உயிரினில் கலந்த உறவானவள் / Uyirinil Kalantha Uravanaval by Narmadha senthilkumar

Discussion in 'Serial Stories' started by saravanakumari, Sep 30, 2018.

  1. Rabina

    Rabina Active Member

    Joined:
    Aug 14, 2018
    Messages:
    322
    Likes Received:
    190
    Trophy Points:
    43
    Gender:
    Female
    super updates.
     
    Narmatha senthilkumar likes this.
  2. Narmatha senthilkumar

    Narmatha senthilkumar Member

    Joined:
    Sep 30, 2018
    Messages:
    49
    Likes Received:
    61
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Thank u rabi
     
  3. Narmatha senthilkumar

    Narmatha senthilkumar Member

    Joined:
    Sep 30, 2018
    Messages:
    49
    Likes Received:
    61
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Thank u seekrama
     
  4. Narmatha senthilkumar

    Narmatha senthilkumar Member

    Joined:
    Sep 30, 2018
    Messages:
    49
    Likes Received:
    61
    Trophy Points:
    18
    Gender:
    Female
    உயிரினில் கலந்த உறவானவள்

    அத்தியாயம் 20

    பரிசளிப்பு விழா முடிந்து... கலை நிகழ்ச்சிகள் நடந்தது..

    அப்போது மாடர்ன்‌ ட்ரஸ்லில்.. பார்ப்பவரை திரும்பி பார்க்க வைக்கும் மேக்கப்பில் ... பணக்கார பெண் என்று பறைச்சாற்றும் தோற்றத்துடன்... வந்த பெண்ணை அந்த கல்லூரி முதல்வர் கவின்க்கு தன் மகள் என்றும்.. வெளிநாட்டில் படித்துவிட்டு இப்போது தான் நாடு திரும்பினாள் என்றும் அறிமுகம் செய்து வைத்தார்...

    அந்த பெண்ணும் கவினிடம்.." ஹாய் கவின்.. ஐ ஆம் ரேஷ்மி .. என்று கைக்குலுக்கியதோடு மட்டும் அல்லாமல்... யு ஆர் லுக்கிங் சோ ஹேன்ட்ஸம்" .. என்றதற்கு

    "தாங்க் யு" என்று சொல்லி அமர்ந்தவன் பக்கத்தில் அவளும் அமர்ந்து கொண்டாள்

    இதையெல்லாம் இளாவும் கயலும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தனர்...

    "யாருடி இளா இது... பார்க்கவே செமயா இருக்கா... கவினும் சிரிச்சு பேசுறாங்க.. உனக்கு போட்டிக்கு யாரோ வந்துட்டாங்க போல" என்ற தாரணியிடம்

    "ஏய்.. லூசு .. சும்மா இரு .. என்னோட மாமாவ பத்தி எனக்கு தெரியும் . அந்த மேனாமினிக்கி தான் அப்படி வலியுரா.. அப்போ கூட பேசாமா தான் இருக்குறான்.. பாவம் மாமா.." என்று உள்ளே பொறுமினாலும் வெளியே விட்டுக்கொடுக்காமல் பேச

    "ஹே .. தாரணி .. என்னடி .. இங்க இருந்து ஏதோ கருகுன ஸ்மெல் வருது" என சிரித்துக் கொண்டே சரண்யா கேட்டாள்..

    "ஹா ஹா.. அது இளாட்ட இருந்து தான் டி ..
    அவளோட கண்ணலாம் சிவப்பாகிட்டு.. இப்போ பாரு விஜயகாந்த் ஸ்டைல்ல போய் அந்த பொண்ண அடிக்க போறா"


    "சே சே.. இல்ல டி.. கவின் சார்ர தான் அடிப்பா"

    "அப்படியா.. பாவம் டி அண்ணா.. இப்போல இருந்து பழகிக்கட்டும்" என தோழிகளுக்குள் கிண்டல் செய்து கொண்டிருக்க

    ஏய் கயல் நீயுமா செம என சரண்யா ஹைஃபைய் போட்டுக்கொண்டனர்

    இதை பார்த்து இளா முறைத்துவிட்டு.. " அதெல்லாம் இல்லை.. நான் ஏன் கோபப்படனும் .. அவுங்க ஜஸ்ட் பேசிக்குறாங்க.. இதெல்லாம் இந்த இளாவை பொறாமை படவைக்காது.. சோ நீங்க கொஞ்சம் உங்க ஸட்டரை மூடிட்டு உங்க வேளையை பாருங்க" என்று நொடித்துக் கொள்ள

    ஆனால் அவர்கள் சிரித்து பேசிக் கொள்வதை பார்க்க பார்க்க ... இளா எரிமலையாய் பொங்கிக் கொண்டிருந்தாள்...

    இவனுக்கு அறிவே இல்லை .. அவ தான் பேசுறானா இவனும் இளிச்சுட்டு இருக்கான்.. பக்கி பய என மனதில் திட்டிக்கொண்டு இருந்தாள்...

    பின் ஒருவழியாய் விழா நிறைவடைந்தது... இளா.. ஓட்டமும் நடையுமாய் கவினிடம் பேசுவதற்கு சென்ற போது கூட அவர்களின் உரையாடல் தொடர்ந்தது...

    அதிலும் ரேஸ்மி அவனை தொட்டு பேசுவதும் அவன் கண்ணத்தை தட்டிவதுமாய் இருந்ததை பார்த்து ..

