அழகா... கள்ளழகா! மனம் கவர்ந்த மாய அழகா!

Discussion in 'Temples and worship' started by saravanakumari, Apr 30, 2018.

  1. saravanakumari

    saravanakumari Administrator Staff Member Manager

    Joined:
    Nov 12, 2014
    Messages:
    2,276
    Likes Received:
    1,035
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    home maker
    Location:
    villupuram
    வைகை ஆறு இன்று போல் அன்றில்லை. இந்த நதிக்கரையில் ஏராளமான மரங்கள் இருந்தன. அவற்றில் வாசனை மலர்கள் பூத்துக் குலுங்கின. அந்த மலர்களெல்லாம் உதிர்ந்து வைகை வெள்ளத்தில் மிதந்து செல்லும் காட்சியே அழகு. இதற்கு சாட்சி பரிபாடல் போன்ற இலக்கியங்கள்.அப்படிப்பட்ட இயற்கை வளம் மிக்க வைகை, சிவனால் உருவாக்கப்பட்டது. தனது திருமணத்துக்கு வந்தவர்கள் தாகம் தீர இந்த நதியை அவர் உருவாக்கினார். தன் சிரசை சற்றே கவிழ்த்து கங்கையை இங்கே விட்டார்.

    சிவனின் நேரடிப் பார்வையில் உருவான நதி இது. தென்னக கங்கை என்று கூட இதற்கு பெயர் சூட்டலாம். கங்கை என்றாலே பாவம் போக்குவது.

    இப்படிப்பட்ட நதியில் மூழ்கி எழ யாருக்கு தான் ஆசை வராது! பாவம் தீர்ந்தால் பிறவி இல்லையே! இப்படிப்பட்ட ஆசை தான் சுதபஸ் என்ற முனிவருக்கு எழுந்தது.
    வைகையில் ஒருமுறை மூழ்கி எழுந்தாலே, செய்த பாவம் நீங்குமென்றால், அங்கேயே பலநாள் மூழ்கிக் கிடந்தால், பிறவியே இல்லாமல் செய்து விடலாமே! நதியில் மூழ்கினால், (பிறவி) கடலையே கடந்து விடலாமே என்று கணக்கு போட்டார்.

    அதற்கேற்றாற் போல், மூத்த முனிவர் ஒருவர் இவர் அருகே வர, இவர் கண்டும் காணாதது போல் இருந்தார். வந்தவருக்கு கோபம் வந்துவிட்டது. ஏ! சுதபஸ்,
    நீ மண்டூகமாகப் போ (தவளையாய் மாறு). இந்த நதியில் மூழ்கிக்கிட,” என்று சாபமிட்டார். சுதபஸ் நினைத்தது நடந்து விட்டது.ஏன்...மண்டூகமாகப் போ என மூத்தவர் சாபம் கொடுத்திருக்க வேண்டும்! மச்சமாகப் போ (மீனாக மாறு) என சாபம் பெற்றிருக்கலாமே!

    மீன் என்றால் தண்ணீரில் மட்டுமே வாழ முடியும். தவளை என்றால் தண்ணீர், தரை என எங்கும் வாழலாம்.

    முனிவர்களின் கோபம் கூட நல்லதையே செய்யும். அவர்கள் செய்த தவத்தின் பலன் அது.

    சுதபஸ் அன்று முதல் மண்டூகர் ஆனார். தவளையாய் ஆற்றில் வசித்தார். மிக நீண்டகாலம் தென்னக கங்கையில் கிடந்தார்.

    அவ்வப்போது தரைக்கு வருவார். காரணம் என்ன!

    எம்பெருமானான சுந்தரராஜர் அழகர்மலையில் இருந்து என்று வைகைக்கு எழுந்தருளுகிறாரோ அன்று சாப விமோசனம் கிடைக்கும் என்பது மூத்தவர் கொடுத்த வாக்குறுதி....அல்லது சாப விமோசனம். ஒருவேளை பெருமாள் ஆற்றில் இறங்காமல், கரை வழியே நடந்தால் துள்ளிக்குதித்து விழுந்தாவது அவர் திருவடியில் விழுந்து விடலாமே என்ற எண்ணம்!
    பெருமாளின் திருவடியைப்

    பார்த்தாலே சொர்க்கம்.... ஸ்ரீரங்கத்திற்கு செல்கிறோம். பெருமாளின் திருவடியைத் தான் முதலில் பார்க்கிறோம். பிறகு தான் கமலம் போன்ற முக அழகைத்
    தரிசிக்கிறோம். அந்தத்திருவடி நம்மை மோட்சத்திற்கே கொண்டு சென்று விடுமாம்.
    பார்த்தாலே இப்படி என்றால்.... திருவடி பட்டால் என்னாகும்!

    அழகர்கோவிலில் இருந்து சுந்தரராஜப் பெருமாள் குதிரையில் ஏறி வந்தார். வைகையைக் கடக்கும் போது, அவரது திருவடி மண்டூகர் மீது படுகிறது. சுய உருவைப் பெற்றார்.

    ஆகா...பெருமாளே! இனி எனக்கு மோட்சம் தானே!

