இளங்காத்து வீசுதே / ilangkaathu veesuthe by Sameera

Discussion in 'Serial Stories' started by Tamilsurabi, Nov 23, 2018.

 1. Tamilsurabi

  Tamilsurabi Administrator Staff Member

  Joined:
  Sep 11, 2014
  Messages:
  216
  Likes Received:
  108
  Trophy Points:
  43
  வணக்கம் தமிழ்சுரபி வாசகர்களே

  அனைவருக்கும் கார்த்திகை தீப தருநாள் வாழ்த்துக்கள்

  நம் எழுத்தாளர் சமீரா தமது அடுத்த படைப்புடன் வந்துவிட்டார்.

  "இளங்காத்து வீசுதே"ட

  நம் வாழ்நாளில் கிடைத்த அரிய பொக்கிஷம் இளமைக்காலம். இன்னும் சொல்ல போனால் கல்லூரிக்காலம்.

  ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் மறக்கமுடியாத பல அனுபவங்களை தாங்கி இருக்கும் காலம்..அப்படி ஒர் இளம்பட்டாளத்தில் விறுவிறுப்பான அனுபவங்கள் உங்களிடையே தென்றலாய் வீசிசெல்ல காத்திருக்கிறது..இக்கதை 'இளங்காத்து வீசுதே..' வழி!!!
   
  ugina and Kamala PM like this.
 2. malarmathi

  malarmathi விழுந்தால் அழாதே, எழுந்திரு!

  Joined:
  Feb 6, 2018
  Messages:
  416
  Likes Received:
  333
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Occupation:
  இல்லத்தரசி
  Location:
  கோவை
  வாழ்த்துக்கள் சமீரா .

  சீக்கிரம் பதிவுகள் போடுங்க .
   
 3. Sameera16

  Sameera16 Active Member

  Joined:
  Oct 24, 2018
  Messages:
  130
  Likes Received:
  175
  Trophy Points:
  43
  Gender:
  Female
  Thank you sis:).. update itho:r:
   
 4. Sameera16

  Sameera16 Active Member

  Joined:
  Oct 24, 2018
  Messages:
  130
  Likes Received:
  175
  Trophy Points:
  43
  Gender:
  Female
  இளங்காத்து வீசுதே-1

  'KVS EDUCATIONAL AND RESEARCH INSTITUTE'

  கம்பீரமாய் வீற்றிருந்த அந்த ஆர்க் போன்ற நுழைவாயிலில் அக்கல்வி நிறுவனத்தின் பெயர் அழகாய் வடிவமைக்கப்பட்டிருந்தது.நவீன கட்டட அமைப்புடன் பரந்துவிரிந்திருந்த அக்கல்லூரி அந்த இரவு வேளையிலும் ரம்மியமாய் காட்சியளித்தது.

  அந்த மாவட்டத்தில் முதன்முறை உயர்கல்விக்கென்று திரு.கைலாஷ் வரதசாமி அவர்கள் தொடங்கிய இந்நிறுவனம் இந்த எழுவது வருடங்களில் தமிழகத்தில் மிகவும் பிரசித்தப்பெற்ற தனியார் கல்லூரிகளில் ஒன்றாக உயர்ந்துள்ளது.இஞ்னியரிங் மற்றும் ஹியுமானிட்டி அன்ட் சைன்ஸ் கோர்ஸஸ் மட்டும் இங்கே ஜெயப்பாலயத்தில் அமைந்திருக்க மெடிக்கல் மற்றும் பார்மஸிகான மற்றொரு கிளை புதுவடவையில் உள்ளது.

  மழை பெய்து ஓய்ந்துவிட்டபோதும் சிறுசிறு தூறல்கள் காற்றோடு கலந்து சிலென்று கந்தனின் உடலை தீண்டி செல்ல அக்குளிருக்கு இதமாய் சுட சுட டீயும் வடையும் வாங்கிக்கொண்டு அந்நுழைவாயிலின் அருகே சிறிதாய் அமைக்கப்பட்டிருந்த காவலாளியின் அறைக்கு வந்தவன்,

  "அண்ணே இந்தாங்க... "

  அங்கே நாற்காலியில் அமர்ந்து கையில் வைத்திருந்த ரேடியோவில் அலைவரிசையை சரிப்படுத்திக் கொண்டிருந்த லிங்கத்திடம் ஒன்றும் தனக்கு ஒன்றும் எடுத்துக்கொண்டு எதிர் இருக்கையில் அமர்ந்தான்.

