இம்சை அரசன் 23 ஆம் எலிகேசி

Discussion in 'Forum Games & Chat' started by NATHIYAMOHANRAJA, Jun 14, 2019.

 1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,858
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  • மன்னர் இரவு நேர நகர்வலத்தை பன்னிரண்டு மணியோடு முடித்துக் கொள்கிறாரே ஏன்?
  மிட் நைட் மசாலா ரசிகராம் அதான்.

  • போர் என்றாலே பயந்து ஓடும் மன்னர் கன்னித் தீவின் மீது படையெடுத்துச் செல்கிறாரே? எப்படி? கன்னித்தீவு என்றால் வெறும் கன்னிப் பெண்கள் மட்டும் இருக்கும் தீவு என்று நினைத்து விட்டார்.

  • அமைச்சர் : மன்னா ராணியார் உங்களுக்கு அனுப்பிய புறா வந்திருக்கிறது... ஆனால் அதற்கு இரண்டு கால்களும் இல்லை....
  மன்னர் : அது 'மிஸ்டு கால்' அமைச்சரே.....


  • அமைச்சர் : அய்யகோ மன்னா... நாம் காலாகாலத்துக்கும் கேவலப்பட்டு போனோமே?
  மன்னர் : என்ன ஆயிற்று அமைச்சரே?
  அமைச்சர் : 23ஆம் புலிகேசியே நம் மீது படையெடுத்து வருகிறானாம்....


  • "மன்னரின் வீக்னஸ் அண்டை நாட்டு மன்னருக்கும் தெரிந்துள்ளது என்று எப்படிச் சொல்கிறீர்....?"
  "சிட்டுக்குருவியிடம் ஒலை கொடுத்து அனுப்பியிருக்கிறானே...!"

  • "குத்துப்பாட்டு தெரியும்... இது என்ன "கொத்து" பாட்டு?"
  "புலவர் இதற்கு முன் புரோட்டா கடையில் மாஸ்டராக இருந்தவர் மன்னா..!"


  • "நமது மன்னர் தேர்ச்சி பெற்றுவிட்டார்..."
  "எதிரிகளை சமாளிப்பதிலா?"
  "இல்லை... புறாக்களை சமைப்பதில்!"

  • போர்க்களத்தில் ஏற்பட்டகாயங்களைப் பார்த்தபடி, வைத்தியருக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார் மன்னர்!’’
  ‘‘வலி மேல் விழி வைத்துக் காத்டிருக்கிறார் என்று சொல்லுங்கள்..!’’

  • "என்ன இது... எதிரி மன்னரை நம் மன்னர் கட்டிப் பிடிச்சு என்னமோ பண்றாரு..?"
  "கட்டிப்பிடி வைத்தியத்தால போர் வெறியைத் தணிக்க வைக்கறாராம்..!"

  • மன்னர்: ஏன் தளபதி இந்த மாதம் போர் செய்ய வேண்டாம் என்கிறீர்கள்?
  தளபதி: ஆக்டோபஸ் ஜோசியம் பார்த்தேன் மன்னா கண்டிப்பாக எதிரி நாட்டு மன்னன்தான் ஜெயிப்பானாம்.


  • அமைச்சர் 1:அரசு கஜானா காலியாகிவிட்டது.
  அமைச்சர் 2:எப்படி சொல்கிறீர்கள்?
  அமைச்சர் 1: அந்தப்புரத்து அழகிகளை, குத்துப்பாட்டு ஆடுவதற்கு, மன்னர் வாடகைக்கு விட உள்ளார்.

  • அமைச்சர்: அரசே! நீங்கள் எதையோ பார்த்து பயந்துள்ளீர்கள்!
  அரசன்: ஆம்! நேற்று அரசியாரை முகத்துக்கு நேரே பார்த்து விட்டேன்!


  • அமைச்சர்: அரசே! உங்கள் வாள் எங்கே?
  அரசர்: பழைய இரும்பு கடையில் பேரிச்சம் பழத்துக்கு விற்று விட்டேன்!


  • அமைச்சர்: அரசே! நாம் ஏன் வெள்ளையனுக்கு கப்பம் கட்ட வேண்டும்?
  அரசர்: இல்லையென்றால், அவன் நமக்கு சமாதி கட்டி விடுவான்!


  • அமைச்சர்: அரசே! இனிமேல் எருமை மாட்டுப் பண்ணை பக்கம் போகாதீர்கள்!
  அரசன்: ஏன் அமைச்சரே? மாடுகள் என்னை முட்டி விடும் என்ற அக்கரையா?
  அமைச்சர்: இல்லை அரசே! உங்களுக்கும், அதற்கும் வித்தியாசம் தெரியாமல், நான் அடிக்கடி confuse ஆகி விடுகிறேன்!


  • அமைச்சர்: மன்னா! நீ வாழ்க! உன் கொடை வாழ்க! உன் கொற்றம் வாழ்க! உன்...
  அரசன்: நிறுத்துங்கள் அமைச்சரே போதும்! செலவுக்கு பணம் வேண்டும் என்றுb நேரடியாக கேளுங்களேன்!

  • அமைச்சர்: மன்னா எதிரிப்படை ஆட்சியை கைப்பற்றி விட்டார்கள்.
  இம்சை அரசன்: ஆம் அமைச்சரே... வாரும் இருவரும், சென்று பாதாள அறையில், ஐந்து வருடங்கள் பதுங்கி விடலாம்.
  அமைச்சர்: க க க போ... நீரல்லவா மன்னர்...
   

Share This Page