உயிரினில் கலந்த உறவானவள் / Uyirinil Kalantha Uravanaval by Narmadha senthilkumar

Discussion in 'Serial Stories' started by saravanakumari, Sep 30, 2018.

 1. saravanakumari

  saravanakumari Administrator Staff Member Manager

  Joined:
  Nov 12, 2014
  Messages:
  2,278
  Likes Received:
  1,039
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  home maker
  Location:
  villupuram
  வணக்கம் தமிழ்சுரபி வாசக நெஞ்சங்களே


  நமது தளத்திற்கு வந்திருக்கும் புது எழுத்தாளர்


  நர்மதா செந்தில்குமார்

  வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்..


  வாழ்த்துக்கள் நர்மதா  கதையின் பெயர் ----உயிரினில் கலந்த உறவானவள்
   
  Last edited by a moderator: Nov 13, 2018
 2. Narmatha senthilkumar

  Narmatha senthilkumar Active Member

  Joined:
  Sep 30, 2018
  Messages:
  80
  Likes Received:
  104
  Trophy Points:
  33
  Gender:
  Female
  உயிரினில் கலந்த உறவானவள்

  அத்தியாயம் 1

  சென்னையில் புகழ்பெற்ற மருத்துவக்கல்லூரியின் மாணவர்களுக்கான ஆண்கள் விடுதியில்...

  "டேய் கபில் .. எழுந்திரிடா சீக்கிரம்.. நைட் நேரத்தில் கடலை போடுட்டு இப்போ தூங்குறது" என்று எழுப்பிக்கொண்டிருந்தான் நம் ஹீரோ கவின்முகிலன்

  கவினின் ரூம்மேட் நண்பன் தான் இந்த கபிலன். இவர்களோடு அஸ்வின் அருள்மொழியும் நண்பர்களாய் ஒரே அறையை பகிர்ந்துக்கொண்டுள்ளனர்

  "ப்ளீஸ்டா கவின்.. என் டார்லிங் கூட கனவுலகில் இருக்கேன் டா.. தொல்லை பண்ணாத.. அந்த இரண்டு லூசுங்களையும் எழுப்புடா முதலில்"

  " அவன்ங்க எப்போவோ ரெடி ஆகிட்டான்ங்க ...நீ இப்படியே கனவு கண்டுட்டு இருடா..அப்போ தான் உன் டார்லிங்கிடம் வசமா நேர்ல வாங்கி கட்டிக்குவ" என நக்கலாக கவின் சொல்லிக் கொண்டிருந்த போதே கபில் மொபைல் ரிங் ஆனது

  " ஹா ஹா .. மச்சான்..உன்னோட லவ்வர் கால் பண்ணிட்டாள்.. செத்த டா நீ" என்றதும் தான்

  கபில் "அச்சச்சோ ஹால்டிக்கெட் வாங்க வரேன்னு சொன்னதை மறந்துட்டு தூங்கிட்டேனே.. இப்போ இவ வேற சாமி ஆடுவாளே.. சரி பேசி சமாளிப்போம்" என்று போனை எடுத்தவன்

  "ஹாய் ..பிரியா டார்லிங் .. வந்துட்டியா..இன்னும் 10 mins டா.. நான் அங்க இருப்பேன்..." (ஆமாங்க பிரியா இவன் கிளாஸ் தான் இரண்டு பேரும் லவ்வர்ஸ்) என்றதை கேட்ட

  ப்ரியா "டேய் நீ இன்னும் தூக்க கலக்கத்தில் உள்ள போல.. உண்மையா ரெடி ஆகிட்டியா" என்று சந்தேகத்தோடு கேட்டாள்

  "அச்சச்சோ கண்டு பிடித்துட்டாளே... இல்லை ப்ரியா குட்டி.. நான் ரெடி ஆகிட்டேன்.. இந்த அஸ்வி தான் லேட் ஆக்கிட்டான்.. அதான் அவனுக்கு வெய்ட் பண்ணிட்டு இருக்கோம் "என்று ஒருவாறு சமாளித்து திரும்பி பார்த்தால்

  அஸ்வி கொலவெறியோட பார்த்துக்கொண்டு இருந்தான் .. இல்லை முறைத்துக் கொண்டு இருந்தான்.. அதை பார்த்து அருளும் கவினும் சிரித்துக் கொண்டு இருந்தனர்

  அஸ்வியிடம் இருந்து தப்பித்து ஒருவழியாய் ஆயத்தமாகி வந்துவிட்டான்.. எல்லாரும் கடைசி ஆண்டு தேர்வுக்காக ஹால்டிக்கெட் வாங்க சென்றனர்..

  கல்லூரியில் ப்ரியா அவளோட தோழிகள் ரம்யா ,கவிதாவும் இவர்களுக்காக காத்துக் கொண்டு இருந்தார்கள்.. இவர்களை பார்த்து சிரித்துக் கொண்டு இருந்தனர்..

