என் மௌனங்களை மொழிபெயர்த்தவளோ/ En mounangalai Mozhi peyarthavalo by Sameera

Discussion in 'Serial Stories' started by Tamilsurabi, Oct 24, 2018.

 1. Sameera16

  Sameera16 Active Member

  Joined:
  Oct 24, 2018
  Messages:
  132
  Likes Received:
  177
  Trophy Points:
  43
  Gender:
  Female
  EMM-6

  அவளது தேடலுக்கு விடை இப்படி சட்டென்று கிடைக்கும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.
  'அம்மா தாயே..!!என் வேண்டுதலுக்கு இப்படி உடனே கண்முன்னே விடையை கொடுத்துவிட்டாயே.. கோடானகோடி நன்றி... இனியும் எனக்கு உறுதுணையா இரு..."
  என்று அவரமாக ஒரு நன்றியை அம்மனிடம் செல்லுத்த அதற்குள் வேண்டுதல் முடிந்து அங்கிருந்து நகர போன தேவ்வும் அவளை பார்த்து விட்டான்.
  பார்த்தவன் கண்களில் மிதமான ஒரு அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் வெளிப்பட்டது.
  அதிர்ச்சி..அவளை மீண்டும் சந்தித்தது..
  ஆச்சரியம் பார்த்த இருமுறையும் நவநாகரீக யுவதியின் பிரதியாய் இருந்தவள் இன்று அக்மார்க் தமிழ் பெண்ணாய் சாத்வீக லுக்கோடு இருப்பது.
  'ஒவ்வொரு வாட்டி ஒவ்வொரு கெட்டப்பில் வரா...உண்மையில யாரு தான் இவ...'
  என்று அவன் யோசிக்கும் போதே
  "ஹலோ ஜி..ஒன்னு முறைக்கிறீங்க...இல்லை முழிக்கிறீங்க..இதைவிட்டால் வேற எக்ஸ்பிரஸனே வராதா.."
  என்று கைகளை ஆட்டி குறும்போடு பூரணி கேட்க அவன் மீண்டும் முறைக்கவும் "இதோ...இதோ இப்பக்கூட.."
  என்று கூறி பக்கென சிரிக்க அவளது பேச்சில் அவனது உதட்டிலும் மெல்லிய கோடாய் புன்னகை...
  தலையசைத்து புன்னகைத்தபடி ரிதுவுடன் அங்கிருந்து அவன் நகர இரண்டே எட்டில் அவனை அடைந்தவள் அவனோடு நடந்தபடி,
  "லாஸ்ட் இரண்டு மீட்டிங்குமே நமக்கு சரியா அமையவில்லை.. அதுவும் நீங்க பார்க்கிற வாசிக்கெல்லாம் முறைச்சுக்குறீங்க.. அதெல்லாம் எனக்கு செட்டாகாது...பேசாமல் நாம பிரண்ட்ஸ் ஆகிடால் என்ன..!!"
  என்று நிறுத்தி "மைசெல்ஃப் பூரணி...டூயிங் பி.டெக் ஃபைனல் இயர்.."
  என்றாள் அறிமுகமாக.. இலகுவாய் பேசுபளிடம் முகத்தை திருப்பி செல்ல தேவ்விற்கு மனமில்லை.
  "அம் தேவ் ஆனந்த்..இவன் என் பையன் ரித்வா"
  என்றதோடு நிறுத்திக்கொள்ள 'இவன் இப்படி தான்..' என்றெண்ணி விட்டுவிட்டு குனிந்து இவளையே சிறிய மிரட்சியோடு தந்தை கையை கட்டிக் கொண்டு பார்க்கும் ரித்வாவின் உயரத்திற்கு இறங்கி,
  "குட்டி சார்..நமக்கு இன்ரோடெக்ஷன் தேவையில்லைனு நெனக்கிறேன்.."
  என்று புன்னகைத்தபடி அவன் கையை பற்ற அதை உடனே உதறிவிட்டு தந்தையை இன்னும் ஒன்றினான்.
  "நீ பயபடுற அளவுக்காடா மோசமா இருக்கேன்.."
  என்று ரிதுவிடம் கூறியவள் "என்னை மறந்துட்டான் போல சார்..."
  என்று தேவ்விடம் கூற ஆனால் அவனுக்கு தானே தெரியும் அன்று தான் கூறியதை மறக்காததால் தான் இந்த பயமென்று..
  மீண்டும்,
  "இங்க வாடா...நான் சாக்லேட் தரேன்.."
  என்று ஆசைக்காட்ட அவைகெல்லாம் மசிய அவன் என்ன 90s கிட்டா () 2k கிட்டாகிட்டே..
  "சாக்கி என்த நெயையா இக்கு போ.."
  என்றவன் "உன்த வவல(வரல) வந்தா நீ என்ன தூக்கி போயிருவேனு டாடி சொன்னா..நா வவ (வர) மாத்தேன்..."
  என்று அழகாய் தன் தந்தையை கோர்த்துவிட
  'அட பாவி...என்னை பார்த்தால் புள்ள புடிக்கிறவ மாதிரியா இருக்கு...'
  என்பதுபோல் அவனை அவள் பார்க்க அவனுக்கு தான் சங்கடமாக போயிற்று.
  'நீ என்ன நினைத்தால் எனகென்ன..' என்று அலட்சியமாய் போயிருக்கலாம் தான்.ஆனால் அவளது பாவனையே அவள் வருத்ததை உணர்த்த ரித்து முகத்தை தன் புறம் திருப்பி,
  "கூப்பிடுறாங்கள்ள போ..."
  என்று கூறவும் அவன் தயங்கி அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் தேவ்வை பார்க்க
  "நான் தான் இருக்கேன்ல...போடா.."
  என்று மீண்டும் ஊக்குவ்விக்கவும்
  மெல்ல அவள் கைகளில் போக விரிந்த புன்னகையோடு அவனை அள்ளி அணைத்துக் கொண்டாள்.
  "நெறைய சாக்லேட் இருக்கா உன்னுட்ட..ம்ம்..."
  என்று கொஞ்சும் மொழியில் பேசியவள் வரவழைத்த எதார்த்த குரலில்,
  "ஏன் சார்....ரிது அம்மா வரலையா...?"
  என்று கேட்க "வரவில்லை.."
  என்றான் ஒரு வார்த்தையில்..
  "ஏன் சார்...அவங்களுக்கு வெளியே எங்கேயும் வர பிடிக்காதோ..ஏன்னா அன்னைக்கு ரோட்லையும் சரி..பார்க்லையும் சரி..இப்பவும் சரி அப்பவும் மகனும் மட்டும் காட்சி தரீங்களே..அதான் கேட்டேன்..."
  பட்டென கேட்டுவிட்டால் தான் ஆனால் கேட்டபின்பு தான் தான் பேசியது அதிகபடியோ என்று தோன்றயது.எதாவது முகத்தில் அறைந்தார் போல் பேச போகிறான் என்று எதிர்பார்த்த நின்றவளுக்கு அவனது,
