ஒரு ஸ்பூன் பாசிப்பருப்பு உங்களை 10 வயசு குறைச்சு காட்டும்!! தினமும் இப்படி செஞ்சு பாருங்க!!

Discussion in 'Diet and Healthy Eating' started by NATHIYAMOHANRAJA, Feb 11, 2019 at 6:58 PM.

 1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  3,850
  Likes Received:
  351
  Trophy Points:
  83
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  #பாசிப்பருப்பு அதிக புரதம், விட்டமின் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்தது. சரும அழகு மற்றும் கூந்தல் வளர்ச்சி இரண்டிற்கும் இந்த சத்துக்கள் மிக முக்கியம்.
  பாசிப்பருப்பை தொடர்ந்து பயன்படுத்தினால் கரும்புள்ளி, சுருக்கம், கருமை ஆகியவை மறைந்து சருமம் பிரகாசமடையும். கூந்தலை அழுக்கில்லாமல் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைக்க பாசிப்பருப்பு உதவி செய்கின்றது.
  நிறைய பேருக்கு பாசிப்பருப்பை அழகிற்கு பயன்படுத்த தெரியவில்லை. அதனாலெயே அதனை அழகிற்காக பயன்படுத்தாமல் விட்டுவிட்டார்கள், அதனைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
  முதலில் பாசிப்பருப்பை நன்றாக் அரைத்து பொடி செய்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். புன்ன்னர் இந்த பொடியிலிருந்து தினமும் உங்க சரும மற்றும் கூந்தல் பிரச்சனைகளுக்கு பயன்படுத்தத் தொடங்குங்கள்.
  சீரில்லாத சருமம் :
  வயது அதிகமாக அதிகமாக சருமம் மேடு பள்ளமாக , முகத்தில் சீரில்லாத நிறத்துடன் இருக்கும். இதற்கு சிறந்த மருந்து இதுதான்.
  பாசிப்பருப்புபை பொடி செய்து கொள்ளுங்கள். தினமும் ஒரு ஸ்பூன் பாசிப்பருப்புப் பொடியை எடுத்து அதனுடன் சிறிது ஆலிவ் எண்ணெயை கலந்து முகத்தில் தடவுங்கள். 15 நிமிடம் கழித்து முகம் கழுவுங்கள். இது மிக மென்மையான சருமத்தையும், அழகையும் உங்களுக்கு தரும்.
  முகப்பரு
  1/2 ஸ்பூன் பாசிப்பருப்புப் பொடியை எடுத்து அதனுடன் 1 ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் த்டவுங்கள். 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவுங்கள். தினமும் ந்ரமிருந்தால் இரு வேளை அல்லது இரவில் தினமும் இப்படி செய்து படுத்தால் ஒரே வாரத்தில் முகப்பருக்கள் மறைந்துவிடும். அதன் தழும்புகளும் மறையு
  நிறத்தை அதிகரிக்க :
  1 ஸ்பூன் பாசிப்பருப்பு பொடியுடன் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் மாஸ்க் போல் போடுங்கள். 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். தினமும் செய்ய வேண்டும். உங்களுக்கு வறண்ட சருமமாக இருந்தால் எலுமிச்சை சாறுக்கு பதிலாக பால் கலந்து கொள்ள வேண்டும்.
  மிருதுவான சருமம் கிடைக்க :
  1 ஸ்பூன் பாசிப்பருப்பை பாலாடையுடன் கலந்து முகம், கழுத்து, போன்ற பகுதிகளுக்கு தடவுங்கள். காய்ந்ததும் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இது பட்டு போன்ற மிருதுவான சருமத்தை தரும். வாரம் இருமுறை செய்து பாருங்கள்
