உயிரினில் கலந்த உறவானவள் / Uyirinil Kalantha Uravanaval by Narmadha senthilkumar

Discussion in 'Serial Stories' started by saravanakumari, Sep 30, 2018.

  1. Rabina

    Rabina Member

    Joined:
    Aug 14, 2018
    Messages:
    94
    Likes Received:
    58
    Trophy Points:
    18
    Gender:
    Female
    nice update.kavin yaraiavathu love pandrana?
     
  2. janaki

    janaki Active Member

    Joined:
    Oct 3, 2014
    Messages:
    256
    Likes Received:
    165
    Trophy Points:
    43
    Gender:
    Female
    Location:
    Madurai
    Nice
     
  3. Prabha_kannan

    Prabha_kannan Well-Known Member

    Joined:
    Oct 25, 2017
    Messages:
    403
    Likes Received:
    253
    Trophy Points:
    63
    Location:
    trichy
    Good update.
     
  4. malarmathi

    malarmathi விழுந்தால் அழாதே, எழுந்திரு!

    Joined:
    Feb 6, 2018
    Messages:
    392
    Likes Received:
    325
    Trophy Points:
    63
    Gender:
    Female
    Occupation:
    இல்லத்தரசி
    Location:
    கோவை
    கபில் பிரியா ஜோடி .அப்போ கவின் க்கு ஜோடி யாரு ? கவிதா வா இல்ல வேற யாருமா ?
     
  5. Narmatha senthilkumar

    Narmatha senthilkumar New Member

    Joined:
    Sep 30, 2018
    Messages:
    10
    Likes Received:
    16
    Trophy Points:
    3
    Gender:
    Female
    Thank u so much ... Pannalam pannamalum polam papom
     
  6. Narmatha senthilkumar

    Narmatha senthilkumar New Member

    Joined:
    Sep 30, 2018
    Messages:
    10
    Likes Received:
    16
    Trophy Points:
    3
    Gender:
    Female
    உம்ம்ம்கவிதாவா இருக்குமோ .. இல்ல வேற யாராவது வேணுமா
     
  7. Narmatha senthilkumar

    Narmatha senthilkumar New Member

    Joined:
    Sep 30, 2018
    Messages:
    10
    Likes Received:
    16
    Trophy Points:
    3
    Gender:
    Female
    உயிரினில் கலந்த உறவானவள்

    அத்தியாயம் 3

    நம் கதையின் தேவதை‌ இளமதி

    அப்பா கதிரேசன் ஊரில் மதிப்பிற்குரிய நல்மனிதர் அம்மா பத்மா பாசமான வீட்டுதலைவி. பாட்டி மீனாட்சி.‌ தம்பி ஆதவன் 12 ம் வகுப்பு படிக்கிறான்...

    இவள் பக்கத்து ஊரிலுள்ள கல்லூரியில் B ED முதல் ஆண்டு படித்து கொண்டிருக்கிறாள்

    "ஏய் இளா... வாடி சீக்கிரம் பஸ்க்கு லேட் ஆச்சு ... என்று அவளுடைய உயிர்த்தோழி கயல்விழி கத்திக் கொண்டிருந்தாள் ...

    "இதோ வந்துட்டேன் கயல் என வந்தவள் தனக்கான மதிய உணவை எடுத்துவைத்த கொண்டு காலை உணவு வேண்டாம் என்று கூற

    "ஏன்டி ஒரு நாளாவது சீக்கிரமா கிளம்பிறியா ...எப்போ பார்த்தாலும் அரக்க பறக்க கிளம்புறது .. அப்பறம் சாப்பிடாமா ஓடுறது.. சீக்கிரம் எழுந்தாதானே "என அவள் அம்மா திட்டியப்படியே உணவை ஊட்ட

    அதை வேகமாய் சாப்பிட்டு முடித்தவர்.. .." அம்மா போதும் .. அப்பாவிடம் உன்னுடைய சொற்பொழிவாற்று மா..
    நான் கிளம்புறேன் மா ". என வெளியில் வந்தவள்

