இந்தியா NEWS TODAY

Discussion in 'Memes and Funny Videos - Daily Updates' started by NATHIYAMOHANRAJA, Oct 21, 2019.

  1. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    இந்திய வரலாற்றை காவி வரலாறாக்கத் துடிக்கும் அமித்ஷா !


    ந்திய வரலாற்றை இந்தியப் பார்வையில் திருத்தி எழுத வேண்டியது இருக்கிறது” என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார் அமித்ஷா.
    கடந்த வாரத்தில், வாரனாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடந்த “குப்த வம்ச வீரர் : ஸ்கந்த குப்தா விக்ரமாதித்யா” என்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார்.
    [​IMG]இதில் பேசிய அமித்ஷா, குப்த சாம்ராஜ்ஜிய மன்னராகிய ஸ்கந்தகுப்த விக்ரமாதித்யாவினுடைய பங்களிப்பு குறித்து தற்போதைய தலைமுறைக்குத் தெரியாதது வருத்தமளிப்பதாகவும், அதற்கு முக்கியக் காரணம் போதுமான ஆவணப்படுத்தல்கள் இல்லாததுதான் என்றும் கூறியுள்ளார்.
    மேலும் சாவர்க்கர் மட்டும் இல்லையென்றால், 1857 சுதந்திரப் போர், வெறும் கலகமாக பதிவு செய்யப்பட்டிருக்கும். அவர்தான் அதனை சுதந்திரப் போர் என்று அதை அழைத்தார், என்றும் கூறினார்.
    இந்திய வரலாறு – இந்தியப் பார்வையில் மறுவார்ப்பு செய்து எழுதப்படவேண்டிய அவசியம் இருக்கிறது என்றும், இதற்காக நாம் யாரையும் குற்றம்சாட்டிக் கொண்டிருப்பது பயனற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதாவது இந்திய வரலாறு இதுவரையில் பிரிட்டிஷ் பார்வையிலான வரலாறாக இருக்கிறதாம். அதை ‘இந்துய’ பர்வையிலிருந்து மீண்டும் எழுதப் போகிறாராம்.
    “நமது வரலாற்றை எழுதுவது நமது கடமை அல்லவா? இன்னும் எவ்வளவு நாளைக்கு பிரிட்டிஷை குற்றம்சாட்டப் போகிறோம். நாம் யாருடனும் பிரச்சினை செய்யப் போவதில்லை, வெறுமனே எது உண்மையோ அதை எழுதப் போகிறோம்.” என்று கூறியிருக்கிறார்.
    இந்திய வரலாற்றை திருத்தி எழுதப் போவதாக அமித்ஷா பகிரங்கமாகக் கூறியிருக்கும் சூழலில் சில நாட்களுக்கு முன்னர், மகாராட்டிர பாஜக தனது தேர்தல் அறிக்கையில் ஒரு புதிய வரலாற்றைப் படைக்க எத்தனித்துள்ளது. சாவர்க்கருக்கு இந்திய அரசின் “பாரத ரத்னா” விருது கொடுப்போம் என தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
     
  2. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    கும்பல் கொலைகள் : வாட்சப் குழுக்களின் பங்கு என்ன ?

    நாட்டில் நடக்கும் கும்பல் கொலைகளைத் தூண்டும் போலி செய்திகள் பரவ அறியாமையும் டிஜிட்டல் அறிவின்மையும் காரணமில்லை; சித்தாந்த மற்றும் தப்பெண்ணமே காரணம் என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.
    லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கும்பல் வன்முறைகள் குறித்து ஆய்வு செய்துள்ளனர். இதில், ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த படிக்காத பயனாளர்களே தவறான செய்திகளை பரப்புகிறார்கள் என்கிற கணிப்பு தவறானது என தெரிவித்துள்ளனர்.
    [​IMG]போலி செய்திகளை எப்படி கண்டுபிடிப்பது என்றும் டிஜிட்டல் கல்வியறிவை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் நாடு முழுவது வாட்ஸப் நிறுவனம் பட்டறைகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில் இந்நிறுவனத்தின் கருத்துக்கு எதிரான கருத்தாக லண்டன் பொருளாதார பள்ளியின் ஆய்வு உள்ளது.
    வாட்ஸப்பில் பொய் செய்திகள், வெறுப்பு பேச்சுக்களை பரப்புகிறவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதையும் ஆய்வு செய்துள்ளது இந்த ஆய்வு. வாட்ஸ்ப் பயனாளர் ஆணா, நகர்ப்புறத்தைச் சேர்ந்தவரா, ஊரகப் பகுதியைச் சேர்ந்தவரா, இளைஞரா அல்லது நடுத்தர வயதுடையவரா, தொழில்நுட்ப அறிவு பெற்றவரா, இந்து, உயர்சாதி அல்லது நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவரா எனவும் அது வகைப் பிரித்துள்ளது.
     