    இளா கோபத்தில் "குரங்கு ..‌எவ்ளோ கொழுப்பு இவனுக்கு .. முடிஞ்சு கூட என்னை பார்க்க வர வேண்டும் என்று தோன்றாமல் கடலை போட்டுக் கொண்டு இருக்கிறான்" என மனதில் அர்ச்சித்து கொண்டு இருந்தாள்...

    கவினோ .." அய்யோ .. இவ விட மாட்றாளே.. நான் என்னோட மதியை பார்க்க போலாம்னு பார்த்தா ..‌டேய் ரவி பக்கி .. எங்கடா போன.. காப்பாத்து டா"
    என‌ ரவியை தேடிக் கொண்டு இருந்தான்... ( அவன்தான் கயல் பின்னாடி போய்டானே.. நீ தான்பா லேட்)

    அப்போது இளா கோபமாய் பார்த்துக் கொண்டு இருப்பதை பார்த்து விட்டு..

    " அய்யய்யோ .. இவ வேற .. என்ன நடக்குதுனு தெரியாம இப்படி லுக் விட்ராளே ... என மனதில் நினைத்துக் கொண்டே..

    காப்பாத்து என கண்ணில் சைகை செய்தான்"

    அவன் கண்அசைவை புரிந்து கொண்டவள்.. "மாட்டேனே.. என பழிப்பு காட்டிக் கொண்டிருந்தாள்...( இவ்ளோ நேரம் பொறாமையில் பொங்கிட்டு இப்போ விளையாட்டிட்டு இருக்கா பக்கிபயப்புள்ள)

    "அடிப்பாவி... ப்ளீஸ்டி என கண்களால் கெஞ்சி கொஞ்சிக் கொண்டிருப்பதை பார்த்து‌...

    ."அய்யோ மாம்ஸ் .. பார்க்கவே பாவமா இருக்கியே.. இருந்தாலும் க்யூட் டா நீ.. இரு வரேன் .."

    "மேம் .. கொஞ்சம் மூவ் பண்ணுங்க ..ப்ளீஸ் .." என்ற இளாவிடம்
    ரேஸ்மி கொஞ்சம் கோவமாக


    " யார் நீ.. நாங்க பேசிட்டு இருக்கோம்ல .. உனக்கு மேனர்ஸ் இல்லை.. நீ பாட்டுக்கு நடுவுல வந்துட்டு"

    "ஏய்.. .. என்னோட ஆளுட்ட கடல போடுற உனக்கே மேனர்ஸ் இல்லை .. எனனிடம் கேக்குறியா நீ" என மனதில் நினைப்பதாய் நினைத்துக்கொண்டு வெளியில் சொல்லிவிட்டாள்...

    அவ்வளவு தான் .. அவள் பாட்டுக்கு வாய்க்கு வந்ததையெல்லாம் திட்டிக்கொண்டு இருக்குபோது.. இளா மன்னிப்பு கேட்டும் அவள் விடுவதாய் இல்லை ...

    கவின் .." ரேஷ்மி .. ப்ளீஸ் காம்டவுன்.. அவ தெரியாம பேசிட்டா.. அவளுக்கு பதிலா நான் உன்னிடம் சாரி கேக்குறேன்.. இத இப்படியே விட்று" என நிதானமாய் கூற

    இதை கேட்டவுடன் ஏதோ முடிவு எடுத்தவளாக.. "சரி.. நான்‌ இவள மன்னித்து விடுகிறேன்.. ஆனால் நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்கிறேனு சொல்லுங்க.. "

    இதை கேட்டு திடுக்கிட்டு இளா பார்த்தாள்.. ஆனால் கவின் இளாவை ஆறுதலாக கைப்பற்றி ..

    " இங்க பாருங்க ரேஷ்மி .. இவள தான் நான் மேரேஜ் பண்ணிக்க போறேன்.. இவ தான் என்னோட வாழ்க்கை .. சோ தேவையில்லாததை பேச வேணாம்னு நினைக்கிறேன்"

    இளாவிற்கு அவன் பேசியதை கேட்டு பூரிப்பாக இருந்தது... ஆனால் ரேஷ்மியின் மனதிலோ பொறாமை பெருகிக் கொண்டு‌ இருந்தது..

    எப்படியாவது இளாவை காயப்படுத்த வேண்டும் என்ற முயற்சியில்..

    " ஏன் கவின்.. இவள போய் மேரேஜ் பண்ணிக்க போறிங்க.. பார்க்கவே கேவலமா இருக்கா.. குண்டா கருப்பா... வீட்டில் முடிவு எடுத்துடாங்களோ ....
    ஏம்மா .. நீயாவது கொஞ்சம் யோசிக்க வேணாம்.. பாவம் .. நீ எப்படி அவருக்கு செட் ஆவனு..அவர்தான் வேற வழியில்லாமல் சொன்னாருனா .. உனக்கு எங்க போச்சு அறிவு"

    இதை கேட்ட இளாவின் மனதில் தாழ்வு மனப்பான்மை தலைதூக்கி.. ஒருவேளை அவ சொல்வது உண்மை தானோ என தோன்றியதால்.. அழுதுக்கொண்டே அவ்விடத்தை விட்டு ஓடினாள்...

    இதையெல்லாம் ஒரு சோடி கண்கள் சந்தோசத்தோடு பார்த்துக் கொண்டு இருந்தது...

    இன்னும் கொஞ்சம் நேரம் கவின் பேசவதை கேட்டிருந்தாள் பின்னால் வரப்போகும் பிரச்சனைகளை தவிர்த்திருக்கலாம்....