  "ஏய் கவி வலியுது டி தொடச்சுக்கோ" என்ற ரம்யாவை பார்த்து சிரித்துக் கொண்டே "பரவாயில்லை மச்சி .. " என்ற கவிதாவிடம் கோபமாக

  "ஏண்டி கவின் தான் உன்னை வேணாம் என்று சொல்லிட்டான்ல.. அப்பறம் எதுக்கு டி இப்படி சைட் அடிக்கிற.. உனக்கு வெட்கமாக இல்லையா.. ஏய் பிரியா நீயாது கேளேன் டி சொல்லிட்டு திரும்பி பார்த்தா அவள் கபிலோட பேசிக்கொண்டு இருந்தாள்

  "இதில் என்னடி வெக்கம்.. எனக்கு புடிச்சுருக்கு நான் பார்க்கிறேன்.. அவனுக்கும் ஒரு நாள் பிடிக்கும் .. பார்த்துட்டே இரு..." கவிதா சொல்ல

  " பார்த்து டி அதுக்குள்ள உனக்கு 60 வயசு ஆகிட போகுது .. சரி வா நம்பலும் அவுங்களோட ஜாயின் பண்ணுவோம் இல்லாட்டியும் நம்மை விட்டுப் போயிட போறாங்க" என்று ரம்யா அவர்களை நோக்கி சென்றனர்

  அங்கு அஸ்வின்" டேய் கவின்... கவிதா உன்ன எப்படி சைட் அடிக்கிறா.. பாவம் டா அவள் ..ஓகே தான் சொல்வேன்.. ரொம்ப தான் சீன் போட்ற.. " என்றதும் கோபமாக

  கவின் அஸ்வியை எரித்து விடுவது போல் முறைத்து பார்த்து விட்டு அமைதியாக இருந்தான்.. ஆனால் அந்த பார்வையில் நீயும் புரிஞ்சுக்கலையே என்ற வருத்தமும் அப்பட்டமாய் தெரிந்தது

  இதை கண்டுக்கொண்ட அருள் அஸ்வினிடம்" நீ மூட்டிட்டு இருடா ..அவனுக்கு தான் விருப்பம் இல்லை என்று சொல்லிட்டான்.. அப்பறம் ஏன்டா அவனை படுத்துறிங்க..பாவம் அவன் என்றதும்" இப்போது அஸ்வியும் வருத்தம் கொள்ள

  "நம்ம கவின் பத்தி தான் நமக்கு தெரியுமேடா .. சும்மா கேட்டேன் டா..சாரி " என்று பேசிக் கொண்டிருந்த போதே பெண்கள் குழு இவர்களை நெருங்கியது

  அதிலும் கவிதா நேராக இவர்களிடம் வந்தவள்" ஹாய் அஸ்வி அருள்...ஹாய் கவின் என்னடா சோகமா இருக்க..."

  "மச்சான் இவள பார்த்து முறைக்கிறான்... அது கூட தெரியாத மாதிரி நடிக்கிறா பாரு டா .." என்று அருளிடம் அஸ்வி சொல்லிக் கொண்டிருந்தான்..

  இவளுக்கு எத்தனை தடவை சொன்னாலும் புரியாது போல.. என மனதில் நினைத்து கொண்டே

  "அதெல்லாம் ஒன்னும் இல்லை .. நான் நல்லா தான் இருக்கேன்.. வாங்க நம்ம ஆபிஸ் போய் ஹால்டிக்கெட் வாங்கலாம்" என கபில் பிரியாவையும் அழைத்து பேசிக் கொண்டே சென்று கொண்டிருந்தபோது ...

  அங்கு ஜுனியர் பொண்ணுங்க நின்னுட்டு இருந்தார்கள்... இவர்கள் வருவதை பார்த்துக் கொண்டிருந்த அப்பெண்களில் ஒருவள்" ஏய் .. செமயா இருக்கான் டி அவன்" என கைவினை சுட்டிக்காட்டி விட்டு

  "அன்னைக்கு கல்சரல்ஸ்ல பாடுனது இவுங்க தான்.. கெத்தா இருக்கான் " என ரசித்துக் கொண்டிருந்ததை
  கவிதா கேட்டுவிட்டாள்..

  " இவள்க வேற .. மூஞ்சியை பாரு.. இப்போவே சீனியர்ரை சைட் அடிக்குதுங்க " என்று திட்டியதை கேட்டு ப்ரியாவும் ரம்யாவும் இவளை கிண்டல் செய்துக் கொண்டிருந்தனர்

  ஆனால் ஆடவர்களில் அஸ்வின் அப்பெண்களை பார்த்து கொண்டே

  "மச்சான் ஜுனியர் பொண்ணுங்களை பாரேன் செமயா இருக்கிறார்கள். அதும் அந்த மஞ்சள் சுடிதார்.. கண்ணை பாரேன் .. அப்படியே" என் பேசிக் கொண்டிருப்பதை

  கவின் கேட்டுவிட்டு" டேய் அசிங்கமா இல்லை.. ஒழுங்கா வந்துருங்க.. எங்க போனாலும் இதையே பண்ணிட்டு " என அஸ்வியை வசைப்பாடிக் கொண்டிருந்தான்..