  3. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் தொடர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். மிரட்டல் !


    நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற இணையதளங்களில் எடுக்கப்பட்டுள்ள தொடர்களில் இந்துத்துவத்துக்கு எதிரான கருத்துக்கள் உள்ளதாகக் கூறி, அவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என மிரட்டத் தொடங்கியிருக்கிறது ஆர்.எஸ்.எஸ்.
    இணைய தொடர்களுக்கு தணிக்கை இல்லை என்பதால், படைப்பாளிகள் சுதந்திரத்துடம் இயங்கும் சூழல் உள்ளது. வெகுஜென சினிமாக்கள் மோடி, இந்துத்துவ புகழ்பாடிக்கொண்டிருக்கும் நிலையில் நெட்ஃபிளிக்ஸில் வெளியான ‘லைலா’ என்ற தொடர், இந்துத்துவத்தை விமர்சித்திருந்தது.
    [​IMG]இந்நிலையில், சங்க பரிவாரங்கள் இவற்றுக்கு முடிவு கட்ட, தொடர்புடைய நிறுவனங்களை மிரட்டி பணிய வைக்கக் கிளம்பியுள்ளன. ஆர்.எஸ். எஸ். பிரதிநிதிகள், நெட்ஃபிளிக், அமேசான் நிர்வாகிகளுடன் இது குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக எகனாமிக்ஸ் டைம்ஸ் தெரிவிக்கிறது.
    டெல்லி, மும்பையில் உள்ள இந்த இணையதளங்களின் அலுவலங்களில் இதுவரை ஆறு சந்திப்புகள் நடந்துள்ளது. “இந்தியாவுக்கு எதிரான, இந்துவுக்கு எதிரான உள்ளடக்கம் உள்ள தொடர்களை கட்டுப்படுத்த வேண்டும். உண்மையான இந்திய கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் அவர்கள் காட்ட வேண்டும்” என்கிறார் ஒரு ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி.
    முன்னதாக, தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், இணைய தொடர்களை முறைபடுத்துவது தொடர்பாக இந்த நிறுவனங்களின் பங்குதாரர்களிடம் திரைப்பட சான்றிதழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் சந்திப்பு நடத்தியுள்ளதாக கூறியிருந்தார்.
    காஷ்மீர் குறித்தும் இந்து குறியீடுகள், இந்திய இராணுவம் குறித்தும் விமர்சனத்துக்குரிய உள்ளடக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். கேட்கிறது. ‘லைலா’ தொடருக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், நெட்ஃபிளிக்ஸ் தளம் புது டெல்லியில் ஆர்.எஸ்.எஸ். பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.
    ட்விட்டர் நிர்வாகம் இந்துத்துவ ட்ரோல்கள் சிலரின் கணக்குகளை முடக்கியபோது, அதுகுறித்து பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் நாடாளுமன்ற கமிட்டியிடம் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் ட்விட்டர் நிறுவனத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ட்விட்டர் நிர்வாகம் முடக்கிய கணக்குகளை செயல்படுத்தியது.

