உன் அன்பில் உன் அணைப்பில்/ Un Anbil Un Anaippil by Sangareswari

Discussion in 'Serial Stories' started by Tamilsurabi, Oct 2, 2018.

  1. Tamilsurabi

    Tamilsurabi Administrator Staff Member

    Joined:
    Sep 11, 2014
    Messages:
    172
    Likes Received:
    84
    Trophy Points:
    28
    வணக்கம் தமிழ்சுரபி வாசகர்களே

    நமது தமிழ்சுரபி குடும்பத்தில் மேலும் ஒரு எழுத்தாளர் இணைகிறார். அவரை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறது தமிழ்சுரபி.

    எழுத்தாளர் : சங்கரேஸ்வரி

    கதை : உன் அன்பில் உன் அணைப்பில்
     
    Last edited: Oct 2, 2018
  2. சங்கரேஸ்வரி

    சங்கரேஸ்வரி New Member

    Joined:
    Oct 2, 2018
    Messages:
    14
    Likes Received:
    23
    Trophy Points:
    3
    Gender:
    Female
    Location:
    sivakasi
    ஹாய் பிரெண்ட்ஸ்,

    இது எனது முதல் கதை... உன் அன்பில் உன் அணைப்பில்...! இக்கதையில் வரும் இவ்விருவர்கிடையில் பகையும் உண்டு ,பாசமும் உண்டு ,பந்தமும் உண்டு. ஆனால் ஒருவர் இல்லாமல் ஒருவர் இல்லை.
     
    Sangee26, Kamala PM and Tamilsurabi like this.
  3. Tamilsurabi

    Tamilsurabi Administrator Staff Member

    Joined:
    Sep 11, 2014
    Messages:
    172
    Likes Received:
    84
    Trophy Points:
    28
    வாழ்த்துக்கள் சங்கரேஸ்வரி

    [​IMG]
     
  4. Sangee26

    Sangee26 Active Member

    Joined:
    Oct 26, 2017
    Messages:
    112
    Likes Received:
    53
    Trophy Points:
    28
    Gender:
    Female
    Occupation:
    Home maker
    Location:
    Chennai
    Best wishes for your story waiting for next ud
     
  5. சங்கரேஸ்வரி

    சங்கரேஸ்வரி New Member

    Joined:
    Oct 2, 2018
    Messages:
    14
    Likes Received:
    23
    Trophy Points:
    3
    Gender:
    Female
    Location:
    sivakasi
    அத்தியாயம் 1
    இருள் சூழும் மாலை வேளையில் இனிமையான ஓசைகளை எழுப்பியவாறு தன் இருப்பிடத்தை நோக்கி பறந்து கொண்டிருந்த பல வகையான பறவைகளையும், தன்னை சுற்றி எங்கும் கண்களுக்கு, குளிர்ச்சியாக இருந்த நெற்கதிர்களையும் வேடிக்கை பார்த்தவாறு வந்து கொண்டிருந்தாள் ஆராதனா.

    ஆராதனா - வாசுதேவன்,செண்பகம் தம்பதியின் ஒரே செல்ல புதல்வி, தனது கல்லூரிப் படிப்பை முடித்தவள் பாட்டி, தாத்தாவை காண்பதற்காக மகிழ்ச்சியுடன் தாய், தந்தையுடன் வந்து கொண்டிருந்தாள்.

    பழங்காலத்தில் கட்டப்பட்டு இன்றும் புதுமை போல் இருக்கும் அந்த மாளிகையில் முன்பு அவர்களது கார் நிற்க காரினை விட்டு வெளியே இறங்கியவள் தனது எதிர் புறத்தில் இருக்கும் மல்லிகை பந்தலையும்,தென்னை மரங்களையும், வாழைக்கன்றுகளையும்,அதன் அருகே இருந்த செடிகளில் பூத்து குலுங்கிய மலர்களையும் ரசித்தவாறு நின்று கொண்டிருந்தாள் .

