உயிரினில் கலந்த உறவானவள் / Uyirinil Kalantha Uravanaval by Narmadha senthilkumar

Discussion in 'Serial Stories' started by saravanakumari, Sep 30, 2018.

 1. Narmatha senthilkumar

  Narmatha senthilkumar Member

  Joined:
  Sep 30, 2018
  Messages:
  54
  Likes Received:
  71
  Trophy Points:
  18
  Gender:
  Female
  உயிரினில் கலந்த உறவானவள்

  அத்தியாயம் 23

  இளா போட்டாவை பார்த்தவுடன் அதிர்ச்சியானாள்..‌அதை அனுப்பிய நம்பரும் தெரியாததாய் இருந்தது.. இதை பற்றி கவினிடம் பேசலாம் என்ற நினைத்த போது‌ மணி பத்தை தொட்டிருந்தது..

  எனவே காலையில் பார்த்து‌க் கொள்ளலாம் என்று நினைத்து யார் அனுப்பியது என்ற மனக் குழப்பத்துடனே உறங்கிவிட்டாள்...

  காலையில் எழுந்ததும் முதல் வேலையாக கவின் வீட்டிற்கே சென்றாள்..
  அவளின் சோகமான முகத்தை பார்த்தவுடன்


  கவினின்‌ அம்மா "என்னடா குட்டிமா காலையிலே வந்துருக்க.. அதும் உன் முகமே சரியில்லையே .. எதும் பிரச்சனையா"
  என்றவுடன் இதை பற்றி சொல்லி அவர்களையும் வருந்த செய்யவேண்டாம் என்று எண்ணி..

  "அதெல்லாம் ஒன்னும் இல்லை அத்தைம்மா.. உங்க பையனை பார்க்காம எனக்கு சோறு தண்ணி எறங்க மாட்டுது.. அதான் பார்த்ததுட்டு போலாம்னு வந்தேன் .. எங்க அவன்" என நக்கலாக சொன்னவுடன்
  அவளும் சிரித்துக் கொண்டே..


  "பாருடா .. அவ்ளோ லவ்வா.. கல்யாணம் ஆனதுக்கு அப்பறம் என்னையும் கொஞ்சம் கவனிச்சுக்கோ.. இல்லாட்டி மாமியார் கொடுமை தான்.. அவன் இன்னும் தூங்கிட்டு இருக்கான் குட்டிமா"

  இளாவும் சிரித்துக் கொண்டே.." உம்ம்ம்... அப்படியே பண்ணிட்டாலும்.. அத்தம்மா உங்களுக்கு அதெல்லாம் சூட் ஆகாது.. சரி உங்க பையன கொஞ்சம் கொடுமை படுத்திட்டு வரேன் " என கவினின் அறைக்கு சென்றாள்..

  அங்கு அவன் தூங்கிட்டு இருந்ததை பார்த்ததும் பன்றதலாம் பண்ணிட்டு தூங்குறத பாரு .. இவனலாம்.. என யோசித்து கொண்டிருந்த போதே கவின் எழுந்து விட்டான் ..

  "குட்டச்சி காலையிலே இங்க என்ன பண்றா..‌சரி‌ பார்ப்போம்" என நினைத்துக்கொண்டு திரும்பும் கண்களை மூடிக்கொண்டான்...

  அதை இளா பார்த்துவிட்டாள்.. "கேடி .. நடிக்கிறியா .. என்னிடமே.. இருடா மவனே.." என‌ தனக்குள் சொல்லியபடி பக்கத்தில் இருந்த தலையனையை எடுத்து அவன் முகத்திற்கு அருகில் கொண்டு சென்றாள்..

