ஆரோக்கியம்

Discussion in 'Diet and Healthy Eating' started by NATHIYAMOHANRAJA, Jun 12, 2019.

 1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  5,805
  Likes Received:
  489
  Trophy Points:
  83
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  சுக்கான் கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்


  சித்த மருத்துவம் என்பது தமிழ் சித்தர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு வைத்திய முறையாகும். இந்த மருத்துவ முறையில் பெரும்பாலான நோய்களுக்கு மருத்துவ தீர்வாக கீரை உணவுகளே பரிந்துரைக்கப்படுகிறது. பல கீரை வகைகள் இருந்தாலும், ஒரே நேரத்தில் பல நோய்களுக்கு தீர்வளிக்கும் கீரைகள் ஒரு சில மட்டுமே இருக்கின்றன. அதில் ஒன்று தான் சுக்கான் கீரை. சுக்கான் கீரை சாப்பிடுவதால் மனிதர்களுக்கு ஏற்படும் மருத்துவ பயன்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். சுக்கான் கீரை நன்மைகள் குடற்புண் குணமாக நமது உடலில் மிக மிருதுவான, உணர்வுமிக்க தசைகள் கொண்டதாக குடல்கள் இருக்கின்றான. உணவு முறைகளில் ஏற்படும் மாறுபாடுகள், வயிற்றில் வாயு அதிகரித்தல் மற்றும் மன அழுத்தம் போன்ற காரணங்களால் குடலில் புண்கள் ஏற்படுகின்றன. சுக்கான் கீரையை புளி சேர்க்காமல் பாசிப் பருப்புடன் கலந்து வேகவைத்து மதிய உணவில் சேர்த்துக்கொண்டால் குடல்புண்கள் வேகமாக குணமாகும். - Advertisement - இதய பலவீனம் நமது இதயம் ஒரு நிமிடத்திற்கு 72 முறை சுருங்கி விரிந்து துடிக்கும். இந்த துடிப்புகளிள் மாறுபாடுகள் ஏற்படுமானால் உடலில் ஏதோ ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்பட்டிருக்கிறது என்று பொருள். அதிக இரத்த அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இதயத் துடிப்பு சீராக இருக்காது. இந்த பிரச்சனைகள் இருப்பவர்கள் உணவில் தினந்தோறும் சுக்கான் கீரையை சேர்த்துக்கொண்டால் இதயம் நன்கு பலமாகி, அதன் இயக்கம் சீராகும். பல்வலி உணவை நன்றாக அரைத்து மென்று சாப்பிட சத்துக்கள் அதற்கு பொருட்கள் கற்கள் உறுதியாகவும் ஆரோக்கியமாக இருக்க ஒரு பற்களில் பலவிதமான பிராச்சனைகள் ஏற்படுகிறது. இப்படிப்பட்ட பிரச்சனையால் அவதியுறுபவர்கள் சுக்கான் கீரையின் வேரை நிழலில் உலர்த்தி, பொடி செய்து, அப்பொடியை கொண்டு தினமும் காலையில் பல் துலக்கி வந்தால் பற்களில் ஏற்படும் வலி நீங்கி, பற்கள் மற்றும் பல் ஈறுகள் உறுதியாகும். மலச்சிக்கல் நீங்க மனிதனுக்கு ஏற்படும் 90 சதவீத நோய்களுக்கு அடிப்படையே மலச்சிக்கல் தான் என நவீன மருத்துவம் கூறுகிறது. அவசரமான இன்றைய வாழ்க்கை முறையால் பெரும்பாலானவர்களுக்கு இந்த மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படுகிறது. இந்த மலச்சிக்கலைத் தீர்க்க சுக்கான் கீரை சிறந்த மருந்தாக இருக்கிறது. சுக்கான் கீரையை ஏதாவது ஒரு பக்குவத்தில் சமைத்து தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் ஏற்படாமல் காக்கும். பசியைத் தூண்ட பசி உணர்வு என்பது உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு இயற்கை தந்த ஒரு அற்புதமான உணர்வாகும் ஒரு சிலருக்கு இந்த பசி உணர்வு அறவே ஏற்படாமல் போவதால், அவர்களால் சரிவர சாப்பிட முடியாமல் போகிறது. ஒரு சிலருக்கு சாப்பிட்ட உணவு எளிதில் சீரணமாகாது. இப்படிப்பட்டவர்கள் சுக்கான் கீரையோடு பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து, நன்கு வதக்கி, அதை சட்னிபோல் செய்து சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தி அதிகரிக்கும். நன்கு பசியைத் தூண்டும். ஈரல் பலப்பட நமது உடலில் முக்கியமான உறுப்புகளில் கல்லீரலும் ஒன்று நாம் சாப்பிடும் உணவில் இருக்கும் நச்சுதன்மை நீக்கி, உணவை செரிமானத்திற்கு உகந்த வகையில் செய்வது கல்லீரலின் பணியாக இருக்கிறது. மது, புகை, போதை வஸ்துக்கள் அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு கல்லீரல் வெகு விரைவில் பாதிக்கப்படுகிறது. இதனால் இவர்களின் உடலில் பித்தம் அதிகரித்து பல நோய்கள் ஏற்பட வாய்ப்பாகிறது. எனவே கல்லீரல் குறைபாடு கொண்டவர்கள் சுக்கான் கீரையை சூப் செய்து பருகி வந்தால் கல்லீரல் நன்கு பலப்படும். நெஞ்செரிச்லைத் தடுக்க நாம் சாப்பிடும் உணவுகளை நன்கு செரிமானம் செய்வதற்கு ஏற்ற வகையில் வயிற்றில் பல அமிலங்களின் சுரப்பு இருக்கின்றன. ஒரு சிலருக்கு இந்த அமிலங்களின் சுரப்பில் ஏற்படும் மாற்றங்களாலும் மற்றும் வாயு கோளாறுகளாலும் என்ன உணவுகளை சாப்பிட்டாலும் ஜீரணமாகாமல் நெஞ்சில் எரிச்சலை உண்டாக்கும். இப்படிப்பட்டவர்கள் சுக்கான் கீரையுடன் பாசி பருப்பு சேர்த்து, கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் நெஞ்செரிச்சல் விரைவில் நீங்கும். இரத்தத்தைச் சுத்தப்படுத்த நமது உடலில் உயிர் இருப்பதற்கு முக்கிய காரணமாக உடலில் ஓடக்கூடிய இரத்தம் இருக்கிறது. இந்த இரத்தத்தில் நச்சுக்கள் இல்லாமல் தூய்மையாக இருந்தால் மட்டுமே உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுக்கான் கீரை இயற்கையிலேயே இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. சுக்கான் கீரையை நன்கு நீர்விட்டு அலசி, அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, தேங்காய் சேர்த்து நன்கு வதக்கி, பின் சட்னி பதத்தில் அரைத்து காலை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்த சுத்தி ஏற்படும். தேள் கடிக்கு உலகில் வாழும் பல வகையான நச்சுத்தன்மை வாய்ந்த உயிரினங்களில் ஒரு வகையாக தேள்கள் இருக்கிறது. இந்த தேள்கள் மனிதர்கள் வாழும் பகுதிக்கு அருகில் அதிகம் வாழ்கின்றன. நம்மை தேள் கொட்டினால் விஷம் ஏறி கடுப்பையும், மூர்ச்சையையும் உண்டாக்கும். எனவே தேள் கடிபட்டவர்களுக்கு உடனடியாக கடி பட்ட இடத்தில் சுக்கான் கீரையின் சாறு விட்டு வந்தால் வலி குறையும், மூர்ச்சை ஏற்படாது. உடலில் பரவிய விஷம் விரைவில் நீங்கும். ஆஸ்துமா உலகில் பலரையும் பாதிக்கக்கூடிய ஒரு நோயாக ஆஸ்துமா நோய் இருக்கிறது. இந்த நோய் பாதிப்பிற்குள்ளானவர்கள் பல நேரங்களில் சரியாக சுவாசிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. ஆஸ்துமா நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகச்சிறந்த உணவாக சுக்காங்கீரை இருக்கிறது. இந்த சுக்கான் கீரையை தினந்தோறும் அல்லது வாரத்திற்கு நான்கு முறை உணவில் சேர்த்து சாப்பிட்டு வருபவர்களுக்கு கடுமை தன்மை குறைந்து சீராக சுவாசிப்பதில் ஏற்படும் பிரச்சனைகளை நீக்குகிறது.
   