    கவின் அப்போதுதான் நிலைமை உணர்ந்து கோபமாக " ஸ்டாப் இட் ரேஷ்மி.. ஆர் யு மேட்.. எனக்கு யார் செட் ஆவங்கனு நான் தான் முடிவு எடுக்கனும்.. நீ சொல்ல தேவையில்லை.. நீ அழகுனு நினைச்சு பேசிட்டு இருக்கியா.. சத்தியமா இல்லை.. உன்னோட மனசுல இவ்ளோ அழுக்கு வச்சுருக்க.. அதும் இல்லாம நீ செயற்கையா உன்னை அழகாக்க ஏதோ ட்ரை பண்ணிருக்க.. ஆனால் அப்பவும் நீ மொக்கையா தான் இருக்க..சப்பி போன மூக்கு வச்சுட்டு .. நீ என்னோட இளாவை பத்தி பேச தகுதியே இல்லை .. அவ என்னோட தேவதை.. என்னோட மனச புரிஞ்சவ.. அவள் எதும் மேக்கப் போடாமையே உன்னோட லட்சணமா.. கருப்பா இருந்தாலும் கலையா இருக்கும் என்னோட இளவரசி... அவளோட கண்ணை பார்த்துட்டே இருக்கலாம் .. அப்படி ஒரு அழகு.. உன்னோட கண் மை போட்டு ஏதோ ஏதோ கலர் போட்டு பயங்கரமா இருக்கு.. உன்னிடம் பேசி டைம் வேஸ்ட் பண்ண விரும்பல‌‌.. முதலில் ஒருத்தவங்களோட அழகு என்பது.. மனச பார்த்து தான் முடிவாகும்.. என்னோட இளா எனக்கு மட்டும் அழகா தெரிஞ்சா போதும்.. சோ இப்போ உனக்கு புரிஞ்சு இருக்கும் என்று நினைக்கிறேன்..
    அவள் எனக்கு எவ்வளவு முக்கியம் என்று.. பாய்.. என்னோட மேரேஜ்க்கு கூப்பிடுறேன் மறக்காம வந்துடு.." என கோபமாய் அதே நேரத்தில் அழுத்தமாய் பேசிவிட்டு இளாவை தேடி சென்றான்..


    அவனோடு ரவியும் சேர்ந்துக் கொண்டான்..

    இளா கோபமாக சென்றதால் யார் பின்னால் வருகிறார்கள் என்பதை கவனியாமல் கால் போன போக்கில் சென்றுக் கொண்டிருந்தாள்...

    கொஞ்சம் தூரம் சென்ற பிறகு தான்..விழா முடிந்து எல்லாரும் திரும்பி‌ சென்றதால் .. அந்த இடமே ஆள் நடமாட்டமற்று வெறுச்சோடி இருந்தது...

    "அய்யய்யோ..நம்ம பாட்டுக்கு தனியா வந்துட்டோமே.. கொஞ்சம் நேரம் வெய்ட் பண்ணிருக்கலாமோ .. "என யோசித்தவள்

    தன்னை தொடர்ந்து எதோ காலடி சத்தம் கேட்க
    பயத்தோடே திரும்பி பார்த்தவள் பின்னால் வரும் உருவத்தை பார்த்து பயத்தில் செய்வதறியாது திகைத்து நின்றாள்"
     
    kani _mozhi and Kamala PM like this.
  5. Narmatha senthilkumar

    Narmatha senthilkumar Member

    Joined:
    Sep 30, 2018
    Messages:
    49
    Likes Received:
    61
    Trophy Points:
    18
    Gender:
    Female
    உறவினில் கலந்த உறவானவள்

    அத்தியாயம் 21

    இளா தன் பின்னால் வந்தவனை பார்த்து அதிர்ச்சியாய் நின்றாள்..

    "அய்யய்யோ இவன் எங்க வரான்.. பயமா இருக்கே .. தனியா வேற மாட்டிகிட்டோமே.. சரி .. பேசி சமாளிப்போம்.. பயத்த மட்டும் நம்ம முகத்தில் காட்டக்கூடாது இளா " தனக்குத்தானே ஆறுதல் படுத்திக் கொண்டு இருந்த போதே அவன் அவளை நெருங்கி விட்டான்...

    "ஹாய் .. இளா பேபி" என்றவனை

    என்ன இவன் ஒரு மாதிரி பேசுறான்.. எப்பவும் அவனிடம் இருக்கும் பயம் காணோமே என்ற யோசித்துக் கொண்டே.." இங்க பாரு .. என்ன இப்படி கூப்பிடாத.. அந்த உரிமை உனக்கு இல்லை.. என்னோட " என சொல்லிக் கொண்டு இருக்கும் போது..

    "பேபி..இரு.. நானே .. நீ சொல்ல வர டையலாக்க சொல்றேன்... " என்னோட மாமாக்கு மட்டும் தான் அந்த உரிமை இருக்கு.. அவுங்களுக்கு மட்டும் உன்னை பத்தி தெரிஞ்சா அவ்வளவுதான்...அதுனால என் பின்னாடி சுத்தாம ஒழுங்கா இரு" இதுதானே சொல்ல வந்த இளா.. என நக்கலாக சிரித்துக் கொண்டே கேட்டான்...

    இளாவிற்கு அவனுடைய நக்கலான பேச்சால் பயம் அதிகரித்துக் கொண்டே இருந்தது...

