கடவுள் – மனிதன்

Discussion in 'Religious & Sprituality' started by NATHIYAMOHANRAJA, Jul 15, 2019.

 1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,858
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  முதல் நாளன்று, கடவுள் பசுயைப் படைத்தார். பசுவைப் பார்த்து, “இன்று நான் உன்னைப் படைத்தேன், ஒரு மாடு, நாள் முழுவதும் விவசாயிடம் சென்று நீ சூரியனுக்குக் கீழே வேலை செய்வாய்! 50 வருடங்கள் நான் வாழ்நாள் முழுவதும் உனக்குக் கொடுப்பேன். “
  [​IMG]
  “பத்து ஆண்டுகளுக்கு நான் வாழ வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களே, இது 20 வருடங்களாக இருக்கட்டும், மற்றும் 30 ஆண்டுகள் நான் உங்களுக்குத் திருப்பி தருவேன்” என்று பசு எதிர்த்தது. கடவுள் ஒப்புக்கொண்டார்.
  இரண்டாவது நாளில், கடவுள் நாய் படைத்தார். தேவன் நாய் சொன்னார், “நீ செய்ய வேண்டியது உன் வீட்டின் கதவுகளால் தினமும் உட்காருவது, உள்ளே வருகிற எவனும் நீ அவர்களைக் குடையாமல் இருப்பாய்! 20 வருட காலத்திற்கு நான் வாழ்நாள் கொடுப்பேன்.”
  நாய் எதிர்ப்பட்டது, “என்ன? கதவைத் தாழ்த்திக் கொண்ட நாள் முழுவதும்? இல்லை, 10 வருட வாழ்க்கையை நான் மீண்டும் தருகிறேன்!” கடவுள் ஒப்புக்கொண்டார்.
  மூன்றாவது நாளில், கடவுள் குரங்கு உருவாக்கப்பட்டது. அவர் குரங்குக்குச் சொன்னார், “குரங்குகள் மக்களை மகிழ்விக்க வேண்டும், அவர்களை சிரிக்க வைப்பதற்கும், குரங்கு தந்திரங்களை செய்வதற்கும் நான் 20 வருடங்கள் கால அவகாசம் கொடுக்கிறேன்.”
  குரங்கு எதிர்த்தது. “என்ன? அவர்கள் சிரிக்க வைக்க? குரங்கு முகம் மற்றும் தந்திரங்களை செய்ய? பத்து ஆண்டுகள் செய்யும், மற்றும் மற்ற 10 ஆண்டுகள் நான் உன்னை கொடுக்கிறேன்.” கடவுள் ஒப்புக்கொண்டார்.
  நான்காவது நாளில் தேவன் மனிதனைப் படைத்து, “உன் வேலை, தூங்குவதும் சாப்பிடுவதும், விளையாடுவதும் உன் வாழ்வில் மிகுந்த மகிழ்ச்சியை அனுபவிப்பதும், நீ அனுபவிப்பது, ஒன்றும் செய்யாதே, , நான் உனக்கு ஒரு 20 ஆண்டு காலம் வாழ்கிறேன். “
  அந்த மனிதன் எதிர்த்தான். “என்ன? நல்ல வாழ்க்கை! சாப்பிடு, விளையாட, தூங்க, ஒன்றும் செய்யாதே, சிறந்ததை அனுபவியுங்கள், 20 வருடங்களாக நான் மட்டும் தான் வாழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறாயா? இல்லை, மனிதன்! …. ஏன் நாம் ஒரு ஒப்பந்தம் செய்யவில்லை? மாடு 30 ஆண்டுகளுக்குக் கொடுத்தது, நாய் உனக்கு 10 வருடம் கொடுத்தது, குரங்கு 10 வருடங்கள் உன்னைத் திரும்பக் கொடுத்தது, நான் அவர்களை உன்னிடமிருந்து எடுத்துக் கொள்வேன்! இது என் வாழ்க்கையை 70 ஆண்டுகள் நீடிக்கும், சரியானதா? ” கடவுள் ஒப்புக்கொண்டார்.