    அவள் பாட்டியிடம் சென்று அவள் கண்ணத்தில் முத்தமிட்டவள்
    "அப்பாயி( அப்பாவின் அம்மாவை இப்படி தான் அழைப்பார்கள்) ஒழுங்கா சமத்தா இருந்துகோ .. நான் போய்டு வரேன்" என் கிண்டல் செய்ய


    இதை கேட்ட அவள் அம்மா "ஏய் கழுத... உனக்கு வாய் கொழுப்பு அதிகமாகிருச்சு" என திட்டி முடிக்கும் முன் அவள் கிளம்பிவிட்டாள்

    "விடு பத்மா அவள் இப்படி இருக்கிறது பார்க்க சந்தோசமா இருக்கு.. இப்படியே எப்போதும் இருக்கனும் .." என் அவள் பாட்டி

    அவளுக்கு ஆதரவாக பேச பத்மா எதையோ யோசித்தவளாய்

    "ஆமா அத்தை ..அவள் நினைச்ச மாதிரி...அவளோட வாழ்க்கையில் எல்லாம் நடந்து சந்தோசமா இருக்கணும்... என்றவள் தன் வேலையை பார்க்க சென்று விட்டாள்

    கயலை பார்த்த இளா அவள் கோபமாக இருப்பதை அறிந்தவள்

    "ஹாய் கயல்... என்னடி மசமசனு நின்னுட்டு இருக்க... வா போகலாம்.. பஸ் போய்விடும் .." என்று அவளை இழுக்க.

    கயல் முறைத்துக் கொண்டே அவளோடு செல்ல

    "என்னடி செல்லம்... நான் அழகா இருக்கேன்னு எனக்கே தெரியும்... இப்படி பார்த்தா வெட்கமா இருக்குல்ல " என்ற இளாவை பார்த்து ..கயலும் சிரித்துவிட்டாள்...

    "ஏய் இளா ... உனக்கு இந்த வாய் மட்டும் இல்லனா நாய் தூக்கிட்டு போய்டும் .. உன்னலாம் கட்டிக்க போறவன் பாவம் டி .. "

    "செல்லோ.. அதை என் மாமா பார்த்துக்குவான் .." என் சொல்ல

    "இளா நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத புள்ள.. உன் மாமா ஊருக்குள்ள வந்தே பல வருஷம் ஆச்சு ..உன்னை இன்னும் நியாபகம் வச்சுருப்பாங்கலா..

    அதும் இல்லாம அவுக டாக்டர்க்கு படிக்குறதா சொன்னாங்க... இப்படி இருக்கும் போது நீ நினைக்கிறது நடக்குமா ." என சந்தேகத்தோடு கேட்க

    ஆனால் இளாவோ "கண்டிப்பா நடக்கும் டி கயல் .. மாமா பின்னால் எத்தனை பொண்ணுங்க போனாலும் மாமா மனசுல எனக்கு தான் டி இடம்.. " என நம்பிக்கையோடு சொன்னதை கேட்டவள்

    இன்னும் தெளியாதவளாய் இருந்தாலும் தன் தோழியை குழப்ப விரும்பாமல் "சரி நீ சந்தோசமா இருந்தா அதுவே போதும் புள்ள.. " என்றவள்
    பேசிக் கொண்டே பஸ்ஸில் கல்லூரியை அடைந்தனர்

    அங்கு தாரணி சரண்யாவும் இவர்களோடு சேர்ந்துக் கொண்டு வகுப்பை சென்றடைந்தனர்...

    வகுப்பில்...

    இளா அவள் மாமனை பற்றிய யோசனையில் இருந்தவள் .. ஏதோ சந்தேகத்தோடு

    "ஏய் கயல் .. " என்று தன் தோழியை அழைக்க அவ்ளோ பாடத்தை கவனித்தப்படியே

    "என்னடி .. ஒழுங்கா அவர் நடத்துவதை கவனி டி .. இல்லாட்டியும் அவனிடம் நான் தான் மாட்டுவேன்... உன்னை படிக்குற புள்ளனு ஒன்னும் சொல்லமாட்டாக" என கவனித்து கொண்டே மெதுவாக சொல்ல ..

