ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து சிக்கியுள்ள சிறுவன்

Discussion in 'Memes and Funny Videos - Daily Updates' started by NATHIYAMOHANRAJA, Oct 29, 2019.

 1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  சுஜித் உண்மையில் இறந்தது இந்த நேரத்தில்தான் !! அதிரவைக்கும் தகவல் !!

  80 மணி போராட்டத்திற்கு பிறகு சிறுவன் சுஜித் அழுகிய நிலையில் ஆழ்த்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்டு உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரதே பரிசோதனை நடந்து வருகிறது.
  திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் கடந்த கடந்த 5 நாட்களாக நடைபெற்ற நீண்ட போராட்டத்துக்கு பிறகு சிறுவன் சுஜித் சடலமாக இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளான். சுஜித்தின் கைகள் முற்றிலும் சிதைந்துவிட்டதால் அவனது உடலை இடுக்கி போன்ற கருவியை கொண்டு கவ்வி பேரிடர் மீட்பு படையினர் மீட்டனர்.
  [​IMG]நேற்றிரவு 10 மணி முதல் ஆழ்துளை கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அதனை தார்பாலின் பாயை கொண்டு மூடி அதிவேகமாக பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உடற்கூராய்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.
  அதன் பின், சிறுவன் சுஜித் உடலை பிரேத பரிசோதனை செய்த பின்னர் எத்தனை மணிநேரங்களில் இறந்துள்ளான் என்பது தெரியவரும் என தெரிவித்துள்ளனர். சிறுவன் சுஜித் 18 மணிநேரங்களிலே ஒரு தகவல் வெளியானது. அதனைத்தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையில் தலையில் மண் சரிவு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
  [​IMG]
  இந்நிலையில், பிரதே பரிசோதனை முடிந்த பின்னர்,இறுதிச்சடங்கு நடைபெறும் எனத் தெரிகிறது. இதற்கான ஏற்பாடுகளை சுஜித்தின் உறவினர்கள் நடுகாட்டுபட்டியில் செய்து வருகின்றனர்.
   

Share This Page