 2. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  5,805
  Likes Received:
  489
  Trophy Points:
  83
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  சிறுகுறிஞ்சான் மூலிகை பயன்படுத்தி எத்தனை நோய்களை தீர்க்கலாம்

  எந்த ஒரு சிறிய வகையான உடல்நல பாதிப்பிற்கும் நம் நாட்டில் பெரும்பான்மையான மக்கள் ரசாயனங்கள் அதிகம் கலந்த மருந்துகளையே உடனடியாக எடுத்துக் கொள்கின்றனர். இது நோய்களை தீர்த்தாலும் பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது. பலவகையான அற்புதமான உயிர்காக்கும் மூலிகைகள் நிறைந்த நாடாக பாரத நாடு இருக்கிறது. நமது பண்டைய மருத்துவ முறைகளான சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேதத்தில் சிறுகுறிஞ்சான் எனப்படும் மூலிகையின் மருத்துவ குணங்கள் பற்றி கூறப்பட்டிருக்கின்றன. அந்த சிறுகுறிஞ்சான் மூலிகையை பயன்படுத்தி எத்தகைய நோய்களைத் தீர்க்கலாம் என்று இங்கு தெரிந்து கொள்ளலாம். சிறுகுறிஞ்சான் மருத்துவ பயன்கள் நீரிழிவு கட்டுப்பட நீரிழிவு நோய் கட்டுப்பட சிறுகுறிஞ்சான் இலைகள், அத்துடன் சம எடை அளவு நாவற்கொட்டைகள் எடுத்து இரண்டையும் தனித்தனியாக நிழலில் உலர்த்தி, தனித்தனியாக இடித்து, தூளாக்கி, சலித்து, ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு,1 தேக்கரண்டி அளவு தூளை வாயில் போட்டுகொண்டு வெந்நீர் அருந்தி வர வேண்டும். இதை தொடர்ந்து 40 நாட்கள் வரை காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டு வர நீரிழிவு நோய் கட்டுப்படும். உடல்நலம் மேம்படும். - Advertisement - மாதவிலக்கு பிரச்சனைகள் பெண்களை மாதந்தோறும் பாடாய்படுத்தும் ஒரு பிரச்சனையாக மாதவிடாய் இருக்கிறது. ஒரு சில பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்படுவதில் சிக்கல் ஏற்படுகிறது. மாதவிலக்கு சரியாக ஏற்பட ஒரு கைப்பிடி சிறுகுறிஞ்சான் இலைகளுடன், 2 கைப்பிடி அளவு களா இலைகள் சேர்த்து, நன்றாக மைய அரைத்து, பசையாக்கி, தினமும் காலை வேளைகளில் வெறும் வயிற்றில் ஒரு நாள் மட்டும் உட்கொள்ள மாதவிலக்கு குறைபாடுகள் நீங்கும். சுவாச நோய்கள் சுவாசம் சீராக இருந்தால் நோய்கள் நம்மை அணுகாது. ஒரு சிலருக்கு சுவாசம் சம்பந்தமான நோய்கள் ஏற்படுகின்றன. சுவாச காசம் மற்றும் இதர நுரையீரல் நோய்கள் தீர சிறுகுறிஞ்சான் வேர்த்தூள் ஒரு சிட்டிகை மற்றும் சுக்கு, மிளகு, திப்பிலி கலந்து தயாரித்த தூள் திரி கடுகு சூரணம் ஒரு சிட்டிகை கலந்து வாயில் போட்டு, வெந்நீர் குடித்து வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து காலை, மாலை வேளைகளில் 7 நாட்கள் வரை செய்ய நல்ல குணம் தெரியும். காய்ச்சல் குணமாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் காய்ச்சல், ஜுரம் போன்றவை ஏற்படுகிறது. காய்ச்சல் தீர 10 சிறுகுறிஞ்சான் இலைகளுடன், 5 மிளகு, ½ தேக்கரண்டி சீரகம் சேர்த்து, நசுக்கி, ½ லிட்டர் நீரில் இட்டுக் கொதிக்கவைத்து, கஷாயம் செய்து, ஒரு மணி நேரத்திற்கு இரண்டு தேக்கரண்டிகள் வீதம் குடித்து வர மிக விரைவிலேயே காய்ச்சல், ஜுரம் போன்றவை நீங்கும். ஒவ்வாமை ஒரு சிலருக்கு உடலில் இருக்கின்ற நிண நீர் சுரப்பிகளின் அதீத உணர்வு தன்மையாலும் ஒவ்வாமை ஏற்படுகிறது. இந்த ஒவ்வாமைக்கு உடனடி நிவாரணம் கொடுக்காத பட்சத்தில் உடல்நலத்தை கடுமையாக பாதிக்க செய்கிறது. ஒவ்வாமை நஞ்சு வெளிப்பட சிறுகுறிஞ்சான் வேரைக் காயவைத்து, தூள் செய்து வைத்துக்கொண்டு, ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டால், சீக்கிரத்தில் வாந்தி ஏற்பட்டு ஒவ்வாமை ஏற்படுத்திய நஞ்சுதன்மை வெளியாகும். இருமல் நெஞ்சில் சளி கட்டிக்கொள்ளும் போதும், கடுமையான காய்ச்சல் ஏற்பட்ட காலத்திலும் இருமல் ஏற்பட்டு பாடாய்படுத்துகிறது. கடுமையான இருமல் குணமாக சுத்தம் செய்து, நன்கு நசுக்கிய சிறுகுறிஞ்சான் வேர் 20 கிராம், ஒரு லிட்டர் நீரில் போட்டு, 100மி.லி.யாகச் சுண்டக் காய்ச்சி, வடிகட்டி வைத்துக்கொண்டு 30 மி.லி. அளவு, காலை, மதியம், மாலை வேளைகளில், ஒரு நாள் மட்டும் குடிக்க வேண்டும். இதை செய்வதால் விரைவில் கடுமையான இருமல் கட்டுப்படும். நரம்புகள் வலுப்பட நமது உடலின் இயக்கம் சீராக இருக்க நரம்புகள் வலுவாக இருக்க வேண்டியது அவசியம். மன அழுத்தம் மற்றும் ஊட்டச்சத்து இல்லாத உணவுகள் சாப்பிடுவதால் நரம்புகள் தளர்ந்து நரம்புத்தளர்ச்சி, வாதம் போன்ற நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாகின்றன. சிறுகுறிஞ்சான் இலைகளை பொடி செய்து, பசும்பாலில் கலந்து சாப்பிடுபவர்களுக்கு நரம்புகள் வலிமை பெற்று நரம்புத் தளர்ச்சி போன்ற குறைபாடுகளை நீக்குகிறது. பசியுணர்வு நமது உடல் ஆரோக்கியமாக இருக்க உணவு சாப்பிட்டு 4 மணி நேரத்திற்குள்ளாக நன்கு பசி எடுக்க வேண்டும். ஒரு சிலருக்கு பசி உணர்வு இல்லாததால் சரிவர சாப்பிட முடியாமல், உடல் ஆரோக்கியம் குறைகிறது. சிறுகுறிஞ்சான் இலைகளை கஷாயம் செய்து அருந்தி வருபவர்களுக்கு நல்ல பசி உணர்வு தூண்டப் பெற்று ,உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது. உடல் உஷ்ணம் எந்த ஒரு மனிதருக்கும் உடல் வெப்பம் சரியான அளவில் இருக்க வேண்டும். கடுமையான கோடை காலங்கள் மற்றும் இதர காரணங்களால் ஒரு சிலருக்கு உடல் வெப்பம் அதிகரித்து பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இத்தகைய பிரச்சனைகள் நீங்க, சிறுகுறிஞ்சான் இலைகளை பக்குவம் செய்து, கசாயமாக காய்ச்சி, ஆறவைத்து அருந்துபவர்களுக்கு உடல் சூடு தணிந்து, உடல் குளுமை அடையும். பித்தம் உடலில் வாதம், பித்தம், கபம் என்கிற முக்குணங்கள் அனைவருக்குமே இருக்கின்றன. இதில் அதிக நேரம் கண் விழிப்பதாலும், பித்தத்தை அதிகரிக்கின்ற உணவுகளை அதிகம் சாப்பிடுவதாலும் உடலில் பித்த தன்மை அதிகரித்து, பல பாதிப்புகளை உண்டாக்குகிறது. சிறுகுறிஞ்சான் இலைகளை காயவைத்து, பொடியாக்கி இளம் சூடான நீரில் கலந்து அருந்துபவர்களுக்கு பித்தம் உடனடியாக நீங்கும்.
   