  அப்போது என்ன நடக்கிறது என்று கண் திறந்து பார்த்த கவின் .." அடிப்பாவி.. கொலை ..கொலை" என கத்தியவனை பார்த்து

  இளா " டேய் குரங்கு .. கொஞ்சம் அமைதியா இரு. உன்னை அப்படியே கொலை பண்ணிட்டாலும்"

  "அடிப்பாவி.. சரி ஓவரா டேமேஜ் பண்ணாத .. என்னடி .. மாமாவ சைட் அடிக்க காலையிலே வந்துட்ட போல " என அவள் கையை பிடித்து தன் அருகில் உட்கார வைத்தான்....

  "முகி(கவின்). அது வந்து.. நான் உன்னிடம்‌ ஒன்னு சொல்லனும்"

  ஏதோ முக்கியமான விசயம் என்றுணர்ந்த கவின்..அவள் கைகளை பற்றிக்கொண்டு" என்னடா ..என்ன ஆச்சு.. அந்த வினோத் திரும்பி எதாவது பிரச்சினை செய்தானா.. சொல்லு டா"

  "இல்லை.. அவனானு தெரியல.. இங்க பாரு‌.. எனக்கு ஏதோ நம்பர்ல இருந்து நீயும் உன்னோட எதோ பெண்ணும் இருக்க மாதிரி போட்டோ வந்துருக்கு" என்ற அவள் காட்டியவுடன்

  கோபத்தில் இறுகிய முகத்துடன் " இத பார்த்துட்டு நீ என்ன நினைக்குற.. உனக்கும் சந்தேகமா இருக்கா" என கேட்டவாறு அவள் கையை விடுவித்து விலகி நின்றான்...

  உடனே இளா வருத்தத்துடன்..அவன் கையை பிடித்து தன் அருகில் அமர்த்தி அவன் தோலில் சாய்ந்தவாறு "

  லூசு மாம்ஸ் ..‌ ஏன்டா இப்படி கேக்குற.. உனக்காக இவ்வளவு வருஷம் காத்திருந்தேனே .. அந்த நம்பிக்கை நான் சாகுற வரைக்கும் உன் மேல இருக்கும் .. இப்போ எனக்கு இருக்க கவலைலாம் அனுப்புனது யாரா இருக்கும்.. இதுனால எதும் பிரச்சனை வந்துற கூடாது என்பது தான்.. அது மாதிரி எது நடந்தாலும் என்னை விட்டு போக கூடாது.. நானே வேணாம்னு சொன்னாலும் நீ என்னை விட கூடாது எனக்கு ப்ராமிஸ் பண்ணி குடு முகி" என கலங்கிய கண்களுடன் கேட்டாள்..

  கவினும் கலங்கிய கண்களை மறைத்துக் கொண்டு அவளின் முகத்தை நிமிர்த்தி ..

  "இங்க பாரு மா.. அது மாதிரிலாம் எதும் நடக்காது.. இப்போ எதுக்கு உன் கண்ணீரை வேஸ்ட் பண்ற.. எது நடந்தாலும் நான் உன்னை தான் கல்யாணம் பண்ணுவேன்.. ப்ராமிஸ் .. நான் யார் அனுப்புனது கண்டுபிடிக்கிறேன்..

  எனக்கு அந்த வினோத் மேல தான் சந்தேகமா இருக்கு.. நீ கவலை படாமல் இரு.. ஓகே வா.. சிரி பார்ப்போம்"
  இளாவும் கவலை நீங்கியவளாக ஈஈஈஈ என்று‌ சிரித்தாள்..
  "அய்யய்யோ .. பேயி.. ஏன்டி இப்படி பயமுறுத்துற"
  "டேய் .. உன்னை .. " என அடிக்கபோனவளை தடுத்து .. அவள் இடையை பற்றி தன்னுடன் அணைத்துக் கொண்டான்..


  இளாவின் நிலைதான் அவனிடமிருந்து தப்பிக்க முடியாதவளாய் .. அவனின் நெருக்கத்தை விரும்பினாலும் ஏதோ புது வித உணர்வாய் நெளிந்து கொண்டிருந்தாள்..