  "ஹா ஹா.. தேவையா டா அஸ்வி உனக்கு" என்றதும்

  "டேய் அருள் ... நம்ம நண்பன் ஏதோ பேசுனான்.. அதுக்கெல்லாம் கவலைப்பட முடியுமா..ரொம்ப நல்லவன் அவன்..அவனும் லவ் பண்ண மாட்டான்.. நம்மையும் பண்ண விட மாட்டான்.. " என்று அஸ்வி பேசியதை கேட்டு ...

  "உன்னை யாரும் திருத்த முடியாது.. வாடா" என் பேசிக் கொண்டே
  ஹால்டிக்கெட் வாங்கிக் கொண்டு அங்குள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு ரூம்க்கு சென்றனர்
  கவினக்கு அவன் அம்மாவிடம் இருந்து போன் வந்தது....

  அவங்களிடம் பேசியவன் தன் தங்கைகளிடமும் கண்டிப்பான அண்ணனாக படிப்பை பற்றி விசாரித்து சிறிது மிரட்டியவன் பேசி முடித்தபடி அறைக்குள் வந்தான்..

  தன் நண்பர்களிடம்" டேய்...வாங்கடா ...படிக்க லைப்ரரி போலாம்" என்றதும் அவர்களும் கிளம்பினர்... "

  மருத்துவப்படிப்புக்கான புத்தகங்கள் எல்லாம் ஆயிரத்தில் தாண்டுவதால் கவினால் வாங்க இயலாது..

  அதனால் அவன் லைப்ரரியிலோ இல்லை நண்பர்களிடம் புத்தகம் வாங்கியோ படிப்பான்..

  இவனுக்காக அவனோட நண்பர்களும் லைப்ரரி செல்வது வழக்கமான ஒன்றே...
  சாப்பிட்டுவிட்டு செல்லலாம் என்று நினைத்து கேண்டீன் சென்றனர்...

  அங்கு கார்த்திக் ( அவனோட பெஸ்ட் பிரண்ட முதல் வருடத்தில்) சாப்பிட்டு கொண்டு இருந்தான்..

  இவர்களை கண்டவுடன் ஒரு புன்சிரிப்புடன் சென்று விட்டான்..பேசுவதற்கு கூட அவன் விரும்பவில்லை என்பது அவன் சிரிப்பில் உணர முடிந்தது..

  இதை கண்டு இவர்கள் வருந்தினாலும் எதும் செய்ய இயலா நிலையில் இருந்தனர்.. எவ்வளவு அவனிடம் பேசினாலும் தோல்வியே மிஞ்சியது..

  "இவனும் நம்மோடு இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்.. இப்போ எப்படி கண்டுக்காம போறான் பாரு டா " என கவின் வருத்ததுடன் கூற

  "ஆமா டா அவன் அடிஸ்னல் பேட்ச்(additional batch)போனதும் தான் நமக்குள்ளே இடைவெளி வந்துட்டு... என்ன பண்றது எல்லாம் நம்ம நேரம்" என்று அவனை பற்றி பேசியபடியே லைப்ரரி சென்றனர்

  ( Mbbs யில் முதல் வருடத்திலோ கடைசி வருடத்திலோ அரியர் வைத்தால் அவர்களால் தொடர் இயலாது.. அதில் எப்போது தேர்ச்சி பெறுகிறார்களோ அப்போதே அடுத்த ஆண்டு செல்ல முடியும்.. தன் நண்பர்களுடனோ தன் சகமாணவர்களிடனோ தொடர இயலாமல் தனி வகுப்பாக மாறிவிடும் அதுவே additional batch என்பார்கள்)

  அதே நேரத்தில் பெண்கள் விடுதியில்...

  கவிதா "ஏய் ப்ரியா .. நான் உன்னிடம் ஒன்று பண்ணச் சொன்னேன்ல.. நீ இன்னும் பண்ணலைடி. ஒரு நட்புக்காக இதை கூட பண்ண மாட்டியா...இந்த கொடுமையை கேக்க மாட்டிங்களா " என சீரியஸாக புலம்ப

  ப்ரியா சிரித்துக் கொண்டே "லூசு.. அவன் தான் வேணாம்னு சொல்றான்... அப்பறம் ஏன் டி அவனையே சுத்திக்கிட்டு இருக்க... லவ் ரெண்டு பேரும் சேர்ந்து பண்றது டி.. அது போய் கட்டாயப்படுத்தி வர வைக்க கூடாது டி..அப்படி பண்ணாலும் அதில் சந்தோசம் இருக்காது கவி...