 3. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  5,805
  Likes Received:
  489
  Trophy Points:
  83
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  தினமும் ஈச்சம் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

  உலகெங்கிலும் பல வகையான தட்ப வெப்ப சீதோஷ்ண நிலையில் இருக்கும் இடங்களின் சூழலுக்கு ஏற்ற வகையில், மனிதர்கள் உண்ணத்தக்க பல வகையான பழங்கள் விளைகின்றன. பாலைவனப் பகுதிகளில் அதிகம் விளையும் ஒரு மரமாக பேரிச்சம் பழ மரம் இருக்கிறது. அந்த பேரீச்சை மரத்தின் தன்மை கொண்ட ஒரு மரமாக ஈச்ச மரம் இருக்கிறது. அதில் விளையும் பழம் ஈச்சம் பழம் எனப்படுகிறது. இந்தியா மற்றும் பிற தென்கிழக்கு ஆசிய நாடுகளை பூர்வீகமாக கொண்டிருக்கும் ஈச்சமரத்தில் விளைகின்ற ஈச்சம் பழங்களை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். ஈச்சம் பழம் நன்மைகள் மலச்சிக்கல் உடலுக்கு உழைப்பின்றி இருப்பது, நார்ச்சத்து குறைந்த உணவுகளை உண்பது, அடிக்கடி துரித உணவுகளை சாப்பிடுவது போன்ற பழக்கங்கள் பெரும்பாலானோருக்கு மலச்சிக்கல் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறது. மலச்சிக்கலால் அவதிபடுபவர்கள் தினமும் மூன்று வேளை உணவை சாப்பிடுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு சில ஈச்சம் பழங்களை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். - Advertisement - எலும்புகள் ஈச்சம் பழத்தில் பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற மூல பொருட்கள் அதிகம் இருக்கின்றன. இது மனிதர்களின் உடலின் எலும்புகளின் தேய்மானத்தை குறைக்கிறது. மேலும் எலும்புகளுக்கு உறுதித்தன்மையையும் அளிக்கிறது. தினமும் பேரிச்சம் பழம் சாப்பிட்டு வருபவர்களுக்கு எலும்புகள் வலுவிழப்பது, மூட்டு தேய்மானம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது. கண்கள் ஒவ்வொருவருக்கும் கண்பார்வை தெளிவாக இருப்பது அவசியமாகும். உணவில் ஏற்பட்டு ஊட்டச்சத்து குறைபாடுகளால் சிலருக்கு கண்பார்வை மங்குதல், மாலைக்கண் நோய் போன்ற குறைபாடுகள் ஏற்படுகின்றன. தினமும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஈச்சம் பழங்களை சாப்பிடுபவவர்களுக்கு கண்களின் பார்வை திறன் மேம்படும். கண்புரை போன்ற பிரச்சனை ஏற்படுவதையும் தடுக்கும். இரும்புச்சத்து ஈச்சம் பழம் இரும்புச்சத்து அதிகம் நிறைந்த ஒரு இயற்கை உணவாக இருக்கிறது. நோயாளிகள், குழந்தைகள், வயதானவர்கள் என தினந்தோறும் சில ஈச்சம் பழங்களை சாப்பிட்டு வருவதால் அவர்களின் உடல் பலம் பெறும். கருவுற்றிருக்கும் பெண்களும் ஈச்சம் பழங்களை அதிகம் சாப்பிட்டு வருவது, அப்பெண்களுக்கும், அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கும் மிகவும் நல்லது. ஆண்மை சக்தி நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு தாம்பத்திய உறவில் ஆர்வம் இல்லாதது, மலட்டு தன்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். தினமும் காலை மற்றும் இரவு வேளைகளில் சில ஈச்சம் பழங்களை நன்கு மென்று சாப்பிட்டு, சூடான பசும்பால் அருந்தினால் நரம்புகள் வலுப்பெற்று , ஆண்மை குறைபாடுகள் நீங்கும். உடல் எடை ஒவ்வொரு மனிதனுக்கும் அவரின் வயது மற்றும் உயரதிக்கேற்ற எடை இருப்பது அவசியமாகும். மிகவும் மெலிந்த தேகம் கொண்டவர்கள், இயல்பான எடைக்கு குறைவான உடல் எடை கொண்டவர்கள் தினந்தோறும் பேரிச்சம் பழங்களை நன்கு அரைத்து, அதை சூடான பாலில் தினமும் மூன்று வேளை அருந்தி வந்தால் உடல் எடை பெருகும். நீண்ட நேரம் செயலாற்றும் சக்தியையும் உடலுக்கு கொடுக்கும். போதை பழக்கம் இன்று பலரும் புகையிலை, சிகரட், பீடி, மது போன்ற பல வகையான போதை வஸ்துக்களை அதிகம் உபயோகித்து உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை கெடுத்துக்கொள்கின்றனர். போதை பழக்கத்தில் விடுபட நினைப்பவர்கள், போதை பொருள் பயன்படுத்துவதற்கு பதிலாக சில ஈச்சம் பழங்களை சாப்பிட்டு வருவது கொஞ்சம், கொஞ்சமாக போதை பழக்கத்தில் இருந்து விடுவிக்கும். உடல் நலத்தையும் மேம்படுத்தும். வயிற்று பிரச்சனைகள் கெட்டுப்போன உணவுகளை சாப்பிடுவது, மாசடைந்த நீரை அருந்துவது மற்றும் சீதோஷண நிலை மாற்றத்தாலும் சிலருக்கு வயிற்று போக்கு ஏற்படுகிறது. மேலும் சிலருக்கு வயிற்றில் கிருமிகள் தொற்றால் வயிற்று போக்கு ஏற்படுகின்றன. இந்த வயிற்று போக்கால் அவதியுறுபவர்கள் தினமும் மூன்று வேலை சில ஈச்சம் பழங்களை சாப்பிட்டு வந்தால் வயிற்று போக்கு நிற்கும். உடலுக்கும் பலத்தை கொடுக்கும். புற்று நோய் செயற்கையான ரசாயனங்கள் கலக்கப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஈச்சம் பழத்தில் உடலுக்கு தீங்கான பொருட்களை அழிக்கும் சக்தி அதிகம் உள்ளன. ஈச்சம் பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பழக்கத்தை கொண்டவர்களுக்கு சிறுநீரக புற்று, குடல் புற்று போன்றவை ஏற்படும் ஆபத்து குறைவதாக பல மருத்துவ ஆய்களை மேற்கொண்ட ஆரய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நீரிழிவு நீரிழிவு நோயாளிகள் இனிப்பு தன்மை கொண்ட உணவுகளை குறைத்து சாப்பிட மருத்துவர்களால் அறிவுறுத்தப்படுகின்றனர். ஆனால் உடலுக்கு நன்மை தரும் வகையான இயற்கையான இனிப்பு சக்திகளைக் கொண்ட உணவுகளை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம். அப்படியான ஒரு இனிப்புச் சத்து கொண்ட இயற்கை உணவாக ஈச்சம்பழம் இருக்கிறது. ஈச்சம் பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் இதை சாப்பிடும் நீரிழிவு நோயாளிகளுக்கு உடலில் பலத்தை தருகிறது.
   
