ஆங்கில மாத ராசிபலன்

Discussion in 'Religious & Sprituality' started by NATHIYAMOHANRAJA, Dec 16, 2019.

 1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,600
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  மேஷம்

  மேஷம் : தன்னம்பிக்கையின் மூலமாக காரியங்களில் வெற்றி கொள்ளும் மேஷ ராசியினரே! இந்த காலகட்டத்தில் ராசியை ராசிநாதன் செவ்வாய் - புதன் குரு ஆகியோர் பார்க்கிறார்கள். சுப பலன் உண்டாகும். சுக்கிரனின் சஞ்சாரம் பணவரத்தை அதிகப்படுத்தும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றத்தை பெறுவதற்கு முயற்சிகள் செய்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையான விஷயங்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை குறையும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.

  பெண்களுக்கு: எந்த ஒரு வேலையையும் மனதிருப்தியுடன் செய்வீர்கள்.

  கலைத்துறையினருக்கு: எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். தனலாபம் உண்டாகும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
  அரசியல்துறையினருக்கு: கோபத்தால் சில்லறை சண்டைகள் ஏற்படலாம். பணவரத்து கூடும். காரிய அனுகூலம் உண்டாகும். மந்த நிலை மாறும். பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் காணப்படும்.

  மாணவர்களுக்கு: கல்வியில் தேர்ச்சி உண்டாகும். விளையாட்டு மற்றும் போட்டிகள் சாதகமாக பலன் தரும். சகமாணவர்களின் ஒத்துழைப்பும் இருக்கும்.

  பரிகாரம்: செவ்வாய்க்கிழமை அன்று முருகனுக்கு தீபம் ஏற்றி வணங்கி கந்தர் சஷ்டி கவசம் படிக்க எல்லா பிரச்னைகளும் தீரும். காரிய வெற்றி உண்டாகும்.

  அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி.
   
 2. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,600
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  ரிஷபம்

  ரிஷபம் : உலக விஷயங்களை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டும் ரிஷப ராசி அன்பர்களே! இந்த காலகட்டத்தில் அனுபவ ஞானம் அதிகரிக்கும். கடுமையான முயற்சிகள் மேற்கொள்வது குறையும். வாக்குஸ்தானத்தில் ராகு இருப்பதால் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. திருமணம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான நிலை இருக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் எதிர்பாராத தடை ஏற்பட்டு நீங்கும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்பார்த்த பண உதவி வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்த்து சாதாரணமாகப் பேசுவது நல்லது. வாழ்க்கைத் துணையுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். நண்பர்கள், உறவினர்கள் வருகை இருக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

  பெண்களுக்கு: சேமிக்கும் பழக்கம் அதிகரிக்கும். கடும் முயற்சிகள் நல்ல பலன் தரும். செலவு அதிகரிக்கும். பொறுப்புகள் கூடும்.

  கலைத்துறையினருக்கு: புதிய வாய்ப்புகள் தேடி வரும். அவற்றில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெறுவீர்கள்.

  அரசியல்துறையினருக்கு: உங்கள் செல்வாக்கு உயரும்.

  மாணவர்களுக்கு: படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். மேற்படிப்பு படிக்கும் ஆர்வம் உண்டாகும். கல்விக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.

  பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமியை தீபம் ஏற்றி வழிபட்டு வர செல்வம் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

  அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி.
   
 3. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,600
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  மிதுனம்

  மிதுனம் : தனது விடா முயற்சியால் எந்த காரியங்களையும் சாதித்துக் கொள்ளும் மிதுன ராசி அன்பர்களே! இந்த காலகட்டத்தில் எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். விட்டுச் சென்ற நண்பர் மீண்டும் வந்து சேர்வார். அதனால் மகிழ்ச்சி உண்டாகும். மங்கள செலவு ஏற்படும். ராசியில் இருக்கும் ராகுவாலும் சனிபகவானின் பார்வையாலும் தேவையற்ற அலைச்சல் ஏற்படலாம். அலைச்சலால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாத நிலை ஏற்படலாம். பணவரவு இருக்கும். வாக்கு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத போட்டிகள் ஏற்படும். அதிக முதலீடு செய்யும் முன் யோசிப்பது நல்லது. கடன் விஷயங்களில் கவனம் தேவை. பழைய பாக்கிகள் சிறிது தாமதத்திற்குப் பின் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். விருந்தினர்கள் வருகையால் செலவு கூடும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது.