  உனக்கு என்ன டி இப்போ .. இவனை விட உன் மேல உயிரையே வைத்திருக்கிற நல்ல பையன் கிடைப்பான் ... வாழ்க்கையை அதே வழியிலே கொண்டு போனும் டி.. எது நடக்கனுமோ அது சரியான நேர்த்தில் நடக்கும்" என்றதும்

  கவி உடனே கோபமா ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்க இருந்து போய்விட்டாள்..

  இவர்கள் உரையாடலை பார்த்துக் கொண்டிருந்த ரம்யா" ஏன் டி அவளுக்கு தான் நாம் இப்படி பேசினால் பிடிக்கலையே..... அப்பறம் ஏன்டி நீயும் பேசி அவளையும் காயப்படுத்தி நீயும் கஷ்டப்படுற"

  "இல்லை டி ரம்ஸ் .. இப்போ நான் பேசுறது கஷ்டமாக இருக்கும் டி.. ஆனால் ஒரு வேலை அவள் லவ் சக்ஸஸ் ஆகலனா இன்னும் கஷடப்படுவா .. அந்த மன உளைச்சலுக்கு நம்ம சொல்லி புரிய வைக்கிறதே நல்லது டி.. அதான் அப்படி பேசிட்டேன்.. வா நம்ம லைப்ரரி போலாம்... இப்போ அவ மூட் எப்படி மாத்துறேன் மட்டும் பாரு" என்றவள்

  கவிதாவிடம் சென்று "சாரி டி.. நான் அப்படி பேசுனது எதற்காக " என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவளை தடுத்தவள்


  "பரவாயில்லை ப்ரியா .. நீங்க என்னோட நல்லதுக்கு தான் சொல்றிங்கனு எனக்கும் புரியுது .. ஆனால் என்னால் அவன் வேணாம் என்று என் மனசு இன்னும் ஏத்துக்க மாட்டுது டி"னு அழுகும் குரளில் பேசிக் கொண்டிருக்க இந்த சூழ்நிலையை மாற்ற விரும்பி

  "யேய் என்ன டி ...இங்கே ஒரே அழுகாச்சியா இருக்கு.. நமக்கு இது செட் ஆகாதே... ப்ரியா நம்ம லைப்ரரி போலாம் என்று சொன்னியே ... வா டி.. கவி நீயும் வா டி" என்றால்

  அதற்கு கவி '"இல்லை டி நான் வரல.. இப்போ படிக்கிற மூட்ல இல்லை" என்றதற்கு

  ரம்யா நக்கலாக"அப்படியா சரி கவி.... வா ப்ரியா நம்ம போலாம்.. கவின் கபில்லாம் வேற வெய்ட் பண்ணிட்டு இருப்பாங்க" என்றது தான் தாமதம் ...

  கவிதா மனதில் அய்யய்யோ அவசரப்பட்டு வரலனு சொல்லிட்டோமே.. பரவாயில்லை.. என் நினைத்தவள் "ஆமா ப்ரியா வா சீக்கிரம்.. லைப்ரரி போலாம்.. டைம் வேஸ்ட் பண்ணிக்கிட்டு.. எக்ஸாம் வருதுன்னு கொஞ்சம் கொஞ்சமாவது பயம் இருக்கா.. பொறுப்பே இல்லை டி " என சொன்னதை கேட்டு இருவரும் சிரிக்க

  "போதும் டி.. பக்கிங்களா.. வாங்க டி சீக்கிரம் " என் கவிதாவும் சிரிக்க

  "அடிப்பாவி.. எவ்ளோ நல்ல பொண்ணு மாதிரி பேசுறா பாரு ரம்ஸ்.. இவள மாதிரி லூசோடெல்லாம் குப்ப கொட்ட வேண்டிருக்கு... '" என்றவளை

  " ஓவரா பேசாத " என கவி சீண்ட "

  ஏய் உங்க இரண்டு பேரோட லவ்காக என்னையும் கொடுமைப்படுத்துறிங்களே டி.. நான் தான் பாவம்.. இந்த கடவுளுக்கு கருணையே இல்லையா " என ரம்யா புலம்புவதை கேட்டு

  "இல்லை போல .. இப்போ வாங்க போகலாம் என ப்ரியா தன் நண்பிகளை அழைத்துக் கொண்டு லைப்ரரியை அடைந்தனர்​
   
 3. Tamilvanitha

  Tamilvanitha Well-Known Member

  Joined:
  Dec 26, 2017
  Messages:
  463
  Likes Received:
  320
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Nice start .kavin ku ethuna flashback irukka ???
   
  Narmatha senthilkumar likes this.
 4. Rabina

  Rabina Well-Known Member

  Joined:
  Aug 14, 2018
  Messages:
  772
  Likes Received:
  485
  Trophy Points:
  63
  Gender:
  Female
  nice update.
   
  Narmatha senthilkumar likes this.
 5. jayalashmi

  jayalashmi Active Member

  Joined:
  Nov 12, 2017
  Messages:
  302
  Likes Received:
  245
  Trophy Points:
  43
  Gender:
  Female
  பதிவு நன்று.
   