 4. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  5,805
  Likes Received:
  489
  Trophy Points:
  83
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  முருங்கை கீரை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்


  ஒரு சில தாவரங்களின் ஒரு சில பகுதிகள் மட்டுமே மனிதர்கள் உணவாக பயன்படுத்த தக்கதாக இருக்கின்றன. மற்ற சில தாவரங்களில் அதன் காய், இலைகள், பிசின், பூக்கள் போன்ற அனைத்துமே மருத்துவ குணம் வாய்ந்ததாக இருக்கின்றன. அத்தகைய ஒரு சிறப்பு வாய்ந்த மருத்துவ மூலிகை மரமாக முருங்கை மரம் இருக்கிறது. அந்த முருங்கை மரத்தின் இலைகள் முருங்கை கீரை என அழைக்கப்படுகின்றன. இந்த முருங்கை இலைகள் அல்லது முருங்கைக் கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். முருங்கை கீரை நன்மைகள் மலச்சிக்கல் நாம் அன்றாடம் சாப்பிடும் உணவை மறுநாள் கழிவுகளாக நமது உடல் வெளியேற்றினால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஒரு சிலருக்கு உடலில் நீர் வற்றி, உடல் உஷ்ணமடைந்து மலச்சிக்கல் ஏற்படுகிறது. இப்படிப்பட்டவர்கள் முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணிவதுடன், மலச்சிக்கல் பிரச்சனை விரைவில் நீங்கும். - Advertisement - உடல் மற்றும் கை, கால் வலிகள் உடலில் வாத தன்மை அதிகரிக்கும் போதும், கடின உழைப்பில் ஈடுபட்ட பின்பும் சிலருக்கு உடல் மற்றும் கை கால்களில் வலி ஏற்படுகின்றன. இத்தகைய பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் முருங்கை இலைகளை உருவி, அதன் காம்புகளை நீக்கிவிட்டு, அந்த முருங்கை இலைகளை சேர்த்து மிளகு ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால் உடம்பின் வலிகள் அனைத்தும் தீரும். மலட்டுத்தன்மை எந்த ஒரு ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ உடலில் எந்தவிதமான குறைபாடுகள் இல்லாமல் இருந்தால் குழந்தை பிறப்பதில் தடையேதும் இருக்காது. தற்காலங்களில் சத்தில்லாத மற்றும் கலப்படங்கள் நிறைந்த உணவுப் பொருட்களை அனைவரும் சாப்பிடுவதால் மலட்டுத் தன்மை பிரச்சனை அதிகரித்து காணப்படுகிறது. ஆண், பெண் இரு பாலர்களும் முருங்கை இலைகளை வேக வைத்து, அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மலட்டுத் தன்மை குறைபாடு நீங்கி குழந்தை பிறக்க வழி வகை செய்யும். ரத்த சோகை ரத்தத்தில் வெள்ளை ரத்த அணுக்கள் குறையும் போது ரத்த சோகை ஏற்படுகிறது. பெரியவர்களை விட இந்த குறைபாடு குழந்தைகளையே அதிகம் பாதிக்கிறது. இதற்கு சிறந்த நிவாரணியாக முருங்கை கீரை இருக்கிறது. முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் அதிகரிக்கும். உடல் பலம் பெறும். பற்களின் உறுதி, வாய்ப்புண் நாம் சாப்பிடும் உணவை நன்கு மென்று சாப்பிடவும், உணவை செரிமானம் செய்வதிலும் பற்களின் செயல்பாடுகள் இன்றியமையாததாக இருக்கின்றன. அத்தகைய பற்கள் உறுதியாக இருக்க வேண்டியது அவசியம். முருங்கைக் கீரையை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு பற்கள் உறுதியாகும். ஈறுகள் சம்பந்தமான குறைபாடுகள் நீங்கும். உடல் வெப்பத்தால் ஏற்படும் வாய் புண்கள் போன்றவை நீங்கும். இரும்புச்சத்து நமது ரத்தத்தில் நோய் எதிர்ப்புத் திறன் அதிகம் உருவாகவும், காயம்படும் காலத்தில் இரத்தம் வேகமாக உறையவும், ரத்தத்தில் ஹீமோகுளோபின் சத்துக்கள் அதிகரிக்கவும் இரும்புச்சத்து இன்றியமையாததாக இருக்கிறது. இந்த இரும்புச் சத்து முருங்கை கீரையில் அதிகம் உள்ளன. எனவே குறைந்த பட்சம் வாரம் ஒரு முறையாவது முருங்கைக்கீரையை பக்குவம் செய்து சாப்பிட்டு வருவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. தலைமுடி நமது தலையில் இருக்கும் முடிகள் நமது உச்சந்தலையை வெப்பத்திலிருந்து காக்கிறது. அத்தகைய தலை முடிகள் அடர்த்தியாக வளரவும், உறுதியாக இருக்கவும் நமது உணவில் வைட்டமின் மற்றும் புரதச் சத்துக்கள் இருப்பது அவசியம். முருங்கைக் கீரையில் வைட்டமின்கள், புரத சத்துகள் அதிகம் உள்ளன. முருங்கைக் கீரையை அடிக்கடி பக்குவம் செய்து சாப்பிடுபவர்களுக்கு தலைமுடி உதிர்வது, முடி நரைப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் காக்கும். தோல் வியாதிகள் உணவில் ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் வெளிப்புற காரணிகளால் சிலருக்கு தோல் சம்பந்தமான வியாதிகள் ஏற்படுகின்றன. முருங்கைக்கீரையில் தோல் வியாதிகள் மற்றும் இதர தோல் சம்பந்தமான குறைபாடுகளை போக்க உதவும் வைட்டமின்கள், புரத சத்துக்கள் போன்றவை நிறைந்துள்ளன. முருங்கைக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு தோலில் சுருக்கங்கள் ஏற்படுவது குறைந்து, அனைத்து விதமான தோல் வியாதிகளும் விரைவில் நீங்க உதவுகிறது. தாய்ப்பால் சுரப்பு குழந்தைகள் பிறந்து ஆறு மாத காலம் வரை தாய்ப்பால் மட்டுமே குழந்தைகளுக்கு முக்கிய உணவாக இருக்கிறது ஒரு சில குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பு நின்று விடுகிறது. இப்படிப்பட்ட இக்கட்டான சூழலை சந்திக்கும் பெண்கள் முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தத்தை சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். சுவாச கோளாறுகள் குளிர்ந்த சீதோஷணம் நிலவும் காலத்திலும், தூசுகள் நிறைந்த இடங்களில் ஏற்படும் ஒவ்வாமை காரணமாகவும் சிலருக்கு சளி, ஆஸ்துமா போன்ற சுவாச சம்பந்தமான நோய்கள் ஏற்படுகின்றன. இத்தகைய பிரச்சனையால் அவதிபடுபவர்கள் தினந்தோறும் முருங்கை கீரையை சூப் செய்து, இளம் சூடான பதத்தில் குடித்து வர சுவாச சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் விரைவில் நீங்கும்.
   
 5. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  5,805
  Likes Received:
  489
  Trophy Points:
  83
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  சேப்பங்கிழங்கு சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள்