    "அதெல்லாம் பாத்துக்கலாம்.. எனக்கு மாமா நினைப்பாவே இருக்குது கயல்.. பாக்கனும் போல இருக்கு.. அப்போவே செமயா இருக்கும்.. இப்போ மன்மதன் மாதிரி இருப்பாங்கல்ல" என் கேட்டவளை முறைத்துக் கொண்டே

    "இவ வேற.. இருப்பாங்க இருப்பாங்க.. பாக்கனும்னா போய் உங்க அப்பாவிடம் கேளு .. கூட்டிட்டு போவாக.. " என நக்கலாக சொன்ன

    கயலின் மீது கோபம் கொண்டவள் அவளை அடிக்க போக...

    அதை அவர்கள் பேராசிரியர் பார்த்து விட்டார்..

    இருவரையும் கோபமாக நிற்கச் சொன்னவர்

    "நான் இங்க உயிரை கொடுத்து கிளாஸ் எடுத்துட்டு இருக்கேன்.. நீங்க என்னான விளையாட்டிட்டு இருக்கிங்க... இளமதி கயல்லோட சேர்ந்து நீயும் உருப்படாம போக போறியா.. ஏய் கயல்விழி உனக்கு எத்தனை தடவை சொல்றது.. நீயெல்லாம் படிச்சு டீச்சராகி என்னத்த கிழிக்க போறியோ... இரண்டு பேரும் வெளிய போங்க.. " என கத்த இவர்கள் மன்னிப்பு கேட்டும் அவர் அதற்கு செவிசாய்க்காமல் இருக்க..

    வகுப்பை விட்டு வெளியே வந்தவர்கள்.. இளா கயலை பார்த்து சிரித்துக் கொண்டே இருக்க

    "இளா கொஞ்ச நேரம் சிரிக்காம இருக்கிறியா.. கடுப்பா இருக்கு.. அந்த லூசு பயலுக்கு நான் என்னத்த கிழிச்சா என்ன.. அவனிடம் போய் இப்படி அவமானம் பட்டுட்டேனே... எல்லாம் உன்னாலதான் நாயே.." என கொஞ்சம் கோவமாக கூற

    அதற்கு சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கியவள் "இதுக்கு நீ தான் கயலு காரணம்.. மாமாவை நியாபகப்படுத்துனது நீ தான்.. "என்றவள் தொடர்ந்து

    "ஆனா அவருக்கு எம்புட்டு லவ் உன் மேல.. உன் அத்தான் அவரோட லவ்ச உன்ன அசிங்கமா திட்றதுலயே காட்றாங்க கயல்.. " என் சிரித்து கொண்டே சொன்னவளை பார்த்து

    "ஆமா .. .மூஞ்சிய பாரு..எப்ப பார்த்தாலும் திட்டி கிட்டே.. இவனோட எப்படி தான் வாழ்க்கைய ஓட்ட போறேனோ" என ஆதங்கமாய் சொல்ல

    "கயல்... உன் பேச்சுக்கெல்லாம் உன் மாமா தான் டி சரிப்பட்டு வரும்" என பேசியப்படியே

    ( ஆமாங்க கயல்விழியோட அத்தை பையன் தான் இந்த பேராசிரியர் ரவிசங்கர் .. அவள் மேல பாசம் லாம் ஜாஸ்தி தான்.. அதை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டான்.. இவள் பிஎட் முடித்தால் தான் கல்யாணம் பண்ணிப்பேன் என்று சொல்லிவிட்டான்.. அதான் கயல் இப்போ வேற வழி இல்லாம இளாவையும் கூட்டுச்சேர்த்து படித்து கொண்டிருக்கிறாள்)

    கல்லூரி முடிந்து தன் தன் வீட்டிற்கு சென்றனர்...