  "ஆகாஷ் வாணி..இசையோடு நீங்கள்... எஃப்.எம் ரெயின்போ..."

  என்று ரேடியோவில் ரெயின்போ பண்பலையின் பாடல் ஒலிக்கவும் அலைவரிசையை அதில் நிறுத்தி ரேடியோவை மேசையில் வைத்த லிங்கம் டீ கிளாஸை கையில் எடுத்துக் கொண்டு,

  "என்ன கந்தா..கரென்ட் இப்போ வராது போலையே.."

  என்று கேட்க,

  "எங்க அண்ணே..காலைலேந்து பெய்ஞ்ச மழைக்கு அங்கங்க போஸ்ட் கம்பம்,வொயர் எல்லாம் அருந்து கிடக்கு.. அதெல்லாம் சரி பண்ணி வருவதறகுள்ள விடிஞ்சிடும்.."

  என்றான் தேநீரை அருந்தியபடி...

  "எப்போ என்ன நடக்குதுனே சொல்ல முடியலைய்யா...பருவம் தப்பித்தான் எல்லாம் நடக்குது..இப்ப பாரு இரண்டு மாசத்துக்கு முன்னாலே மழை கொட்ட ஆரம்பிச்சிருச்சு.."

  என்று லிங்கம் சொல்லவும் ஆம் என்று தலையாட்டி ஆமோதித்த கந்தன் பின் ஏதோ நினைவு வந்தவனாய்,

  "அண்ணே..யாருண்ணே..அந்த புது சாரு..இனிமே எல்லாம் அவர் கையில் தான் அப்படினு பேசிக்கிறாங்க.."
  கேட்டான்.

  "யாரு விஜய் சாரா..?? அவர் பெரிய ஐயா மகன்..நான் வேலைக்கு சேர்ந்த புதுல அந்த தம்பி இங்கே தான் படிச்சிட்டு இருந்தது.பெரிய குடும்பத்து பையன்குறது அந்த தம்பியோட ஒவ்வொரு செயல்,பேச்சு,பார்வையில் கூட தெரியும்.அவ்வளவு கம்பீரமா இருக்கும்..இப்போ பெரிய பெரிய படிப்பெல்லாம் படிச்சிட்டு மறுபடியும் தானே இந்த காலேஜை நிர்வகிக்க போராறாம்..."
  என்று விளக்கமாய் கூறிக் கொண்டிருக்கும்போதே வெளியே மாணவர்கள் பேச்சுக்குரல் கேட்க எழுந்து வெளியே வந்த லிங்கம்,

  "என்னப்பா..உங்க ப்ராக்டீஸ்செல்லாம் முடிந்ததா..?"

  என்று கேட்க,

  "ம்ம்.. எல்லாம் பக்கா அங்கிள்.. இந்த தடவையும் கப்பை நம்ம காலேஜ் தான் அடிக்கும்.."

  குதூகலத்தோடு ஒருவன் கையில் இருந்த பந்தை தூக்கி போட்டு பிடித்து உற்சாகமாய் கூற அவர்களது உற்சாகம் லிங்கத்தையும் தொற்றிக் கொண்டது.

  "சந்தோஷம்..."
  என்று புன்னகைத்தவர் தொடர்ந்து,

  "சரிப்பா..நல்லா இருட்டிருச்சு..மழை பிடிக்குறதுக்குள்ள நேரமா வீட்டுக்கு போங்க.."

  என்று அக்கறையாய் கூற "சரி அங்கிள்..டாடா..."

  என்று கோரஸாய் கூச்சலிட்டபடி அவரவர் பைக்கில் ஏறி புறப்பட்டதும் வாசலில் போடப்படிருந்த நாற்காலியில் உட்கார முற்பட்டவர் பார்வையில் அதுப்பட்டது.

  கல்லூரி வளாகத்தில் மின்சார துண்டிப்பால் எங்கும் இருள் சூழ்ந்திருக்க தூரத்தில் ஏதோ ஒரு வகுப்பில் மட்டும் வெளிச்சம் ஒரு பொட்டாய் தெரிந்தது.கண்களை சிமிட்டி மீண்டும் பார்த்தவர் பின்,

  "டேய்...கந்தா.."

  என்று உள்ளிருந்தவனை அழைக்கவும் "என்னாண்ணே.."
  வாயில் வைத்திருந்த வடையை அதக்கியபடி வந்தான்.