    " டேய் லூசு வினோத் ... ஆமா இந்த டையலாக் தான் சொல்ல வந்தேன்... இப்ப எதுக்கு என் பின்னாடி வந்த.. " முகத்தை அருவருப்பாய் வைத்துக் கொண்டு கேட்டதற்கு...

    ( வினோத் பற்றிய அறிமுகம்.. இவன் இளாவின் ஊரையே சேர்ந்தவன் .. தூரத்து உறவில் மாமா முறை.. மொத்த அயோக்கியத்தனத்தின்‌ உருவமானவன்... இவன் இளாவிடம்‌ பேசும் போது அவள் கண்டுக் கொள்ளாமல் சென்றதால் அவனின் நண்பர்களின் தூண்டுதலால் அவளை எப்படியாவது கல்யாணம் செய்து கொள்ள வேண்டும்‌ என நினைத்து சுற்றி கொண்டிருப்பவன் .. இத்தனை தினமும் அவள்‌ திட்டிவிடுவாள்‌ என பயந்தே நெருங்க யோசிப்பான்.. இன்றோ கவின் தான் அவளுடைய ஆசை காதலன் என்பதும் அவனிடம் சண்டையிட்டு வந்ததையும் பார்த்தவன் தனக்கு இதை சந்தர்ப்பமாய் மாற்றிக் கொள்ளலாம் என்ற நப்பாசையில் பின்தொடர்ந்து வந்திருக்கிறான்)

    "ஹா ஹா.. ரொம்ப துள்ளாத .. இங்க நீயும் நானும் மட்டும் தான் இருக்கோம்.. உன்னை என்ன பண்ணுனாலும் யாரும் கேட்க மாட்டாங்க .. அதுனால ஒழுங்கா சமத்தா நான் சொல்றத கேட்டு நடந்துக்கோ.. இல்லாட்டி அவ்ளோதான்.. " என நக்கலாக உரைக்க
    உள்ளுக்குள் பயந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல்


    "என்னடா பண்ணுவ மங்கூஸ் மட்டையா.. நகரு அந்த பக்கம்.. லூசு தனமா பேசிட்டு" என்று அவனை தள்ளிவிட்டு வேகமாக நடந்து சென்றவளை ...

    கோபத்தோடு இழுத்ததில் அவள் கீழே விழுந்தாள்...

    அவன் சந்தோசத்தோடு.. "இப்போ என்னடி பண்ணுவ.. இப்போ நான் பண்ண போற காரியத்தில் என்னை தவிர வேற எவனையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது"
    என வக்ரமான சிரிப்போடு தன்னிடம் நெருங்கியவனை
    கண்ட இளா பயத்தில் அவனிடம் இருந்து தப்பிக்கும் வழியின்றி தன் வாழ்க்கையை நினைத்தவள் மனதில் பல்வேறு விதமான எண்ணங்கள் வந்தது...


    " டேய்.. வினோத் .. வேணாம்.. என்னை எதும் பண்ணிடாத .. ப்ளீஸ்" என அவள் கெஞ்ச

    " ஹா ஹா... இப்போ நீ கத்துறது வேஸ்ட் பேபி.. இப்போ நீ‌ சமந்தா இருந்தா என் வேலையை முடிச்சுட்டு போய்டே இருப்பேன்" என அசிங்கமாய் பேசியவன்

    அவன் கிட்டே நெருங்கி கொண்டிருந்தான் ..

    அப்போது .. " பயப்படுவதால் எதும் செய்ய இயலாது.. பயம் நம்மை கோழையாக்கும் என்றுணர்ந்த இளா

    "தன்னால் தான் இப்போது நம்மை காத்துக் கொள்ள முடியும் .. வேகமாய் எதாவது செய்தாக வேண்டும் என்று தீடிரென்று மூளையில் உதித்த யோசனையை செயல் படுத்த ஆரம்பித்தாள்..
    அவன் கிட்டே அவளை நெருங்குவதற்கு ..


    அவனை சரமாரியாக தன் கால்களால் உதைக்க ஆரம்பித்தாள்... இவள்‌ கீழே படுத்து நிலையில் இருந்தது அதற்கு ஏதுவாக

    இவள் தாக்குதலை எதிர்பார்க்காத வினோத் தடுமாறி சமாளிப்பதற்குள் அவனுக்கு படக்கூடாத இடத்தில் அவளுடைய உதை பட்டதில் வலியில் திணர அதை பார்த்தவள்‌ இன்னும் உதைக்க வலியில் கத்தியப்படியே கீழே விழுந்தான் ( சாவுடா.. இப்படி பண்றவன்கெல்லாம் இது மாதிரி தான் எதாவது நடக்கனும்)

    அதற்குள் கவினும் ரவியும் இந்த இடத்திற்கு வந்தனர்... என்ன நடக்கிறது என்று புரியாமல் ஒரு நிமிடம் தவித்தனர்.. பின்னர் கவின் ஏதோ ஊகித்து.. விரைவாக இளாவிடம் சென்றான்...

    இளாவும் கவினை பார்த்தவுடன் எழுந்து கட்டி அணைத்துக் கொண்டு அழ ஆரம்பித்துவிட்டாள்..

    கவினும் அவளுடைய நிலை அறிந்து ஆறுதலாய் அணைத்துக் கொண்டான் .. பயத்தில் அவனோடு ஒன்றி போனாள்

    அப்போது ரவியிடம் கண் காட்டி அந்த வினோத்தை கூட்டிச்செல்லுமாறு சொன்னவுடன்.. அவனும் அவர்களுக்கு தனிமை கொடுக்க விரும்பி.. வேற எதுவும் கேட்காமல் .. வினோத்தை இழுத்துக் கொண்டு சென்று விட்டான்...