    ஏதோ ஒரு வித்தியாசமான ஓசையில் திரும்பியவள்,அங்கே வரிசையாக நின்று கொண்டிருந்த மாடுகளையும் அதன் கன்றுகளையும் பார்த்தவளின் விழியில் சிறு தவறு கூட சொல்ல முடியாத அளவுக்கு தூய்மையாக இருந்த இடத்தையும், அங்கு வேலை செய்து கொண்டிருத்தவர்களின் செயலை தன் நிலை மறந்து பார்த்து கொண்டிருந்தாள்.

    நகரத்தில் வண்டிகள் ஓசையும் இரைச்சல்களையும் கேட்டு கொண்டிருந்தவள்,இங்கே இயற்கையான பசுமையான சூழ்நிலையையும்,இனிமையான குரல்களையும் கேட்டவள் தன் வாழ்நாள் முழுவதும் இங்கையே இருந்தால் நன்றாக இருக்கும் என எண்ணினாள்.

    ஹாரன் ஓசையில் கேட்டவர் தன் பேத்தியை காணும் ஆவலில் தன் வயதையும் பொறுப்படுத்தாமல் அங்கே ஓடி வந்தனர் வெங்கடாச்சலம் ,மதுரம் தம்பதியர் .

    தன் நிலை மறந்து ரசித்து கொண்டிருந்த பேத்தியின் அருகே சென்று இதமாக அணைத்துக் கொண்டார் மதுரம் பாட்டி.

    தன்னை யாரோ அணைப்பது புரிய தன் நிலைக்கு வந்தவள் பாட்டி,தாத்தாவை கண்டவள் அவர்களை அன்புடன் அணைத்துக் கொண்வள்
    அவர்களது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாள்.

    அவளது இந்த செயலை கண்டு, "எப்படி என் பேத்தி நம்ம கலாச்சாரத்தை மறக்காம இருக்கால..,"என பெருமைபட்டுக் கொண்டார் வெங்கடாச்சலம்.

    "பேத்தியை பார்த்ததும் எங்களை மறந்துட்டிங்களா மாமா...?" என்று தன் மருமகள் செண்பகத்தின் குரலின் திருப்பினார்கள் .

    அங்கே தன் மகனையும்,மருமகளையும் பார்த்தவாறு, "இந்த வீட்டோட மகாராணி,எங்க வம்சத்தை வாழ வைக்க வந்தவள் உன்னை போய் எப்படிமா மறப்போம்..,"எனக் கூறினார் வெங்கடாச்சலம் .

    "பாட்டி எவ்வளவு நேரம் தான் என்னை வெளியே நிக்க வச்சி பேசிக்கிட்டே இருப்பீங்க..,"என ஆராதனா கூற,மதுரம் பாட்டி தனது மருமகளையும்,பேத்தியையும் வீட்டிற்குள் அழைத்துச் சென்றார் .

    தன் அருகில் பேத்தியை அமர வைத்தவர் அவளது தலையை வாஞ்சனையாக வருடி கொடுக்க, "வேலு எங்க இருக்கே,இங்க வா... !வெளில இருக்குற பெட்டியை எல்லாம் யாரையாவது கூப்பிடு எடுத்து வைக்க சொல்லு..,"என கட்டளையிட்டார் .

    "நல்லா இருக்கீங்களா சின்னையா,சின்னம்மா..,"என நலம் விசாரித்தவாறு அங்கே வந்தார் வேலு என்கிற வேலைய்யா.

    வேலு -அவர்களது வீட்டில் வாசுதேவன் சிறு வயதில் இருந்த பொழுதே வேலை செய்து கொண்டிருத்தவர் .ஆராதனா குழந்தைப் பருவத்தில் அவளுடன் இருந்து கவனித்து கொண்டவர் .

    "நல்லா இருக்கோம்..!வேலைய்யா " ,எனக் வாசுதேவன் கூற,அவர் அருகில் வந்த ஆராதனா வேலுவின் கைகளை பிடித்தவள், "நீங்க எப்படி இருக்கீங்க..!வேலு தாத்தா.., "என்றாள்.