  "அங்கே என்னடா லைட் எரியுது.."

  என்று சுட்டிக்காட்ட அவனும் அங்கே பார்த்துவிட்டு,

  "ஆமா..ஒருவேளை ஹாஸ்டலில் பிள்ளைங்களா இருக்கும்ண்ணே.."

  என்று கூறியவனை முறைத்த லிங்கம்,

  "அறிவுக்கொழுந்தே..ஹாஸ்டல் இந்த பக்கம் இருக்கு..அது ஏதோ கிளாஸூ..நீ ரௌவ்ன்ஸ் போனப்போ யாரும் இல்லேல.." என்று கேட்க,

  "நல்லா பார்த்தேன் அண்ணா...இப்போ போன பசங்களை தவிர காலேஜில் யாருமில்லை..."

  "என்னத்த பார்த்த...அங்கே என்னானு பார்த்துட்டு வா..போ."

  என்று சொல்லவும் கந்தன் தன் ஸ்ரிக்கையும் டார்ச்லைட்டையும் எடுத்துக்கொண்டு செல்ல,

  "கரென்டே இல்லாதப்போ..அங்க மட்டும் எப்படி லைட் எரியும்.."

  என்ற அவனின் முணுமுணுப்பு காற்றோடு கலந்தது.

  கேட்டில் இருந்து மெய்ன் பில்டிங் இடையிலே கிட்டத்தட்ட ஒன்றரை கிலோமீட்டர் இருக்க அந்த இரவின் நிசப்ததில் பூச்சிக்களின் ரீங்காரம் காதை நிறைத்தது.
   
 5. Sameera16

  Sameera16 Active Member

  Joined:
  Oct 24, 2018
  Messages:
  130
  Likes Received:
  175
  Trophy Points:
  43
  Gender:
  Female
  வெளிச்சம் தெரிந்த கட்டிடத்தை நோக்கி நடந்த கந்தனுக்கு அருகில் வரவர C ப்ளாக்கில் உள்ள லேப்பில் லைட் எரிவது புரிந்தது.

  "இங்க மட்டும் எப்படி லைட் எரியுது..ஒருவேளை ஒரு லைனிற்கு மட்டும் கரென்ட் விட்டுடானோ.."

  என்று தனக்குத்தானே பேசியபடி அந்த ப்ளாக்கின் படிகட்டில் ஏறியவன் அந்த லேப்பை அடையும்போது அந்த லைட் பட்டென்று அணைய திடீரென தன்னை சூழ்ந்த இருட்டில் பக்கென்று ஆனது கந்தனிற்கு..

  பின் தன்னை சுதாரித்துக் கொண்டு கையில் இருந்த டார்ச்லைட்டை சொடக்கியவன் அதன் ஒலியை கொண்டு அந்த லேப்பின் கதைவை பார்க்க அது பூட்டப்பட்டிருந்தது.

  யோசனையோடு நிமிர்ந்தவன் அருகில் இருந்த ஜன்னலை உள்நோக்கி கைவைத்து தள்ள அது திறந்துக் கொள்ளவும் டார்ச்சை உள்ளே அடித்து சுற்றும் முற்றும் பார்த்தான்.

  உள்ளே இருந்த பொருட்களில் படிந்திருந்த தூசுக்களும் ஒட்டடைகளும் டார்ச் ஒலியில் அப்பட்டமாய் தெரிய முடிந்தளவு எக்கி உள்ளே பார்க்க ஸ்விட்ச்போர்ட் தெரிந்தது.ஆனால் எந்த ஸ்விட்ச்சும் போட்டிருக்கவில்லை.கண்ணுக்கு எட்டியவரை யாரும் உள்ளே இருப்பதாக தென்படவில்லை எனவும் உதட்டை சுழித்து பெருமூச்சு விட்டவன் அங்கிருந்து செல்ல எத்தனித்து படிக்கட்டில் இறங்கவும் அணைந்த விளக்கு மீண்டும் பளீச்சென்று அந்த லேப்பில் ஒலி வீசவும் சரியாக இருந்தது.ஆணியடித்தார் போல் நின்ற இடத்திலேயே ஸ்தம்பித்தான்.மெல்ல யாரோ முணுமுணுப்பது போல் குரல் கேட்க முதுகுத்தண்டு சில்லிட்டு போனது.

