எலும்பு சூப் / Elumbu soup

Discussion in 'Recipes' started by saravanakumari, Oct 30, 2018.

 1. saravanakumari

  saravanakumari Administrator Staff Member Manager

  Joined:
  Nov 12, 2014
  Messages:
  2,278
  Likes Received:
  1,039
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  home maker
  Location:
  villupuram
  எலும்பு சூப்
  தேவையான பொருட்கள்

  ஆட்டு எலும்புகறி - 1/2 கிலோ
  தக்காளி - 2
  சாம்பார் வெங்காயம் -- 10
  பச்சை மிளகாய் - 2
  வெண்ணெய் - சிறிதளவு
  அரைக்க:-
  இஞ்சி – 1 சிறுதுண்டு
  பூண்டு - 10 பல்
  மிளகு தூள் - 2 டீஸ்பூன்
  சீரகதூள் - 2 டீஸ்பூன்
  கொத்தமல்லி இலை - 1/2 கட்டு
  எலுமிச்சம் சாறு - 1/2 ஸ்பூன்
  உப்பு - தேவைக்கேற்ப


  செய்முறை :

  தக்காளியை விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

  குக்கரில் சிறிது வெண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும்.

  அது பொன்னிறமானதும், இஞ்சி,பூண்டு விழுதைச் சேர்த்து,எலும்பையும் சேர்த்து நன்கு
  வதக்கவும்.

  பின் மிளகு தூள்,சீரகதூள், கொத்தமல்லி இலை 'சேர்த்து 4 கப் தண்ணீரைச் சேர்த்து 6
  விசில் வரும் வரை வேக வைக்கவும்..

  தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும். .

  பின் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி பறிமாறவும் .

  தேவையானால் லெமன் சாறு சேர்த்து கொள்ளவும்...

  இந்த சூப் செய்வது மிகவும் எளிது .......செய்து பாருங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
   
 2. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  4,877
  Likes Received:
  477
  Trophy Points:
  83
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI


  முருங்கைக்காய் சூப் – Drumstick Soup


  Ingredients

  • முருங்கைக்காய் - 4
  • பூண்டு - 5 விழுதுகள் (நசுக்கிய விழுதுகள்)
  • சீரகம் - 1 டீஸ்பூன்
  • மிளகு - சிறிது
  • கருவேப்பிலை - சிறிது
  • கொத்தமல்லி - பொடியாக நறுக்கியது - சிறிது
  • மஞ்சள் தூள் - இரண்டு சிட்டிகை
  • சிறிய வெங்காயம் - 8 (தோல் நீக்கி, நான்காக குறுக்கு வாட்டில் வெட்டிக்கொள்ளவும்)
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - தேவையான அளவு
  • சாம்பார் பருப்பு - 5 டீஸ்பூன்

  Method

  Step 1

  முருங்கைக்காய்யை விரல் நீளத்திற்கு வெட்டி கொள்ளவும். வெட்டிய முருங்கைக்காய்யுடன் சாம்பார் பருப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் நான்கு விசில் விட்டு வேக வைக்கவும். நன்கு வெந்த முருங்கைகாயில், ஒரு ஸ்பூன் உதவியுடன் அதனின் சதைகளை தனியாக பிரித்து எடுத்து கொள்ளவும். வேகவைத்த சாம்பார் பருப்பை வடிகட்டி தண்ணீரை தனியாக எடுத்து வைத்துகொள்ளவும். சாம்பார் பருப்புடன் பிரித்து எடுத்த முருங்கைக்காய் சதைகளை சேர்த்து நன்கு பிசைந்து வைத்து கொள்ளவும்.
  Step 2

  ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சீரகம், நசுக்கிய பூண்டு விழுதுகள்,கருவேப்பிலை , மிளகு சேர்த்த பின்பு வெங்காயத்தை சேர்த்து பொன் நிறம் வரும் வரை நன்கு வதக்கி கொள்ளவும். பின்பு பிரித்து வைத்துள்ள தண்ணீரை சேர்த்து பிசைந்து வைத்துள்ள சாம்பார் பருப்புடன் கூடிய முருங்கைக்காய் சதைகளை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். கொதிக்கும் பொது, கொத்தமல்லி தழைகளை சேர்த்து சிறிது நிமிடங்களில் இறக்கி விடவும். சுவையான முருங்கைக்காய் சூப் ரெடி.
  In English

  Ingredients


  • Drumstick – 4 Nos.
  • Garlic – 5
  • Cumin seeds – 1 teaspoon
  • Pepper corns – Small amount
  • Curry Leaves – Small amount
  • Coriander Leaves – Small amount
  • Turmeric powder – 2 pinch
  • Onion (Small) – 8 (Peel the layer and cut the onion in 4 pieces in cross)
  • Salt – as required
  • Oil – as required
  • Samabar Dhaal – 5 teaspoons
  Method