    இளா அழுதுகொண்டே இருந்தாள் .. தன்னவளை இந்த நிலையில் பார்க்க கவினின் கண்களும் கலங்கியது...

    "மதிம்மா.. போதும் டா .. அழாத டா ... ஒன்னும் இல்லை..நான் தான் வந்துட்டேன்ல.. உனக்கு ஒன்னும் ஆகாது டா.. " என கரக்கரத்த குரலில் ஆறுதல் படுத்திக் கொண்டு இருந்தான்..

    "இல்ல .. அவன்... என்ன.. எனக்கு.. "என தேம்பி தேம்பி அழுதுக்கொண்டே பேசுவதை கேட்டு ..

    அவளை தன்னிடம் இருந்து விலக்கி.. அவனின்‌ ஒரு கையால் அவள் இடையை பற்றி தன்னுடன் நெருக்கமாய் அணைத்துக் கொண்டு... அவளுடைய தாடையை நிமிர்த்தி ...

    "இங்க பாரு மதிமா .. நீ எதையும் பற்றி சொல்ல வேணாம்.. முதலில் அழுகையை நிறுத்து மா...ப்ளீஸ்" என அவனின் நெற்றியில் ஆசையோடு ஆறுதலாய் இதழ் பதித்தான்...

    அப்போது தான் அவனின் முதல் ஸ்பரிசத்தை தன் இருக்கும் நிலையை உணர்ந்து .. தீடிரென்று தோன்றிய வெட்கத்தால் அவனை விலக்கிவிட்டு சிவந்து போன முகத்தோடு ... அவனை காண முடியாமல் திரும்பி நின்று கொண்டாள்...

    கவின் என்ன இவ இப்படி நிக்கிறா.. என யோசித்த போது தான் உதித்தது.. அய்யய்யோ நான் பண்ணதுக்கு கோவப்பட்டு நிக்கிறாளோ என நினைத்து அவள் முகத்தை பார்த்தவுடன் .. ஓ மேடம் வெட்கப்பட்டு நிக்கிறிங்களா .. இருடா செல்லக்குட்டி வரேன்.. செம க்யூட் டி பேபி மா.. என மனதில் நினைத்துக் கொண்டே..

    "என்ன ஆச்சு பேபி மா.. ஏன் இப்படி நிக்கிற" .. என்றதற்கும் அவள் முகம் நிமிராமல் நின்றதால் .‌

    "இப்போ நீ என்னை பார்க்கல .. அப்பறம் என் கையும் உதடும் பண்றதுக்கு நான் பொறுப்பில்ல பா.." என்றவுடன்... இளா நிமிர்ந்து பார்த்தாள்...

    "டேய்.. மாமா .. ஏதோ மார்க்கமா சிரிக்கிறியே.. பாவம் டா நான் .. எவ்வளவு கன்ட்ரோல் பண்றது.. "என மைன்ட் வாய்ஸ் என்று நினைத்து சத்தமாய் சொல்லி விட்டாள்..

    "ஏன் பேபி கன்ட்ரோல் பண்ற .. " என அவன் கண்ணை சிமிட்டி கேட்டவுடன் தான் உளரிவிட்டதை உணர்ந்து..

    வெட்கத்தோடு அவன் மார்பிலேயே தஞ்சம் புகுந்தாள்

    கவினும் தன்னவளின் ஸ்பரிசத்தில் மெய்மறந்து நிற்க....

    முதலில் சுதாரித்த இளா
    அவள் வெட்கத்தை மறைக்க எண்ணி" எருமை ... உன்னால தான் இவ்வளோ ப்ராப்ளமும்" என்றவள் அவனை முறைக்க


    "ஏன்டி .. நான் என்ன பண்ணேன்..‌" என அவளை தன்னோடு அணைத்துக் கொள்ள அவனை விலகியவள்

    ஒரு பென்ஜில் அமர வைத்து தானும் அருகில் அமர்ந்து கொண்டு.. ஒரு கையால் அவன் இரு கைகளையும் சேர்த்து பற்றிக் கொண்டாள்...

    " எவ்வளவு கொழுப்பு இருந்தா .. அவளிடம் கடலை போடுவா.. அவள் தான் இளிக்குறானா நீயும் சிரித்துக் கொண்டு இருக்க.. உம்ம்ம்.. பண்ணுவியா .. " என அவன் கண்ணத்தில் மெதுவாய் ஒரு அடி அடித்தாள்..

    "ஏய் .. அடிக்காத டி.. உன் மாமா பாவம் தானே.."

    "உம்ம்ம்.. நீயா பாவம்.. அவ அப்படி பேசுறாளே.. அவள அறையாமா கொஞ்சிட்டு இருக்க .. இனி பண்ணுவியா இப்படி.. என அடுத்த அடி அடித்தாள்"
    அவளின் செல்ல அடியை சுகமாய் தாங்கியவன் ஒரு கட்டத்தில் அடியின் வேகம் கூட

    "ஏய் .. குரங்கு .. விடு டி... "

    "முடியாது ".. என அடுத்து அடிக்க சென்றவளின் கண்ணத்தில் இதழ் பதித்தான்..
    அவ்வளவு தான் .. அதில் அதிர்ச்சியாகி கை தளர்த்தியவளிடம் இருந்து தப்பித்து .. ஓடியவனை .. அதிர்ச்சியில் இருந்து சுயநினைவு பெற்று இளா.. "டேய்.. கேடி.. நில்லு டா.". என விரட்டிக் கொண்டு‌ சென்றாள்
     
    kani _mozhi, jayalashmi and Kamala PM like this.
  6. jayalashmi

    jayalashmi Active Member

    Joined:
    Nov 12, 2017
    Messages:
    260
    Likes Received:
    212
    Trophy Points:
    43
    Gender:
    Female
    நல்ல பதிவுகள்....
     
