ஆட்டிஸம்

Discussion in 'Children care' started by Thamaraikannan, Apr 22, 2019.

 1. Thamaraikannan

  Thamaraikannan Active Member

  Joined:
  Feb 8, 2019
  Messages:
  143
  Likes Received:
  78
  Trophy Points:
  28
  Gender:
  Female
  Occupation:
  Homemaker
  Location:
  Tamilnadu
  ஆட்டிஸம்
  ஆட்டிஸம் என்பது குழந்தைகளிடம் காணப்படும் ஒரு வகை குறைபாடு. சரியான வயதிற்குள்ளாக கண்டறிந்தால் தகுந்ந செயல் முறை பயிற்சி (occupational theraphy) மற்றும் பேச்சு பயிற்சி (speech theraphy) மூலம் சரி செய்து விடலாம். ஆட்டிஸம் பாதிப்பிற்க்குள்ளான குழந்தைகள் இந்த சமுதாயத்துடன் ஒன்ற முடியாமல் தனித்து செயல்படுவர். எனக்கு தெரிந்த சில விஷயங்களை இங்கு பகிர்ந்துள்ளேன்.

  அறிகுறிகள்

  ஒரு குழந்தையானது அதன் பெயர் சொல்லி அழைக்கும் போது திரும்பி பார்க்க வேண்டும் இல்லையேனில் நாம் கவனிக்க வேண்டும்.

  அனைத்து உறவுகளையும் பெயர் சொல்லி அழைக்க வேண்டும் (அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி.,) இல்லையேனில் நாம் கவனிக்க வேண்டும்.

  பிற குழந்தைகளுடன் விளையாட வேண்டும் இல்லையேனில் நாம் கவனிக்க வேண்டும்.

  எந்த பொருளையும் சுழற்றி விளையாட கூடாது.

  வித்தியாசமான ஒலி எழுப்பினாலோ, கைகளை அசைத்தாலோ, நுனி காலில் நடந்தாலோ அல்லது குதித்தாலோ நாம் கவனிக்க வேண்டும்.

  மேல் நோக்கியே பார்க்கக் கூடாது.

  பொதுவாக இரண்டு வயது குழந்தையானது ஒரு பாடல் (rhymes) பாட வேண்டும். நான்கு வயது குழந்தையானது ஒரு குட்டி கதை சொல்ல வேண்டும்.

  செய்ய வேண்டியது

  மேற்கூறிய அறிகுறிகள் காணப்பட்டால் அருகில் உள்ள மனநல மருத்துவரை அணுகவும்.

  நான் இங்கு குறியவை சில மட்டுமே, ஒரு குழந்தையின் செயல் பிற குழந்தைகளிடம் இருந்து வேறுபட்டால் நாம் உடனே கவனிக்க வேண்டும்.
   
  HELEN MARY and Prabha_kannan like this.
 2. Prabha_kannan

  Prabha_kannan Well-Known Member

  Joined:
  Oct 25, 2017
  Messages:
  605
  Likes Received:
  370
  Trophy Points:
  63
  Location:
  trichy
  Good information.
   
 3. Thamaraikannan

  Thamaraikannan Active Member

  Joined:
  Feb 8, 2019
  Messages:
  143
  Likes Received:
  78
  Trophy Points:
  28
  Gender:
  Female
  Occupation:
  Homemaker
  Location:
  Tamilnadu
  thanks
   

Share This Page