  இயற்கையான சத்துக்களை அதிகம் தன்னகத்தே கொண்டுள்ள ஒரு இயற்கை உணவாக கிழங்குகள் இருக்கின்றன. கிழங்கு வகைகளில் பல வகைகள் உண்டு. அதில் நமது நாட்டில் பலராலும் விரும்பி சாப்பிடும் ஒரு கிழங்கு வகையாக சேப்பங்கிழங்கு இருக்கிறது. தென் அமெரிக்க கண்டத்தை பூர்வீகமாக கொண்ட இந்த சேப்பங்கிழங்கு, நமது இந்திய நாடு முழுவதும் தற்போது பயிரிடப்பட்டு வருகிறது. இந்த சேப்பங்கிழங்கு சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். சேப்பங்கிழங்கு நன்மைகள் ஊட்டச்சத்து கிழங்கு வகை உணவுகள் அனைத்துமே பொதுவாக மனிதர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து நிறைந்தவையாகவே இருக்கின்றன. அதற்கு இந்த சேப்பங்கிழங்கும் விதிவிலக்கல்ல. இந்த சேப்பங்கிழங்கு மாவில் உயர்ந்த அளவு கார்போ சத்து மற்றும் நார்ச்சத்தும் உள்ளது. பச்சை சேப்பங்கிழங்கில் 10% கார்போ சத்து இருக்கும் போது, சேப்பங்கிழங்கு மாவில் 67% உள்ளது. இதேபோல், சேப்பங்கிழங்கில் நார்சத்து 12% ஆகவும், அதுவே சேப்பங்கிழங்கு மாவில் 31% ஆகவும் உள்ளது. - Advertisement - சேற்றுப்புண் மழைக்காலங்களில் பலருக்கும் சேற்று புண் ஏற்படுவது இயற்கையானது தான். சேற்றுப்புண் போன்ற பாதம் தொடர்பான பாதிப்புகளில் சேப்பங்கிழங்கு பாதத்தில் இருக்கும் ஈரப்பதத்தை கட்டுப்படுத்துவதில் உதவுகிறது. சேப்பங்கிழங்கில் பூஞ்சை எதிர்ப்பு தன்மைகள் இல்லாத காரணத்தால் பாதத்தில் இருக்கின்ற ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்த மட்டும் இது துணை புரிந்து சேற்றுபுண்கள் வேகமாக குணமாக உதவுகிறது. உடல் எடை உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் உணவு விடயங்களில் சில கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும் உடல் எடையை குறைப்பதில் சேப்பங்கிழங்கு மிகவும் உதவி புரிகின்றன சேப்பங்கிழங்கு கொழுப்பு இல்லாதது. குறைந்த கலோரிகள் கொண்டது. இதனால் எடை குறைப்பிற்கு சிறந்த இயற்கை உணவாக சேப்பங்கிழங்கு இருக்கிறது. போலேட் சத்து பெண்கள் கருவுற்ற காலத்தில் உடலுக்கு சத்துக்களை தரும் வகையிலான உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். குறிப்பாக போலேட் சத்துக்கள் நிறைந்த உணவை அடிக்கடி சாப்பிடுவது நல்லது. சேப்பங்கிழங்கில் இந்த ஃபோலேட் சத்து அதிகம் உள்ளன. கருவுறுதலுக்கு முந்தைய காலங்களிலும், கர்ப்ப காலங்களிலும் போதிய அளவு போலேட் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால், நரம்புக் குழாய் பாதிப்பு மற்றும் இதர பிறப்பு குறைபாடுகளை ஆரம்ப கட்டத்திலேயே தடுத்து ஆரோக்கியமான குழந்தை பிறக்க உதவும். விஷ முறிவு சில வகை உணவுகளில் விஷத்தன்மை சிறிது இருப்பதால் அது சாப்பிட்டவர்களுக்கு பல உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மேலும் பூச்சிகள், வண்டுகள் போன்ற விஷ ஜந்துக்கள் கடித்தால் அதன் விஷம் உடல் முழுவதும் பரவி நமக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். சேப்பங்கிழங்கை அரைத்து பூச்சிக் கடி பட்ட இடத்தில் தடவுவதால் உடலில் பரவும் விஷம் முறிகிறது. இந்த சேப்பங்கிழங்கு சாப்பிடுவதால் ஏற்கனவே சாப்பிட்ட உணவில் கலந்திருக்கும் நஞ்சும் முறிந்து உடல்நலத்தை மேம்படுத்துகிறது. அமிலம் மற்றும் காரத்தன்மை மனிதன் ஆரோக்கியமாக இருக்க அவனது உடலில் அமிலம் மற்றும் காரச் சத்து சரியான அளவில் இருப்பது அவசியமாகும். சேப்பங்கிழங்கில் கால்சியம் மாவுச்சத்து அதிகம் உள்ளது. கால்சியம் வடிவத்தில் இருக்கும் கால்சியம் க்ளோரைடு, மனித உடலில் அமிலம் மற்றும் காரத்தன்மையின் சமநிலையை நிர்வகிக்க தேவைப்படும் ஒரு முக்கிய சத்தாக இருக்கிறது. எனவே சேப்பங்கிழங்கை அதிகம் சாப்பிடுவதால் உடலின் அமில, காரத்தன்மையை சரிசமமாக வைத்திருக்கலாம். இதயம் நமது உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் ரத்தத்தை பாய்ச்சுகின்ற இதயம் ஆரோக்கியமாக இருப்பதோடு வலிமையாக இருக்க வேண்டியது அவசியம். சேப்பங்கிழங்கை வாரம் மூன்று அல்லது நான்கு முறை சமைத்து சாப்பிட்டு வருபவர்களுக்கு இதயம் ஆரோக்கியமாக இருப்பதோடு, மாரடைப்பு, இதய ரத்த குழாய்களில் அடைப்பு போன்றவை ஏற்படுவது தடுக்கப்பட்டு நீண்ட ஆயுட்காலம் உண்டாகிறது. செரிமானமின்மை சிலருக்கு சாப்பிடும் உணவு சரியாக செரிமானம் ஆகா நிலை ஏற்படுகிறது. செரிமானக் கோளாறுகளுடன் மலச்சிக்கல், வாயு சேர்த்தல் மற்றும் இதர வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் திறன் கொண்ட இயற்கை உணவாக சேப்பங்கிழங்கு இருக்கிறது. இதில் இருக்கும் மாவுப்பொருள் ஒரு இயற்கைய மலமிளக்கியாக செயல்படுகிறது. எனவே இந்த கிழங்கை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு மேற்கண்ட அனைத்து பிரச்சனைகளும் வெகு விரைவில் தீரும். சரும வியாதிகள் பல்வேறு வகையான சரும பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த மூலிகைத் தீர்வாக கூவைக்கிழங்கு அமைகிறது. குறிப்பாக வைசூரி மற்றும் தோல் அழுகல் போன்றவற்றால் உண்டாகும் சரும தொற்று மற்றும் அரிப்பைப் போக்க சேப்பங்கிழங்கை சாப்பிடுவதன் மூலமும், அந்த சேப்பங்கிழங்கை அரைத்து சரும பாதிப்புகள் ஏற்பட்டுள்ள இடங்களில் தடவுவதன் மூலமும் சரும வியாதிகள் அனைத்தையும் வெகு சீக்கிரத்தில் போக்க முடிகிறது. புற்று நோய் சேப்பங்கிழங்கு பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புக்களில் தேங்கும் கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்றும் தன்மை கொண்டதாக இருக்கிறது. வயிறு மற்றும் குடல் பகுதிகளில் புற்று நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் சேப்பங்கிழங்கை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது. இதில் இருக்கும் சத்துக்கள் ஜீரண உறுப்புகளில் புற்று நோய் ஏற்படாமல் தடுக்கிறது.
   
 6. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  5,805
  Likes Received:
  489
  Trophy Points:
  83
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  புழுங்கல் அரிசி சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்