  "இல்லை...அவளுக்கு கொஞ்சம் ஹெல்த் இஷ்ஷு...அதான் வரவில்லை.."
  என்ற அமைதியான பதில்...'சே..நீ அவ்வளவு சிடுமூஞ்சு இல்லைப்பா..'
  என்று எண்ண வைத்தது.
  சட்டென்று அவன் கூறிய செய்தியை உணர்ந்தவள் காவ்யாவிற்கு என்ன..? என்று பதைப்பு தோன்ற,
  "ஹோ சாரி..."
  என்றவள் " இஃப் யூ டோன்ட் மைய்ன்..உங்க ஒய்ப்விற்கு என்னாச்சுனு தெரிந்துக் கொள்ளலாமா...!"
  என்று கேட்டவளுக்கு 'ஒய்ப்..' என்ற வார்த்தை ஆணியடித்தார் போல் ஒரு நிதர்சனத்தை அவளுக்கு உணர்த்தியது.உள்ளுக்குள் ஒரு படபடப்பு..இருக்க கூடாது..கூடாது என்ற துடிப்பு.
  "இல்லை...ஒன்னுமில்லை...ஸீ வில் பீ ஆல்ரைட்..."
  என்று நாசுக்காக தேவ் சொல்ல மறுத்தவிட அதை விடுத்து தான் யோசிப்பது சரிதானா என்பதை ஊர்ஜித படுத்த,
  "என் கெஸ்ஸிங் சரி என்றால்..இன்றைக்கு ரிது அம்மாக்கு தான் வேண்டிக்க வந்தீங்க...அவங்க பேரு காவ்யா. கரெக்ட்டா.."
  என்று பூரணி கூறவும் "கரெக்ட் தான்.." எனறு கூறி சத்தமின்றி அவளுள்ளே ஒரு யுத்ததை தொடங்கி வைத்தான்."
  நீங்க தனியாவா வந்தீங்க...."
  என்று பேச்சை மாற்ற தேவ் கேட்க அவளுக்குமே அவனுடன் பேசும் மனநிலையில்லை.
  "இல்லை..என் ஃபிரண்ஸோட வந்தேன்..."
  என்றவள் "ஓகே..என் ஃபிரண்ஸ் தேடுவாங்க..நான் கிளம்புறேன்... வாய்ப்பிருந்தால் மறுபடியும் சந்திப்போம்...நைஸ் டு மீட்டிங் யூ..."
  என்று விடைப்பெற்று கொண்டு அங்கிருந்து நகர்ந்தவளின் எண்ணம் "தேவ்வின ஓய்வ் காவ்யாவா...." என்பதிலேயே சுற்றி வந்தது.
  "அப்போ காவ்யாவிற்கு திருமணமாகி விட்டதா..??தன் புது வாழ்க்கையை தேவ்வுடன் அமைத்து கொண்டாளா...அப்போ இனி அவளை கண்டுபிடித்து தான் என்ன பயன்..?அவள் வாழ்க்கையில் முன்னேறி விட்டாள் என்றபோது பழசை கிளறுவதில் அர்த்தமில்லை..
  ..."
  என்பது போல் ஆயிரம் கேள்விகளோடு தன் சிந்தனையில் உழன்றவளின் மூலை,
  "ஆனால்...ஆனால்..இவர்கள் கணவன்-மனைவி என்ற செய்தி தனக்கு ஏன் இவ்வளவு வலியை தருகிறது..."
  என்று யோசிக்கும்போதே
  " உன் வலிக்கு அது காரணமா இல்லை தேவ்விற்கு மனைவி என்று ஒருவள் இருக்கிறாள் என்ற உண்மை காராணமா. ?!"
  என்று மனம் நக்கல் செய்ய தன் எண்ணபோக்கை கண்டு திடுக்கிட்டவள் "ச்சே...ச்சே...அப்படிலாம் இல்லை..."
  என்று படபடப்பாய் சொல்லிக் கொள்ள அதே சமயம் அவளை ஒரு கை உலுக்கியது. தூக்கத்தில் இருந்து விழிப்பவள் போல் திடுக்கிட்டு முழித்தாள்.
  அவளை வினோதமாய் பார்த்தபடி
  "உன்னை எங்களாம் தேடுவது..இங்கென்னடி பேக்கு மாதிரி நிக்கிற.."
  என்று மயூரி வினவ அதற்குள் மற்ற இருவரும் அருகே வந்திருந்தனர்.
  "இல்லைடி...ஏதோ யோசனையில் அப்படியே இந்த பக்கம் வந்துட்டேன்...சரி வாங்க போலாம்.."
  என்று நகர்ந்தவளையே கூர்மையாய் பார்த்தாள் ராகினி.
  வெளியே வந்ததும் ப்ரியாங்காவும் மயூரியும் ஒரு ஸ்கூட்டியிலும் ராகினியும் பூரணியும் ஒரு ஸ்கூட்டியிலும் கிளம்ப சற்று தூரம் சென்றதும் ராகினி மெல்ல ஆரம்பித்தாள்.
  "என்னாச்சு...மூட் ஆஃப் மாதிரி இருக்கு...தேவ் சாரோட மறுபடியும் சண்டையா.. "
  "ம்ச்.. அதெல்லாம் இல்லை.."
  என்றவள் மென் குரலில்"நீ சொன்னா மாதிரி தான்..தேவ்வும் காவ்யாவும் ஹஸ்பண்ட் அன்ட் ஓய்ப்..."
  என்று கூற இருவருக்கும் இடையில் பலத்த அமைதி.
  "அவ லைஃப்ல மூவ் ஆன் ஆகிட்டாள்.அதுவும் நல்லது தான்.அவ பட்ட கஷட்டத்திற்கு பலன் தான் தேவ் அவளுக்கு கிடைத்திருக்கார்." என்றவள் தொடர்ந்து,
  "அவளை பற்றி இங்கே தகவல் கிடைத்தது..நாம் தேடியது எல்லாத்தையும் இத்தோடு மறந்துடுவோம்..மாயமாய் மறைந்தவள் மறைந்தவளாவே இருக்கட்டும்.."
  என்று கூறும் போதே குரல் அடைத்தது.எதிலோ தோற்ற உணர்வு.. அவனுடன் பேசியது அவன் சொன்னது என்று அனைத்தையும் சொல்லி முடிக்க
  சின்ன அமைதிக்கு பின்,
  "நீ..நார்மலா தான் இருக்கியா.."
  என்று ராகினி கேட்க "ஏன்டி.."
  என்று பூரணி கேட்டாள்.
  "பின்ன..அவர் சொன்னதை கேட்டதும் உனக்கு ஒரு விஷயம்
  இடிக்கலை.."
  என்று நிதானமாக ராகினி கேட்க
  "இல்லையே..ஏன்..."
  என்ற பூரணியை மிரர் வழி முறைத்தவள்
  " அப்புறம் என்னடி ஒரு மாசம் அவரை ஃபாலோ பண்ணின.."
  என்ற அவள் கோவப்படவும் பூரணி பரிதாபமாய் "எனக்கு புரியலைடி.."
  என்று கூறும் தோழி ராகினிக்கு புதிதாய் தெரிந்தாள்.
  எந்த விஷயத்தையும் கற்பூரமாய் புரிந்துக் கொள்பவள் இந்த சாதாரண விஷயத்தை கோடிட்டு காட்டியும் புரியவில்லை என்கிறாளே..!!இவளுக்கு என்ன தான் ஆச்சு என்று கவலையானாள்.
   