  7. Rabina

    Rabina Active Member

    Joined:
    Aug 14, 2018
    Messages:
    322
    Likes Received:
    190
    Trophy Points:
    43
    Gender:
    Female
    nice updates
     
  8. Narmatha senthilkumar

    Narmatha senthilkumar Member

    Joined:
    Sep 30, 2018
    Messages:
    49
    Likes Received:
    61
    Trophy Points:
    18
    Gender:
    Female
    உயிரினில் கலந்த உறவானவள்

    அத்தியாயம் 22

    ரவி .. வினோத்தை தனியாக அழைத்து சென்று என்ன நடந்தது என்று விசாரித்தான்.. ஆனால் அவன் வாயை திறப்பதாய் இல்லை..

    பின்பு பல்வேறு மிரட்டலுக்கு பிறகு பயந்து.. நடந்ததை விவரித்தான்...

    அதை கேட்டு ரவியால் பொறுக்க முடியாமல் கவினிடம் சொன்னான்..

    இருவரும் தங்களால் முடிந்த அளவு அடிபின்னி விட்டனர் .. கவின் நிறுத்தாமல் கொலைவெறியோடு அடித்துக் கொண்டிருக்க ரவி ஒருவாறு அவனை தடுத்தான்...

    கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்று நினைத்த அவர்கள் இளா கொடுத்த உதையிலே அவன் இனி எந்த பெண்களையும் ஏறெடுத்துப் பார்க்க மாட்டான் என்பதை உணர்ந்து அவனை விடுவித்தனர்

    அவனை போலீஸிடம் ஒப்படைக்குமாறு கவின் கூறியதிற்கு.. இளா பெயர் வெளியே வந்தால் .. அவள் அப்பாவிற்கு தெரிய வாய்ப்பு இருப்பதால்..

    அவனை இனி இளாவின்‌ பக்கமே தலை வைக்க கூடாது என்ற எச்சிரிக்கையோட.. அவனை அனுப்பினர்..

    ஆனால் அவனின் மனதில் இளாவின் மீதான வன்மம் வளர்ந்துக் கொண்டு இருந்தது...

    இதை எதும் அறியாத இளா கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு வீட்டிற்கு வந்தாள்...

    அவள் எவ்வளவு சகஜமாக இருக்க முயற்சி செய்தாலும் .. சில நேரங்களில் அந்த சம்பவம் அவளின் மனதில் வந்து வருத்திக் கொண்டு இருந்தது..

    அப்போதெல்லாம் தன் வீட்டிற்கு தெரியாமல் அழுக ஆரம்பித்து விடுவாள்...

    தன்னவளின் மனதை உணர்ந்தவன் போல அந்த நேரத்தில் கவின் கால் செய்து ... இளாவிற்கு ஆறுதல் கூறி அவளுடன் சண்டையிட்டு( ஜாலியா தான்) அவளை சகஜமாக்குவான்...

    இளா தன் அறையை சுத்தம் செய்ய போவதாக கூறி ஆதவ்விடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தாள்...

    "ஏய்.. ஏன்டி .. இப்படி கொடுமைப்படுத்துற..நான்லாம் இந்த ரூம்ம விட்டு போக முடியாது .. போடி"

    "டேய்.. குரங்கு.. வெளியே போடா.. எப்படி‌தான் இந்த அழுக்கு ரூம்ல இருக்கியோ .. கருமம்..நான் இப்போ சுத்தம் பண்ண போறேன் .. நகரு.. "

    "முடியாது.. நான் படிக்கனும் .. தொந்தரவு பண்ணாத இளா.. "

    "டேய்.. நீ படிக்குற லட்சணம்லாம் எனக்கு தெரியும் .. ஒழுங்கா ஓடிடு"
    இவர்கள் இவ்வாறு சண்டை போட்டுக் கொண்டிருந்த போதே அவள் அம்மா கோபமாக


    "என்ன பிரச்சனை .. இப்போ எதுக்கு கத்துறிங்க.. ஏழு கழுதை வயசாச்சு .. இன்னும் சின்ன புள்ள மாதிரி சண்ட போட்டுகிட்டு"

    "அம்மா .. நான் படிச்சுட்டு இருக்கேன்.. இவ தான் மா டிஸ்டர்ப் பண்றா... "

    "பொய் சொல்றான் மா.. இவன் மொபைல்ல கேம் தான் விளையாட்டிட்டு இருந்தான்.. நான்‌ ரூம்ம சுத்தம் பண்ண‌ போறேன்‌ அவன வெளியே போக சொல்லுங்க மா"

    "இது ஒரு பிரச்சினை .. இதுக்கு சண்டை போட்டுட்டு இருக்குறிங்க...ஆதவ் உன் ரூம்க்கு போய் படி போ" என்றவுடன் இளா பழிப்புக் காட்டினாள்.. ஆதவ்வோ திட்டிக்கொண்டே சென்றான்...

