ஆப்பிளில் இவ்வளவு நன்மையா? இதனால் தான் மருத்துவரிடம் செல்ல அவசியம் இல்லையோ!

Discussion in 'Diet and Healthy Eating' started by NATHIYAMOHANRAJA, Jan 8, 2020.

 1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,501
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  தினம் ஒரு ஆப்பிள் பழம் சாப்பிட்டால் மருத்துவரை பார்க்க தேவை இல்லை அது மட்டுமில்லாமல் எல்லா விதமான நோயிலிருந்தும் நம்மை பாதுகாக்கலாம் என்பது அனைவரும் அறிந்த ஒரு உண்மை. ஆப்பிள் மட்டுமில்லை அதை பதப்படுத்தி அதிலிருந்து பெறப்படும் வினிகரும் பல்வேறு நன்மைகளை தருகிறது. அதன் நன்மைகளை இப்போது பார்க்கலாம்.
  • ஒரு சிலருக்கு உடலில் ஏற்படும் அதிகப்படியான அலர்ஜியை குறைக்க உதவும். இதற்கு காரணம் க்வெர்செடின் என்ற பொருள் தான் காரணம்.
  • பச்சை நிற ஆப்பிளை துண்டாக்கி அதன் மணத்தை நுகர்வதால் அதிகப்படியான தலைவலி குணமாகும்.
  • ஆப்பிள் பழத்தினை துண்டாக்கி சாப்பிடாமல் கடித்து சாப்பிடுவதால் பல் சம்மந்தமான பிரச்சனைகளை வராமல் தடுக்கலாம்.
  • வயதானவர்களுக்கு ஏற்படும் முழங்கால் மற்றும் மூட்டுவலியை சரி செய்து குணப்படுத்தும்.
  • மற்ற பழங்கள் மற்றும் காய்கறிகள் காயாக இருந்தால் அதை பழுக்க வைக்க ஆப்பிளை அந்த காய்களோடு சேர்த்து வைத்தால் ஒரே நாளில் பழுக்க வைக்க முடியும். இதனால் எந்தவிதமான பக்கவிளைவுக் கிடையாது.
  • ஆப்பிள் சைடர் வினிகரை நீரில் கலந்து தலைமுடியை அலசினால் தலைமுடியில் உள்ள இரசாயனங்கள் நீங்கும். இதன் காரணமாக தலைமுடி நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமாக வைத்திருக்கலாம்.
   
 2. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,501
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  தலைவலிக்கு இதில் ஏதாவது நிச்சயம் உங்களுக்கு தீர்வு அளிக்கும்!

  இன்றைய காலக்கட்டத்தில் அதிகப்படியான வேலைப்பளு, நிம்மதியின்மை காரணமாகவும் தலைவலி ஏற்படுகிறது. இதற்கு பெரும்பாலானோர் மாத்திரைகளை சாப்பிடுவார்கள். அது தீர்வாக இருந்தாலும் நாள் போக்கில் பல பின் விளைவுகளினை ஏற்படுத்தும். அதற்கு மாறாக வீட்டில் உள்ள சில இயற்கை பொருள்களை பயன்படுத்தி தலைவலியை எப்படி சரி செய்யலாம் என்பது பற்றி இப்போது பார்க்கலாம்.
  • கொத்தமல்லி இலையை அரைத்து நீரில் கலந்து தினமும் குடித்து வந்தால் அடிக்கடி தலைவலி ஏற்படுவது குறையும்.
  • கிராம்பை அரைத்து பசை போல் மாற்றி அதை லேசாக சூடேற்றி நெற்றியில் தடவினால் தலைவலி உடனே குணமாகும்.
  • 30 கிராம் சீரகப் பொடியை 1 லிட்டர் நல்லெண்ணெயில் போட்டு கொதிக்க வைத்து அதை வாரத்திற்கு இருமுறை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் தலைவலி குணமாகும்.
  • குங்குமப்பூவை சிறிது பால் சேர்த்து பசையாக்கி நெற்றியில் தடவினால் தலைவலி மறையும்..
  • வெற்றிலையை இதமாக சூடேற்றி நெற்றியில் சிறிது நேரம் வைத்தால் தலைவலி குணமாகும்.
  • பட்டையினை பொடியாக்கி நீர் சேர்த்து பசையாக்கி கொள்ள வேண்டும் பின்பு நெற்றியில் தடவினால் தலைவலி நீங்கும்.
  • இஞ்சியை கொதிக்க வைத்து அந்த நீரில் தேன் கலந்து சாப்பிட தலைவலியை வராமல் தடுக்கலாம்.
   