 2. Sameera16

  Sameera16 Active Member

  Joined:
  Oct 24, 2018
  Messages:
  132
  Likes Received:
  177
  Trophy Points:
  43
  Gender:
  Female
  EMM-7

  "தேவ்வை பற்றி அவர் இருக்கும் அப்பார்ட்மெண்டில் கேட்டவரைக்கும் என்ன சொன்னாங்க...அவரும் அவர் பையனும் மட்டும் தான் தனியா வசிக்கிறதாவும், அவர் மனைவி, அம்மா, அப்பா அப்படி யாரும் அங்க இருந்ததும் இல்லை.அவங்களை பற்றியெல்லாம் அவர் பேசியதும் இல்லைனு தானே சொன்னாங்க .இதில் அந்த செக்ரேடரி ஆன்ட்டி 'அந்த தம்பி ரொம்ப நல்ல தம்பி ம்மா..தனியாளா அவர் பையனை எவ்வளவு பொறுப்பா வளர்க்குறாரு தெரியுமா..அப்படி..இப்படி...'
  புகழ்ந்து பாடினப்பா கூட பெருமையா நினைச்சியே இப்போ திடீரென அவர்கூட காவ்யா எங்கேந்து வந்தாங்க.."
  என்று அவள் கேட்டதும் சடன் பிரேக் போட்டு நிறுத்தியவள்
  "ஆமாம்ல..இதை நான் யோசிக்கவே இல்லையே...ஆனால் அவர் என்னிடம் எதுக்கு மாற்றி சொல்லனும்"
  என்று ராகினியிடம் கேட்டாள் குழப்பமாக...
  "நீ யாரு அவருக்கு...?யாரோ 3rd பெர்சன்..நீ கேட்டதும் அவர் குடும்ப விபரத்தை உன்னிடம் ஒப்படைப்பாராக்கும்..."
  என்று ராகினி கேட்டதும் பூரணி முகம் சுருங்கியது.'நான் தெர்ட் பெர்சனா..'
  "இப்போ என்ன தான்டி சொல்லவர..."
  என்று பூரணி கேட்கவும்,
  "ம்ம்.. தேவ்வின் மனைவி காவ்யாவாவே இருந்தாலும் இப்போ அவர் கூட இல்லை என்பது நிச்சயம்...அவர் அப்பார்ட்மெண்ட் மக்கள் யாரிடமும் காவ்யாவை பற்றி மூச்சுவிட்டதில்லை..அப்போ அவங்க என்ன தான் ஆனாங்க... அதை தெரிந்துக் கொள்ளலாம் இதை அம்போனு விட்டு எப்படி போக முடியும்..."
  என்று கேட்கும் ராகினியை விழி விரியா ஆச்சரியமாய் பார்த்தாள் பூரணி.
  "நீ ஏன் அப்படி பார்க்குறனு புரியுது..என்னடா ஆரம்பத்தில் இருந்து எதுக்கு இந்த வேலை.. பிரச்சனை வந்திட போகுது விட்டுடு..விட்டுடு சொன்னவ இப்படி மாத்தி பேசுறாளேனு தானே பார்க்குற.."
  என்று நிறுத்தியவள் தொடர்ந்து,
  "நேற்றுவரைக்கும் யாரு என்னானே தெரியாத ஒருத்தர ஒரு குருட்டு நம்பிக்கையோட ஃபாலோ பண்ணின..அதனால பயந்தேன்.. ஆனால் இன்னைக்கு அப்படி இல்லையே...அவரோட மனைவி,ரிதுவோட அம்மா நாம நினைக்குற காவ்யா தானானு உறுதியாயிடுச்சு..இப்போ அவங்களை நம்ம கண்ணால பார்க்காமல் பாதியிலே விட்டுவிட்டு போனால் அதில் என்ன நியாயம்..அது உன் மனசுல ஒரு ஓரம் அரிச்சிட்டே இருக்கும்...ஆரம்பிச்சது ஆரம்பிச்சிட்ட என்னானு தான் ஒரு கை பார்த்துடுவோமே.."
  என்று ராகினி முடிக்க பூரணி முகத்தில் ஒரு தெளிவு பிறந்தது.
  (ஆனால் மக்களே உங்களை குழப்பிட்டேனா ஹிஹிஹி )
  ராகினி, பூரணி மனதில் தேவ்வின் மீது சலனம் இருப்பதை அறிந்திருந்தால் நிச்சயம் அன்றே தேவ்வை பற்றிய பேச்சிற்கு என்ட் கார்ட் போட்டிருப்பாள்.பூரணியும் அவ்வளவு வலியை அனுபவித்திருக்க மாட்டாள்.
  பாவம்!! 'ஃபுல் ஸ்டாப்' வைக்க வேண்டிய விஷயத்திற்கு தன்னை அறியாமல் விதியின் சூழ்ச்சியால்
  ராகினி 'காமா' போட்டு தொடர செய்தாள்.
  "ஆனால் ஒன்னு...இப்போ எக்ஸாம்ஸ் வந்திச்சு...இப்போ ஸ்டெடிஸில் கான்ஸன்ரேட் பண்ணு முடிந்ததும் அதை பற்றி திங் பண்ணு.."
  என்று ராகினி ஸ்ரிட் ஆஃபிசராக மாறி கூற அப்பொழுது சரி சரி என்று தலை ஆட்டியவளுக்கு
  ஞாயிற்றுக்கிழமை வந்ததும் நிலைக்கொல்லாமல் தவித்தாள்.
  மனமெல்லாம் தேவ்வை காணவே துடிக்க ஏதேதோ காரணங்களை சொல்லிக் கொண்டு அன்றும் பார்க்கிற்கு சென்றாள்.
  'எதற்கு இவ்வளவு ஆர்வம்...!?இது உன்னை ஆபத்தில் தான் கொண்டு போய் நிறுத்தும்..'
  என்று மூலை எவ்வளவோ எச்சரித்தாலும் அதனை பொருட்படுத்தாது அந்த பார்க்கை கண்களால் அலசியவளின் விரலை யாரோ பற்ற குனிந்து பார்த்தவள் தனது அரிசி பல் தெரிய சிரித்த ரித்வாவை கண்டதும் அவள் முகம் புன்னகையை பூசியது.
  அப்போதே,
  "யாரையோ தேடுறீங்க போல.."
  என்று தேவ்வின் குரல் கேட்டது.
  அவன் எதார்த்தமாக தான் கேட்டான்.பூரணிக்கு தான் குப்பென்று வேர்க்க,
  "இ-இல்லை..சு-சும்மா வேடிக்கை தான் பார்-த்-தேன்.."
  என்று தடுமாற அவளை காப்பாற்றுவது போல் ரித்வா,
  "டாடி..அங்க..அங்க..."
  என்று ஊஞ்சலை சுட்டி காட்டி குதித்தான்.
  "சரி வா "
  என்று அவனை அழைத்துக் கொண்டு தேவ் நகர
  "நீயும் வா ஆன்த்தீ..."
  என்று ரித்வா அழைக்கவும் அதற்காகவே காத்திருந்தார் போல் அவர்களோடு இணைந்து கொண்டாள் பூரணி.
  அங்கே ஒரு ஊஞ்சல் காலியானதும் அதில் ரித்வாவை ஏற்றி அமர வைத்தவன் மெல்ல ஊஞ்சலை ஆட்டினான்.
  "சரி...அன்னைக்கு ஏன் ஆகாத ஆக்சிடென்டிற்கு அவ்வளவு ஆர்ப்பாட்டம் பண்ணினே.."
  என்று தேவ்வே பேச்சை தொடங்கினான்.
  "அப்போ நீங்க என்னை இன்னும் நம்பவில்லையா...அய்யகோ இந்த அவலத்தை நான் எங்கே போய் சொல்ல...ஒரு பச்ச மண்ணை அன்னைக்கு--"
  என்று அவள் தொடங்கவுமே வேகமாய் கையை உயர்த்தி ஒரு கும்பிடு போட்டவன்,
  "அம்மா தாயே... தெரியாமல் கேட்டுடேன்..விட்டுடு.."
  தேவ் அவரசமாய் தவிர்த்தான்.பின்னே இன்னும் ஒரு முறை அவளது ஆக்சிடென்ட் கேட்டால் அவன் காதில் இரத்தமே வந்துவிடாதா.!!
  "ம்ம்..அது..." என்று கெத்தாக கூறியபடி அந்த ஊஞ்சல் கம்பியில் சாய்ந்து நிற்க,
  "ஆமாம்..உன்னை எப்படி உங்க வீட்டில் வைத்து சாமாளிக்கிறாங்க.."
  என்று அதிசயம் போல் கேட்க சிரித்தவள்,
  "ஹாஹா..வச்சிக்க முடியாமல் தான் தொறத்திவிட்டாங்க.. "
   