  இந்தியாவில் சரிபாதி மக்களின் அன்றாட உணவு அரிசி தானியம் கொண்டே செய்யப்படுகிறது. அரிசியில் பல வகைகள் உண்டு. அதில் எந்த ஒரு வகை அரிசியையும் சிறிது நேரம் நீரில் ஊறவைத்து, பிறகு வேக வைத்து செயற்கையாக தயாரிக்கபடும் அரிசி வகை தான் புழுங்கல் அரிசி. இந்த புழுங்கல் அரிசியை சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் பலவகையான நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். புழுங்கல் அரிசி நன்மைகள் தயாமின் சத்து புழுங்கல் அரிசியில் பல வகையான வைட்டமின் சத்துகள் உள்ளன. அதிலும் வைட்டமின் சட்டத்தின் ஒரு வகையான தயாமின் சத்து இதில் அதிகம் உள்ளது. இதை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு நரம்பு சம்பந்தமான குறைபாடுகள், இதயத் தசைகள் வலுவிழப்பது, மனநலம் சார்ந்த நோய்கள் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது. எனவே வாரத்திற்கு இரண்டு முறையாவது புழுங்கல் அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவது சிறந்தது. - Advertisement - நீரிழிவு நோய் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் எந்த வகையான அரிசி உணவுகளையும் சற்று குறைவான அளவில் எடுக்க வேண்டிய நிலை இருக்கிறது. ஆனால் புழுங்கல் அரிசியில் கிளைசீமிக் இன்டெக்ஸ் எனப்படும் சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்தும் திறன் அதிகம் கொண்டதாக இருக்கிறது. எனவே எந்த வகை நீரிழிவு நோயாளிகளும் புழுங்கல் அரிசி உணவுகளை அவ்வப்போது சாப்பிடுவதால் உடல்நலம் மேம்படும். குழந்தைகள் நலம் சிறு குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதால் அவர்கள் அடிக்கடி ஜுரம் மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்சனைகளால் அவதியுறுகின்றனர். இப்படிப்பட்ட காலங்களில் குழந்தைகளுக்கு புழுங்கல் அரிசி கஞ்சியை உணவாக கொடுப்பது மிகவும் சிறந்தது என மருத்துவர்கள் கூறுகின்றனர். புழுங்கல் அரிசியில் இருக்கின்ற சத்துக்கள் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை வலிமைப்படுத்தி, ஜுரம் வயிற்றுப்போக்கு போன்ற நோய்களை விரைவில் போக்குகிறது. ரத்த ஓட்டம் உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டியது அவசியம். அதே நேரத்தில் ரத்தத்தில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் இருக்க வேண்டியது அவசியமாகும். புழுங்கல் அரிசி ரத்தத்தில் ஊட்டச்சத்துகளை அதிகரிப்பதோடு, ரத்தத்தை தூய்மைப்படுத்திம், அதன் ஓட்டத்தை சீராக்குகிறது. எனவே ரத்த சுத்தி ஏற்பட விரும்புபவர்கள் அடிக்கடி புழுங்கல் அரிசி கொண்டு செய்யப்படும் உணவுகளை சாப்பிடுவது நல்லது. மலச்சிக்கல் நார்ச்சத்து குறைந்த உணவுகளையும், மாவுச்சத்து மிகுந்த உணவுகளை அதிகமாகவும் சாப்பிடுவதால் பலருக்கும் மலச்சிக்கல் பிரச்சனை உண்டாகிறது. வயிற்றில் நீர்சத்து குறைவதாலும் மலச்சிக்கல் ஏற்பட காரணமாக இருக்கிறது. வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை புழுங்கல் அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் வயிறு, குடல்களில் இருக்கும் புண்கள் ஆறுவதோடு, மலச்சிக்கல் பிரச்சனையும் நீங்கும். ஊட்டச்சத்து நமது உடல்நிலை சிறப்பாக இருக்கவும், அனைத்து உறுப்புகளும் சீராக இயங்கவும் உடலுக்கு தாதுக்கள், இரும்பு சத்து, வைட்டமின் சத்து, பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்கள் போன்றவை அத்தியாவசிய தேவையாகும் இத்தகைய சத்துகள் அனைத்தும் புழுங்கல் அரிசியில் நிறைந்துள்ளது. வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை புழுங்கல் அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கின்றது. புரதம் புழுங்கல் அரிசி புரதச்சத்து அதிகம் நிறைந்த ஒரு தானியமாகும். உடலின் சீரான இயக்கத்திற்கும், பிராணவாயு உடலின் அனைத்து திசுக்களுக்கும் சென்று சேர்ப்பதையும் நாம் உண்ணும் உணவில் இருக்கும் புரதச்சத்து செய்கிறது.தினமும் புழுங்கல் அரிசி கொண்டு செய்யப்பட்ட பதார்த்தங்களை உணவாக கொள்வது நாள் முழுவதும் மிகுந்த உற்சாகமாக இருக்கும் தன்மை நமது உடல் பெறுகிறது. குடல் புற்று இன்றைய காலங்களில் உலகெங்கிலும் இருக்கும் மக்கள் ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கும் உணவுகளையே அதிகம் உண்கின்றனர். இதனால் மனிதர்களுக்கு பல்வேறு விதமான புற்று நோய்கள் வருகின்றன. அதில் ஒன்று தான் குடல் புற்று நோய். புழுங்கல் அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை தினந்தோறும் ஒரு முறையேனும் உட்கொள்பவர்களுக்கு குடல் புற்று ஏற்படுவது தடுக்கப்படுவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. ரத்த கொதிப்பு முப்பது வயதை கடக்கின்ற ஆண்களும், பெண்களும் ரத்த கொதிப்பு மற்றும் ரத்த அழுத்தம் சம்பந்தமான நோய்களுக்கு உள்ளாகும் வாய்ப்புகள் அதிகமாகிறது. புழுங்கல் அரிசி ரத்தத்தில் பிராணவாயு கிரகிப்பை அதிகப்படுத்துவதால் உயர் ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படும் வாய்ப்பை தடுக்கிறது. ரத்தத்தில் இருக்கும் கழிவுகளை நீக்கி, ரத்தத்தை தூய்மைப்படுத்துகிறது. இதனால் உடல் சுறுசுறுப்பாக இயங்க முடிகிறது. தாய்ப்பால் குழந்தை பெற்ற பெண்களுக்கு உடலில் சக்தி அதிகம் தேவைப்படுகிறது. தாய்ப்பால் அருந்தும் வயதில் இருக்கும் குழந்தைகளை கொண்ட பெண்கள் புழுங்கல் அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். தாய்மார்களுக்கும் உடல் சக்தி பெருகும். புழுங்கல் அரிசியின் சத்துகள் நிறைந்த தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளின் ஆரோக்கியமும் மேம்படும்.
   
 7. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  5,805
  Likes Received:
  489
  Trophy Points:
  83
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  சிறுபசலை மூலிகை கீரை சாப்பிட்டு எத்தனை நோய்களை தீர்க்கலாம்

  மூலிகை செடிகள் என்பது அடர்ந்த காடுகளில் வளர்வது மட்டுமல்ல, நமது வீட்டைச் சுற்றிலும் உயிர் காக்கும் பல வகையான மூலிகை செடிகள் கீரைகள் உள்ளன. அந்த வகையில் அதிகம் பேரால் உண்ணபடாததாக இருக்கும் கீரை வகைகளில் ஒன்றாக சிறுபசலைக்கீரை இருக்கிறது. இதற்கு தரை பசலை கீரை என்கிற மற்றொரு பெயரும் உண்டு. இந்த சிறு பசலைக் கீரை சாப்பிடுவதால் உண்டாகும் மருத்துவ ரீதியான பயன்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். சிறு பசலைக்கீரை பயன்கள் புண்கள் எதிர்பாராமல் அடிபடும் போது உடலில் ஏற்படும் ரத்த காயங்கள் புண்களாக மாறி நீண்ட காலமாக ஆறாமல் இருந்தால் நமக்கு வலியும், வேதனையும் தரக்கூடியதாக இருக்கிறது. இந்த ரத்த காயங்களை சீக்கிரத்தில் ஆற்றும் தன்மை சிறு பசலை கீரை கொண்டுள்ளது. காயங்களில் கிருமி தோற்று ஏற்படுவதையும் தடுத்ப்பதுடன் காயங்களை சீக்கிரம் ஆற்றுகிறது சிறுகீரை. - Advertisement - நோய் எதிர்ப்பு உடலின் நோய் எதிர்ப்பு திறன் வயது கூடிக்கொண்டு செல்லும் போது குறைந்து கொண்டே வரும். சிறு பசலை கீரை சாப்பிடுவதால் அதிலிருக்கும் சத்துகள் ரத்தத்தில் கலந்து அதிலிருக்கும் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்துகிறது. வெளியிலிருந்து உடலுக்குள் வரும் நோய்களை உண்டாகும் ஆபத்தான நுண்ணுயிரிகளை எதிர்த்து, அவற்றை அழித்து உடலை தொற்று நோய்கள் அண்டாத வாறு காக்கிறது. வயிற்று புண்கள் காலை உணவுகளை தவிர்ப்பதாலும், நேரங்கடந்து சாப்பிடுவதாலும், அதிக காரம் உள்ள உணவுகளை உண்பதாலும் வயிற்றின் குடல் பகுதிகளில் புண்கள் ஏற்படுகிறது. இது உணவை செரிமானம் செய்வதிலும் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. சிறு பசலை கீரையை குழம்பு, கூட்டு போன்ற பக்குவத்தில் சாப்பிடுவதால் குடல் புண்களை ஆற்றுகிறது. மலக்கட்டை இளக செய்து மலச்சிக்கல் பிரச்சனையையும் தீர்க்கிறது. சிறுநீரகங்கள் சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும். சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையைப் மற்றும் அதை சார்ந்த உறுப்புக்கள் சிறப்பாக செயல்பட சிறு பசலை கீரை உதவுகிறது. சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்குவதற்கும் இது உதவுகிறது. சிறுநீரகங்கள் சிறப்பாக செயல்பட விரும்புபவர்கள் வாரம் ஒருமுறை சிறு பசலை கீரை சமைத்து சாப்பிடுவது நல்லது. கல்லீரல் சிலருக்கு கல்லீரலில் அதிகளவு நச்சுகள் சேருவதாலும், அதீத அழற்சியினாலும் கல்லீரல் வீக்கம் ஏற்படுகிறது. இந்த பிரச்னையை சரி செய்வதில் பாகற்காய் ஒரு சிறந்த இயற்கை மருத்துவ உணவாக இருக்கிறது. வாரத்திற்கு இரண்டு, மூன்று முறை சிறு பசலை கீரை சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் இருக்கும் கிருமிகள் மற்றும் நச்சுகள் நீங்கி கல்லீரல் வீக்கம் குணமாகிறது. காச நோய் காச நோய் என்பது ஒரு வகையான கிருமி நமது உடலுக்குள் புகுந்து, நுரையீரல்களில் தங்கி அந்த உறுப்புகளை பதித்து சுவாசிக்கும் போது மூச்சுத்திணறல், வறட்டு இருமல் போன்றவற்றை ஏற்படுத்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்தும் ஒரு நோய் ஆகும். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினந்தோறும் சிறிதளவு சிறு பசலை கீரை கீரை மற்றும் அதன் பழங்களை சாப்பிட்டு வந்தால் நோயின் கடுமையை குறைக்கும். தோல் வியாதிகள் நமது உடலை காக்கும் அரணாக இருக்கும் தோல்களில் ஏற்படும் நோய்கள் பிரச்சினைகளுக்கு பலவகையான மருந்துகளை உபயோகிக்கும் நிலை இருக்கிறது. சிறு பசலை கீரை தோல் வியாதிகளுக்கு சிறந்த நிவாரணமாக இருக்கிறது. சிறு பசலை கீரையை நன்றாக மை போல் அரைத்து கொண்டு அதை சொறி, சிரங்கு போன்ற தோல் வியாதிகள் இருக்கும் இடங்களில் பற்று வைத்து வர நல்ல நிவாரணம் கிடைக்கும். மூலம் மிக அதிக அளவில் ஏற்படக்கூடிய வியாதிகளில் ஒன்றாக மூலம் இருக்கிறது. மூல நோய் ஏற்பட்டவர்களுக்கு மனதில் நிம்மதியின்மையும், உடல் அசவுகரியமும் உண்டாகும். நார்ச்சத்து குறைவாக உள்ள உணவுகள் உண்பது, நீண்ட நாள் மலச்சிக்கல் போன்ற காரணங்களால் சிலருக்கு மூலம் நோய் ஏற்படுகிறது. இவர்கள் தினமும் பச்சையாக சிறிது சிறு பசலை கீரையை சாப்பிட்டு வந்தால் மூல நோய் விரைவில் குணமாகும். மாதவிடாய் பிரச்சனை பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் சார்ந்த பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணமாக சிறு பசலை கீரை செயல்படுகிறது. இந்த சிறு பசலை கீரையை கடுமையான இரத்தப் போக்கு மற்றும் அடி வயிற்று வலி ஏற்படும் மாதவிடாய் காலங்களில் பக்குவம் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். புற்று நோய் பல நோய்களுக்குத் தீர்வாக இருக்கும் சிறுபசலைக்கீரை புற்றுநோய்க்கு எதிராகவும் சிறப்பாக செயல்படுகிறது. புற்று நோயாளிகளுக்கு அவர்களின் உடலின் புற்று செல்கள் தொடர்ந்து உற்பத்தியாகிக் கொண்டேயிருக்கும். சிறு பசலை கீரையை புற்று நோயாளிகள் சாப்பிட்டு வந்தால் புற்று செல்கள் மீண்டும் வளராமல் தடுத்து, அந்நோயின் கடுமை தன்மையை குறைக்க முடியும்.
   