  கவினோ இளாவின் வெட்கத்தை ரசித்துக் கொண்டே ...

  " இளா.. அந்த போட்டோல இருந்தது கவிதா என்னோட படிச்சவ.. நாங்க பீச் போனப்ப எடுத்தது.. அத எடிட் பண்ணி எங்க இரண்டு பேரையும் மட்டும் அனுப்பிருங்காங்க... "

  "ஏன்டா லூசு .. இதெல்லாம் என்னிடம் சொல்லிட்டு இருக்க .. "

  "உனக்கு ஏன்டி சந்தேகம் வரல .. என் மேல அவ்வளவு நம்பிக்கையாடா.. " என ஆசையோடு கேட்டதற்கு

  இளா அவனோடு விளையாட எண்ணி..
  "ஹா ஹா .. அப்படி லாம் இல்ல மாம்ஸ் ... உனக்கு நானே கொஞ்சம் ஓவர் .. அதுல இன்னொரு பொண்ணு வேற கேக்குதா .. அந்த நம்பிக்கை தான்" என்ற சொன்னவள்


  அவனிடம் இருந்து தப்பித்து ஓடி அவள் அத்தம்மாவை சரணடைந்தாள்...

  "ஏய் .. நில்லுடி.. அம்மா பின்னாடி நின்னா விட்ருவேனா .. ஒரே ஒரு அடி .. ஒழுங்கா வாங்கிக்கோ"

  "முடியாது போ.. பாருங்க அத்தம்மா .. இப்போவே இப்படி அடிக்க வரான் .. கல்யாணம் ஆனோனா எப்படி அடிக்க போறானோ .. பயமா இருக்கு" என பாவமாய்‌ முகத்தை வைத்துக் கொண்டு சொன்னாள் ...

  "ஏய் .. ரொம்ப நடிக்காத.. அம்மா அவள நம்பாதிங்க" என்றவனை பார்த்து இளா‌ பழிப்புக் காட்டிக் கொண்டு‌ இருந்தாள் ..

  "கவின்.. சின்ன புள்ள மாதிரி சண்டை போட்டுகிட்டு .. போய் கிளம்பு நீ ஹாஸ்பிடல்க்கு "

  இதை கேட்ட கவின் "இருடி உன்ன பார்த்துக்குறேன் .. என் கையில் கிடைக்காமையா போவ" என முனகிக்கொண்டே சென்றான்

  அவன்‌ சென்றவுடன் இளாவின் காதை பிடித்து..

  "ஏன் குட்டிமா.. ஏதோ அவனிடம் வம்பு பண்ணிட்டு வந்து என்னமா டயலாக் விட்டுற " என்றவுடன்..

  " ஆஆஆ.. மாமியார் கொடுமை பண்றாங்களே.. " என்ற சொல்லிவிட்டு அங்க இருந்து வீட்டிற்கு ஓடிவிட்டாள்..

  கவினின் தாய் சிரித்துக் கொண்டே இதுங்களுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைக்கனும் ..

  இன்னைக்கு போய் அண்ணனிடம் ( இளாவின் தந்தை ) பேச வேண்டும் .. என்று மனதிற்குள் நினைத்து கொண்டாள்..

  இளாவின் தந்தை இருப்பதை உறுதி செய்து .. பின் அவரிடம் பேசி இன்னும் ஒரு வாரத்தில் நிச்சயதார்த்தம் அடுத்த ஒரு மாதத்திற்கு பிறகு திருமணம் என்று முடிவு செய்தனர்...

  இதை அறிந்த இளா அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.. பல வருட காத்திருப்பு.. தன்னவனை கரம்பிடிக்கும் போகிறோம் என்பதை நினைக்கும் நினைக்க அவள் சந்தோசத்தின் உச்சியில் இருந்தாள்... அதை உடனே கவினிடம் சொல்ல விரும்பி அவனுக்கு கால் செய்தாள்..