 3. Sameera16

  Sameera16 Active Member

  Joined:
  Oct 24, 2018
  Messages:
  132
  Likes Received:
  177
  Trophy Points:
  43
  Gender:
  Female
  "என்னாது...!!?!!"
  "நீங்க நினைக்கிறா மாதிரியலாமில்லை.. எங்க ஊரு கோவை..இங்க ஸ்டெடிஸ்காக பிரெண்ஸோட தங்கியிருக்கேன்.."
  "ஓஹோ..."
  "ம்ம்..உங்களுக்கு எப்படி..சென்னை தான் பூர்வீகமா.."
  "மேபீ இருக்கலாம்...எனக்கு விவரம் தெரிய ஆரம்பித்த வயசுலேந்தே சென்னை தான்.."
  என்ற தேவ்வை அவள் புரிந்தும் புரியாமலும் குழப்பமாய் பார்க்கவும் அதை புரிந்துக் கொண்ட தேவ்,
  "நான் ஆர்பன்...வளர்ந்தது எல்லாம் விவேகானந்தர் ஆசிரமம்.."
  என்று பதிலளிக்க அவள் இதை எதிர்பார்க்காததால் என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தாள்.
  "ரொம்ப முழிக்காத...ஃபீரியா விடு..இருபத்தியெட்டு வருஷமா பழகி போன விஷயம் தான்.."
  என்று தேவ சாதாரணமாக தோளை உலுக்க அவளுக்கு மனதிற்கு கஷ்டமாய் இருந்தாலும் அதை வெளி காட்டாது,
  "ம்ம்..சந்தடி சாக்கில் உங்களுக்கு 28 வயசு தானு சொல்றீங்க.."
  என்றாள் விளையாட்டாக..
  "பின்ன இல்லையா..என்னை பார்த்தா எப்படி தெரியுது.."
  என்றவனை ஒருமுறை தலை முதல் கால்வரை பார்வையால் அளவிட்டவள்,
  "ஸ்கூல் போற வயசுல பையன் இருக்கு... இன்னும் 'இது வாலிப வயசு'னு வடிவேல் மாதிரி டையலாக் அடிப்பீங்க போல....இது உங்களுக்கே நியாயமா.."
  "ஹலோ...ஸ்கூல் கேர்ள் மாதிரி இருக்க நீ...பி.டெக் ஃபைனல் இயர்னு சொன்னப்போ நான் நம்பினேன..அது மாதிரி தான்.."
  "சரி சரி... இதுக்கும் அதுக்கும் சரியா போச்சு விட்ரூங்க.."
  என்றாள் சமாதானமாய்.. அதன் பின் பேச்சு அவள் படிப்பு,அவன் வேலை என்று பல திசைகளில் பயணிக்க சற்று நேரத்தில் தேவ் ரித்வாவிடம்,
  "சரி போதும் ரிது...நிறைய குட்டீஸ் வெய்ட் பண்றாங்க பாரு...நீ இறங்கிகோ.. அப்புறம் ஆடலாம்.."
  என்று கூறவும் பிடிவாதமாய் உஞ்சல் செய்னை பிடித்துக் கொண்டு,
  "ம்ம்ஹூஹூம்..நா வெளாதானும்..."
  என்று சிணுங்க
  "நோ ரிது...இதென்ன பழக்கம்.. இறங்கு..."
  என்று கண்டிப்பாக கூற அவனை பாவமாக நிமிர்ந்து பார்த்த ரிது,
  "பீஸ்...பீஸ் டாடி...இன்னும் ஃபைவ் டைம்ஸ் மட்டும்...பீஸ் என் செல்லோம்ல."
  என்ற அவனது கொஞ்சல் மொழியில் பூரணியை விட்டால் நாள் பூராவும் கூட அமர்த்தி விளையாட வைத்திருப்பாள்.
  "இப்படி ஐஸ் வச்சே உனக்கு வேண்டியதை சாதிக்க.. உங்கம்மா மாதிரி..."
  என்று தேவ் செல்லமாய் முதுகில் தட்டியவன் ரிது கேட்டதை செய்யவும் தவறவில்லை.
  அவர்கள் சம்பாஷணையை கேட்டு சிரித்தவள்,
  "காவ்யாவும் இங்க சென்னை தானா...உங்களுக்கும் அவங்களுக்கும் எப்படி லவ் மேரேஜா??அரேஜ் மேரேஜா??...வெயட்...வெய்ட்...நானே சொல்றேன்...லவ் மேரேஜ் தானே..!!!"
  என்று தேவ்விடம் கேட்டதற்கு எந்த பதிலும் இல்லாமல் கண்களை எட்டாத புன்னகையே பதிலாக வர அவளும் விடுவதாய் இல்லை.
  "என்ன பாஸ்...ஸ்மைல் பண்றீங்க..அப்போ என்னவோ இருக்கு..உங்க லவ் ஸ்டோரி சொல்லுங்க...எனக்கு கதை கேட்க ரொம்ப பிடிக்கும்.."
