உறவே... உயிரே...!! Article by Mythili Ramjee

Discussion in 'Psychology' started by Tamilsurabi, Nov 7, 2018 at 12:18 PM.

 1. Tamilsurabi

  Tamilsurabi Administrator Staff Member

  Joined:
  Sep 11, 2014
  Messages:
  175
  Likes Received:
  85
  Trophy Points:
  28
  உறவே... உயிரே...!!

  இப்பூவுலகில் நாம் பிறக்க காரணமாய் இருந்த நம் தாயும் தந்தையும் உயிர் நீத்திருந்தாலும் அவர்கள் இன்னும் நம்முடனேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை .

  அப்பாவின் கணீர் குரல் ஒரு அண்ணாவிற்கு இருக்கலாம். நம் தாயின் சிரித்த முக சாயல் மாமா பெண்ணிற்கு இருக்கலாம். அப்பாவின் இளகிய மனசு அத்தைக்கும் இருக்கலாம். ஒரு குழந்தை பிறந்த உடனே நாம் எல்லோருடனும் பகிர்ந்துக் கொள்வது அதன் முக ஜாடையே . "அட இது அவன் தாத்தா போல இருக்கான். இல்லை இல்லை மாமா ஜடைதான் . சும்மா இரு இவன் எங்க அம்மா மாதிரி இருக்கான். " என்று ஒவ்வொருத்தரும் தங்கள் மனதில் தோன்றுவதை வெளிப்படுத்துவது இயல்பே. அது முற்றிலும் உண்மை. அதனால் தான் ஒருவர் நம்மை விட்டு பிரிந்தாலும் அவர்களின் முக ஜாடை, நடை , உடை பாவனை எல்லாம் அவ்வளவு சீக்கிரம் மறைவதும் இல்லை நாம் மறப்பதும் இல்லை.

  அந்தக் காலத்தில் கூட்டுக் குடும்பமாய் இருந்தது இன்று குறுகி, குறுகி வெறும் தம்பதியர் ஒரு பெரிய இல்லத்தில் ஒருவர் தொலைக் காட்சியிலும் , மற்றவர் செல் போனிலுமாய் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இன்றைய கால நெருக்கடி, பொருளாதார சூழ்நிலை எல்லாம் புரியாமல் இல்லை. இருந்தாலும் குறுகிய மனப்பான்மை, பொறாமை, ஆணவம் இவற்றாலும் குடும்ப உறவுகள் மேன்படாமலே அழிந்து கொண்டிருக்கின்றது என்பதில் ஐயம் இல்லை. இந்தக் க்ஷணத்திலிருந்தாவது உண்மையை புரிந்து கொண்டு முற்போக்காய் சிந்தித்து சில ஆக்கப் பூர்வமான முடிவிற்கு வருவோமா?

  உறவுகளை பேணிக் காப்பாற்ற வேண்டும் என்று மீண்டும் மீண்டும் பறை சாற்றுவது இந்த உண்மையை நிலை நிறுத்தவே. தயவு செய்து ஒவ்வொருவரும் இதனைப் புரிந்து கொள்ளுங்கள். வாரத்தில் அல்லது மாதம் ஒரு முறையேனும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று கூடுங்கள். அண்ணன், தம்பி, அக்கா, தங்கை என்று கூடினால் ஒவ்வொருவரிடம் நம் பெற்றோரின், முன்னோரின் ஜாடை, பேச்சு இவற்றை காண முடியும். இந்த தலைமுறையோடு இதுவும் முடிந்துவிடும் அபாயம் வேறு! ஆம் ! ஒரே குழந்தை .. எங்கே அக்கா, தங்கை, அண்ணன், தம்பி என்று. பயமாக இருக்கிறது.

  எந்த ஒரு குடும்ப நிகழ்ச்சிக்கும் செல்வதை தவிர்க்காதீர்கள். அது உறவுகளை அவமானப் படுத்துவதோடு நம் பெற்றோர்கள், முன்னோர்களை நினைவூட்டும் தருணங்களை இழக்கின்றோம் என்பதையும் புரிந்துக் கொள்ளுங்கள். ஒரு குடும்ப கல்யாணம் என்றால், நம் சித்தப்பா, பெரியப்பா, அத்தை என்று அத்தனைக் குடும்பத்து உறவுகளும் கூடும் இடம் என்பது பொருளாகும். அங்கு கூடுபவர்களில் நம் தாயின் முகத்தைக் காணலாம், தந்தையின் குரலைக் கேட்கலாம். இழக்காதீர்கள்.

  ஒரு நவராத்திரி என்றாலும் எல்லோரையும் அழையுங்கள். அவர்கள் வீட்டிற்கு வருகை தருவது நம் பெற்றோரும், முன்னோரும் நம்முடன் உறவாட வருவதாய் உணர்வீர்கள். இது முற்றிலும் உண்மை.

  நம் கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் இவற்றை சுற்றியே உருவாகின என்பதை நாம் புரிந்துக் கொண்டால் போதும் எல்லாவற்றிற்கும் பதில் கிடைத்துவிடும்.
  Article by Mythili Ramjee

   
 2. Rabina

  Rabina Active Member

  Joined:
  Aug 14, 2018
  Messages:
  160
  Likes Received:
  102
  Trophy Points:
  43
  Gender:
  Female
 3. malarmathi

  malarmathi விழுந்தால் அழாதே, எழுந்திரு!

  Joined:
  Feb 6, 2018
  Messages:
  396
  Likes Received:
  327
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Occupation:
  இல்லத்தரசி
  Location:
  கோவை
  அருமையான பதிவு
   

Share This Page