  மற்றும் அது ஏன் … நமது முதல் 20 ஆண்டுகளில், நாம் சாப்பிடுகிறோம், தூங்குகிறோம், விளையாடுகிறோம், மிகச் சிறப்பாக அனுபவிக்கிறோம், அதிகம் செய்யவில்லை. அடுத்த 30 வருடங்களுக்கு, நாங்கள் நாள் முழுவதும் வேலை செய்கிறோம், பாதிக்கப்படுகிறோம், குடும்பத்தை ஆதரிப்போம். அடுத்த 10 ஆண்டுகளுக்கு, குரங்கு முகங்கள் மற்றும் குரங்கு தந்திரங்களை உருவாக்குவதன் மூலம் நம் பேரக்குழந்தைகளை நாம் மகிழ்விக்கிறோம். கடந்த 10 ஆண்டுகளாக, நாங்கள் வீட்டிலேயே தங்கியிருக்கிறோம், மக்கள் முன் கதவு மற்றும் பட்டைகளால் அமர்ந்துள்ளோம்!
   
 2. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,858
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவது?

  அடிக்கடி கோபப்படுபவரா?
  உங்களுக்கு உண்மையாகவே கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்ற விருப்பம் உள்ளதா?
  [​IMG]கோபம் ஆண்களின் பிறவி குணம் என்பார்கள். இந்த பிறவி குணத்தால் மன அழுத்தம் அதிகரிக்கிறது. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு, ஆத்திரம் அழிவைத் தரும் என்பதெல்லாம் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து சொல்லப்படும் வழக்குகள். மன அழுத்தம் அதிகரிப்பதால் உடலில் தேவையற்ற உடல்நலக் குறைபாடுகள் மற்றும் கோளாறுகள் ஏற்படுகின்றன. இதனால் உங்களுக்கு தான் வீண் விரயம். கோபமாக இருக்கும் ஒவ்வொரு நிமிடமும், அறுபது வினாடி ஆனந்தத்தைத் தொலைத்து விடுகிறோம்’என்கிறார் ரால்ப் வால்டோ.
  [​IMG]சராசரியாக எல்லா மனிதருக்குமே இருக்கும் ஒரு குணம், கோபம். இந்த உலகில் கோபப்படாத மனிதரே இருக்கமுடியாது. அப்படி கோபம் இல்லாவிட்டால் அவர் மனிதராகவே இருக்கமுடியாது. எல்லோருக்குமே கோபம் வரும். ஆனால் அது வெளிப்படும் முறையில்தான் வித்தியாசம். சிலபேர் அழுவார்கள், சிலபேர் கையை பிசைவார்கள், பல்லை கடிப்பார்கள், கையை ஓங்கி குத்துவார்கள் (சுவற்றிலோ அல்லது அடுத்தவர் மூக்கிலோ), காச்மூச்சென கத்துவார்கள், கையில் கிடைத்ததை போட்டு உடைப்பார்கள். சரியோ தவறோ, கோபப்படுவது அவ்வளவு நல்ல குணம் அல்ல. ஆனால் கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவது?
  கோபம் ஏன் ஏற்படுகிறது?
  ஒரே வரியில் சொல்வதனால் நமக்கு பிடிக்காதவை நடக்கும்போது!
  ஆம்! நமக்கு பிடிக்காதவற்றை மற்றவர் சொல்லும்போது/எழுதும்போது/கேட்கும்போது/படிக்கும்போது/செய்யும்போது…..
  இப்படி பல சமயங்களில் நம் அதிருப்தியை, நம் எதிர்ப்பை கோபமாக காண்பிக்கிறோம்.
  சரி! நாம் நம் கோபத்தை எப்படியெல்லாம் வெளிப்படுத்துகிறோம்?
  1. வெறுப்பு
  2. பழிவாங்குதல்
  3. அவர்களுக்கு பிடிக்காதவற்றை செய்தல்
  4. தவறான விதத்தில் பேசுதல்/எழுதுதல்/செயல்படுதல்
  5. அடித்தல்/வன்முறை
  6. முக உடல் அசைவுகளில் அதை காண்பித்தல் (பாடிலாங்குவேஜ்)
  இதுபோன்று பல விதங்களில் கோபத்தை காண்பிக்கிறோம். ஒருவரை பார்ப்பதை, அவரிடம் பேசுவதை தவிர்த்தல், தங்களது பொறுப்புகளை வேண்டுமென்றே செய்யாமல் இருப்பது, மற்றவர்களை குற்றம் சாட்டுவது, தங்களையே குற்றம் சாட்டி கொள்வது இப்படி பலவிதங்களில் நாம் கோபத்தை காண்பிக்கிறோம்.