    கேட்டவளின் முகத்தை பார்த்தவர் தன் களைப்பு நீங்க முக மலர்ச்சியுடன், " நான் நல்லா இருக்கேன்,எனக்கு ஒரு குறையும் இல்லமா,சின்ன பிள்ளையாட்டம் இருக்கும் போது உன்னை பார்த்தது நீ எப்படி கண்ணு இருக்கே..,"எனக் கேட்டார்.

    சிறுது நேரம் அனைவரிடம் பேசியவள் இரவு உணவை முடித்து விட்டு வேலு தாத்தா கொடுத்த பாலை பருகியவள் தன்னுடைய அறைக்கு வந்தாள் .

    சிறு வயதில் தான் பயன்படுத்திய தன் அறை தன்னுடைய பொருள்கள் அனைத்தும் மாறாது இருப்பதை பார்த்தவள் இரவு உடைக்கு மாறி படுக்கையில் விழுந்தாள்.

    படுக்கையில் விழுந்தவளை பயணக் களைப்பு அழுத்த நித்ராதேவி அவளை தன் உலகத்திற்கு அழைத்து சென்றார்.

    இருள் சூழ்ந்திருந்த இப்பூவுலகத்தை தன் இளஞ்சிவப்பு நிற கதிர்களால் வெளிச்சத்தை பரப்பி கொண்டிருந்து கதிரவன் .

    தன் மீது இதமான குளிர் காற்று தழுவ மெல்ல விழி திறந்தாள் ஆராதனா எழுந்து அருகே இருந்த சால்வையை எடுத்து போர்த்தியவாறு ஜன்னல் புறம் சென்று இளம் மஞ்சள் நிற கதிரவனை ரசித்தாள் .

    சிறுது நேரம் ரசித்தவள் மொபைல் போன் ரிங் ஆகவே அதனை எடுத்தவளின் விழியில் தனது தோழியின் பெயர் மின்னுவதை பார்த்தவள் முகம் மலர்ச்சியுடன் அதனை எடுத்து பேசினாள்.

    தனது மற்ற தோழிகளை பற்றியும் கேட்டவள் பேசி முடித்து போனை கட்டிலில் வைத்து பாத்ரூமில் புகுந்து கொண்டாள்.

    பாத்ரூமில் இருந்து வெளியே வந்தவள் உடை மாற்றிய பின் கண்ணாடி முன் நின்று தன்னை பார்த்து கொண்டிருக்க கதவு தட்டும் ஓசை கேட்க, "இந்த காலையில யாரு வந்துருக்கா..!" என யோசித்தவள் கதவினை திறந்தாள்.

    அங்கே தன் தாய் இருப்பதை கண்டவள், "என்னம்மா காலையில என் ரூம்க்கு வந்துருக்கீங்க எதாவது சொல்லனும்மா..?" எனக் கேட்க ,

    "ஆமா,உன் கிட்ட கொஞ்சம் பேசணும் ஆரா,அதான் வந்தேன்..,"எனக் கூறியவர் அவளை இழுத்துக் கொண்டு அறைக்குள் விரைந்தார் .

    "என்னம்மா..! எதுக்கு இப்படி அவசரமா என்னை இழுத்துடு வரீங்க..? "

    "நான் என்ன நினைச்சினோ அப்படியே தான் இருக்கே..,"

    "என்னம்மா புரியாத மாதிரி பேசுறீங்க! நீங்க என்ன நினைச்சீங்க..? நான் எப்படி இருக்கேன் புரியற மாதிரி சொல்லுங்கம்மா..."

    "இங்க பாரு ஆரா..! இது நம்ம ஊரு மாதிரி கிடையாது நீ இங்க இருக்குற வரைக்கும் இப்படி ஜீன்சு,குர்தாவும் போடாதே,சுடிதார் மட்டும் போடு சரியா..."எனக் கூறியவர் கோவமாக இருக்கும் மகளை புரியாத பார்வை பார்த்தார்.

