ஈழ இறுதி யுத்தம்? பொட்டு அம்மான் உயிரோடுதான் இருக்கிறார்?

Discussion in 'Religious & Sprituality' started by NATHIYAMOHANRAJA, Jul 15, 2019.

 1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  6,335
  Likes Received:
  505
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  ஈழ இறுதி யுத்தம் முடிந்த 2009-ம் ஆண்டு முதல் பொட்டு அம்மான் உயிரோடுதான் இருக்கிறார் என பல முறை செய்திகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. இதனால் சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டுச் சொல்வது பொட்டு அம்மானைத்தான் என நம்புகின்றனர் தமிழ்த் தேசியவாதிகள். 2010-ம் ஆண்டு ஜூன் மாதம் தமிழகத்தில் இந்திய அரசால் தேடப்பட்ட புலிகள் இயக்க உளவுப் பிரிவைச் சேர்ந்த சிரஞ்சீவி மாஸ்டர் கைது செய்யப்பட்டார். அப்போது அவரிடம்ஜூனியர் விகடன் வார இதழ் ஒரு பேட்டி எடுத்து வெளியிட்டது. அந்தப் பேட்டியில்கூறியிருந்ததாவது.

  கேள்வி: பிரபாகரன் தப்பி விட்டதாக ஈழ ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். ஆனால், அவர் கொல்லப்பட்டு விட்டதாகச் சொல்லி சிங்கள அரசு ஒரு சடலத்தை காட்டியது. இதில் எதுதான் உண்மை?’
  பதில்: எங்களின் தலைமையைக் கேட்காமல் நாங்கள் ஏதும் சொல்ல முடியாது. அதே நேரம் இட்டுக்கட்டி ஏதும் சொல்ல நாங்கள் விரும்பவில்லை.’

  கேள்வி: சரி… உங்களின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானின் நிலை குறித்தாவது சொல்லுங்களேன்…?’
  பதில்: (பலமாக சிரிக்கிறார்) ”மிகப்பத்திரமாக இருக்கிறார். அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை. இவ்வாறு சிரஞ்சீவி மாஸ்டர் அந்தப் பேட்டியில் தெரிவித்திருந்தார். பொட்டு அம்மான் உயிருடனேயே இருக்கிறார் என சிரஞ்சீவி மாஸ்டர் அன்றே அடித்துச் சொன்னதைத்தான் சுப்பிரமணியன் சுவாமி இப்போது மறைமுகமாக கோடிட்டுக் காட்டுகிறாரோ என்கின்றனர் தமிழ்த் தேசியவாதிகள்.

  பிரபாகரனின் நிழல் அப்படியான புலனாய்வு பிரிவின் பொறுப்பாளராக செயல்பட்டவர் பொட்டு அம்மான். 2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது பிரபாகரன் மரணித்துவிட்டதாக இலங்கை ராணுவம் ஒரு சடலத்தைக் காட்டியது. இதை பலரும் இன்றுவரை நம்பவோ ஏற்கவோ இல்லை.

  பொட்டு அம்மான் எங்கே? பல மூத்த தளபதிகளின் சடலங்களையும் காட்டியது சிங்கள ராணுவம். ஆனால் பொட்டு அம்மான் பற்றிய தகவல் மட்டும் 9 ஆண்டுகளாக தொடர்ந்து மர்மமாக நீடித்து வருகிறது.

  கருணா உறுதி செய்யவில்லை சில ஆண்டுகளுக்கு முன்னர் பொட்டு அம்மான் ஹாங்ஹாங்கில் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டது. அதேநேரத்தில் பொட்டு அம்மான் மரணித்துவிட்டதாக தம்மால் கூற முடியாது என தெரிவித்திருந்தார் விடுதலைப் புலிகளிடம் இருந்து பிரிந்து போன கருணா.

  பிரபாகரன் குறித்த தகவல்கள் எதுவும் இல்லாத நிலையில் 9 ஆண்டுகளாக பொட்டு அம்மான் குறித்து அவ்வப்போது ஏதேனும் ஒரு தகவல் வந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில்தான் பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ராஜீவ் கொலையின் தலைமை சதிகாரர் இத்தாலியில் இருக்கிறார் என குறிப்பிட்டிருக்கிறார். இப்பதிவும் இண்டர்போலின் கருத்தை உறுதி செய்வதாக அதாவது பொட்டு அம்மான் உயிருடன்தான் இருக்கிறார் என்பதை வெளிப்படுத்துவதாகவே இருக்கிறது என்கின்றனர் தமிழ்த் தேசியவாதிகள்.
   
 2. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  6,335
  Likes Received:
  505
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  விடுதலைப் புலிகள் தளபதி பொட்டு அம்மான் உயிருடன் உள்ளார்?

  தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் எங்கே என்பது குறித்த மர்மம் 9 ஆண்டுகளாக நீடிக்கிறது. பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறார்; தேடப்படும் நபர் என சில ஆண்டுகளுக்கு முன் இண்டர்போல் கூறியதை உறுதி செய்யும் வகையில் சுப்பிரமணியன் சுவாமி ட்வீட் பதிவைப் போட்டிருக்கிறார்.
  பிரபாகரனின் நிழல் அப்படியான புலனாய்வு பிரிவின் பொறுப்பாளராக செயல்பட்டவர் பொட்டு அம்மான். 2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது பிரபாகரன் மரணித்துவிட்டதாக இலங்கை ராணுவம் ஒரு சடலத்தைக் காட்டியது. இதை பலரும் இன்றுவரை நம்பவோ ஏற்கவோ இல்லை.
  கடந்த 2009-ம் ஆண்டு நடந்த இறுதிப் போரின்போது, பொட்டு அம்மான் இறந்துவிட்டதாக இலங்கை ராணுவத்தின் உயரதிகாரிகள் சொல்லிவந்தனர். இறுதிப்போரின்போது, அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசன், கப்பற்படை தளபதி சூசை, பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி போன்ற முக்கியமானவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள் என அவர்களின் உடலை இலங்கை அரசு காட்டியது. அவ்வளவு ஏன்? விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபகரனே இறந்துவிட்டார் என ஓர் உடலைக் காட்டி மக்களை நம்பவைத்தது இலங்கை அரசு. ஆனால், பொட்டு அம்மான் இறந்துவிட்டார் என்பதற்கு சாட்சியாக அவரது உடலை இலங்கை அரசால் காட்ட முடியவில்லை. கருணா உறுதி செய்யவில்லை சில ஆண்டுகளுக்கு முன்னர் பொட்டு அம்மான் ஹாங்ஹாங்கில் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டது. அதேநேரத்தில் பொட்டு அம்மான் மரணித்துவிட்டதாக தம்மால் கூற முடியாது என தெரிவித்திருந்தார் விடுதலைப் புலிகளிடம் இருந்து பிரிந்து போன கருணா.
  பொட்டு அம்மானைப் பற்றிய தகவல்கள் கடந்த 2009-ம் ஆண்டிலிருந்து மர்மமாகவே இருந்துவந்த நிலையில், தற்போது அவர் இத்தாலியில் வசித்து வருவதாக ரகசியத் தகவல்கள் கசிந்துவருகின்றன. ஆனால், இது எந்த அளவுக்கு உண்மை என்று சரிவர தெரியவில்லை.
   
 3. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  6,335
  Likes Received:
  505
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  பிரபாகரன் தற்கொலை விவகாரம்

  விடுதலைப்புலிகளின் கிழக்குத் தலைவராக இருந்தவர் கருணா அம்மன். பிரபாகரன் தற்கொலை செய்து கொண்டதாக அவர் கூறினார். இந்த விவகாரம் எனக்கு முன்பும், ஒரு சிலரைப் பற்றியும் விவாதிக்கப்பட்டது.


  [​IMG]
  பிரபாகரனின் மனைவி மற்றும் மகள் யுத்தத்தின் இறுதி கட்டத்தில் ஷெல்-தீவுகளால் கொல்லப்பட்டதாக ஒரு இந்திய டிவி சேனலின் பேட்டியில் ஒரு நிருபரிடம் கேள்வி எழுப்பிய முரளிதரன் மேலும் தெரிவித்தார். முரளிதரன் தனது யுத்த உத்திகளுக்காக பிரபாகரனை பாராட்டிய போது எல்.ரீ.ரீ.ஈ அதன் தோல்வியுற்ற யுத்த தந்திரோபாயங்கள் காரணமாக தோற்கடிக்கப்பட்டதாக வலியுறுத்தினார். “LTTE ஒரு கொரில்லாப் போரை நடத்தியிருந்தால் never defeat,” என்று அவர் கூறினார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கைது செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளதாக பிரபாகரன் அவதூறாகக் கூறுவது தவறானது என்று அவர் மேலும் தெரிவித்தார். பிரபாகரன் உயிருடன் எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிந்துகொள்ள விரும்பவில்லை, முரளிதரன் கூறினார்.

  இயல்பான மரணம் ஏற்பட்டால், கண்கள், பொதுவாகவே இல்லாமல், பொதுவாக மூடப்படும். பயம் காரணமாக ஒரு நபர் தாக்கப்பட்டால், அவருடைய கண்கள் மூடியிருக்கும். ஒருவர் சாகவேண்டுமென்றால், இறந்துவிடுவார் என நினைத்தால், அவர் இறந்துவிட்டால், அவருடைய கண்கள் திறந்திருக்கும். பிரபாகரன் தற்கொலை செய்து கொண்டதாக பல முறை தற்கொலை செய்து கொண்டதாக பத்திரிகைகள் செய்தி வெளியானது. அவரது எதிரிகளால் கொல்லப்படுவதைத் தவிர்ப்பதற்காக மரணத்தின் அவர் தனது சொந்த வாழ்க்கையை எடுத்துக்கொண்டிருக்கலாம்.
   

Share This Page