  இவை அதிகமாகும் போது பலவித பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதை தெரிந்துகொள்ளும் முன் கோபப்படும்போது நம் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன என பார்ப்போமா?
  1. இதய துடிப்பு அதிகரிக்கிறது.
  2. இரத்த அழுத்தம் அதிகமாகிறது
  3. சில நாளமில்லா சுரப்பிகள் வேகமாக சுரக்கின்றன.
  4. தசைகள் வேகமாக இயங்குகின்றன.
  5. மூச்சு விடுதல் வேகமாகிறது.
  6. மூளையில் நரம்பு செயல்பாடு அதிகரிக்கிறது.
  7. உடல் சமநிலை பாதிக்கப்படுகிறது.
  கோபப்படுவதால் ஏற்படும் பிரச்சினைகள்:
  நீங்கள் கோபமாக இருக்கும்போது எப்போதாவது உங்கள் இதயத்தை தொட்டு பார்த்திருக்கிறீர்களா? இல்லையென்றால் இனிமேல் அதை செய்யுங்கள்… (இதனால் கோபம் சிறிது குறைய வாய்ப்புள்ளது). கோபப்படும்போது இதயம் வேகமாக துடிப்பதால், அடிக்கடி கோபப்படுபவர்களுக்கு இதய நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அவர்களுக்கு கொழுப்பு/சர்க்கரை வியாதி இருந்தால் அவ்வளவுதான்!
  கோபப்படும்போது இரத்த அழுத்தம் அதிகமாவதால் மேற்கண்ட பிரச்சினை இரட்டிப்பாகிறது. கோபப்படும்போது நம் உடலின் சமச்சீர் தன்மை சீர்குலைகிறது.
  சரி இவ்வளவுதானா! என்றால் இல்லை, சிலர் கோபமாக இருக்கும்போது.. சிகரெட், மது போன்றவற்றை தேடி செல்கின்றனர். மற்றவர்களிடமிருந்து விலகி இருக்கின்றனர். சிலர் நாள்பட்ட கோபத்தை டிவி, கம்ப்யூட்டர் முன் நேரத்தை கழிப்பதன் மூலம் மறக்கப் பார்க்கின்றனர்.
  இவற்றால் ஏற்படும் பிரச்சினைகள் பலப்பல..
  கோபம் வேலை சூழலை/வியாபாரத்தை பாதிக்கிறது.
  கோபம் திருமண வாழ்வை/குடும்ப அமைதியை பாதிக்கிறது.
  கோபம் சமூக/குடும்ப உறவுகளை பாதிக்கிறது
  கோபம் உடல்நலத்தை பாதிக்கிறது.
  கோபம் உங்கள் மன நலத்தை பாதிக்கிறது.
  எல்லோருக்குமே கோபம் வரும். ஆனால் அது வெளிப்படும் முறையில்தான் வித்தியாசம்.சிலபேர் அழுவார்கள், சிலபேர் கையை பிசைவார்கள், பல்லைகடிப்பார்கள், கையை ஓங்கி குத்துவார்கள் (சுவற்றிலோ அல்லது அடுத்தவர் மூக்கிலோ), காச் மூச்சென கத்துவார்கள், கையில் கிடைத்ததை போட்டு உடைப்பார்கள். சரியோ தவறோ, கோபப்படுவது அவ்வளவு நல்ல குணம் அல்ல. ஆனால் கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவது?
  1.கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுங்கள். மற்றவர்களையும் அன்போடு பாருங்கள். நிதானமாக கோபமூட்டிய நபரின் சூழ்நிலையை சிந்தியுங்கள்.
  2.கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள். உடனே உங்கள் மனதை வேறு விசயத்தில் திருப்புங்கள்.
  3.அவசரம் ஒருபோதும் வேண்டாம். பொறுமையாக இருங்கள்
  4.நேரம் மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள்.
  5.செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும், குழப்பம் இல்லாமலும் செய்யுங்கள்.
  6.அந்த இடத்தை விட்டு நல்ல காற்றோட்டமான இடத்துக்கு சென்று விடுங்கள். அந்த நிகழ்வை பற்றி நினைக்காமல் நன்றாக மூச்சை இழுத்து விடுங்கள். இது உங்களை சாந்தப்படுத்தும்.