  Narmatha senthilkumar likes this.
 6. Narmatha senthilkumar

  Narmatha senthilkumar Active Member

  Joined:
  Sep 30, 2018
  Messages:
  80
  Likes Received:
  104
  Trophy Points:
  33
  Gender:
  Female
  உயிரினில் கலந்த உறவானவள்
  அத்தியாயம் 2

  தோழிகளை கண்டதும் ஒரு சிரிப்பை மட்டும் காட்டிவிட்டு கவின் புத்தகத்தில் கவனம் செலுத்தலானான்..

  அதை எதும் அறியாது அவனை பார்த்து கொண்டிருந்த கவிதாவை ரம்யா

  "இவ ஒருத்தி.. அப்படியே நின்றுவா" என புலம்பிக்கொண்டே அவளை கூட்டிச்சென்று புத்தகத்தோடு வேறு ஒரு இடத்தில் அமர்ந்தனர்...

  ப்ரியா " ஹாய் கபில்" என்றவள் அவன் பக்கத்தில் அமர்ந்தவள் படிக்க ஆரம்பித்தனர்.. அனைவரும் தன் வேலையான படிப்பது போல் காட்டிக் கொண்டிருந்தனர்...

  தீடிரென ப்ரியாவை சுரண்டிய கபில் " படிக்கிறியா.." என்றதற்கு

  "இல்லை டா சாப்பிட்டுட்டு இருக்கேன் .. பார்த்தால் தெரியவில்லை" என முறைத்துக் கொண்டே சொன்னவுடன்

  "ஹி ஹி .. இல்லை.. எனக்கு படிக்க போர் அடிக்குது நம்ம ...ஏன் சேர்ந்து படிக்க கூடாது"... என்றுக் கேட்டுக்கொண்டே காதலோடு பார்த்தவனை புரிந்துக் கொண்ட
  ப்ரியா

  "அதலாம் ஒன்னும் வேணாம்.. நம்ம எப்படி படிப்போம் என்று தெரியும்... ஒழுங்கா படி கபி... இல்லையென்றால் நான் போய் ரம்யாவோட உட்கார்ந்துருவேன்.." என்றும் மிரட்டும் பாணியில் கூற

  அய்யய்யோ..என பதறிய கபில்". நான் சும்மா கேட்டேன் பேபி .. நம்ம படிக்கலாமா.. சும்மா பேசிட்டு" என திரும்பியவனை பார்த்து ப்ரியா சிரித்து கொண்டே படிக்க ஆரம்பித்தாள்...

  அதே நேரத்தில் ரம்யா எவ்வளவு சொல்லியும் கேளாமல் கவினை பார்த்துக் கொண்டிருந்த கவிதா.... ரம்யாவை அழைக்க கண்டுக்கொள்ளாமல் இருந்தவளை...

  அவள் படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை மூடியவளை.. பார்த்து ரம்யா முறைத்துக் கொண்டே

  " என்னடி வேணும் உனக்கு .. ஒழுங்கா சைட் அடிக்கிற வேலையை பார்க்காம " என அலுத்துக் கொண்டவளை

  " ஏய்.. இல்லை ரம்ஸ் .. யாராவது சொல்லிக்கொடுத்தா சுலபமா படிச்சுடலாம் என்றுச் சொல்லுவல்ல.. அதான் " என்றவளை சந்தேகத்தோடு "அதுக்கு" என்க

  " நம்ம ஏன் கவினோட போய் உட்கார்ந்து படிக்க கூடாது.. அவன் தான் செமயா சொல்லிக் கொடுப்பானே" என்றவளை

  "ஏன்டி .. இப்போ போய் நம்ம இரண்டு பேரும் கேட்டா அவன் அசிங்கமா ஒரு பார்வை பார்ப்பான்.. அது நீயும் என்னோட வந்தால் முடிவே பண்ணிடுவான்...அதுனால கொஞ்சம் உன் திருவாயை மூடிக்கிட்டு படிக்கும் வேலையை பார்க்கிறியா" என்று‌ கொஞ்சம் கோபமான தோரணையில் ரம்யா கூற

  கவிதாவும் இனி பேசினா அடிச்சுறுவாளோ என நினைத்துக் கொண்டு படிக்க ஆரம்பித்தாள்...

  " டேய்.... அருள் .. எப்படி டா இவுங்க இப்படி படிக்கிறாங்க.... எனக்கு தூக்கம் தான் வருது...இவங்க இன்னும் எவ்ளோ நேரம் படிக்க போறாங்களோ..