  பெண்களுக்கு: நல்ல பலன்கள் உண்டாகும். மற்றவர்கள் மூலமாக நடக்க வேண்டிய காரியங்கள் நல்லபடியாக நடைபெறும்.

  கலைத்துறையினருக்கு: கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும் பாராட்டு கிடைக்கும். மனக்கவலை நீங்கும்.

  அரசியல்துறையினருக்கு: ஆன்மீக நாட்டமும், மன தைரியமும் ஏற்படும். மேலிடத்துடன் இருந்து வந்த பிரச்னைகளில் சமரசம் ஏற்படும்.

  மாணவர்களுக்கு: கூடுதல் கவனத்துடன் பாடங்களைப் படிப்பது நல்ல மதிப்பெண் பெற உதவும். எந்த காரியத்தையும் யோசித்து செய்வது நல்லது.

  பரிகாரம்: துளசியால் பெருமாளை அர்ச்சனை செய்து நெய் தீபம் ஏற்றி வணங்க கஷ்டங்கள் குறையும். காரிய வெற்றியும், நன்மையும் உண்டாகும்.

  அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி.
   
 4. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,600
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  கடகம்

  கடகம் : வாதாடும் திறமை கொண்ட கடக ராசி அன்பர்களே! இந்த காலகட்டத்தில் காரிய அனுகூலம் உண்டாகும். எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். சுய நம்பிக்கை அதிகரிக்கும். புதனின் பாதசாரத்தால் புத்தி தெளிவு உண்டாகும். செவ்வாயின் சஞ்சாரத்தால் எந்த பிரச்னையையும் எதிர்கொள்ளும் தைரியம் உண்டாகும். மனதை கவலை கொள்ளச் செய்த பிரச்னைகளில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்டு சாதகமான பலன் கிடைக்கும். தொழில், வியாபாரம் முன்னேற்றப் பாதையில் செல்லும், சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை ஏற்படும். எதிர்பார்த்த பண உதவியும் கிடைக்கப் பெறும். குடும்பாதிபதி சூரியன் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் தேவையற்ற பிரச்னைகளை தலை தூக்கச் செய்யும். எனவே சாதுரியமாக பேசி எதையும் சமாளிப்பது நல்லது.

  பெண்களுக்கு: எந்த ஒரு விவகாரத்தையும் எதிர் கொள்ளும் மன வலிமை உண்டாகும். எதிலும் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது.

  கலைத்துறையினருக்கு: உற்சாகம் வரும். தொழிலில் முன்னேற்றம் காண புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்கக் கூடிய சூழ்நிலை காணப்படும்.

  அரசியல்துறையினருக்கு: புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கும்.

  மாணவர்களுக்கு: எதிர்பார்த்த மதிப்பெண் பெற அதிக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது.

  பரிகாரம்: திங்கட்கிழமையில் அங்காளம்மனை தீபம் ஏற்றி வணங்க மனக் கவலை தீரும். எதிர்ப்புகள் அகலும். எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும்.

  அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்.
   