  "ஹலோ .. மாம்ஸ்"

  "சொல்லுமா"

  "ஏஏஏஏஏ.. உனக்கு ஒன்னு தெரியுமா"

  "ஏன்டி கத்துற.. என்ன விசயம் .. சொல்லுமா"

  "நான் சீக்கிரமே உன்னோட பொண்டாட்டி ஆக போறேன் டா.." என்று‌ தேதியை சொன்னாள்..

  "யேய்.. செல்லக்குட்டி.. நான் ஒன்னு கேட்பேன் .. செய்வியா .. "

  "உம்ம்ம்.. என்னனு சொல்லு பார்க்கலாம்"

  "யேய்.. குட்டிமா.. நம்ம நிச்சயதார்த்தம் முன்னாடி என்னோட நீ ஒரு இடத்துக்கு வரனும்.. ப்ளீஸ்"

  "உம்ம்ம்.. எங்க .. "

  "சஸ்பென்ஸ் "

  "வீட்டில் விட்டா வருவேன்"
  சரி .. வீட்டில் பெர்மிஷன் நான் வாங்குறேன் .. ஓகே பொண்டாட்டி.. பாய் .. கடமை என்னை அழைக்கிறது " என்று சொல்லி விட்டு போனை வைத்து விட்டனர்..


  இரண்டு நாட்கள் கடந்த நிலையில் இளாவின் தந்தை ஏதோ யோசித்தவாறு கவலையுடனே இருந்தார்..

  வீட்டில் உள்ளவர்கள் காரணம் கேட்டும் அவர் பதில் அளிக்கவில்லை ...

  இளாவிடம் சென்று.. " இளா.. அப்பா எது பண்ணாலும் உன் நல்லதுக்கு தான் என்ற நம்பிக்கை இருக்கா மா உனக்கு"

  "ஏன் பா இப்படிலாம் கேக்குறிங்க... இருக்கு பா..என்னபா ஆச்சு"

  "அந்த கவின் உனக்கு வேணாம் மா"
  இதை கேட்டு அதிர்ச்சியானவள்


  "என்னபா சொல்றிங்க .. ஏன் அப்பா.. என்ன நடந்துச்சு .. காரணம் சொல்லுங்க அப்பா"என அழுதுக் கொண்டே கேட்டாள்..

  "என்னங்க ஆச்சு .. ஏன் இப்படிலாம் பேசுறிங்க" என்றால் இளாவின் அம்மா

  "அதெல்லாம் உங்களிடம் சொல்ல முடியாது .. இந்த கல்யாணம் வேணாம் .. அவ்வளவு தான் " என்றதோடு கவின் வீட்டிற்கும் தெரிவித்தார்..
   
  Kamala PM and dharshini like this.
 2. Narmatha senthilkumar

  Narmatha senthilkumar Member

  Joined:
  Sep 30, 2018
  Messages:
  54
  Likes Received:
  71
  Trophy Points:
  18
  Gender:
  Female
  உயிரினில் கலந்த உறவானவள்

  அத்தியாயம் 24

  இளாவின் தந்தை இந்த கல்யாணம் நடக்காது.. என்றவுடன் என்ன செய்வது என்று புரியாமல் கவினும் இளாவும் தவித்து கொண்டு இருந்தனர்...

  கவின் காரணம் கேட்டும் அவனிடம் பேசவிரும்பவில்லை என்று‌ மூஞ்சியில் அடித்தது போல் இளா அப்பா சொல்லிவிட்டார்...‌ அதனால் இனி பேசி பயனில்லை என்று கவினும் அதற்கு மேல் அவரிடம் பேசவில்லை

  ..இளாவும் தன் அப்பா சம்மதித்தால் மட்டுமே திருமணம் என்று கூறியதால் கோபத்தில் அவளிடமும் பேசுவதை நிறுத்திவிட்டான் ..