  Step 1

  Chop the drumstick in to finger size. Using a cooker add the drumstick, sambar dhal and water and boil it for 4 whistles. Using a teaspoon remove the pulp or flesh part of the drum stick and keep aside. Filter the sambar dhal from the cooked water and mash with the flesh taken from drum stick.
  Step 2

  Using a fry pan, pour oil as required and add cumin seeds, curry leaves, Pepper corns. After few mins add the chopped onions and fry it till onion turns golden brown. Add the filtered water used already for boiling and add the mashed drumstick flesh – sambar dhal paste. Boil it for few minutes and add the coriander leaves before shutting the flame off. Tasty and healthy drumstick soup is ready to serve
   
 3. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  4,877
  Likes Received:
  477
  Trophy Points:
  83
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  மட்டன் சூப்


  In Tamil

  Ingredients


  • மட்டன் -100 கிராம்
  • இஞ்சி,பூண்டு விழுது -1 டேபிள்ஸ்பூன்
  • பெரிய வெங்காயம் -1
  • தக்காளி-1
  • மஞ்சள் தூள்-1 டீஸ்பூன்
  • உப்பு -தேவையான அளவு

  Method

  Step 1

  தாளிக்க வேண்டிய பொருட்கள்: எண்ணெய்-தேவையான அளவு கிராம்பு -3 பட்டை -2
  Step 2

  முதலில் வெங்காயம் ,தக்காளியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை,கிராம்பு போட்டு தாளித்து விட்டு அதில் வெங்காயம்,தக்காளி மற்றும் இஞ்சி,பூண்டு விழுதை போட்டு வதக்கிய பின்பு மட்டன்,மஞ்சள் தூள் ,உப்பு போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி விட்டு நான்கு விசில் விட்டு இறக்கவும்.சுவையான மட்டன் சூப் ரெடி.
  In English

  Ingredients


  • Mutton – 100gm
  • Ginger – Garlic paste – 1 table teaspoon
  • Onion (Big) – 1
  • Tomato – 1
  • Turmeric power – 1 teaspoon
  • Salt – as required
  Method

  Step 1

  For seasoning
  Oil – as required
  Clove – 3
  Cinnamon – 2
  Step 2

  Cut both onion and tomato in to small pieces. In cooker, pour oil as required and fry the items as mentioned in seasoning items (Clove and Cinnamon). After 1 minute, add chopped onion, tomato. Once the onion turns golden fry add garlic ginger paste and mix it thoroughly. After couple of minutes, add mutton, turmeric powder and salt and close the cooker to have 4 whistles.
  That’s it.. Enjoy the tasteful Mutton soup…..
   
 4. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  4,877
  Likes Received:
  477
  Trophy Points:
  83
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  வெஜிடேபிள் சூப்


  Ingredients

  • காரட்-100 கிராம்
  • பீன்ஸ்-100 கிராம்
  • பெரிய வெங்காயம்-1
  • தக்காளி-1
  • பச்சை மிளகாய்-2
  • மஞ்சள் தூள்-அரை டீஸ்பூன்
  • உப்பு-தேவையான அளவு
  • சோம்பு-1டேபிள்ஸ்பூன்
  • மிளகு-1டேபிள்ஸ்பூன்
  Method

  Step 1

  தாளிக்க வேண்டிய பொருட்கள்: கிராம்பு-3 பட்டை-2 எண்ணெய்-தேவையான அளவு
  Step 2

  வெங்காயம்,தக்காளி,காரட்,பீன்ஸ் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  Step 3

  பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை,கிராம்பு போட்டு தாளித்து விட்டு அதில் சோம்பு தூள் ,மிளகு தூள் போட்டு வதக்கி விட்ட பின்பு, வெங்காயம் ,தக்காளி ,பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்
  Step 4

  பின்பு அதில் பீன்ஸ்,காரட் போட்டு தேவையான அளவு உப்பு,தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
  Step 5

  பின்பு பீன்ஸ்,காரட்டை தனியாக எடுத்து மிக்ஸ்யில் போட்டு அரைத்து விட்டு கொதிக்கின்ற சூப் தண்ணீரியில் போட்டு சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கவும்.
  Step 6

  வெஜிடேபிள் சூப் ரெடி.(குறிப்பு வெஜிடேபிள் சூப் குழந்தைகள் உடம்புக்கு நல்லது.)
   

Share This Page