ஆடி மாதத்திற்கு இத்தனை சிறப்பு

Discussion in 'Religious & Sprituality' started by NATHIYAMOHANRAJA, Jul 11, 2019 at 2:08 PM.

 1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  6,170
  Likes Received:
  503
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  பல கோடிக்கணக்கான ஆண்டுகளாக சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்கள், தனக்கென்று இருக்கும் ஒரு நியதி படியே புவி வட்ட பாதையில் சுற்றி வருகின்றன. பல நூற்றாண்டுகளாக இந்த கால மாற்றத்தை கவனித்து வந்த மனிதன், வாரம், மாதம், வருடம் என இந்த கால மாற்றத்தை வகைப்படுத்தினான். அப்படி தமிழர்கள் சூரியனை அடிப்படையாக கொண்டு ஒரு வருடத்திற்கு பன்னிரண்டு மாதங்கள் என்று வரையறுத்தனர். அதில் நான்காவதாக வரும் மாதமான “ஆடி” மாதத்தின் சிறப்புகளை இங்கு அறிந்து கொள்வோம். “ஆடி மாத காற்றில் அம்மிக்கல்லே பறக்கும்” என்று ஒரு பழமொழி உண்டு. வெயில், காற்று, மழை என மூன்று இயற்கை சக்திகளும் தங்களின் ஆற்றலை காட்டும் ஒரு பருவ காலமாகவும் இது இருக்கிறது. இந்த ஆடி மாதத்தை “ஆன்மீக மாதம்” என்று சொன்னாலும் அது மிகையாகாது. ஏனெனில் இம்மாதத்தில் ஆடி ஞாயிறு, ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி கிருத்திகை, ஆடி பூரம், ஆடி அமாவாசை, ஆடி பௌர்ணமி என மாதம் முழுவதும் இறை வழிபாட்டிற்குரிய நாட்களாக இருக்கின்றன. அதிலும் குறிப்பாக அம்மன் மற்றும் கிராம தேவதைகளின் வழிபாட்டிற்குரிய மாதமாக இருக்கிறது இந்த ஆடி மாதம். - Advertisement - கோடைகாலம், வசந்த காலம், குளிர்காலம் மற்றும் காற்று காலம் என்கிற நான்கு காலங்களில், காற்று அதிகம் வீசும் காலமாகவும் வெப்பமும் மழையும் கலந்து வருகின்ற காலமாகவும் இருக்கின்றது ஆடி மாதம். பொதுவாக இந்த ஆடி மாத காலத்தில் யாரும் சுப நிகழ்ச்சிகள் எதையும் செய்வதில்லை. ஏனெனில் இந்த ஆடிமாத காலத்தில் தான் தமிழகத்தின் கற்புக்கரசியும், காவிய நாயகியுமான “கண்ணகி” தனக்கு தவறாக நீதி வழங்கிய பாண்டிய மன்னனின் மதுரை மாநகரை எரித்தாள். பின்பு சேர நாட்டிற்கு சென்ற கண்ணகி தெய்வ நிலையை அடைந்து அம்மனாக வழிபடப்பட்டாலும், அவளின் உக்கிரம் குறையாததால், ஒவ்வொரு வருடமும் ஆடிமாதத்தில் சுப நிகழ்ச்சிகளை செய்யாமல் தவிர்த்தும், அம்மன் கோவில்களில் குளிர்ச்சியை தரும் உணவான “கேழ்வரகு கூழை” அவளுக்கு படைத்து, பிறகு மக்களுக்கு வழங்கி அம்மனை சாந்தப்படுத்துகின்றனர். புவியியல் ரீதியாக பார்க்கும் போது இந்த ஆடி மாதம் என்பது சூரியன் தட்சிணையாயினம், அதாவது தென்திசையை நோக்கி பயணிக்க தொடங்கும் காலமாகும். இக்காலங்களில் பகல் நேரம் குறைவாகவும் இரவு நேரம் நீடித்திருக்கும் கால சூழல் ஏற்படுகிறது. நமது வேதங்களில் கூறப்பட்டுள்ளது போல் இந்த 6 மாத கால தட்சிணாயனம் காலம் என்பது பித்ரு லோகத்தில் வாழும் முன்னோர்களுக்கும், சொர்க்கத்தில் வாழும் தேவர்களுக்கும் இரவு நேர காலமாக இருக்கிறது. எனவே ஆடி மாத அமாவாசை தினத்தில் நமது முன்னோர்களுக்கு திதி கொடுப்பதன் மூலம் அவர்களின் ஆசி நமக்கு கிடைக்கும். அதோடு தேவர்களின் ஆசியையும் நாம் பெறமுடியும்.
   

Share This Page