  இளாவோ தன் அப்பா மறுப்பதற்கான காரணமும் அறிய முடியாமல் தன்னவனும் தன்னை புரிந்துக் கொள்ளாமல் பேசவில்லை என்பதாலும் ஒழுங்காக சாப்பிடாமல் தூக்கமின்றி மனநிம்மதி இழந்து பொலிவிழந்த முகத்துடன் எடை குறைந்து நடமாடிக் கொண்டிருந்தாள்..

  கவினின் அம்மாவோ அது இளாவின் அப்பாவின் விருப்பம் என்று கூறிவிட்டாள்...

  இவ்வாறு நாட்கள் கடந்த நிலையில்.. தன் அக்காவின் நிலையை காண இயலாத ஆதவ்

  " அக்கா ..அப்பாவிடம் பேசு.. இப்படி இருக்காத .. நல்லாவே இல்லை.. "

  "இல்லை டா .. பேசி என்ன ஆக போது .. என் தலையில் இதான் எழுதிருக்குனா யாரால் மாற்ற முடியும்"

  'அக்கா .. அழாத .. நீயும் கவின் மாமாவும் சேர்ந்து பேசுங்க .. கண்டிப்பா எதாவது தீர்வு கிடைக்கும் என்று தோணுது.. எனக்காக .. இந்தா போன் போட்டு வரச்சொல்லு ப்ளீஸ்"

  "வேணாம் டா.. ப்ளீஸ்.. அவன் போன் பண்ணாலும் எடுக்க மாட்டான்.. நான் என்ன பண்ணுவேன்.. இதை கூட புரிஞ்சுக்க முடியாம கோவமா இருந்தா.. அவனுக்கு எப்போ பேச வேண்டும் என்று தோனுதோ அப்போவே பேசட்டும்" என்று சொல்லிவிட்டு கீழே சென்று விட்டாள்..

  அங்கு எதிர்பாரத விதமாக அவள் அம்மாவும் அப்பாவும் பேசுவதை கேட்க நேர்ந்தது.. அதை கேட்டவுடன் அவள் அப்பா மறுப்பதற்கான காரணம் கவினின் தாய் என்று அறிந்ததும்

  இதற்கு யார் மீது குறை சொல்வது என்று தெரியாமல்.. கவினிடமும் சொல்ல முடியாமல் தன் அறைக்கு வந்து அழ ஆரம்பித்தாள்...

  "அக்கா .. ஏன் இப்படி அழுவுற .. என்ன ஆச்சுனு சொல்லு .. அப்பா திட்டுனாங்களா" என ஆதவ் அவன் அக்காவை கேட்டு கொண்டிருந்தாள்...

  அதே நேரம் கவின் மனதில் இந்த பிரச்சினையை தீர்த்த பிறகே தன்னவளிடம் பேச வேண்டும் என்று எண்ணி தீவிரமாக காரணத்தை தேடிக் கொண்டிருந்தான்..

  ஆனால் அவனால் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை.. எதிலும் கவனம் செலுத்த முடியாமல் இளாவை நினைத்து வருத்திக் கொண்டிருந்தான்..

  "இளா .. ப்ளீஸ்டி .. என்னிடம் வந்துருடி.. நீ இல்லாத வாழ்க்கையை நினைச்சுக் கூட பார்க்க முடியலை.. மாமா வேணாம் என்று சொல்றதுக்கு அவருட்ட எந்த காரணமும் இல்லை.. யாரோ இதுக்கு பின்னாடி இருக்காங்க .. அத என்னால கண்டு பிடிக்கமுடியவில்லையே" என மனதில் புலம்பிக்கொண்டே வயல் வழியே சென்றுக் கொண்டிருந்த போது இளா பெயர் அடிபடும் பேச்சுக்குரல் கேட்டவுடன் அப்படியே நின்று விட்டான்...