    மகளின் அருகே சென்று அவளது தாடையை பிடித்து கெஞ்சியவாறு, "இது கிராமம் இங்க இப்படி டிரஸ் போடுறது நாகரிகமாக இருக்காது அதான் அம்மா அப்படி சொன்னேன்டா..!சாரி டா ஆரா செல்லம்..." என்றார் .

    இன்னும் தன் மகளின் கோவம் குறையாது இருக்க, "என்னாச்சுடா ஆரா..!ஏன் இப்படி கோவமாக இருக்கே..."எனக் கூறி முடிக்கும் முன்னே,

    அம்மா எனக் கத்தியவள், "எத்தனை தடவை சொல்லுறது என்னை ஆரானு சொல்லாதீங்கங்கன்னு சொல்லியிருக்கேன்,எதுக்கும்மா திரும்பத்திரும்ப அப்படியே கூப்பிடுறீங்க பையனை கூப்பிடுற மாதிரி இருக்குமா..,"எனக் கோவமாக கத்தினாள்.

    ஆராதனாவின் கோவம் என்னவென்று அறிந்தவர், "நான் நீ கத்தினவுடன் என்னமோன்னு நினைச்சிட்டேன் இது தான் உன் பிரச்சனையா..! சரிம்மா தெரியாம சொல்லிட்டேன் இனிமேல் சொல்ல மாட்டேன் போதுமா..,"என்றார் .

    ஆராதனாவின் பெட்டியில் இருந்து சுடிதாரை எடுத்தவர் அதனை மகளிடம் கொடுத்தவர் இதை போட்டு சீக்கிரம் வா நான் போறேன் எனக் கூறியவர் அவளது அறையை விட்டு வெளியேறினார்.

    நல்ல வேலை சுடிதார் கட்ட சொன்னாங்க! எங்கே சேலை,தாவணி கட்ட சொல்லிருவாங்களோ! நினைச்சேன் என மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

    ஹாலில் பேப்பர் படித்து கொண்டிருந்த வாசுதேவன் தன் அன்னை தன்னை சாப்பிட அழைக்க டைனிங் டேபிள் சென்றவர் தன் மனைவி வருவதை கண்டவர், "ஆராதனா எங்கே நீ மட்டும் வர அவளை கூப்பிட தானே போன அவ எங்கம்மா..?" என வினவினார் .
    "வருவா கொஞ்ச நேரத்துல நீங்க வாங்க சாப்பாடு எடுத்து வைக்கிறேன்..,"கிச்சன் நோக்கி சென்றார் .

    "ஆராதனா கீழே வா சாப்பிட..!தாத்தா பாட்டி எல்லாம் வந்துட்டாங்க..,"என தன் தந்தையின் குரலில் அவசரமாக கீழே இறங்கி வந்தாள்.

    "சாரி தாத்தா,பாட்டி கிளம்ப நேரமாச்சு இன்னிக்கு நல்ல தூங்கிட்டேன்..! எழுந்திரிக்க நேரம்மாச்சு..! முதல் நாள் எல்லாரையும் வெயிட் பண்ண வச்சிட்டேன்..,"என மன்னிப்பு வேண்ட,

    "நீ இங்க வருவதற்காக நாங்க பதினோரு வருசமா காத்துகிட்டு இருந்தோம்.இந்த கொஞ்சம் நேரம் உனக்காக நாங்க காத்துகிட்டு இருக்குறதுல எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லடா கண்ணா..!" எனக் வெங்கடாச்சலம் கூற,அவரது அன்பில் நெகிழ்ந்தவள் தன் தாத்தாவின் தோளில் சாய்ந்து கொண்டாள்.