 8. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  5,805
  Likes Received:
  489
  Trophy Points:
  83
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  பீன்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

  காய்கறிகள் அனைத்துமே உடல் நலத்திற்கு மிகவும் அவசியமான ஒரு உணவு வகையாக இருக்கிறது. அன்றாடம் உணவாக பயன்படுத்தும் காய்கறிகளில் மிகவும் விலை மலிவானதும், அதே நேரம் உடலுக்கு பல சத்துக்களை தர வல்ல ஒரு காய் வகையாக பீன்ஸ் இருக்கிறது. இந்த பீன்ஸ் அடிக்கடி சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம். பீன்ஸ் பயன்கள் மலச்சிக்கல் ஒரு சிலருக்கு வயிற்றில் உணவை செரிப்பதற்கு இருக்கும் செரிமான அமிலங்களின் சம நிலை சீர் கெடுவதால் சாப்பிடும் உணவுகளை செரிமானம் செய்வதில் பிரச்சனை ஏற்பட்டு மலச்சிக்கல் உண்டாகிறது. இப்படிப்பட்டவர்கள் தினமும் உணவில் பீன்ஸ் பொரியல், கூட்டு போன்றவற்றை சேர்த்து சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும். - Advertisement - உடல் எடை உடல் எடை அதிகரிப்பது ஒரு கவலைக்குரிய பிரச்சனை ஆகும். உணவு கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், உடலுக்கு தேவையான பல சத்துகள் கொண்ட, கொழுப்பை கரைக்கக்கூடிய பீன்ஸ் காய்களை உணவுகளில் அதிகம் சேர்த்து சாப்பிட்டு வருவது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் நல்ல பலன் அளிக்கும். நோய் எதிர்ப்பு உடலின் நோய் எதிர்ப்பு திறன் வயது கூடிக்கொண்டு செல்லும் போது குறைந்து கொண்டே வரும். பீன்ஸ் காய்கள் சாப்பிடுவதால், அதிலிருக்கும் சத்துகள் ரத்தத்தில் கலந்து அதிலிருக்கும் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்துகிறது. வெளியிலிருந்து உடலுக்குள் வரும் நோய்களை உண்டாகும் ஆபத்தான நுண்ணுயிரிகளை எதிர்த்து, அவற்றை அழித்து உடலை தொற்று நோய்கள் அண்டாத வாறு காக்கிறது. நார்ச்சத்து உண்ணும் உணவு சுலபமாக செரிப்பதற்கு உணவில் நார்ச்சத்து அதிகம் இருப்பது அவசியமாகும். மாமிசம், வறுக்கப்பட்ட உணவுகளில் நார்ச்சத்து இல்லாததால், அதை உண்ணும் போது செரிமான உறுப்புக்கள் அந்த உணவுகளை ஜீரணிக்க அதிகம் சிரமப்படுகிறது. நார்ச்சத்து அதிகம் உள்ள பீன்ஸ் காய்களை அவ்வப்போது சாப்பிட்டு வருவது செரிமான உறுப்புகளின் நலத்தை மேம்படுத்தும். ஊட்ட உணவு பீன்ஸ் காயில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் அதிகம் இருக்கின்றன. இது உடலில் சிவப்பு ரத்த அணுக்கள் பிராண வாயுவை கிரகிக்கும் தன்மையை அதிகப்படுத்துகிறது. இதனால் உடலுக்கு அதிக உற்சாகமும், எளிதில் உடல் சோர்வு அடையாத நிலையை தருகிறது. எனவே குழந்தைகள், பெரியோர்கள் என அனைவரும் பீன்ஸ் காய்கள் அதிகம் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இதய நோய்கள் இதய நோய்கள் மற்றும் பாதிப்புகள் கொண்டவர்கள் இயற்கை உணவுகளான பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் எடுத்து கொள்வது அவசியம் ஆகும். பீன்ஸ் காய்களை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் இதயத்திற்கு ரத்தத்தை கொண்டு செல்லும் நரம்புகளில் இறுக்கம் ஏற்படுவதை தடுத்து, மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை வெகுவாக குறைக்கிறது. கர்ப்பிணி பெண்கள் கருவுற்றிருக்கும் பெண்கள் குழந்தை பிறக்கின்ற காலம் வரை சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். கர்ப்பிணி பெண்கள் கொத்தவரங்காய் அதிகம் உணவில் சேர்த்து உண்பதால் கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு பேருதவி புரிகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தை பிறப்பின் போது ஏற்படும் எத்தகைய உடல் நல குறைபாடுகளையும் போக்கும் திறன் கொண்டுள்ள காயாக பீன்ஸ் இருக்கிறது. இரத்தச் சோகை உடலின் அனைத்து உறுப்புகளின் சீரான செயல்பாடுகளுக்கும், உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதற்கும் உடலில் ரத்த ஓட்டம் சரியாக இருக்க வேண்டியது அவசியம். ரத்தத்தில் வெள்ளை அணுக்களின் குறைபாடுகளால் இரத்தச் சோகை ஏற்படுகிறது. இரத்தச் சோகை இருப்பவர்கள் பீன்ஸ் காயை அதிகம் சாப்பிடுவதால் ரத்த சோகை நீங்கி உடலை மீண்டும் ஆரோக்கியமான நிலைக்கு திரும்புகிறது. ரத்தம் சுத்திகரிப்பு தினமும் நாம் சாப்பிடுவது, குடிப்பது,அருந்துவது என அனைத்து பொருள்களிலும் மாசு நிறைந்துள்ளன. இந்த மாசு அல்லது நச்சுகள் அனைத்தும் நமது ரத்தத்தில் சேர்ந்து கொண்டு எதிர்காலங்களில் நமது உடல் நலத்திற்கு பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. பீன்ஸ் காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் இருக்கும் நச்சுகள் நீங்கி ரத்தம் சுத்தம் பெறும். எலும்புகள் நமது உடலில் எலும்புகள் பலமாக இருக்க வேண்டியது அவசியம். அனைவருக்கும் வயதாகும் காலத்தில் எலும்புகளின் உறுதி தன்மை குறைந்து கொண்டே வரும். பீன்ஸ் காயில் காயில் எலும்புகள் மற்றும் பற்களை உறுதிப்படுத்தும் கால்சியம் சத்து சிறிதளவு உள்ளது. சுண்டைக்காய்க் குழம்பு வைத்து சாப்பிடுவதால் நமது எலும்புகள் உறுதியடையும்.
   