 5. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,600
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  சிம்மம்

  சிம்மம் : எதற்கும் கலக்கமோ, அதிர்ச்சியோ அடையாத சிம்ம ராசி அன்பர்களே! இந்த காலகட்டத்தில் ராசிநாதன் சூரியன் சுகஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். பேச்சாற்றல் வசீகரம் ஏற்படும். ராசியை குரு பார்ப்பதால் எல்லா வகையிலும் நல்ல பலன்கள் உண்டாகும். எதிர்பாராத சம்பவங்களால் இழுபறியாக நின்ற காரியங்கள் நல்ல முடிவுக்கு வரும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். செவ்வாயின் ரண ருண ரோக ஸ்தான
  பார்வையால் உடல் ஆரோக்கியம் மனதில் உற்சாகத்தைத் தரும். தொழில் ஸ்தானத்தை ராசிநாதன் சூரியனே பார்ப்பதால் தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் சற்று கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். எதை பற்றியும் கவலைப்படாமல் நினைத்த காரியத்தை செய்வதில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும்.

  பெண்களுக்கு: பணம் சார்ந்த பிரச்னைகளில் சாதகமான முடிவு பெறும்.

  கலைத்துறையினருக்கு: விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். பயணம் செல்ல நேரலாம்.

  அரசியல்துறையினருக்கு: மனதிற்குப் பிடித்தவர்களை சந்திக்க நேரிடலாம். ரகசியங்களைக் கையாளுவதில் கவனம் தேவை.

  மாணவர்களுக்கு: கூடுதல் மதிப்பெண் பெற அதிகமாக படிக்க வேண்டி இருக்கும். கல்வி தொடர்பான பிரச்னைகள் குறையும். தேவையான உதவி கிடைக்கும்.

  பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை அன்று நவகிரகத்திலுள்ள சூரியனை தீபம் ஏற்றி வழிபட்டு வர கடன் பிரச்னை குறையும். முன்னேற தேவையான உதவிகள் கிடைக்கும்.

  அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்.
   
 6. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,600
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  கன்னி

  கன்னி : எந்த அவசர சூழ்நிலையிலும் சாந்தமாகவும் பொறுமையாகவும் முடிவெடுக்கும் கன்னி ராசி அன்பர்களே! இந்த காலகட்டத்தில் ராசிநாதன் புதனின் தனவாக்கு குடும்ப சஞ்சாரத்தால் காரியங்களில் வெற்றி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை கூடும். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். வீண் செலவுகள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்களது தொழிலை விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அதற்குத் தேவையான பண உதவியும் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது திறமையால் அலுவலகப் பணியை சிறப்பாக செய்வார்கள். வாழ்க்கைத்துணை குழந்தைகளுடன் சந்தோஷமாக பொழுதைக் கழிப்பீர்கள். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

  பெண்களுக்கு: எண்ணப்படி காரியங்களை செய்து முடிக்க உதவிகள் கிடைக்கும். செலவுகளை குறைக்க திட்டமிடுவது நல்லது.

  கலைத்துறையினருக்கு: அதீத கவனத்துடன் செயல்படுவது உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு நெடுநாளைய ஆசைகள் நிறைவேறும். லட்சியங்கள் கைகூடும்.

  அரசியல்துறையினருக்கு: லாபம் உண்டாகும். கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். சிறு சிக்கல்கள் ஏற்பட்டு மறையும். கவனத்துடன் செயல்பட்டால் சிக்கல்களைத் தவிர்க்கலாம்.

  மாணவர்களுக்கு: பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களை அவ்வப்போது போக்கிக் கொள்வது நல்லது. திட்டமிட்டு செயலாற்றுவது முனனேற்றத்திற்கு உதவும்.

  பரிகாரம்: புதன்கிழமையன்று நவகிரகத்தில் புத பகவானை தீபம் ஏற்றி வணங்கி வருவதும் புத்தி சாதுரியத்தை தரும். சிக்கலான பிரச்னைகளையும் எளிதாக தீர்ப்பீர்கள்.

  அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி.
   
