இந்த ஒரே ஒரு பொருள்!! உங்கள் கொழுப்பு மற்றும் மன அழுத்தத்தை போக்கும் என சொன்னால் நம்புவீர்களா?

Discussion in 'Fitness & Easy workouts' started by NATHIYAMOHANRAJA, Oct 25, 2019.

 1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,260
  Likes Received:
  512
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  நாம், நம் வீட்டின் சமையலறையில் உள்ள பல்வேறு இயற்கைப் பொருட்கள் நம்முடைய பல்வேறு நோய்களை தீர்க்கும் அருமருந்தாகும் .இருப்பினும் நாம் உதாசீனப்படுத்துகிறோம். காரணம் அவைகள் மலிவாக கிடைக்கக் கூடியவை.அதிக கொழுப்பு : நமக்கு நன்றாகவே தெரியும். ஆனால் இன்று உடல் பருமன் மற்றும் கொழுப்பு அதிகம் இருப்பவர்களின் விகிதம் இந்தியாவில் மிக அதிகம் என்பது அபாயமான செய்தி.
  [​IMG]
  சிறிய வியாதிகளுக்கு கூட இரசாயன மருந்துகளை உட்கொள்வதை நிறுத்த வேண்டும். ஏனெனில் இந்த ரசாயன மருந்துகள் நீண்ட காலத்தில் உங்கள் சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கலாம் மேலும் இதில் பக்க விளைவுகள் வரும் வாய்ப்புகள் அதிகம். இன்றைய காலக் கட்டங்களில் இயற்கை மருத்துவத்தை மக்கள் பின்தொடர்வது ஆரோக்கியமான விஷயம். இதில் குறிப்பிடத்தக்க ஒரு அம்சம் என்னவெனில் இதில் பக்க விளைவுகள் பற்றிய ஆபத்துகள் ஏதும் இல்லை.
  [​IMG]
  அதிக மன அழுத்தம் : மன அழுத்தம் ஒருவரின் மனம் சம்பந்தப்பட்டது என்றும் அது அந்த நபரின் சுகாதாரம் மற்றும் வாழ்க்கை தரத்தை பாதிக்கும் என்பதும் நமக்குத் தெரியும். இன்றைய காலக்கட்டத்தில் மன அழுத்தத்திற்கு தள்ளப்பட்டவர்கள் விகிதமும் அதிகம். அதிக கொழுப்பு மற்றும் மன அழுத்தத்தை போக்குவது என்பதைப் பற்றி தெரிவிக்கப்போகின்றோம். அந்த சிகிச்சையைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
  சிகிச்சையின் செய்முறை
  தேவையான பொருட்கள்: எள் விதைகள் – 1 தேக்கரண்டி தேன் – 1 தேக்கரண்டி
  ஒரு கிண்ணத்தில் எள் விதைகள் மற்றும் தேனை பரிந்துரைக்கப்பட்ட அளவு சேர்க்கவும். இந்த இரு பொருட்களையும் நன்கு கலக்கி ஒரு பசை போன்று மாற்றவும்.
  [​IMG]
  எப்போது எடுத்துக் கொள்ள வேண்டும்? இந்த ஆரோக்கியமான உணவை, ஒவ்வொரு நாள் காலை மற்றும் படுக்கைக்கு முன் உங்களின் வழக்கமான உணவை உட்கொண்ட பின், எடுத்துக் கொள்ளவும். . வீட்டில் இந்த சிகிச்சை முறையை முயற்சி செய்து பார்க்கவும். அது உங்களுக்கு எவ்வாறு பலனளித்தது என்பதை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்!
  எள் விதைகள் மற்றும் தேன் கலவை உங்களின் இரத்த குழாய்கள் உள் சென்று அங்கு சேமித்து வைக்கப்பட்டுள்ள அதிக கொழுப்புகளை கரைக்கும் திறன் பெற்றுள்ளது. இதனால் உங்களின் நீண்ட நாள் கொழுப்பு பிரச்சனை கண்டிப்பாக தீர்ந்து விடும்.
  [​IMG]
  கூடுதலாக, இந்த இயற்கை கலவையில் உள்ள அதிகமான ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் உங்களின் மூளையில் உள்ள செல்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றது. அதன் மூலம் மூளையில் செரோடோனின் உற்பத்தி அதிகரித்து மன அழுத்தத்ம் கட்டுப்படுத்தப் படுகின்றது.
   

Share This Page