ஆஸ்துமா பாதிப்பு குழந்தையை பள்ளிக்கு அனுப்பலாமா...

Discussion in 'Children care' started by NATHIYAMOHANRAJA, Aug 28, 2019.

 1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  6,610
  Likes Received:
  509
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  என் குழந்தைக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்தது. டாக்டரை சந்தித்தபோது ஆஸ்துமா அலர்ஜி தீவிரமாக இருப்பதாகவும், பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்றும் கூறினார். பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தலாமா?
  பள்ளிக்கு செல்வதை நிறுத்த வேண்டாம். இப்போது இன்ஹேலர் வசதி வந்துவிட்டது. இதை நோய் தீவிரமடையும் போது மட்டும் பயன்படுத்தாமல், டாக்டர் குறிப்பிட்ட காலத்திற்கு சரியாக எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு பின்பற்றினால் நோய் கட்டுக்குள் இருக்கும். குழந்தையை தனிமைப்படுத்தாமல் மற்ற குழந்தைகளை போல ஓடியாடி விளையாட விட வேண்டும்.

  என் மாமனாருக்கு நரம்பு பிரச்னை இருப்பதால் வாய் வழியாக உணவருந்த முடியாது. எனவே ரைல்ஸ் டியூப் போட்டு வீட்டிலேயே திரவ உணவு கொடுக்கும்போது புரையேறி நுரையீரலுக்குள் சென்று நிமோனியா வந்துவிட்டது. ரைல்ஸ் டியூப் பயன்படுத்தினாலும் புரையேறுமா?
  ரைல்ஸ் டியூப் உணவுக்குழாய் வழியாக குடல் பகுதிக்கு செல்லும். சில நேரங்களில் உணவுக்குழாயும் வயிற்றுப்பகுதியும் சேருமிடத்தில் உள்ள வால்வு சரியாக மூடாமல் இருந்துவிடும். நாம் கொடுப்பது திரவ உணவு என்பதால் அது உணவுக்குழாய் வழியாக நுரையீரலுக்குள் சுலபமாக சென்றுவிடும். மேலும் ரைல்ஸ் டியூப் விலகி செல்லவும் வாய்ப்பு உள்ளது. எனவே உணவு நுரையீரலுக்குள் சென்று பிரச்னையை உண்டு பண்ணும். இதை தவிர்க்க 2 அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை டியூப் சரியான இடத்தில் தான் உள்ளது என்பதை உறுதி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவரை 40 டிகிரி கோணத்தில் படுக்க வைத்து கவனமுடன் உணவு செலுத்துவது நல்லது.

  என் தந்தைக்கு ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருப்பதால் 'oxygen concentrator' பொருத்துமாறு டாக்டர் கூறினார். ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் பொருத்த வேண்டும்?
  ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருந்தால் இருதயத்தின் வேலை அதிகரிக்கும். அதன் துடிப்பும் அதிகமாக இருக்கும். மேலும் மற்ற உறுப்புகளுக்கு செல்லும் ஆக்ஸிஜன் அளவும் குறையும். எனவே 24 மணி நேரமும் 'oxygen concentrator' பொருத்துவது நல்லது. அப்படி இல்லையெனில் குறைந்தது தினமும் 18 மணி நேரம் கண்டிப்பாக பொருத்த வேண்டும்.

  எனக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டு டாக்டரை சந்தித்தபோது 'pulmonary function test' என்ற பரிசோதனை செய்ய சொன்னார். அதை இரு முறை இடைவெளி விட்டு செய்ய சொன்னார். இடையில் மருந்து செலுத்தினார். அது எதனால்?
  இப்பரிசோதனையை முதல் தடவை செய்யும் போது உங்கள் நுரையீரல் எப்படி உள்ளது, மூச்சுவிடும் திறன் எவ்வளவு என்பது தெரியவரும். பரிசோதனை முடிந்ததும் மூக்கின் வழியாக மருந்தை செலுத்தி 10 நிமிடம் இடைவெளி விட்டு 2வது முறை அதே பரிசோதனை மேற்கொள்வர். அதில் உங்களுக்கு செலுத்திய மருந்து நுரையீரலில் எந்த அளவுக்கு வேலை செய்துள்ளது என்பது தெரியவரும். அதனை அடிப்படையாக வைத்து அதற்கேற்றாற் போல் சிகிச்சை அளிப்பர்.
   

Share This Page