    அதே நேரம் மதுரம் பாட்டி அவளது அருகே வந்தவர், "எவ்வளவு அழகா இருக்கே தெரியுமா...?யார் கண்ணும் என் பேத்தி மேல பட கூடாது..,"எனக் கூறியவர் அவளது தலையை தடவி கொடுத்தார் .
    "உனக்கு நான் புடவை எல்லாம் எடுத்து வச்சிருக்கேன் சாப்பிட்டு என் அறைக்கு வா குட்டிம்மா..!நான் எடுத்து தரேன்.."எனக் கூற,
    தன் பாட்டியிடம் அதை வேண்டாம் என கூற விரும்பாதவள் சரி பாட்டி என தன் தாயை பார்த்தவாறு கூறினாள்.

    ஆராதனாவை பூஜை அறைக்கு அழைத்து சென்றவர் அருகில் இருந்த குங்குமத்தை எடுத்து அவளது நெற்றியில் வைத்து விட்டார் .
    காலை உணவை முடித்து ஹாலில் அமர்ந்த தன் பெற்றோரிடம், "நாங்க சிவநாதன் வீட்டுக்கு போய் பார்த்துட்டு வந்துறோம்..,"என்று வாசுதேவன் கூற,

    "சரிப்பா போய் பார்த்துட்டு வாங்க நானும் கேட்டேன்னு சொல்லுப்பா ஒரே ஊருல தான் இருக்கோம்ன்னு பேரு அவனை பார்த்து ரெம்ப நாள் ஆயிற்று..,"என்றார் வெங்கடாச்சலம்.
    "நீங்க ரெண்டு பேரும் போய் பார்த்துட்டு வாங்க..!ஆராதனா இங்க தானே இருக்க போற அவ அப்பறம் பார்த்துக்குவா..!"என்றார் மதுரம் பாட்டி .

    "எதுக்கும்மா..!ஆராதனாவை அவங்க யாரும் பார்த்தது கூட இல்லை,அப்பறம் மரகதவல்லி அம்மாக்கு ஆரானா உயிரு,அங்கே போகும் போதல்லாம் அவளை எங்கேன்னு ஆசையா கேட்பாங்க..!" வாசுதேவன் கூற.

    "அது சரிதான்ப்பா..!ஆனா இன்னைக்கு சாயங்காலம் கோவிலை அவ பேருல பூஜைக்குகொடுத்திருக்கேன்,அதனால அவ கண்டிப்பா என் கூட வரணும் நீங்க மட்டும் போயிட்டு வந்துருங்க...!சரியா "என்றார் மதுரம் பாட்டி .

    இவர்கள் பேசியதை எதையும் அறியாத ஆராதனா அங்கே தன் அறையை சுத்தப்படுத்தி கொண்டிருந்தாள்.

    (இங்கே இருந்திருந்தால் பின்னாடி தனக்கு ஏற்பட போகும் பிரச்சனையை தவிர்த்து இருந்திருப்பாளோ என்னவோ.)
     
  6. Tamilvanitha

    Tamilvanitha Active Member

    Joined:
    Dec 26, 2017
    Messages:
    208
    Likes Received:
    158
    Trophy Points:
    43
    Gender:
    Female
  7. kannamma 20

    kannamma 20 Well-Known Member

    Joined:
    May 14, 2017
    Messages:
    327
    Likes Received:
    251
    Trophy Points:
    63
    Gender:
    Female
  8. Rabina

    Rabina Member

    Joined:
    Aug 14, 2018
    Messages:
    98
    Likes Received:
    61
    Trophy Points:
    18
    Gender:
    Female
  9. janaki

    janaki Active Member

    Joined:
    Oct 3, 2014
    Messages:
    262
    Likes Received:
    166
    Trophy Points:
    43
    Gender:
    Female
    Location:
    Madurai
    Good start. Waiting for next episodes
     
  10. ரேகா பெருமாள்

    ரேகா பெருமாள் New Member

    Joined:
    Oct 6, 2018
    Messages:
    1
    Likes Received:
    1
    Trophy Points:
    3
    Gender:
    Female
    super அடுத்த epi எப்ப sister
     

Share This Page