    “அடேய், பாரடா! இப்போதே நீ மோட்சத்தில் தானே இருக்கிறாய். மண்டூகர் சுற்றுமுற்றும் பார்த்தார். ஆம்...திருவடி பட்ட அந்த நொடியே அவர் மோட்சத்திற்கு போய் விட்டார்.

    நமக்கும் அதே நிலை தான்!

    இன்று அழகர் ஆற்றிலே இறங்குகிறார். பார்க்க முடியாதவர்களுக்காக நாளையும் வைகைக்குள் இருக்கும் தேனுார் மண்டபத்தில் எழுந்தருளுவார். அவரது திருவடியைத் தரிசித்தாலே போதும். பூலோகத்திலேயே சொர்க்கத்தைக் காணலாம்.
    கோவிந்தா என்ற கோஷம் அழகர் வரும் பாதையெங்கும் கேட்கும். 'கோவிந்தா' என்றால் 'திரும்ப வராதது' என்று பொருள்படும். ஆம்...அழகர் தரிசனம் பாவத்தைப் போக்கும்.

    அந்த பாவத்தின் பலன் திரும்ப நம்மை அண்டாது. 'கோ' என்றால் 'தலைவன்'. 'விந்தம்' என்றால் 'திருவடி'. அவன் திருவடிகளைத் தரிசித்தால் பாவம் முற்றிலும் நீங்கும்.

    எனவே தான் பக்தர்கள் 'கோவிந்தா' கோஷமிடுகின்றனர். வைகை ஆற்றில்
    தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளும் கள்ளழகரின் நாடு செழிக்க மழை வேண்டி பிரார்த்திப்போம்.

    [​IMG]

    நீதி தெய்வம் கருப்பணர்
    அழகர்கோவிலில் காவல் தெய்வமாக விளங்கும் கருப்பணசுவாமி மிகவும் சக்தி வாய்ந்தவர். பதினெட்டாம் படியான் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார். இவரை வணங்கினால் நினைத்தது கைகூடும். இது ஒரு நீதிமன்றம் போல! இவரை சாட்சியாக வைத்து முக்கிய விவகாரங்களை கிராமமக்கள் பேசித் தீர்க்கின்றனர்.

    [​IMG]


    அழகர்கோவில் வரலாறு
    ஒரு முறை நியாயஸ்தரான எமதர்மராஜனுக்கே சாபம் ஏற்பட்டது. இச்சாபத்தை போக்க பூலோகத்தில் தற்சமயம் கோயில் இருக்கும் அழகர் மலைக்கு வந்தார்.

    விருசுபகிரி என்னும் பெயர் கொண்ட இம்மலையில் தவம் செய்தார். இந்த மலைத்தொடர் திருப்பதியைப் போல ஏழு மலைகளை கொண்டது. தர்மராஜனின் தபசை மெச்சி பெருமாள் காட்சிதந்தார். இறைவனின் கருணையை போற்றும் விதமாக தர்மராஜன் பெருமாளிடம் தினந்தோறும் உன்னை ஒரு முறையாவது பூஜை செய்ய வரம் தர வேண்டும் என்று கேட்டார். அதன்படியே பெருமாளும் வரம் தர இன்றும் இக்கோயிலில் தினமும் நடக்கும் அர்த்த ஜாம பூஜையை எம தர்ம ராஜனே நடத்துவதாக ஐதீகம். எல்லா மக்களுக்கும் அருள் தருமாறு வேண்டிய, தர்மராஜன் விருப்பத்தின் பேரில் இங்கேயே திருமால் எழுந்தருளினார். விஸ்வ கர்மானால் இங்கு சோமசந்த விமானம் (வட்ட வடிவம்) அமைக்கப்பட்டது.

    ஆறு ஆழ்வார்கள்

    ஆழ்வார்களில் பெரியவாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் ஆறு ஆழ்வார்கள் அழகர்கோவில் மலை, பெருமாளைப் பாடியுள்ளனர். இவர்கள் பாடிய பாடல்களின் எண்ணிக்கை 128.

    கல்வி தேவதைகள்
    ஹயக்ரீவரும் சரஸ்வதியும் கல்வி தரும் தெய்வங்களாவர். இவர்கள் இருவரும் அழகர்கோவிலில் காட்சி தருகின்றனர். கல்வி தேவதைகளான இவர்களை வணங்கினால் கல்வி வளர்ச்சி, ஞானம் உண்டாகும். ஒரே தலத்தில் இந்த இருவரையும் தரிசிப்பது சிறப்பு.

    நான்கு தாயார்
    பங்குனி உத்திரநாளில் அழகர்கோவில் பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடக்கும். அன்று காலையில் அழகர் ஸ்ரீதேவி, பூமிதேவி, ஆண்டாள், கல்யாண சுந்தரவல்லி ஆகிய நான்கு தாயார்களுடன் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருள்வார். அங்கு பெருமாளுக்கு நான்கு தாயார்களுடன் திருமண வைபவம் நடந்தேறும். அதன் பின் சுவாமி, தாயார்களுடன் பூப்பல்லக்கில் மூலஸ்தானத்திற்கு திரும்புவார். அன்று ஒருநாள் மட்டுமே பெருமாளை நான்கு தாயார்களுடன் ஒன்றாக தரிசிக்க முடியும்.
     
    kannamma 20 likes this.

Share This Page