  அங்கு வினோத் அவன் நண்பனிடம் பேசிக் கொண்டு இருந்தான்.." டேய் வினோத் இளா நிச்சயதார்த்தம் நின்னுருச்சாம் தெரியுமா "

  "ஹாஹா .. மச்சான்.. அத பண்ணதே நான் தான் டா"

  "என்னடா சொல்றா.. எப்படி டா"

  "இளாக்கு கவின் வேற ஒரு பொண்ணோட இருக்க மாதிரி போட்டோ அனுப்புனேன்.. அவ நம்பலை.. அதான் குடுகுடுப்பகாரன் மாதிரி வேடமிட்டவனை வீட்டில் நடக்க போற கல்யாணத்தால உங்க பையனுக்கு ஆபத்து இருக்குனு கவின் வீட்டில் சொல்ல வச்சேன்.. அதுல கவின் அம்மாக்கு கொஞ்சம் பயம் வந்துச்சு‌‌..

  அவுங்க பக்கத்து வீட்டு அக்கா மூலமா அத இன்னும் பெரிசாக்கி நான் ஏற்பாடு பண்ண ஜோஸியக்காரரிடம் ஜாதகம் பார்க்க வச்சேன் அவரும் இந்த கல்யாணம் நடந்தா மறுநாளே உங்க பையன் இறந்துருவானு சொன்னோன அவ்வளவு தான் கல்யாணம் தானா நின்னுருச்சு" என ஏதோ சாதித்தது போல் சிரித்துக் கொண்டு இருந்தான்..

  இதையெல்லாம் கேட்ட கவின்க்கு.. அவனை கொல்ல வேண்டும் என ஏற்பட்ட வெறியை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு ..

  அவனின் அம்மாவை உடனே இளாவின் வீட்டுக்கு வரச்சொல்லி விட்டு இவனும் அங்கு சென்றான்..

  இளாவின் அப்பாவிடம் "உங்களிடம் நான் பேசனும் மாமா.. அம்மா ..ஏன்‌ மாமா வேணாம் என்று சொன்னாங்கனு உனக்கு தெரியுமா" என்றதும்

  கவின்‌ அம்மா.. என்ன சொல்வது‌ என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்தாள்..

  இளாவின் அப்பா.. தன் தங்கையின் நிலை அறிந்து .." கவின் அதான் வேணாம் என்று சொல்றேன்ல அப்பறம் என்ன "

  "மாமா போதும்" என்று கத்தியதை கேட்டு ஒரு நிமிடம் எல்லாரும் அதிர்ந்தனர்...

  " அம்மா நீ தான் இதுக்கு காரணம் .. நீங்க சொன்னதால தான் மாமா இப்போ இந்த கல்யாணத்த நிப்பாட்டுனாங்க .. ஏன்மா இப்படி பண்ண.. என்னைவிட இளா மேல் தானேமா பாசம் வச்சுருந்த .. யாரு எது சொன்னாலும் நம்புவியா மா .. இந்த மூடநம்பிக்கையை எப்போ தான் விட்டோழிக்க போறிங்களோ" என கவின் திட்டுவதை கேட்டு

  "போதும் டா நிறுத்து .. விட்டா பேசிட்டே போற .. நீ என்ன சொன்னாலும் கல்யாணம் நடக்காது.. மூடநம்பிக்கையா இருந்தாலும் உன்னோட உயிர் எனக்கு முக்கியம் .. அத விட இளாவோட வாழ்க்கையும் இதுனால பாதிக்கும் .. அதான்" என்ற அவன் அம்மாவை..

  "ஒரு நிமிஷம் மா.. இதயெல்லாம் அந்த வினோத்தோட வேலை .. " என்றவனை எல்லாரும் கேள்வியோடு பார்க்க..

  " ஓ.. உங்களுக்கு முதலில் இருந்து சொன்னா தான் தெரியும் .. இளா இப்போ சொல்லி தான் ஆகனும் என்று தன்னவளிடம் சொல்லிவிட்டு .. கல்லூரியில் நடந்தது.. இப்போது வினோத் பேசிய ஆடியோ ரெகார்ட்டையும் போட்டு காண்பித்தவுடன் எல்லாருக்கும் தான் செய்த தவறு புரிந்தது ..