    இளா வீட்டினுள் ஙழையும் போதே அவள் அப்பாவை கண்டவள் அப்பா என்று அழைத்துக் கொண்டே வந்து கட்டிக்கொள்ள

    இவளுடைய சத்தத்தை கேட்டு வந்த அவள் அன்னை " ஏன்டி.. இப்படி கத்துற .. பொம்பளை புள்ளையா நீ" என வசைப்பாட ஆரம்பிக்க

    அவள் தந்தையோ " ஏம்மா பத்மா.. குட்டிமா அசந்து போய் வந்துருக்கா .. குடிக்க எதாவது கொடுமா.. பாவம் புள்ள" என்றவுடன்

    அவள் அம்மா இளாவை முறைத்துக் கொண்டே"உடனே வக்காலத்துக்கு வந்துருவிங்களே... சரி நான் காப்பி எடுத்துட்டு வரேன்.. அதுக்குள்ள நீ போய் கோவிலுக்கு கிளம்பி வா இளாமா" என்றதற்கு

    "நான் போய் கிளம்புறேன் பா.. அம்மா எங்க மா உன்னோட அருமை புதல்வனை காணோம்..." என நக்கலாக கேட்க

    "அவன் அங்கே தான் படித்துக் கொண்டு இருக்கிறான் இளா.... அவனிடம் வம்பு பண்ணாமல் சீக்கிரம் கிளம்பி வாடி.." என் சொல்ல அதை அவள் அலட்டிக் கொள்ளாமல்

    "சரி சரி பாப்போம்.." என்று சென்றவள்

    " அங்கு புத்தகத்தை வைத்துக் கொண்டு வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவனை பார்த்ததும் அவன் எதிர்பாரா நேரத்தில் தலையில் கொட்டியவுடன்
    கோபமாக


    " ஏன்டி என்னை அடிச்ச.. படிக்கும்போது தொந்தரவு பண்ணாதனு எத்தனை தடவை சொல்றது..." என அடிப்பதற்கு இளாவை விரட்ட

    "ஹி ஹி... அதான் நீ படிச்ச லட்சணத்த நான் பார்த்தேனே .. " என வசனம் பேசிய இளாவை அவன் அடிக்க ....

    இப்படியே இரண்டு பேரும் சண்டை போட்டுக் கொண்டு இருந்தனர்.

    இவர்கள் சத்தத்தை கேட்டு வந்த பத்மா அய்யோ இதுங்க இரண்டையும் வச்சுட்டு என புலம்பியப்படியே

    "ஏய் இளா ...ஏழு கழுதை வயசாகிட்டு இன்னும் சின்ன புள்ள மாதிரி சண்டை போட்டுட்டு சீக்கிரம் கிளம்பி வாடி" என்றவள்

    "ஆதவ் ஒழுங்கா படிக்குற வேலையை பாரு" என்று திட்டிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர

    இளாவும் அழகாய் தாவணி கட்டிக்கொண்டு வந்தவளை

    அவள் பாட்டி " அம்சமா இருக்க டா இளாமா" என சொன்னவளுக்கு எப்போதும் போல் ஒரு முத்தத்தை கொடுத்துவிட்டு

    அவள் அம்மாவோடு கோவிலுக்கு சென்றவள் அங்கு கயலும் இவளோடு சேர்ந்துக் கொண்டாள்

    பின்பு அந்த கூட்டத்தில் சாமி தரிசனம் பெற்று பிரசாதம் வாங்க சென்றவள் திரும்பும் போது அவள் அம்மா யாருடனோ பேசிக்கொண்டிருக்க அவர்களை கண்டதும் இளாவின் முகம் பிரகாசமானது...​
     
    Kamala PM, malarmathi and kani _mozhi like this.
  8. Narmatha senthilkumar

    Narmatha senthilkumar New Member

    Joined:
    Sep 30, 2018
    Messages:
    10
    Likes Received:
    16
    Trophy Points:
    3
    Gender:
    Female
    Thank you
     
  9. kani _mozhi

    kani _mozhi Active Member

    Joined:
    Feb 12, 2018
    Messages:
    208
    Likes Received:
    132
    Trophy Points:
    43
    Gender:
    Female
  10. Rabina

    Rabina Member

    Joined:
    Aug 14, 2018
    Messages:
    94
    Likes Received:
    58
    Trophy Points:
    18
    Gender:
    Female
    nice update.
     

Share This Page