 7. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,600
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  துலாம்

  துலாம் : எதிலும் நேர்மையாகவும் சமாதானத்துடனுடம் நடந்து கொள்ளும் துலா ராசி அன்பர்களே! இந்த காலகட்டத்தில் ராசியில் இருக்கும் செவ்வாய் மற்றும் புதனால் எடுக்கும் முயற்சிகள் கைகூடும். பணவரத்து இருக்கும். திறமையான செயல்களால் புகழும், அந்தஸ்தும் உயரும். ராசியிலிருக்கும் செவ்வாய் தேவையற்ற பதட்டத்தை உண்டாக்கலாம். பணவரத்து இருந்தாலும் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. புதிய பதவிகள் தொடர்பான விஷயங்கள் தாமதப்பட்டாலும் பொறுப்புகள் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாகப் பேசுவது நல்லது. விபரீத ஆசைகள் ஏற்படலாம்.

  பெண்களுக்கு: பேச்சின் இனிமை சாதுரியம் இவற்றால் எடுத்த காரியங்களில் சாதகமான பலன் பெறுவீர்கள்.

  கலைத்துறையினருக்கு: மன தைரியத்தால் வெற்றி கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். உற்சாகமாக எதையும் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

  அரசியல்துறையினருக்கு: அடுத்தவர் செய்யும் இடையூறுகளையும் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் சாமர்த்தியம் உண்டாகும். எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். பொறுப்புகள் காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம்.

  மாணவர்களுக்கு: ஆசிரியர்களிடம் நன்கு பழகி அவர்கள் நன் மதிப்பை பெறுவதுடன் பாடங்களில் இருக்கும் சந்தேகங்களையும் போக்கிக் கொள்வீர்கள். புத்தகங்களை கவனமாக வைத்துக் கொள்வது நல்லது.

  பரிகாரம்: கன்னிப் பெண்கள் 9 பேருக்கு தாம்பூலம், பூ, மஞ்சள் கொடுத்து உபசரிக்க எல்லா பிரச்னைகளிலும் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.

  அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி.
   
 8. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,600
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  விருச்சிகம்

  விருச்சிகம் : உடல் சுத்தத்திற்கு முக்கியத்துவம் அளிப்பது போல் மனசுத்தத்திற்கும் முக்கியவத்துவம் அளிக்கும் விருச்சிக ராசி அன்பர்களே! இந்த காலகட்டத்தில் ராசியிலிருக்கும் சூரியனால் எதிர்ப்புகள் அகலும். எல்லா நலன்களும் உண்டாகும். தனஸ்தானத்தில் இருக்கும் கிரக கூட்டணியால் பணவரத்து அதிகரிக்கும். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் ஸ்தானாதிபதி சூரியனே ராசியில் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். மேலதிகாரிகள் உதவி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் வருகை இருக்கும். திருமணம் போன்ற சுப காரியம் நடக்கும். நிலம், வீடு மூலம் லாபம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சுவையான உணவு கிடைக்கும். மனோ பலம் கூடும்.

  பெண்களுக்கு புதிய நபர்கள் அறிமுகமும் அவர்களால் உதவியும் கிடைக்கும். பயணம் செல்ல வேண்டி இருக்கும்.

  கலைத்துறையினர் வீண் செலவை குறைப்பது நன்மை தரும். வாகன யோகம் உண்டாகும். ஆன்மீக தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும்.
  அரசியல்துறையினருக்கு வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும்.

  மாணவர்களுக்கு போட்டிகள் விலகும். பாடங்களில் கவனம் செலுத்துவீர்கள்.

  பரிகாரம்: செவ்வாய்க்கிழமையன்று மாரியம்மனுக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட எல்லா கஷ்டங்களும் நீங்கும். மன அமைதி உண்டாகும்.

  அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்.
   