  கவினின் அம்மா மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தாள்..

  இப்போது எல்லாருடைய முகத்திலும் தெளிவு ஏற்பட்டு சீக்கிரம் கல்யாணம் ஏற்பாடு பண்ணலாம் என முடிவு எடுக்கப்பட்டது‌. ..

  ஆனால் இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த இளா அழுதுக் கொண்டே அவ்விடத்தை விட்டு சென்றதை கவின் பார்த்துவிட்டு அவள் பின்னால் சென்றால்...

  "இளா..ஏன்டி .. இன்னும் அழுகுற.. அதான் பிரச்சனை லாம் முடிஞ்சுட்டே..‌இங்க பாரு மா
  " என அவன் தாடையில் கைவைத்து நிமிர்த்தியவன் கையை தட்டிவிட்டு

  "கவின்.. நான் உனக்கு வேணாம் .. ப்ளீஸ்"

  "ஏய்.. லூசு .. இப்போ எதுக்கு இப்படி பேசுற...இங்க பாரு.. என்னோட ஆயுசு முடியனும் என்று இருந்தால் யார கல்யாணம் பண்ணாலும் நடந்து தான் ஆகும்...இதெல்லாம் அந்த வினோத் பரதேசி பண்ணது..

  அவன் நம்ம கல்யாணம் நடக்க கூடாது நினைச்சு பண்ணியிருக்கான் .. அவனோட ஆசையை நிறைவேத்த போறியா.. நீ இல்லாத வாழ்க்கை எனக்கு நரகம் டி.. நீ இல்லனா நான் தினம் தினம் செத்துட்டு இருப்பேன்.. அதுதான்‌ உனக்கு வேணுமா உன்னாலையும் நான் இல்லாம இருக்க முடியாதுடி.. லவ் யு மதி" என்றவுடன்

  இளா கவினின் நெஞ்சில் முகத்தை புதைத்து அழுதவளை ..ஆதரவாய் தன்னோடு அணைத்துக்கொண்டான்.. அவள் அவனை இறுக்கி அணைத்து கொண்டு நின்றவளை விலக்க மனம் இல்லாமல் இருவரும் தன்னிலை மறந்து நின்றுக்கொண்டு இருந்தனர்..

  "மதி பேபி.. இப்படியே நின்னா .. மாமாவால சும்மா இருக்கமுடியாதுடி.. அப்பறம் என்னை குறைச் சொல்ல கூடாது நான் பொறுப்பில்ல பா" என்றவுடன் இளா தன்னிலை அடைந்து கவினிடமிருந்து விலகி அவனுக்கு முதுகு காட்டி நின்றாள்..

  அய்யய்யோ .. திரும்ப என்ன ஆச்சுன்னு தெரியலையே என இளாவின் முகத்தை பார்த்தவனுக்கு அவளின் வெட்கம் கலந்த முகத்தை பார்த்தவுடன் நிம்மதி பிறந்தது..

  "பேபி .. .. க்யூட் டி.. இப்படியே உன்னை பார்த்துட்டே இருக்கனும் போல இருக்கு" என மனதில் நினைத்துக் கொண்டே..

  அவளுடன் விளையாட எண்ணி..

  "ஏய்.. என்ன ஆச்சு.. அழுததுல மூஞ்சி ரெட் ஆகிருச்சு போல "

  அவனை முறைத்துவிட்டு" டேய்.. குரங்கு.. எனக்கே எப்போதாவது தான் வெட்கம் வரும் .. அதுக்கூட புரிஞ்சுக்க தெரியாதா.. எருமை" என்றவளை பார்த்து அழகாக கண் சிமிட்டி கள்ளச் சிரிப்புடன்‌ நின்றவனை ஒரு நிமிடம் இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள்...