  7.எனக்குத்தெரிந்து ஒரு மனிதனின் முகம் மிக அசிங்கமாக இருப்பது அவன் கோபப்படும்போதுதான். ஆகவே கோபம் வந்தால் உடனே கண்ணாடியில் முகத்தை பாருங்கள் (கண்ணாடி கைக்கெட்டும் தூரத்தில் இல்லாமல் இருப்பது நலம்). அசிங்கமான நம் முகத்தை பார்க்கும்போது நமக்கு சிரிப்பு வரும். அதன்பின் எப்போது கோபம் வந்தாலும் நம் முகம்தான் ஞாபகத்துக்கு வரும்.
  8.கோபத்தில் தொலைவில் இருக்கும் யாரையாவது தாக்கவேண்டும், அல்லது திட்ட வேண்டும் என்றால், அதை கொஞ்சம் தள்ளிப்போடுங்கள். சாயங்காலம் திட்டலாம், நாளைக்கு கச்சேரியை வைத்துக்கொள்ளலாம் என்று தள்ளிப்போடுங்கள். தள்ளிப்போட்ட எந்த காரியமும் உருப்பட்டதில்லை.
  9.உங்கள் மனதுக்கு பிடித்த இசையை கேளுங்கள். வலுக்கட்டாயமாக இல்லாமல், இயல்பாக கேட்க ஆரம்பியுங்கள். இசை கேட்க விருப்பம் இல்லை என்றால் கார்டூன் சேனல் பாருங்கள்.
  10. குழந்தைகளோடு உரையாடுங்கள். கோபம் பறந்துவிடும். இல்லை இரண்டு குழந்தைகளுக்கு இடையே நடக்கும் நிகழ்வுகளை கவனியுங்கள். பிறகு உங்களுக்கு அதே போலத்தானே நாமும் செய்கிறோம் என்று வெட்கபடுவீர்கள்.
  11. நல்ல ஒரு உன்னதமான சூழலை கண்களை மூடி கற்பனை செய்யுங்கள். உங்கள் அருமை மகள் உங்களை ஓடி வந்து கட்டியணைக்கலாம், உங்களுக்கு உயரிய விருது ஒன்று வழங்கப்படலாம், காதலியுடன் காலார நடக்கலாம் இப்படி ஏதாவது. அல்லது கடந்த காலத்தில் உங்கள் வாழ்வில் நடந்த ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு. இது சூழலின் இறுக்கத்தை பெருமளவு தளர்த்தும்.
  12. ஒன்று முதல் பத்து வரை எண்ணிடலாம்
  13. கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள். உடனே உங்கள் மனதை வேறு விசயத்தில் திருப்புங்கள்.
  14. கோபத்தில் தொலைவில் இருக்கும் யாரையாவது தாக்கவேண்டும், அல்லது திட்ட வேண்டும் என்றால், அதை கொஞ்சம் தள்ளிப்போடுங்கள். சாயங்காலம் திட்டலாம், நாளைக்கு கச்சேரியை வைத்துக்கொள்ளலாம் என்று தள்ளிப்போடுங்கள். தள்ளிப்போட்ட எந்த காரியமும் உருப்பட்டதில்லை.
  15. தியானம், சாந்தி ஆசனம் செய்ய கோபம் குறையும்.
  கோபம் என்பது மனித உணர்ச்சிகளில் ஒன்று. ஆனால் அதை கட்டுபாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். கோபத்தை கட்டுபடுத்துவதைவிட, சரியாக கையாளத் தெரிந்திருக்க வேண்டும். அப்படிக் கையாளத் தெரியாவிட்டால் நமது தொழில், உறவுகள், வாழ்க்கை என அனைத்தைம் சீரழித்துவிடும். வாழ்க்கை நம் கையில் கொடுக்கப்பட்டிருக்கும் விலையுயர்ந்த மாணிக்கக் கல் போன்றது. அதை கோபமென்னும் சேற்றில் மூழ்கடித்துச் சிதைத்து விடாமல், மனித நேயம் எனும் உயரிய பண்பை மணிமுடியாகச் சூடி அழகுபார்ப்போம்.
   

Share This Page