  சில நொடிகளுக்கு பின் மெல்ல திரும்பி மீண்டும் அந்த லேப்பை நோக்க அவன் திறந்த ஜன்னல் கதவு படாரென்று அவன் முகத்தில் அறைவதுப்போல் சாத்தபட "அம்மாஆஆஆ..."
  என்று அலறலோடு பதறியடித்து ஓடினான்.

  *******
  "அண்ணே என்ன நம்புனே.."

  என்று ஆயிரத்தியொராவது முறையாய் கந்தன் ஆரம்பிக்கவும் அவனை கொலவெறியோடு நோக்கிய லிங்கம்,

  "டேய் மறுபடியும் ஆரம்பிச்ச கொன்றுவேன்..நேத்தி நைட்லேந்து இதே பல்லவியே பாடிட்டு இருக்க..நான் தான் சொல்றேனுல்ல..எலக்ரீ்டீசிட்டி வேலை போயிட்டு இருந்ததால கரென்ட் வந்துவந்து போயிருக்கும்..கதவு காத்துல சாத்தியிருக்கும்....இதுக்கு போய் நீ இந்த ஆர்பாட்டம் பண்ணிட்டு இருக்க.."
  என்றார் பல்லை கடித்தப்படி..

  "ஆனால் எல்லாம் ஸ்விட்ச்சும் ஆஃபில் இருந்ததே.."

  "ம்ச்..நீ இருட்டுல சரியா கவனிச்சிருக்க மாட்ட.."

  "இல்ல...நான் பார்த்தேன்.."

  என்று மீண்டும் முதலிருந்து ஆரம்பிக்கவும்,

  "எப்பா..டேய்..உன் ஷிஃப்ட்டு முடிஞ்சிருச்சுல..நீ கிளம்பு.. மார்னிங் ஷிஃப்ட்டுக்கு அவனுங்க வந்ததும் நான் போய்குறேன்.."

  என்று அவன் தொல்லை தாங்காமல் கிளப்ப அவனுக்கும் ஓய்வு தேவையாக இருந்ததால் மறுபேச்சின்றி அமைதியாய் கிளம்பினான்.

  அப்பொழுது விருட்டென்று உள்ளே நுழைந்த யமஹா ஆர் 15 கந்தனின் அருகில் நிற்க அதில் அமர்ந்திருந்தவன் ஸ்டைலாக ஒரு ஸல்யூட் வைத்து,

  "குட் மார்னிங் கந்தன் அண்ணா.."

  என்றான் மலர்ந்த சிரிப்புடன்...அது காண்போரை கவர்ந்திழுக்கும் சிரிப்பு.. அவர்களையும் தொற்றிக்கொள்ளும் சிரிப்பு.

  ஆனால் அன்று கந்தனை கவரவில்லை போலும்.அவன் பதிலுக்கு சொல்லிய குட் மார்னிங் லேயே அது நிச்சயம் அவருக்கு 'குட்..' மார்னிங் இல்லை என்பதை உணர்த்தியது.

  போகும் கந்தனை பார்த்தபடி "இவருக்கு என்னாச்சு அங்கிள்.."

  என்று அவன் கேட்டதற்கு,

  "அவனை விடுங்க தம்பி..நைட்டு கரென்ட் போய் போய் வந்ததுல பேய் பிசாசுனு பேனாத்துறான்.."

  என்று அவர் கூறவும் சிரிப்புடன் தோளை குலுக்கியவன் மீண்டும் வண்டியை கிளப்பி நேராக சென்று பார்க்கிங்கில் நிறுத்தினான் ஆர்யன்.நான்காம் ஆண்டு தானியங்கி பொறியியல் மாணவன்.

  அவன் நினைத்தது போல் அவன் நண்பர்கள் பட்டாளம் அங்கே தான் நின்று அரட்டையடித்துக் கொண்டிருந்தது.

  "ஹாய் டா.."

  என்றபடி பைக்கில் இருந்து இறங்கினான்.
  வண்டி ஓட்டி வந்த ஸ்பீடில் கலைந்திருந்த முன்னுச்சு முடியை கைகளால் கோதி சரி செய்தபடி அவர்களை நெருங்கியவன்,

  "என்ன எல்லார் மூஞ்சிலையும் பல்பு எக்ஸ்ராவா எரியுது.."