    அப்பறம் " இளா நீயைல்லாம் எதும் பண்ண வேணாம்.. உனக்கு டஸ்ட் ஒத்துக்காதுல.. நான் பண்றேன் ... "

    "அம்மா.. அதெல்லாம் வேணாம்.. நானே பண்ணிக்கிறேன்.. நீயும் எவ்வளவு வேலை தான் செய்வ மா" என்று இளா சொன்னதை கேட்டு அவள் அம்மா சந்தேகப் பார்வை பார்த்துவிட்டு

    "சும்மா வேலை சொன்னா செய்யமாட்டா .. இப்போ என்னனா நீயா செய்யுறனு சொல்லு.. சரி ஏதோ பண்ணு..." என்று சென்றுவிட்டார்..

    "எப்பா.. இதுங்க எவ்ளோ படுத்துதுங்க .. எதாவது செஞ்சா என்னோட மைன்ட் மாறும் என்று பார்த்தா.. விடமாட்றாங்களே " என புலம்பிக்கொண்டே சுத்தம் செய்துக் கொண்டு இருந்தபோது அவளும் கவினும் சேர்ந்து இருக்கும் சின்ன வயது போட்டோஸ் கிடைத்தது...

    ஐய்.. செம கியூட்டா இருக்கியே மாம்ஸ் நீ.. என கொஞ்சிக்கொண்டு பார்த்துக்கொண்டே சுத்தம் செய்து முடித்தாள்...

    மறுநாள் காலையிலே அவளுக்கு இருமலுடன் சேர்ந்து மூச்சிறைக்க ஆரம்பித்தது..

    எழமுடியாமல் வெளிரிய முகத்தோடு வந்தவளை பார்த்து அவள் பெற்றவர்கள் பயந்து விட்டனர்...

    "இளா.. நான் தான் அப்போவே சொன்னேன்ல.. டஸ்ட் அலர்ஜி வந்துரும் .. க்ளீன் பண்ணாதுனு.. ஏன்டி.. இப்படி படுத்துற .. இப்போ எப்படி கஷ்டப்படுற.. " என அவள் அம்மா திட்டிக் கொண்டிருந்தபோதே

    அவள் அப்பா.." என்னமா .. அவளே உடம்பு சுகமில்லாம இருக்கா .. இப்போ போய் திட்டிக் கிட்டு.. வாமா .. உடனே கவின் தம்பியிடம் கூட்டிட்டு போலாம்"

    அதற்குள் அவளுக்கு .. இன்னும் அதிகமாக மூச்சிரைக்க ஆரம்பித்துவிட்டது.. உடனே கவினிடம் சொல்லிவிட்டு ஹாஸ்பிடல் கூட்டிச் சென்றனர்...

    ( இளாவிற்கு சின்னவயதில் இருந்தே டஸ்ட் அலர்ஜியினால் ஏற்படும் ஆஸ்துமா பிரச்சனை உண்டு.. மூச்சிரைக்க ஆரம்பித்துவிடும்.. நடுவில் கொஞ்சம் குறைந்து இருந்தது.. ஆனால் இப்போது திரும்பும் வந்துவிட்டது.. இது உயிருக்கு ஆபத்து இல்லாத நோய் தான் என்றாலும் ஒவ்வொரு முறை வரும் போதும் உயிர் போய் விடும் அளவுக்கு பயம் இருக்கும்.. இதற்கு நிறைய ஆங்கில மருத்துவ முறைகள் இருந்தாலும் மூச்சுப்பயிற்சியுடன் சேர்ந்த உடற்பயிற்சியும் சித்த மருத்துவமும் இந்த நோயின் தாக்கத்திலிருந்து தப்பிக்க சிறந்த வழியாக உள்ளது )

    கவினும் தன்னவளின் நிலை அறிந்து படப்படப்போடு காத்திருந்தான்..
    அவளை கண்டவுடன் ..


    தான் ஒரு மருத்துவர் என்பதையும் மறந்து கண்கலங்கி நின்றவனை.. இளா...

    "டேய்.. எதாவது ட்ரீட்மெண்ட் பண்ணு டா.. நான் அழகா இருக்கேன்னு தெரியும்.. அதுக்குன்னு எப்ப பார்த்தாலும் சைட் அடிச்சுட்டு" என்றவுடன் அவனும் சிரித்துக்கொண்டே கொஞ்சம் நார்மல் ஆகி

    அவளுக்கு சுவாசத்தின் வழியே புகைமருந்து வைத்தான்.. அவளுக்கு கொஞ்சம் சரி ஆகியது...

    பின்பு ஊசி போடுவதற்கு எடுத்து வந்ததை பார்த்த அவள் அப்பா வெளியே சென்று விட்டார்.. அவள்‌ அம்மா .. அய்யய்யோ இவள் வேற போட்டுக்க கத்தி ஊரையே கூப்பிடுவாளே என யோசித்து கொண்டிருந்த போதே...

    இளா.." டேய் .. எனக்கு ஊசிலாம் வேண்டாம்.. ப்ளீஸ் கவின்.. அது வலிக்கும் .. டேப்லட் மட்டும் கொடு.. எனக்கு தான் இப்போ சரிஆகிட்டே." என பாவமாக முஞ்சிய வைத்துக் கொண்டு கேட்டவளை பார்த்து
    கவின்க்கு சிரிப்பு தான் வந்தது..


    " இங்க பாரு .. ஊசி போட்டு தான் ஆகனும்.. அப்போ தான் சரி ஆகும்..அதுனால ஒழுங்கா சமத்தா இருந்தா வலிக்காமல் போடுவேன் .. இல்லாட்டி வலிக்கும்.."