  அங்க பாரு கபில் இங்கேயே இருக்க சொன்னா கூட இருப்பான் போல டா.. ஜாலியா ரொமேன்ஸ் பண்ணிட்டே படிச்சுட்டு இருக்கான்" என்ற அஸ்விக்கு

  சிரித்துக் கொண்டே" ஆமா மச்சான்.. அவன் குடுத்து வச்சவன்.. நம்ம பேசாம யாரையாவது கரெக்ட் பண்ணிடலாமா" என யோசித்துக் கொண்டே கேட்க

  "மச்சான் நமக்கு அந்த டேலன்ட்லாம் இல்லை டா.. நம்ம கடைசி வரை ஒண்டிக்கட்ட தான்" என்று சொல்ல

  "அடப்பாவி.. என்னையும் இப்படிச் சொல்லிட்டியே... " என்று வசைப்பாடியப்படி வாதிட்டு கொண்டு இருந்தனர்

  ப்ரியா மீண்டும் மீண்டும் ஒரே வரியை படித்தவள் அது புரியாமல் போக

  " கபில்.. எனக்கு இதில் ஒன்னு புரியவில்லை சொல்லிக்கொடேன்" என்றவளை பார்த்து நக்கலாக...

  "கண்டிப்பா பேபிமா..என்ன புரியவில்லை.. பாடத்தில் இருப்பதை தவிர எதில் சந்தேகம் இருந்தாலும் தீர்த்து வைப்பது என் கடமை " என் காதலோடு அவளை நெருங்க அமர

  ப்ரியா ஷாக் ஆகியவள்" டேய் .. இது லைப்ரரி .. ஒழுங்கா வாலெல்லாம் சுத்திட்டு ஒழுங்கா இரு"

  அவன் அதற்கும் அசராமல் " அப்போ .. லைப்ரரி தான் பிரச்சனையா .. வேற எங்கையாவது போலாமா " என் கண்சிமிட்டி கேட்டவனின் அழகில்
  ஒரு நிமிடம் தன்னை மறந்தவள்.. பின் சுதாரித்தவளாய்

  "கபி.. எக்ஸாம் முடிச்சுட்டு பார்த்துக்கலாம் .. இப்போ ஒழுங்கா படி" என்று அவளும் கொஞ்சம் கிறங்கி போன குறலில் கூற

  இப்போது கபிலின் நிலை தான் மோசமானது..

  " அய்யோ .. இவள் சும்மா முறைத்தாலே நம்மால் படிக்க முடியாது.. இதில் இப்படி பேசுனா .. சும்மா இருக்க முடியாதே..உம்ம்ம்ம்.. எல்லாம் என் நேரம்" என் மனதில் நினைத்தவன்...

  "ப்ரியா எனக்கும் நிறைய டவுட்டா இருக்கு.. நாம் போய் கவினிடம் நம் சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளலாம" என் அவளையும் அழைத்துக் கொண்டு கவினோடு படிக்க ஆரம்பித்தனர்...

  பின்பு ஒவ்வொருவராய் அவர்களோடு இணைய கவின் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தான்..

  அவன் புரிந்துப் படிப்பதால் .. எல்லாருக்கும் புரியும் வகையில் தெளிவாகவும் பொறுமையாகவும் பாடத்தை விளக்குவான்.. அதனால் எப்பொழுதும் அவனோடு படிப்பதை விரும்புவார்கள்...

  படித்து விட்டு நேரம் ஆனதால் விடைபெற்று அவரவர் விடுதியை அடைந்தனர்

  மொபைல்லை பார்த்துக் கொண்டிருந்த கவினிடம் " மச்சான் எனக்கு ஒரு சந்தேகம்.. நீ யாராயாவது லவ் பண்றியா .. இல்லை இதுக்கு முன் பண்ணிருக்கியா... நீ எதையோ உன் மனசில் வைத்துக் கொண்டு மறைக்கிறாய் என்று எனக்கு தோனுது" என் கபில் சந்தேகத்தோடும் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் கேட்க

  அஸ்வி அருளும் கூட அவன் விடையை எதிர்பார்த்து கவினை நோக்க..

  ஆனால் அவனோ அதிர்ச்சியில் வாயடைத்து அமர்ந்திருந்தான்... பின் சுயநினைவை அடைந்து இப்போது சொல்ல வேண்டாம் என்ற எண்ணத்தோடு

  "அப்படில்லாம் எதும் இல்லை" என்ற அவர்களின் அடுத்த கேள்விக்கு முன் வெளியில் சென்று விட்டான்...

  அனைவருக்கும் அவன் இப்படி சென்றது அவர்கள் சந்தேகத்தை வழுப்பெற வைக்க...அதை பற்றி பேச ஆரம்பிக்கும் முன் கபில் மொபைல் ரிங்காக .