 9. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,600
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  தனுசு

  தனுசு: எதிலும் அடுத்தவருடைய ஆலோசனைகளையும் எடுத்துக் கொள்ளும் தனுசு ராசி அன்பர்களே! இந்த காலகட்டத்தில் ராசியில் இருக்கும் கிரக கூட்டணி பல விதத்திலும் உங்களுக்கு அனுகூலங்களைக் கொடுக்கும். எதிர்பார்த்த காரியம் வெற்றிகரமாக நடந்து முடியும். பொருள்வரத்து இருக்கும். எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். வீண் செலவும் இருக்கும். பிடிவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் மெத்தன போக்கு காணப்படும். பணவரத்து திருப்தியாக இருக்கும். செலவும் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சக ஊழியர்களுடன் கடுமையாக பேசாமல் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்கள் கோபத்தைத் தூண்டலாம். மிகவும் கவனமாக பேசுவதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நன்மை தரும். கணவன், மனைவிக்குள் திடீர் மன வருத்தம் ஏற்பட்டு நீங்கும்.

  பெண்களுக்கு: மற்றவர்கள் செயல்களால் திடீர் கோபம் உண்டாகலாம்.

  கலைத்துறையினருக்கு: புத்தி சாதூரியத்தால் எடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பார்கள். குழப்பம் நீங்கும். மனவருத்தம் நீங்கும்.

  அரசியல்துறையினருக்கு: வெளியூர் பயணங்கள் மனதிற்கு மகிழ்ச்சி தரும். கவலை வேண்டாம். கடன் விவகாரங்களில் யோசித்து செயல்படுவது நல்லது. கடித போக்குவரத்து மூலம் நல்ல தகவல் வரும்.

  மாணவர்களுக்கு: கல்வியில் காணப்பட்ட மெத்தனப் போக்கு நீங்கி சுறுசுறுப்பாக பாடங்களை படிப்பீர்கள். பிடிவாதத்தை விடுவது நன்மை தரும்.

  பரிகாரம்: குரு பகவானுக்கு வியாழக்கிழமையன்று நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். அறிவுத் திறன் கூடும்.

  அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்.
   
 10. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,600
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  மகரம்

  மகரம் : சொல்லிற்கும் செயலிற்கும் முக்கியத்துவம் அளிக்கும் மகர ராசி அன்பர்களே! இந்த காலகட்டத்தில் ராசிநாதன் சனிபகவானின் சஞ்சாரத்தால் பணவரத்து இருக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். செவ்வாயின் பார்வை வீண் மன குழப்பங்களை ஏற்படுத்தினாலும் முடிவில் தெளிவு உண்டாகும். சுகஸ்தானம் மிக வலிமையாக இருப்பதால் வீடு மனை சம்பந்தமான இடங்களில் இருந்து வந்த பிரச்னைகள் அகலும். தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஒரு சின்ன விஷயத்திற்காக கூட அலைய வேண்டி இருக்கும். பணிச் சுமை காரணமாக திடீர் கோபம் உண்டாகலாம். எதிர்பார்த்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு சரியாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன், மனைவிக்குள் கருத்து வேற்றுமை ஏற்படலாம். பிள்ளைகளின் எதிர்கால நலனில் ஆர்வம் காட்டுவீர்கள்.

  பெண்களுக்கு: கொடுத்த வாக்கைக் காப்பாற்ற பாடுபடுவீர்கள். மற்றவர்கள் பிரச்னைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

  கலைத்துறையினருக்கு: காரியங்களில் இருந்த பின்னடைவு நீங்கும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். நீண்ட நாளைய ஆசை நிறைவேறும்.
  அரசியல்துறையினருக்கு அனைவரிடமும் சந்தோஷமாகப் பழகுவீர்கள். மன நிம்மதி உண்டாகும்.

  மாணவர்களுக்கு: நிதானத்தைக் கடைப் பிடிப்பது வெற்றிக்கு உதவும். பாடங்களை கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்லது.

  பரிகாரம்: சனிக்கிழமை விநாயகரை வழிபடுவது எல்லா காரியங்களும் நன்றாக நடக்க உதவும். கஷ்டங்கள் தீரும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.

  அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி.
   

Share This Page