாயனங்கள் சேர்க்கப்படுகிறது. குறிப்பாக, அலொக்ஸான் என்ற ரசாயனம் அதிகம் கலக்கப்படுகிறது. இதனால், இன்சுலின் சுரப்பது தடுக்கப்பட்டு ஏராளமானோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.​

    உணவில் இருக்கும் கார்போஹைட்ரேட், குளுக்கோஸாக மாறி ரத்தத்தில் கலந்து செல்களுக்குச் செல்ல வேண்டும். அப்போதுதான் நமக்கு ஆற்றல் கிடைக்கும். கணையத்தில் பீட்டா செல்களால் உற்பத்தி செய்யப்படும் இன்சுலின்தான் ரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸை இதுபோல செல்களுக்குக் கொண்டு செல்கிறது. ஆக்சிடேசன்(oxidation) என்கிற இந்த செயலினால் கிடைக்கும் ஆற்றலின் அளவுக்கு நம் உடல் செயல்பாடுகள் இருக்கும்பட்சத்தில் ரத்தத்தில் சர்க்கரை அளவு இயல்பான நிலையில் பராமரிக்கப்படும். இன்சுலின் போதுமான அளவு சுரக்காதபட்சத்தில் குளுக்கோஸ் செல்களுக்குச் செல்லாமல் ரத்தத்திலேயே தங்கிவிடும். இதுதான் நீரிழிவுநோய்.​

    விஷத்தன்மை கொண்ட வேதிப்பொருட்கள்:​

    அலொக்ஸான்(Alloxan) என்கிற ரசாயனம் சேர்த்தால்தான் உணவாகப் பயன்படுத்தப்படுகிற அளவுக்கு மிருதுவாகவும், சுவையான உணவாகவும் மைதா மாறும். இந்த ரசாயனத்தால் செரிமானக்கோளாறு, எதுக்களித்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.​

    பென்சாயில் பெராக்சைடு' (Benzoyl Perozide) எனும் வேதிப் பொருளை மைதாவில் கலக்கிறார்கள், இந்த ரசாயனம் மைதாவின் வெண்மை நிறத்துக்காக சேர்க்கிறார்கள். காலில் ஆணி ஏற்பட்டால் அதை குணப்படுத்துவதற்காகவும், பொருட்களை பளபளப்பாக்குவதற்கும் தலைமுடியை கருப்பாக்க பயன்படுற, 'ஹேர் டை'யில் சேர்க்கிற நச்சுப்பொருள் இந்த பென்சாயி்ல் பெராக்சைடு.இது ரத்தத்தில் Free radicals என்ற நச்சுக்குப்பைகளை உருவாக்குவதால் ஆக்சிஜன் உடைந்து செல்களில் பாதிப்பு ஏற்படும்.இந்த ரசாயனம் ஜவுளித்துறையில் துணிகள் வெண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காகப் பயன்படுத்தப்படுவது என்பது அதிர்ச்சியூட்டும் தகவல்.மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives, Sugar, Saccarine, Ajinomotto போன்ற உப பொருட்களும் சேர்க்கப்படுகிறது.​

    இது மைதாவை இன்னும் அபாயகரமாக்குகிறது.​

    மைதா உணவைச் சாப்பிடுவதால் இதயத்திற்குச் செல்லும் ரத்த நாளங்கள் பாதிக்கப்படுவதோடு, கொழுப்பு படிதல், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் மாரடைப்பு போன்ற நோய்கள் இளம் வயதிலேயே வரும் என்பதும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.​

    மைதாவில் தண்ணீர் ஊற்றினாலே பசைபோல் ஒட்டும். இந்த பசைத்தன்மை உடலிலிருந்து வெளியேற 24 மணி நேரம் ஆகும். சிறுகுடல், பெருங்குடல் ஆகிய இடங்களில் தங்கித் தங்கி செல்வதால் அந்த நேரத்தில் கிருமிகள் உடலில் உற்பத்தியாகிவிடும்.​

    ஒரு காலத்தில் பசை மட்டுமே தயாரிக்க பயன்படுத்தப்பட்ட மைதாவை பல நூறு டன்கள் விற்பதற்கு விஷத்தன்மை வாய்ந்த வேதிப்பொருட்களை கலந்து பரோட்டா எனும் பண்டத்தையும் உருவாக்கி மக்களை அதற்கு அடிமையாக்கி-விட்டனர். விளைவு, இன்று சில்லறைக் கடைகளில் சிறுதானிய மாவுகள் கிராம் கணக்கில் விற்பனையாக, மைதாவோ மூட்டைக் கணக்கில் விற்பனையாகிறது.​

    ஆபத்துவிளைவிக்கும் மைதா கலந்த உணவுகளை தவிர்ப்போம்,சிறுதானிய உணவுகளுக்கு முக்கியத்துவம் தருவோம்.​
     
    Shruthi likes this.

Share This Page