  "மச்சான் ப்ரியா தானே.. ஓடிடு" என் அஸ்வி கூற சிரித்து கொண்டே வெளியேறிய கபில்

  "ஹாய் டார்லிங்.. என்ன பேபி .. அதுக்குள்ள இந்த மாம்ஸ்ஸ மிஸ் பண்றியா டா" என ஆசையோடு கேட்க

  உண்மையாவே அவனுடன் பேச வேண்டும் என நினைத்துக் கால் பண்ணிய ப்ரியாவோ வெறுப்பேற்றும் எண்ணத்தோடு

  " சே சே.. அதெல்லாம் இல்லை ... நம்ம எக்ஸாம் முடிச்சுட்டு எல்லாரும் வெளியே போலாம் என்று ப்ளான் பண்ணோமே.. அதான் எல்லார்க்கும் ஓகே தானே... " என்றவளை

  ' அடிப்பாவி.. நடிக்காத .. இந்த விசயத்தை பற்றி நாளைக்கு கூட பேசிக்கலாம் .. இப்போ பேச வேண்டிய அவசியம் இல்லையே பேபி..என்னை உண்மையா மிஸ் பண்ணலயா .. சரி .. நான் கூட படத்துக்கு கூட்டிட்டு போலாம் என்று இருந்தேன்.. இப்போ நீ பேசுனத பார்த்தால் வேணாம் என்று தோணுகிறது.." என் கொஞ்சம் கோபமாக பேசுவது போல் கபில் பேச

  இப்போ ப்ரியாவோ அச்சச்சோ அவனை கஷ்டப்படுத்திடேனோ என் மனதில் நினைத்தவள்

  "கபி.. சாரி டா.. நான் உன்னிடம் பேச தான் கால் பண்ணேன்.. சும்மா விளையாடலாம் என்று தான்.." என் இழுத்தவள் எதிரில் சிரிப்பு சத்தம் கேட்க

  "பேபிமா.. என்னை போய் இப்படி நம்பிட்டியே .. சரி இருந்தாலும் உனக்கு தண்டனை உண்டு.. என்ன சொல்லலாம்" என் அவளிடமே கேட்க

  "ஒன்னும் வேணாம் .. நான் போனை வைக்கவா" எனறவளிடம் அவசரமாக

  " சரி நான் எதும் சொல்லல .. ஒழுங்கா பேசிட்டு போடி" என்ற கபிலுக்கு

  "உம்ம்ம்.. வெளியில் போற ப்ளான் எல்லாருக்கும் ஓகே தானே" என மீண்டும் கேட்க

  "ஓகே தான் ஆனால் கவின் தான் வரமாட்டேன் என்று சொல்லுவான் அதான் கடைசி நிமிடத்தில் இழுத்துட்டு போய்விடலாம் என்று அவனிடம் சொல்லவில்லை... அதோடு அவனுடைய பிறந்தநாளையும் சிறப்பாக கொண்டானும்.. அவனுக்கு பிடிச்ச மாதிரி"

  உடனை ப்ரியா " ஓகே டா.. எந்த இடம் என்று முடிவு பண்ணுங்க .. கவினுக்கும் பிடிச்ச மாதிரி" என்றவுடன்

  "அதெல்லாம் நாங்க பார்த்துக் கொள்கிறோம்.. இப்போ செமயா தூக்கம் வர மாதிரி மாமாக்கு நச்சுனு ஒரு இச்சு கொடுப் பார்ப்போம்" என்றவுடன்

  ப்ரியா வெட்கத்தில் " போடா ..என் செல்லமாக கூறினான் அது இன்னும் கபிலை இம்சிக்க

  "என்ன பேபிமா .. ப்ளீஸ்டா" என்ற கபிலை ஒருவாறு சமாதான படுத்தி இருவரும் போனை வைத்தனர்

  ப்ரியா கொஞ்சம் நேரம் கபிலை நினைத்து கொண்டிருந்தவள்...பின்பு எங்க இவள்க சத்தத்தையே காணோம்.. என தன் தோழிகளை திரும்பி பார்க்க

  அவர்கள் லேப்டாப்பில் எதையோ சீரியஸாக பார்த்துக் கொண்டிருந்தார்கள்

  என்ன இப்படி பார்க்குறாங்க இரண்டு பேரும் என அவர்களை நோக்கி நடந்துக் கொண்டே அவர்களை அழைக்க அதை அவர்கள் கண்டுக்கொண்டதாய் தெரியவில்லை...

  நான் கூப்பிடுவதை கூட கேளாமல் அப்படி என்ன பார்க்கிறார்கள் என யோசித்துக் கொண்டே அவர்களை நெருங்கி பார்க்க

  அவர்கள் அவ்வளவு தீவிரமாக கொரியன் சீரியல் பார்த்துக் கொண்டிருந்தனர்

  இதில் கோபமுற்ற ப்ரியா " அடிப்பாவிகளா என்னை மட்டும் விட்டுட்டு பார்கிறிங்களே .. எருமை மாடுங்களா" என் இவள் கத்திக் கொண்டிருக்க அப்போதும் அவர்கள் அசராமல் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்

  வில்லதனமாய் எது எதுவோ யோசித்தவள் எதும் கிடைக்காமல் போக மொக்கையான பழைய ஃப்ளான் ஒன்றையே செயல்ப்படுத்தினாள்..