  என்றவளை பார்த்து ஏதோ சொல்வது போவது போல் அவன் தொண்டை கனைக்கவும் இதயம் படபடக்க காதுகளை கூர்மையாக்கி அவள் இருக்க,
  "இன்னோர் நாள் சொல்றேன்..."
  என்று அவன் மறு மொழிக் கூறவும் புஸ்ஸென்று ஆனாது.
  அன்று அவள் வந்த வேலை நிறைவேறாமல் போனாலும் தேவ்வோடு ஒர் அழகிய நட்பு உருவானது.
  அதன் பின் வார இறுதியில் அவனை சந்திப்பதை தனது வழக்கமான செயலாக வைத்துக் கொண்டாள்.சில சமயம் ராகினிக்கு தெரிந்து பல சமயம் தெரியாமல்...!!
  பார்க்கை தவிர வேறெங்கும் சந்திக்க முற்பட்டதில்லை.ஏன் ஃபோன் நம்பர் கூட மாற்றிக் கொள்ளவில்லை. பேசி வைத்து வரவில்லையெனினும் அன்று அவர்கள் சந்திப்பு இருவருக்கும்
  வழக்கமான ஒன்றானது.ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு பேச்சில் காவ்யாவை பற்றியோ இல்லை அவர்கள் லவ் ஸ்டோரி பற்றி கேட்டுவிடுவாள்.அவனும் சலிக்காமல் அதே பதிலையே தருவான்.(அதாங்க..இன்னோர் நாள் சொல்றேனு..)
  இதுவும் இவர்களுக்குள் ஓர் வழக்கம் தான்.
  இந்நிலையில் அவளது செமஸ்டர் தேர்வுகளும் முடியும் தருவாயில் இருந்தது. பொங்கல் விடுமுறைகளோடு சேர்த்து வரும் இந்த தேர்வு விடுப்புகளுக்கு நால்வரும் அவரவர் ஊருக்கு செல்ல இருப்பதால் அந்த வார இறுதியில் அவனிடம் நேரடியாகவாவது கேட்டு விடுவது என்ற முடிவோடு சென்றாள்.
  அந்தோ பரிதாபம் அவன் அன்று வரவேயில்லை!!!
  கிட்ட தட்ட இரண்டு மணி நேரம் அவன் வருவான் என்று எதிர்பார்த்து இருந்தவள் இறுதியில் ஏமாற்றதோடே வீடு திரும்பினாள்.
  ஏன்...ஏன்... என்னாச்சு என்ற கேள்விகள் வணடாய் குடைந்தது.
  "எதாவது ஆஃபிஸ் ஓர்க்காக இருக்கும்..."
  என்று தனக்கு தானே சமாதாரணம் சொல்ல முற்றபட்டதெல்லாம் படு தோல்வியே அடைந்தது.
  வாரம் தவறாது அவனை சந்தித்தாளோ என்னவோ அன்று காணாதது அடுத்த வாரம் வரும் வரை அதே நினைப்பாய் சுற்றினாள்.
  இந்த வாரம் வந்துவிடுவான் என்ற எதிர்பார்ப்போடு போனவளுக்கு இப்பொழுதும் ஏமாற்றமே மிஞ்ச மனதால் மிகவும் நொந்து போனாள்.
  'அவன் இந்த அளவுக்கு என்னை பாதிக்கீறானா..."
  என்று அவளே தன்னை எண்ணி பயப்படும் அளவுக்கு அவள் மனம் அவனை தேடினாள்.இந்த தேடலே அவனுக்கான அவள் ஃபீலிங்க்ஸ் என்னவென்று அவளுக்கு வெட்ட வெளிச்சமாக்கியது.
  'இது தவறில்லை..?அடுத்தவள் கணவரை என் மனதில் சுமப்பது எவ்வளவு பெரிய இழி நிலை..அந்த அளவிற்கு நான் தரம் தாழ்ந்துவிட்டேனா...!எடுத்த காரியத்தில் இருந்து திசை மாறி என் மனதை பறிக் கொடுத்து நிற்கிறேனே..ராகினி என்னை பற்றி என்ன நினைப்பால்..?என் மனம் இவ்வளவு பலகீனமானதா..'
  என்று தன் மனசாட்சி கேட்கும் கேள்வியே தாங்காது துவண்டு தான் போனாள்.
  இவள் இவ்வாறு இருப்பதை பார்த்து இவள் தோழிகளுக்கு தான் பயமாய் போனது.எனவே ராகினியும் தன் வாயிற்கு போட்ட பூட்டை அவிழ்த்து நடந்தவ்றை ப்ரீயங்காவிகடமும் மயூரியிடம் சொல்ல முதலில் அதிர்ந்து ராகினியை வசை பாடினாலும் சுதாரித்து என்ன செய்வது என்று யோசித்தனர்.
  பின் முதல் வேலையாக தேர்வுகள் முடிந்தவுடனேயே அவளை கோவைக்கு அனுப்பி வைத்தனர்.