  என்று வினவ, " வேறென்ன மச்சான்..இன்னைக்கு ஃபஸ்ட் இயர் எல்லாம் வராங்க... காலேஜே ஃப்ரஸ்ஸா வண்ணமயமா இருக்கும்.."

  என்று பாலாஜி குஷியாய் கூற அவனை தொடர்ந்து அனித்,

  "கூடவே ஈவ்னிங் ஃபரஸ்ஸர்ஸ் ஃபங்ஷன் அரென்ஜ் பண்ணிருக்கானுங்க..இதுப்போதாதா நமக்கு.."

  என்றான் கண்சிமிட்டலுடன்..

  "அது..ஆர்ட்ஸை அன்ட் சைன்ஸிற்கு தானேடா..நீங்க ஏன் துள்ளுறீங்க.."

  என்று கேட்ட ஆர்யனிற்கு,

  "எதுவா இருந்தால் என்ன மச்சான்.. எல்லாம் நம்ம காலேஜ்..நம்ம மக்கள்.."

  என்று பாவனையாய் ஜெய் சொல்லவும்

  "ம்ம்..இத அந்த ஆர்ட்ஸ் பசங்க முன்னாடி சொல்லு..ஹாக்கி ஸ்ரிக்கோட வந்திடுவானுங்க அடுத்த உலக போருக்கு.."

  புருவத்தை ஏற்றியிறக்கி நக்கலாய் ஆரியன் கூறினான்.

  "எந்த போர் வந்தாலும் சரி.. ஈவ்னிங் பாகிஸ்தான் பார்டரை தாண்டுறது தாண்டுறது தான்.."

  என்று அனித் உறுதியாய் கூறவும் அதற்கு மற்றவர்களும் சிங்சாங் போட்ட,

  "அலையாதீங்கடா டேய்.."

  என்றான் சிரிப்புடன்.

  இவ்வாறு கூறவும் ஆர்யனை யாரும் யோக்கியன் என்று எண்ணிவிட வேண்டாம் ப்ளீஸ்...

  ஐயாவும் சைட்டில் தொடங்கி எல்லாத் திருகுதளமும் செய்வான் தான்.என்ன மற்றவர் போல் ஓப்பனாக வழிய மாட்டான்..என்ன இருந்தாலும் கெத்து ரொம்ப முக்கியம் அமைச்சரே என்கிற வகை இவன்..

  இவர்கள் எல்லாருமே ஆட்டோமொபைல் டிபார்ட்மெண்ட் தான்.

  எல்லாக் கல்லூரிகளையும் போல் இங்கேயும் கேங் பிரிவினைகள் சண்டைகள் எதுக்கும் குறைவில்லை.

  அவரவர்களுக்குள் உள்நாட்டு புகைச்சல் பல இருந்தாலும் முக்கியமான மோதல் ஆர்ட்ஸ்- சைன்ஸ் மற்றும் இஞ்சினியரிங் என்று தான்.

  பொதுவாகவே கெத்து ஆர்ட்ஸா இஞ்சினியரிஙா என்ற பிரச்சனை இருக்கும்..இதில் ஒரே கேம்பஸ்ஸில் இவர்களை போட்டால் சொல்லவா வேண்டும்..வாரம் ஒரு திருவிழா தான்..பஞ்சாயத்து தான்.

  இன்று மாலை என்ன நடக்க போகுதோ
  ********************
   
 6. Tamilvanitha

  Tamilvanitha Active Member

  Joined:
  Dec 26, 2017
  Messages:
  332
  Likes Received:
  231
  Trophy Points:
  43
  Gender:
  Female
  Nice start .
   
 7. Rabina

  Rabina Well-Known Member

  Joined:
  Aug 14, 2018
  Messages:
  436
  Likes Received:
  255
  Trophy Points:
  63
  Gender:
  Female
  nice start...
   
 8. kannamma 20

  kannamma 20 Well-Known Member

  Joined:
  May 14, 2017
  Messages:
  440
  Likes Received:
  326
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Good start
   
 9. Prabha_kannan

  Prabha_kannan Well-Known Member

  Joined:
  Oct 25, 2017
  Messages:
  545
  Likes Received:
  327
  Trophy Points:
  63
  Location:
  trichy
  college life story a ? waiting for next update ..
   
 10. janaki

  janaki Active Member

  Joined:
  Oct 3, 2014
  Messages:
  306
  Likes Received:
  196
  Trophy Points:
  43
  Gender:
  Female
  Location:
  Madurai

Share This Page