  மெதுவாக ரம்யாவின் காதில் கத்த அவ அலறி அடித்து எழுந்தவள்

  " ஏய்.. ஏன்டி இப்படி கத்துற.. நாயே" என்று அவள் அலற

  " ஹி ஹி ரொம்ப நேரமா கூப்பிட்டு கொண்டு இருந்தேன் நீங்கள் கண்டுக்கவே இல்லையா அதான்" என ப்ரியா சொல்ல

  " அடி பரதேசி.. செம ஸீன்ல டிஸ்டர்ப் பண்ணிட்டியே டி நாயே... என புலம்பினாள் .. நம்ம இங்க பேசிட்டு இருக்கோம்.. அவ எப்படி கண்டுக்காம பார்த்ததுட்டு இருக்கா பாருடி..." என கவிதாவை காட்ட

  "ஹா ஹா.. இப்போ பாரு அவள் எப்படி நம்மை பார்க்க வைக்கிறேன்.. " என்றவள்

  "ஏய் கவி.. இந்தா டி.. கவின் உன்னிடம் பேசனுமாம் .. கொடுக்க சொல்லுறான்...என மொபைலை நீட்டியவளை" கவின் என்ற வார்த்தையை கேட்டவுடன் திரும்பி பார்த்தவள் பேச வேண்டும் என்றவுடன் வேகமாக வாங்கியவள்

  "ஹலோ என்ற சொன்னவுடன் அதற்கு விடை இல்லாமல் போக இவர்களின் விளையாட்டை உணர்ந்தவள் கோபமாக திரும்ப அவர்கள் சிரித்து கொண்டு இருப்பதை பார்த்தவள் இன்னும் எரிச்சல் அடைய

  அவர்களை விரட்டி விரட்டி கிடைப்பதையெல்லாம் வைத்து அடித்தவள்.. டயர்ட் ஆகி விட்டது..

  பின்பு அனைவரும் சமாதானமாகி வெளியில் போவதை பற்றி பேசியவர்கள்.. பின்பு தங்கள் வேலையான கொரியன் சீரியல் பார்ப்பதை தொடங்கினர்..


  பேசி முடித்து உள்ளே வந்த கபில் கவினை காணாமல் போக " டேய் எங்கடா கவினை காணோம் " என தன் நண்பர்களிடம் விசாரிக்க

  அதற்கு அஸ்வின்" மச்சான் நீ கேட்டத்தில் இருந்து அவன் ஏதோ யோசித்துக் கொண்டே வெளியே உட்கார்ந்து இருக்கான் .. .. நம்ம டெரர் பீஸ் குள்ள ஏதோ ரோமியோ ஜூலியட் ஸ்டோரி இருக்கும் போலயே டா..." என சொல்ல

  "ஹாஹா எனக்கும் அதே சந்தேகம் தான் டா.. பார்ப்போம் .. அவனே சொல்லுவான்" என்ற கபிலிடம்

  "எதுவா இருந்தாலும் அவன் சந்தோசமாக இருந்தா போதும் டா..." என்றான் அருள்..

  அனைவரும் அதை ஆமோதிப்பது போல் சிரித்து கொண்டனர்

  ஆனால் கவினோ"கபில் ஏன் தீடிரென அப்படி கேட்டான்.. எப்படியா இருந்தாலும் அவர்களிடம் கூடிய சீக்கிரம் சொல்லிடனும். கவிதா வேற ஏதோ நினைச்சுட்டு இருக்கா.. சொன்னாலும் புரிஞ்சுக்காம பேசுவாள்.. முதலில் அவளுக்கு சொல்லனும்..தேர்வு முடிந்தவுடன் இதை பற்றி பேசியே ஆக வேண்டும் " என்ற முடிவெடுத்தவன் அதனால் வரப் போகும் பிரச்சனைகள் பற்றி அறியவில்லை
   
 7. Narmatha senthilkumar

  Narmatha senthilkumar Active Member

  Joined:
  Sep 30, 2018
  Messages:
  80
  Likes Received:
  104
  Trophy Points:
  33
  Gender:
  Female
  Nandri sis.. irukalam ... Papom
   
 8. Narmatha senthilkumar

  Narmatha senthilkumar Active Member

  Joined:
  Sep 30, 2018
  Messages:
  80
  Likes Received:
  104
  Trophy Points:
  33
  Gender:
  Female
  Thank u
   
 9. Narmatha senthilkumar

  Narmatha senthilkumar Active Member

  Joined:
  Sep 30, 2018
  Messages:
  80
  Likes Received:
  104
  Trophy Points:
  33
  Gender:
  Female
  நன்றி
   
 10. kannamma 20

  kannamma 20 Well-Known Member

  Joined:
  May 14, 2017
  Messages:
  499
  Likes Received:
  373
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Nice start .kavin Vera yaraium love panrana ???
   

Share This Page