  "மதி குட்டி .. போதும் மாமா வை சைட் அடிச்சது "என்றதும் அவளுடைய குறும்பும் தலைதூக்கி .. அடிக்க ஆரம்பித்தாள்..

  "ஏய்.. ஏன்டி... அடிக்கிற.."

  "எவ்ளோ கொழுப்பு இருந்தா என்னிடம் பேசாம இருந்திருப்ப.. நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா .. " என்று தலையில் கொட்டிக் கொண்டிருந்தால் ..

  தன் அக்காவை தேடிக் கொண்டு வந்த ஆதவ் இவர்களை பார்த்து சிரித்துக் கொண்டு இருப்பதை கண்ட கவின்." டேய் ஆதவ் .. காப்பாத்து டா மச்சான்.. உங்க அக்கா விட மாட்றா டா"

  "ஹா ஹா.. மாம்ஸ் .. இத்தனை வருஷம் நான் வாங்குனேன்.. இப்போ நீங்க.. என்ஜாய் " என்று‌ அந்த இட்த்தை விட்டு நகர்ந்தான்..

  கவினால் இளாவை தடுக்க முடியாமல் இல்லை

  தன்னவளிடம் வாங்கும் செல்ல அடிகள் கூட இனி்மையானதே என்பதால் அதை ரசித்துக் கொண்டு இருந்தான்..

  "யேய்.. குட்டச்சி ..போதும் டி .. விடு டி " என்பதை கூட கேட்காமல் அடித்துக் கொண்டு‌ இருந்தவள் கண்ணத்தில் தன் இதழ் பதித்தான்.. அதில் அதிர்ச்சி ஆகியவளிடம் இருந்து தப்பித்து ஓடிவிட்டான் ..
   
 3. Suganyasomasundaram

  Suganyasomasundaram Active Member

  Joined:
  Nov 23, 2017
  Messages:
  204
  Likes Received:
  119
  Trophy Points:
  43
  Gender:
  Female
  Occupation:
  Chennai
  Location:
  Chidambarm
  Very nice updates....
   
 4. dharshini

  dharshini Well-Known Member

  Joined:
  Oct 10, 2017
  Messages:
  342
  Likes Received:
  261
  Trophy Points:
  63
  Gender:
  Female
  nice updates
   
 5. Tamilvanitha

  Tamilvanitha Active Member

  Joined:
  Dec 26, 2017
  Messages:
  332
  Likes Received:
  230
  Trophy Points:
  43
  Gender:
  Female
  nice update .
   
 6. Rabina

  Rabina Well-Known Member

  Joined:
  Aug 14, 2018
  Messages:
  433
  Likes Received:
  252
  Trophy Points:
  63
  Gender:
  Female
  nice updates.
   
 7. Kavyakeerthi

  Kavyakeerthi Active Member

  Joined:
  Oct 15, 2018
  Messages:
  104
  Likes Received:
  68
  Trophy Points:
  28
  Nice story
   
 8. janaki

  janaki Active Member

  Joined:
  Oct 3, 2014
  Messages:
  306
  Likes Received:
  195
  Trophy Points:
  43
  Gender:
  Female
  Location:
  Madurai
  Nice story ila kavin ku idaiyila kavitha than varuva nenachen. Vinoth problem create panrane. Kavin Ila kalyanam prachanai illama mudiyuma
   
 9. Prabha_kannan

  Prabha_kannan Well-Known Member

  Joined:
  Oct 25, 2017
  Messages:
  545
  Likes Received:
  325
  Trophy Points:
  63
  Location:
  trichy
  next update pls
   
 10. yuvarani123

  yuvarani123 New Member

  Joined:
  Feb 6, 2019
  Messages:
  1
  Likes Received:
  0
  Trophy Points:
  1
  Gender:
  Female
  Very nice next update pls
   

Share This Page