  Hi makkale...
  wish you all happy diwali..diwali special ah double update;)
  Enjoy the day with sweets and crackers :love:
   
 4. Rabina

  Rabina Well-Known Member

  Joined:
  Aug 14, 2018
  Messages:
  670
  Likes Received:
  420
  Trophy Points:
  63
  Gender:
  Female
  nice update
   
 5. kannamma 20

  kannamma 20 Well-Known Member

  Joined:
  May 14, 2017
  Messages:
  475
  Likes Received:
  353
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Poorani unmaiya kandupidikkama vida matta polaye. Ipo dev vera kanom .meet pannve illaye.enge ponan
   
 6. Sameera16

  Sameera16 Active Member

  Joined:
  Oct 24, 2018
  Messages:
  132
  Likes Received:
  177
  Trophy Points:
  43
  Gender:
  Female
  thank you :love:
   
 7. Sameera16

  Sameera16 Active Member

  Joined:
  Oct 24, 2018
  Messages:
  132
  Likes Received:
  177
  Trophy Points:
  43
  Gender:
  Female
  thank you sis:love:next chap la therinjidum
   
 8. Sameera16

  Sameera16 Active Member

  Joined:
  Oct 24, 2018
  Messages:
  132
  Likes Received:
  177
  Trophy Points:
  43
  Gender:
  Female
  EMM-8