  கருமைக்கு :
  சூரிய ஒளியால கருமையாகிப் போன சருமத்தை மாற்ற பாசிப்பருப்பால் முடியும். 1/2 ஸ்பூன் பாசிப்பரு, கற்றாழை ஜெல் 1 ஸ்பூன் இரண்டையு கலந்து, கெட்டியாக இருந்தால் சிறிது நீர் கலந்து முகத்தில் தடவுங்கள். இது விரைவில் கருமையை போக்கி முகத்தை பளிச்சென்று மாற்றும்.
  சுருக்கங்கள் மறைய :
  சுருக்கம் மறைய பாசிப்பருப்பு அட்டகாசமான நன்மையை தரும் என்பதில் சந்தேகமில்லை. பாசிப்பருப்பு பொடியை 1 ஸ்பூன் எடுத்து அதில் பேஸ்ட் ஆகும் வரையில் ரோஸ் வாட்டரை கலந்து கொள்ளுங்கள்.
  இதனை முகம், கழுத்து போன்ற பகுதில் மேல் நோக்கி தடவ வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். தினமும் இரவில் இப்படி செய்து வந்தால் சுருக்கங்கள் மறைந்து இளமையாக நீங்கள் இருப்பீர்கள்.
  இயற்கை ப்ளீச் :
  ஏதாவது நிக்ழ்விற்கு போகும்போது முகம் டல்லாக இருக்கிறதே என்று எண்ணும்போது இந்த பாசிப்பருப்புப் பொடி உங்களுக்கு கை கொடுக்கும்.
  1 ஸ்பூன் பாசிப்பொருப்பு பொடியை சிறிது தயிர் கலந்து முகத்தில் த்டவி காய்ந்ததும் கழுவுங்கள். முகத்தில் இருக்கும் சோர்வு, கருமை எல்லாம் மறைந்து பளிசென்று மறிவிடும்
  கூந்தலுக்கு :
  1 ஸ்பூன் பாசிப்பருப்புப் பொடியுடன் கால் கப் நெல்லிக்காய் ஜூஸ் கலந்து கூந்தலின் வேர்க்கால்களில் தடவ வேண்டும். 20 நிமிடம் கழித்து தலைமுடியை அலசுங்கள். வாரம் ஒருமுறை இந்த முறையை பயன்படுத்தினால் கூந்தலின் வேர்க்கால்களில் உள்ள பாதிப்புகள் குறைந்து ஆரோக்கியமான முடிக்கற்றைகள் வளரும்.
  தலைமுடியை சுத்தப்படுத்த :
  மாசுப்பட்ட காற்றினால் உங்கள் தலைமுடியில் உண்டாகும் பாதிப்புகளை பாசிப்பருப்பு சரிப்படுத்துகிறது. 1 ஸ்பூன் பாசிப்பருப்பு பொடி, ரோச் வாட்டர் 1/2 ஸ்பூன், பொடித்த ஓட்ஸ் ஆகிய்வற்றை நீர் கொண்டு பேஸ்ட் போல் செய்து அதனை கூந்தலிக் தடவி மசாஜ் செய்யுங்கள்.
  20 நிமிடம் கழித்து தலைமுடியை அலசினால் ஸ்கால்ப்பில் உள்ள அழுக்கு, பொடுகு ஆகியவை மறைந்து ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சி ஆரம்பிக்கும்.
  பொடுகிற்கு :
  1 ஸ்பூன் பாசிப்பருப்பை கால் கப் வேப்பிலை சாறுடன் கலந்து பொடுகுள்ள ஸ்கால்ப்பில் த்டவுங்கள். அரை மணி நேரம் கழித்து தலைமுடியை அலசுங்கள். இப்படி வாரம் 2 முறை செய்தால் உங்கள் பொடுகு இனி எப்போதும் உங்களை நெருங்காது.
  பளபளப்பான கூந்தலுக்கு :
  அரை ஸ்பூன் பாசிப்பருப்புடன் ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் ரோஸ் வாட்டர் கால் கப் தேங்காய் எண்ணெய் கலந்து தலைமுடிக்கு த்டவி மசாஜ் செய்யுங்கள். பின்னர் அரை மணி நேரம் ஊற வைத்து தலைமுடியை ஷாம்பு கொண்டு அலசினால் உங்கள் கூந்தல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.
   
  Rabina likes this.

Share This Page