    இந்த சம்பவத்தைக் கூறி, ஆட்சி அதிகாரம் தங்களிடம் இருப்பதாக மிரட்டும் தொனியில் பேசும் ஆர்.எஸ்.எஸ். காரர் ஒருவர், “இந்த நிறுவனங்கள் கதையை தேர்வு செய்யும்போது இந்திய உணர்வுகளின் அடிப்படையில் செயல்பட வேண்டும். இந்தியா குறித்து பேசும் கதைகளில் இந்தியர்களை அதிகம் ஈடுபடுத்த வேண்டும் எனவும் நாங்கள் கேட்டிருக்கிறோம்” என்கிறார்.
    இராஜஸ்தானில் நடந்த ஒரு ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் அதன் தலைவர் மோகன் பகவத்திடம் இதுகுறித்து எடுத்துரைக்கப்பட்டதாகவும் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி தெரிவித்துள்ளார். பல தொடர்களில் கும்பல் கொலைகள் குறித்து சித்தரிக்கப்பட்டுள்ள விதம் குறித்து அவர் கவலை கொண்டதாகவும், கும்பல் கொலைகளை இந்து தேசியவாதிகளுடன் தொடர்புபடுத்தி எடுக்கப்படுவதாகவும் இது சிறுபான்மையினர் என்ற பெயரில் சில கெட்ட சக்திகளுக்கு அவை உதவுவதாகும் என்று மோகன் பகவத் தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
    [​IMG]
    மோகன் பகவத்
    “ஏற்கனவே பலமுறை இணைய தொடர்கள் குறித்து வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், ஒவ்வொரு வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டதே நடந்தது. இணைய தொடர்களை முறைப்படுத்துவது கடினம். இதில், சுய தணிக்கை மட்டுமே சாத்தியமானது” என்கிறார் எம்.எக்ஸ் பிளேயர் என்ற இணையதளத்தின் முதன்மை செயல் அதிகாரி கரண் பேடி.
    ஆனால், ஆர்.எஸ்.எஸ். விடுவதாக இல்லை. தனித்தனியாக திரைப்படக் கலைஞர்கள், திரைக்கதை எழுத்தாளர்களிடம் பேசி இந்தியாவின் ஒளிமயமான பக்கம் குறித்து எழுதுங்கள் எனக் கேட்கத் தொடங்கியிருக்கிறார்களாம். பாரதிய சித்ர சாதனா, சன்ஸ்கார் பாரதி என்ற ஆர்.எஸ்.எஸ். துணை அமைப்புகள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
    அமேசானில் ஒளிபரப்பான ‘ஃபோர் சாட்ஸ்’ தொடரில் பெண்கள் குறித்த சித்தரிப்பு, நெட்ஃபிளிக்ஸின் தயாரிப்புகளான ‘கவுல்’, ‘சேக்ரட் கேம்ஸ்’, ‘லைலா’… ஜீ தளத்தில் இராணுவம் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டதாக இரண்டு தொடர்கள் குறித்து சங்க பரிவாரங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. அண்மையில் வெளியான நெட்ஃபிளிக்ஸ் தொடரான ‘ஃபேமிலி மேன்’ இந்தியாவுக்கு எதிரான உள்ளடக்கத்தைக் கொண்டிருந்ததாக ஆர்.எஸ்.எஸ். ஏடான பாஞ்சசன்யா எதிர்ப்பு கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது.
    நெட்ஃபிளிக்ஸ், அமேசான் போன்ற தளங்கள் அரசாங்கத்தின் சட்ட திட்டங்கள், மிரட்டல் உருட்டல்களுக்கு உட்பட்டவை. ஹசன் பங்கஜ் என்ற நகைச்சுவை கலைஞர் துபாய் அரசை விமர்சித்தார் என்பதற்காக அவருடைய நிகழ்ச்சியை அந்த அரசாங்கம் கேட்டுக்கொண்டபடி நீக்கியது நெட்ஃபிளிக்ஸ். இது இந்தியாவிலும் நடக்கலாம்.
    அரசாங்கமும் நிறுவனங்களும் கூட்டாளிகள்தான் என்றபோதும், கிடைக்கும் சந்தர்ப்பத்தில் எதேச்சதிகார அரசை விமர்சிக்கும் கலைஞர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
     

Share This Page