 3. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,501
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  பாத வெடிப்பை குணமாக்க சில சிறந்த மற்றும் எளிய வழிகள்!

  பாத வெடிப்பை குணமாக்க சில சிறந்த மற்றும் எளிய வழிகள்:-

  • மிருதுவான பாதம் வேண்டுமெனில் தினமும் குளிக்கும் போது பீர்க்கங்காய் நாரை பயன்படுத்தி பாதத்தை தேய்த்து குளித்தால் போதும்.
  • பாத நகங்களில் இடையில் உள்ள அழுக்கை எளிதில் அகற்ற முடியாது. இதற்கு தீக்குச்சியின் மெழுகு பகுதியை நல்லெண்ணெயால் நனைத்து சூடு செய்து நகத்தின் இடையில் சுத்தம் செய்தால் அழுக்கு எளிதாக வெளியேறிவிடும்.
  • காபி பொடியை பயன்படுத்தி வாரம் ஒருமுறையாவது பாதத்தில் தேய்த்து கழுவினால் பாதச் சுருக்கம் மறையும்
  • பாதத்தில் ஏற்படும் வறட்சியை போக்க விளக்கெண்ணெய், வெள்ளை மெழுகு சேர்த்து சூடாக்கி ஆறிய பின்பு பாதத்தில் தடவினால் பாதம் மென்மையாகுவதுடன், வெடிப்பும் மறையும்.
  கல் உப்பு, நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெய், கலந்து காலில் தேய்த்து குளித்தால் வெடிப்பு மறைவதுடன் இறந்த செல்கள் வெளியேற்றப்படும்.
   
 4. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,501
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  சரும அழகை அதிகரிக்க உதவும் பழங்களை பற்றி தெரியுமா?

  சரும அழகை அதிகரிக்க உதவும் பழங்கள்:-

  • மாம்பழம் அதிக அளவில் சாப்பிடுவதால் அதில் உள்ள விட்டமின் ஈ, ஏ, கே, சி, போன்றவை சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை மறைத்து முதுமை வராமல் தடுக்கிறது.
  • எலுமிச்சை பழம், வெண்ணெய், தேன் மூன்றையும் கலந்து முகத்தில் தடவினால் சரும சுருக்கம் மறைந்து எப்போதும் இளமையாக இருக்கலாம்.
  • பப்பாளியை அதிக அளவில் சாப்பிட்டால் அதில் உள்ள என்சைம் சருமத்தில் இறந்த செல்களை வெளியேற்றி புதிய செல்களை உற்பத்தி செய்கிறது. மேலும் இதை சருமத்தில் பூசுவதன் மூலம் சுருக்கங்கள் வராமல் தடுக்கலாம்.
  • வாழைப்பழத்துடன் தேன் கலந்து முகத்தில் தடவினால் இளமையான சருமம் கிடைக்கும். இதில் உள்ள பொட்டாசியம் தோல் மற்றும் முடிக்கும் நன்மை அளிக்கிறது.
  • ஆப்பிளை சாப்பிடுவதால் சருமத்தில் புதிய செல்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. பாலுடன் கலந்து முகத்தில் தடவினால் முகம் பொலிவு பெறும்.
   

Share This Page