  அந்த காலை பொழுதில் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்த இரயில் நிலையத்தில் தற்போது தான் கோவை எக்ஸ்ப்ரஸ் தனது நீண்ட பெட்டிகளோடு அலுங்க குழுங்க மெல்ல நிலையத்தை அடைந்தது.
  இரயில் நிறுத்தப்பட்டதும் பயணிகள் இறங்கிய வணணம் இருக்க அவர்களுள் ஒருவராக தனது தோள் பையை இறுக்கப்பற்றியபடி இறங்கினாள் பூரணி.
  வீசும் காற்றில் அலைமோதும் தனது விரிந்த கூந்தலை முன்னூச்சியில் இருந்து பின்னால் ஒதுக்கியபடி சுவாதீனமாக நடந்த பூரணி பார்வையால் கூட்டத்தில் ட்ரைவரை தேட அவள் பார்வைக்கு கிட்டியவரோ அவளது தந்தை...அரவிந்த் ராஜ்.
  வெள்ளை நிற ஃபார்மல்ஸில் பக்கா தொழிலதிபர் தோற்றதில் இருந்த அவரும் அவளை தான் தேடுகிறார் என்பது அவரது அலைபாயும் பார்வையிலே தெரிந்தது.
  "அப்பா..!!"
  என்றபடி அவரை பூரணி நெருங்க அவளை கண்டதும் அவர் முகம் தௌசன் வால்ட் பலப்பாக பிரகாசமானது.
  "அம்மூ..."
  என்று அவர் வயதையும் மீறி சத்தமாக அழைத்தபடி ஒரே எட்டில் அவளை அடைந்தவர்
  அவளை தோளோடு அணைத்தார்.
  "ஏன்ப்பா உங்களுக்கு வீண் சிரமம்...ட்ரைவ் அங்கிளையே அனுப்பிருந்தால் வந்திருப்பேனே..."
  "சிரமமா..?! உன்னை சென்னைகே வந்து அழைத்துவர தான் என் விருப்பம்...நீதான் பிடிவாதம் பண்ணினே...இப்போ ஸ்டேஷனிற்கும் வரக்கூடாதா..!.இது என்னம்மா நியாயம்..."
  என்று அவர் கேட்டதற்கு புன்னகை மட்டுமே பதில்..
  பேசியபடி அங்கிருந்து வெளியேறிய அப்பா-மகள் அவர்களுக்காக காத்துக் கொண்டிருந்த காரில் ஏறி வீடு நோக்கி பயணமானர்.
  மகளிடம் தெரிந்த மாற்றத்தை சற்று நேர பயணத்திலேயே கண்டுக் கொண்டார்..பூரணி...இயல்பிலே கலகலப்பான பெண் இல்லையெனினும் தந்தையும் மகளும் கூட்டு சேர்ந்தாள் வீடு தாங்காது..ஆனால் சில வருடங்களுக்கு முன் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் ஒரு சிறு பிளவு இருவருக்கும் உண்டானது.அதன் விளைவாய் அவளது வாய் துடுக்குதனத்தையும் அவரிடத்தில் குறைத்து கொண்டாள்.
  ஆனால் இன்று அதையும் மீறி மிகவும் சோர்ந்து காணப்படவும்
  "அம்மூ... எதாவது பிரச்சனையாடா.."
  என்று பரிவோடு கேட்டார்.
  இதுவே முந்திய பூரணியாய் இருந்தால் அவர் கேட்கும் முன் எல்லாத்தையும் ஒப்பித்துவிட்டு "ஹெல்ப் மீ ப்பா...."
  என்று நின்றிருப்பாள்.ஆனால் இப்போதோ அதே அமைதியான புன்னகையோட,
  "ஒன்னுமில்லைப்பா... கொஞ்சம் டையர்ட் அவ்வளவு தான்..."
  என்று கூறி தலை சாய்த்துக் கொண்டாள்.
  அதன்பின் வீடு வரும்வரை இருவரும் மௌனத்தையே கடைப்பிடித்தனர்.
  கார் அவர்களது மாளிகை போன்ற வீட்டின் கேட்டை தாண்டி உள் நுழைந்தது.
  அந்த வீட்டின் பிரம்மாண்டமே அவர்களது செல்வ நிலையை உணர்த்தும்...ஆனால் அந்த அழகிய வீடே பொலிவின்றி இருப்பதுப்போல் இருந்தது பூரணிக்கு..!!
  வீட்டின் அந்த அசாத்திய அமைதி அவளை என்னவோ செய்தது.
  அவளும் அவள் அண்ணன் மகேஷும் இருக்கும் போது வீடு எந்நேரமும் சந்தைகடையாய் கலகலவெனவே இருக்கும்...இன்றோ மியூசியம் போல் எவ்வளவு அமைதி..
  உள்ளே வந்ததுமே அவள் கண்கள் தாயை தான் தேடியது.
  "அம்மா எங்கப்பா.."
  என்று கேட்க "ரூம்ல தான் இருப்பா..வா.."
  என்றவர் தொடர்ந்து,
  "அவளுக்கு உடம்பு சரியில்லை அம்மூ.."
  என்க "என்னது..!!! ஏன் என்னாச்சு...என்னுட்ட ஏன்ப்பா சொல்லவேயில்லை.."
  என்றபடி அவர்களது அறைக்கு விரைந்தாள். அங்கே கட்டிலில் சுருண்டு படுத்திருந்த தாய் கனிமொழியின் அருகில் சென்றமர்ந்தாள்.
  சோர்ந்த உடலும் கண்களுக்கு கீழ் கருவளையமும் முகத்தின் சுருக்கமும் அவரை இன்னும் பத்து வயசு கூட்டி காட்ட பூரணியின் இதயத்தை பிழிவது போல் வலித்தது.
  "வைரல் ஃபீவர் அம்மூ..நேத்தியெல்லாம் கண்ணே தொறக்க முடியாம கஷ்ட்டபட்டா...நீ வீட்டுக்கு வந்ததும் சொல்லிக்கலாம்...தூரமா இருக்குற உங்களை கஷ்டபடுத்த வேணானு சொல்லிட்டா.."
  என்று தந்தை கூறுவதை கேட்டபடி கனிமொழியின் கன்னத்தில் அவள் கைவைத்தாள்.
  அரை தூக்கத்தில் இருந்தவர் சட்டென்று விழக்க கண்மூன் தன் மகளை கண்டதும் அந்த சோர்வையும் மீறி அவர் முகம் மலர்ந்தது.
  "அம்மூ...வந்துட்டியாடா.."
  என்றபடி எழுந்தவர்,
  "உன்னை தான் எதிர்பார்த்துடே இருந்தேன்..எப்போ கண்ணசந்தேனே தெரியல.."
  என்று கூற
  "நான் வந்தது இருக்கட்டும்...நீங்க என்னம்மா இப்படி இருக்கீங்க..உங்க உடம்ப கவனிச்சுக்குறதே இல்லையா...உங்களுட்ட பிடிச்சதே உங்க கம்பீரமான அழகு தான்..அது எங்கே...சாப்பிடுறீங்களா இல்லையா.."
  என்று படபடவென பொரிய அவர் அமைதியே கடைப்பிடித்தார்.
  இப்போ தந்தையிடம் திரும்பியவள்,
  "டாக்டர் என்ன சொன்னாங்க.."
  "டாக்டர் தானே...உங்க ஓய்ஃபுக்கு உடம்பில் பிரச்சனையில்லை...மனசு தான்..மனசுல எதையோ வைச்சு மருகுறாங்க...அதான் இப்படி ஆகுதுனு சொல்லிட்டார்.."
  என்று பதிலளிக்க "என்னம்மா உங்களுக்கு கவலை.."
  என்று கேட்டதற்கு மீண்டும் தந்தையிடம் இருந்தே பதில் வந்தது.
  "உன்னையும் உங்க அண்ணனையும் தவிர வேற என்ன கவலை அவளுக்கு...நீங்க ஆளுக்கு ஒரு பக்கமாக இருக்குறது காரணம் அவ தானாம்..தன் பிள்ளை வாழ்க்கையை தானே கெடுத்துட்டாளாம்.இன்னும் என்னென்னவோ.."