    இளா அதற்கு..அய்யய்யோ .. இவன் விட மாட்டான் போலயே என மனதில் நினைத்துக் கொண்டே... அவனுடைய ஒரு கையை பிடித்துக் கொண்டு..

    " மாம்ஸ்.. ப்ளீஸ்டா.. வேணாம் டா .. இது ரொம்ப வலிக்கும்... நீ இப்போ போடாம விட்டா உனக்கு ஒரு‌ உம்மா தரேன் .. ஓகே வா" என கொஞ்சலாய் கேட்டதற்கு

    கவின் .. இப்படிலாம் கேட்டா நான் அவ்ளோதான் டி என தனக்குள் நினைத்துக் கொண்டே

    "குட்டச்சி .. நீ இப்படிலாம் பேசுனா விட்றுவானே... இது உனக்கு தான் நல்லது.. இல்லாட்டி நரம்புல ஊசி போட வரும்.. ப்ளீஸ்டி வம்பு‌ பண்ணாமல் போட்டுக்க" என சொல்லிக் கொண்டு இருந்தப் போதே ஊசி வைத்துக் கொண்டு இருந்த கவினின் கையை கடித்து விட்டாள்..

    "ஆஆஆ.. அம்மா.. எருமை ஏண்டி கடித்த.. இனிமே உன்னிடலாம் பாசமா பேசுனா சரிப்பட்டு வரமாட்ட.. இரு"
    என சொல்லிவிட்டு


    இளாவை அவள் அப்பாவையும் அம்மாவையும் அவள் ஆடாமல் பிடித்துக்க சொல்லி ஒரு வழியாய் ஊசி போட்டு விட்டான்..
    இளா அழுதுக்கொண்டே.."


    டேய்.. குரங்கு.. வலிக்குது.. ஏன்டா போட்டா.. என்னிடம் இனி பேசிறாத.. " என கத்தியதை கேட்டு அவள் அப்பா..

    "இளா மா.. என்னடா பழக்கம்.. மரியாதை இல்லாமல் பேசிக்கிட்டு... " என்று திட்டியதை அவள் இன்னும் அழுக ஆரம்பித்தாள்..‌

    கவினால் அவள் அழுவதை பார்க்க முடியாமல் .. மாமா .. விடுங்க .. அத்தை நீங்க இரண்டு பேரும் வெளியே இருங்க .. கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுக்கட்டும் .. நான் பார்த்துக்குறேன் என்றவுடன்‌ அவர்கள் சென்றனர்..

    பின்பு கவின் இளாவின் அருகில் அமர்ந்து... அவள் கையை பிடித்தவுடன் அவள் விடுவித்து கொள்ள முயற்சி செய்து தோற்றுப் போனாள்..

    "மதிமா.. இங்க பாரு "

    "மாட்டேன் .. போடா .. "
    ஓ.. பார்க்கமாட்டியா.. என சொல்லிவிட்டு அவன் மீசையால் ஒரு குறுகுறுப்பு மூட்டினான்...


    அதில் ஏதோ உணர்ந்தவள்... "முகி.. பண்ணாத .. எனக்கு ஏதோ பண்ணுது.. என அழகாக வெட்கப்பட்டு கொண்டே சொன்னதை பார்த்து ...

    "ஏய்.. பொண்டாட்டி.. நீ வெட்கப்படும் போது செம க்யூட்டா இருக்கடி.. இப்படியே உன்னோட முகத்தை பார்த்துட்டே இருக்கனும் போல இருக்கு..என பேசிக் கொண்டிருந்த போது கதவு தட்டும் சத்தம் கேட்டு இருவரும் தன்னிலை அடைந்தனர்..

    இளா தன் பெற்றோர்களோடு வீட்டிற்கு சென்றாள்... மாலையில் கவினின் அம்மாவும் தங்கைகளும் வந்து‌ நலம் விசாரித்துவிட்டு சென்றனர்..

    கவின் அவளை பார்க்க வந்த போது மருந்தின் வீரியத்தால் தூங்கிக் கொண்டிருந்தாள்...
    அவளுடைய நெற்றியில் தன் இதழ் பதித்து தலையை வருடிக்கொண்டே கொஞ்ச நேரம் அவள் அருகில் அமர்ந்து பார்த்து கொண்டு இருந்தான்.. அப்போதும் அவள் எழுவாதாய் இல்லை.. தொந்தரவு பண்ண வேண்டாம் என அவளை எழுப்பாமல் சென்று விட்டான்...


    இரவு உணவுக்காக இளாவை எழுப்பினாள்...அவள் எழுந்து சாப்பிட்டு விட்டு கவினின் மிஸ்டு கால்லை எதிர்பார்த்து மொபைல்லை பார்த்தாள்...

    ஆனால் .. தெரியாத நம்பரில் இருந்து வந்த போட்டோவை பார்த்து அதிர்ச்சியிலும் கோபத்திலும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து இருந்தாள்....( அப்படி என்னவா இருக்கும்)
     
  9. Rabina

    Rabina Active Member

    Joined:
    Aug 14, 2018
    Messages:
    322
    Likes Received:
    190
    Trophy Points:
    43
    Gender:
    Female
  10. kani _mozhi

    kani _mozhi Active Member

    Joined:
    Feb 12, 2018
    Messages:
    313
    Likes Received:
    194
    Trophy Points:
    43
    Gender:
    Female

Share This Page