 9. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  5,805
  Likes Received:
  489
  Trophy Points:
  83
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  உடைத்த கடலை பருப்பு சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்

  பருப்புகளில் பல வகைகள் உண்டு. அதில் பெரும்பாலான பருப்புகளை நமது அன்றாட உணவு தயாரிப்பில் பயன்படுத்துகின்றோம். அப்படியான பருப்புகளில் ஒன்று தான் உடைத்த கடலை பருப்பு. இதற்கு பொட்டு கடலை என்கிற மற்றொரு பெயரும் உண்டு. புரதச் சத்து மற்றும் இதர சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள இந்த உடைத்த கடலை பருப்புகளை, மனிதர்கள் தினமும் சாப்பிடுவதால் அவர்களுக்கு ஏற்படக்கூடிய நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். உடைத்த கடலை பயன்கள் உடல் சக்தி உடைத்த கடலை பருப்பில் அதிகளவு புரதம் மற்றும் வைட்டமின் சத்துகள் நிறைத்திருக்கின்றன. இதை அதிகளவு உண்பவர்களுக்கு உடலுள்ள எலும்புகள், நரம்புகள், தசைகள் வலுப்பெற்று உடலுக்கு அதிகளவு ஆற்றலை தருகிறது. நீண்ட நேரம் கடின உடல் உழைப்பில் ஈடுபடுபவர்கள் உடைத்த கடலை பருப்புகளை சிறிதளவு சாப்பிடுவது உடலுக்கு மிகுந்த சக்தியை தரும். - Advertisement - நரம்புகள் உடலின் அனைத்து உறுப்புகளும் நன்றாக இயங்க எலும்புகள் எப்படி அடிப்படையாக இருக்கிறதோ, அதற்கு அடுத்த நிலையில் இருக்கும் உடல் உறுப்புகள் நரம்புகள் ஆகும். இந்த நரம்புகள் ஆரோக்கியமாக இருக்கும் பட்சத்தில் உடல் சீராக இயங்குவதில் பிரச்சினைகள் இருக்காது. உடைத்த கடலை பருப்பில் இருக்கும் புரதங்கள் மற்றும் இதர சத்துக்கள் நமது உடலில் நரம்பு சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது. இதய நலம் உலகெங்கிலும் இதயம் சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொழுப்பில்லாத உணவுகளை அறவே தவிர்த்து, புரதம் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் இதய நலம் மேம்படுத்துகிறது. புரத சத்து அதிகம் நிறைந்த உடைத்த கடலை பருப்புகளை அடிக்கடி சாப்பிடுவதால் இதய நலம் மேம்பட்டு, ஆயுளை அதிகரிக்கிறது. செரிமான சக்தி நாம் சாப்பிடும் உணவுகளை செரிமானம் செய்ய வயிறு, குடல் போன்ற உறுப்புக்கள் ஆரோக்கியமாகவும், ஆற்றல் மிகுந்ததாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும். உடைத்த கடலை பருப்பில் உள்ள எளிதில் ஜீரணம் ஆக கூடிய புரத சத்து மற்றும் நார்ச்சத்து நாம் சாப்பிடும் உணவு நன்கு செரிமானமாக உதவுகிறது. மேலும் உடலில் உள்ள கழிவுகளை நீக்கி வெளியேற்றவும், உள்ளுறுப்புகளை சுத்தம் செய்து ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஆரோக்கியமான வளர்ச்சி குழந்தைகள் சிறப்பான உடல் வளர்ச்சியினை பெறவும், அவர்களின் உடல் தசைகளின் வலுவிற்கும் மிகவும் அத்தியாவசியமான ஒரு சத்து புரதச் சத்து ஆகும். உடைத்த கடலையில் உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்து அதிகமுள்ளது. புரதமானது செல்கள், திசுக்கள், எலும்புகள், தசைகளின் உருவாக்கத்திற்கு மிகவும் அவசியமானது. எனவே குழந்தைகள் அதிகம் உடைத்த கடலை பருப்புகளை சாப்பிடுவதால் சிறப்பான உடல் வளர்ச்சியினை பெறலாம். சருமம் உடைத்த கடலை பருப்பு அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு தோல் சம்பந்தமான எந்த ஒரு வியாதியும் சுலபத்தில் ஏற்படாது. இந்த பருப்பில் நிறைந்திருக்கும் புரதம் மற்றும் இதர சத்துகள் உடலின் தோலில் பளபளப்பு தன்மையை அதிகப்படுத்துகிறது. மேலும் தோலில் ஏற்பட்டிருக்கும் சொறி, சிரங்கு, படை பாதிப்புகளை கூடிய விரைவில் நீக்கும் தன்மை இந்த உடைத்த கடலை பருப்பிற்குஉண்டு. தோலில் சுருக்கங்கள் ஏற்படும் தன்மையும் நீங்கும். தலைமுடி உடைத்த கடலை பருப்பில் மெலனின் மற்றும் கேரட்டின் புரதங்கள் உள்ளன. உடைத்த கடலை பருப்புகளை தொடர்ந்து உண்டு வருபவர்களுக்கு மேற்கூறிய புரதங்கள் உடலில் சேர்ந்து தலைமுடிகளின் வேர்களை பலப்படுத்துகின்றன. இப்பருப்புகளை அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு தலைமுடி உதிர்தல் குறைபாடு நீங்குகிறது. மிக இளம் வயதிலேயே தலை முடி நரைத்தல் போன்ற பிரச்சனையும் போக்குகிறது. கர்ப்பம் பெண்களுக்கு பேறு காலத்தில் சத்து நிறைந்த உணவுகள் கொடுக்க வேண்டியது அவசியமாகும். உடைத்த கடலை பருப்புகளை கருவுற்றிருக்கும் பெண்கள் சரியான விகிதத்தில் உட்கொண்டு வருவது, அவர்களுக்கும் அவர்கள் வயிற்றில் வளரும் கருவிற்கும் நன்மையை அளிக்கும். பிரசவ நேரத்தில் ஏற்படும் வலி மற்றும் உடல் சோர்வை போக்க இப்பருப்புகள் உதவுகின்றன. நோய் எதிர்ப்பு பருப்பு வகைகள் அனைத்துமே மனிதர்களின் உடலாரோக்கியதை மேம்படுத்துபவையாகவே உள்ளன. உடலில் நோய் எதிர்ப்பு வேதிப்பொருட்கள் ரத்தத்தில் ஏற்கனவே உள்ளன. உடைத்த கடலை பருப்புகளை அதிகம் உண்பதால் அதிலிருக்கும் சத்துக்கள் ரத்தத்தில் இருக்கும் நோயெதிர்ப்பு திறனை அதிகரித்து ஜுரம், வைரஸ் தொற்று போன்றவற்றிலிருந்து நம்மை காக்கிறது. உடல் எடை உடைத்த கடலை பருப்புகளில் கெட்ட கொழுப்புகள் அதிகம் இல்லாமல், உடல்நலத்திற்கு உதவக்கூடிய புரதங்கள் அதிகம் நிறைந்துள்ளன. தங்கள் வயதின் உயரதிக்கேற்ற உடல் எடை இல்லாமல் இருப்பவர்கள் சீக்கிரத்தில் உடல் எடை பெருக்கவும், தசைகள் வலுமிக்கதாக இருக்கவும் உடைத்த கடலை பருப்புகளை அதிகம் சாப்பிட்டு வருவது நல்லது.
   

Share This Page