  என்று அவர் சலிப்போடு கூறினார்.எத்தனை சமாதானம் கூறினாலும் புரிந்து கொள்ளாமல் தன் உடலை கெடுத்துக் கொள்கிறாளே என்ற கோபம் அவருக்கு..!!
  தன் தாயிடம் திரும்பியவள்,
  "நீங்க இப்படி இருந்தா நடந்த எல்லாம் மாறிவிடுமா..யாரு தான் தப்பு பண்ணதில்லை..அதான் நீங்க உங்க தவறை உணர்ந்துடீங்களே அதுவே போதும்..."
  என்று மென்மையாக கூறினாள்.
  "இல்ல அம்மூ..அன்னைக்கு நான் அப்படி நடந்துக்கிட்டதால தானே இப்போ உங்க ரெண்டு பேரு வாழ்க்கையும் திசை மாறி போச்சு..வீட்டை வீட்டு எங்கும் போக விருப்ப படாத உன்னை..தெரியாத ஊரில் தனியா போய் கஷ்டபட விட்டுடேன்...மகேஷ்...அவனுக்கு நம்ம பிஸ்னஸ்..கம்பெனி தான் உயிர்..ஆனால் இப்போ அதையே உதறிட்டு அவன் வேற நாட்டில் போய் தனியா கஷ்டபடுறான்..அவன் வீட்டு பக்கம் வந்தே நாலு வருஷம் ஆச்சு..பொண்டாட்டி குடும்பமுன்னு நிம்மதியா வாழ இருந்தவனை இப்படி தனி அங்க இருக்கான்..எல்லாம் என்னால தான்.."
  என்று கூறும் போதே கண்ணீர் மளமளவென வழிந்தது.
  "அய்யோ ம்மா.."
  என்று கண்களை தொடைத்தவள்,
  "ம்ச்..ஏன் இப்படி எல்லாத்தையும் நெகட்டிவ் வா திங்க் பண்றீங்க...நான் தனியா போனதால் தான் என் பயத்தை வென்றிருக்கேன்...இல்லேனே என்னைக்கும் உங்க முதுகு பின்னாடி ஒலிந்துக் கொள்ளும் பூரணியாவே இருந்திருப்பேன்...அப்புறம் அண்ணா...அவன் திறமைசாலி தான்..ஆனால் இப்போ அவன் திறமையை இன்னும் வளர்த்துக்குறதுக்கு இது ஒரு வாய்ப்பு தானே...அவனுக்கு எல்லாத்திலையும் அவசரப்புத்தி..நடந்த எல்லாத்திற்கும் அதுவும் ஒரு காரணம் தான்..இப்போ இந்த நாலு வருஷ இடைவெளியில் அவனும் பக்குவ பட்டிருப்பான்..பார்த்துட்டே இருங்க அவனே நம்மிடம் திரும்பி வரானா இல்லையா என்று.."
  என்ற மகளை பெருமையோடு பார்த்த அரவிந்த்,
  "சரியா சொன்ன அம்மூ...இதை
  தான் நானும் அவளுக்கு புரிய வைக்க முயற்சி பண்றேன்..நீ சொல்லியாவது புரிந்துக் கொள்கிறாளானு பார்ப்போம்..."
  என்றவர் "சரிடா..நீயும் போய் ரெஸ்ட் எடு..நான் ஆஃபீஸ் கிளம்புறேன்..இரண்டு நாளா அந்த பக்கமே போகவில்லை..உன் அம்மாவை இப்படி விட்டு போக மனசில்லை.இப்போ அங்க தலைக்கு மேலே வேலை இருக்கும்.."
  என்றபடி அவர் கிளம்ப ஆயத்தமானார்.அவர் கூறியதை கேட்டபின் அவளுக்கு குற்றவுணர்வாய் இருந்தது.
  பிள்ளைகள் தலையெடுத்த பின்னர் அவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு நிம்மதியாய் இருக்க வேண்டிய வயதில் இன்னமும் அனைத்தையும் தனியாளாய் கவனித்துக் கொள்கிறாரே..யாருக்காக...எங்களுககாக தானே..!!
  என்று எண்ணியவளுக்கு 'சீக்கிரமே மகேஷை இந்தியா வர செய்ய வேண்டும்..' என்ற எண்ணமும் வலுப்பெற்றது.
  எழுந்து தன்னறைக்கு வந்தாள்.சில மாதங்கள் கழித்து வந்தாலும் சுத்தமாக வைத்தது வைத்த இடத்தில் நீட்டாக இருந்தது.
  உள்ளே வந்ததுமே அவள் விழியில் முதலில் விழுந்தது அந்த சுவர் தான்.அவளுக்கு பிடித்த வண்ணத்தில் மாடர்ன் ஆர்ட் தீட்டப்பட்ட அந்த சுவரில் எக்கசக்க படங்கள் ஃபிரேன் செய்யபட்டு மாட்டிருந்தது.
  இது அவளது பதினெட்டாவது பிறந்த நாளுக்கு மகேஷ் ஏற்படுத்திய பரிசு.அவர்களது வாழ்வில் மறக்க முடியாத பல நினைவுகளை படமாக்கி அதை அழகாக ஒன்று சேர்த்து அவளுக்கு பரிசளித்தான்.அதுதான் அவனுடன் இருந்து அவள் கொண்டாடிய கடைசி பிறந்த நாள்.
  மகேஷும் பூரணியும் உடன்பிறந்தவர்கள் என்பதையும் தாண்டி நெருங்கிய நண்பர்கள்.பூரணி ஜெர்ரி போல் அமைதியாய் இருந்து செய்யும் குறும்புகளில் மகேஷ் டாமை போல் மாட்டிக் கொண்டு விழிப்பான்.ஆனால் அவள் என்ன செய்தாலும் அதை ரசிக்க மட்டுமே மகேஷிற்கு தெரியும்.அண்ணன்- தங்கை பல விஷயங்களில் ஒரு மாதிரியான சிந்தனை உடையவர்கள்.
  'அதனால் தானோ என்னவோ நாமா இரண்டு பேருக்குமே காதல் ஒரு சாபமா ஆகிடுச்சு போல மகி..'
  என்று விரக்தியாய் எண்ணியவளின் பார்வையில் அந்த புகைப்படம் பட்டது இதழில் மீண்டும் ஒரு விரக்தி புன்னகை..!!
  அதில் ரித்வாவை உரித்து வைத்தார் போல் அச்சலாக ஒரு சிறுவன் கண்களில் ஆர்வமின்ன
  கனிமொழியின் கையில் பூகுவியல் போல் இருந்த குழந்தையை பார்த்துக் கொண்டிருந்தான்.
  அந்த புகைப்படத்தை பார்த்தபடி பூரணி,
  "உனக்கு குழந்தைங்கனா சின்ன வயசுலேந்து ரொம்ப பிடிக்கும்ல மகிண்ணா...உனக்கு ஒன்னு தெரியுமா..?உன்னை மாதிரியே உனக்கு ஒரு பையன் இருக்கான்...உன்னோட கார்பன் காப்பி..
  ஆனால் உன் கைக்கு எட்டாதா தொலைதூரத்தில இருக்கான்.வேறொருத்தர் மகனாய்..!!!!
   
 9. HELEN MARY

  HELEN MARY Member

  Joined:
  Jun 18, 2018
  Messages:
  75
  Likes Received:
  32
  Trophy Points:
  18
  Gender:
  Female
  Occupation:
  Workiing
  Location:
  Chennai
  ஒருவேளை காவ்யா தான் பூரணியின் அண்ணி மற்றும் தேவ்-ன் தங்கையோ-?
   
  Suganyasomasundaram likes this.
 10. kani _mozhi

  kani _mozhi Active Member

  Joined:
  Feb 12, 2018
  Messages:
  385
  Likes Received:
  251
  Trophy Points:
  43
  Gender:
  Female
  Poorani anna paiyana rithu? Dev kavya magesh enna sammantham
   
  Suganyasomasundaram likes this.

Share This Page