கண்காணிப்பு விமான தொழில்நுட்பத்தில் உலக சாதனை

Discussion in 'Magazines' started by NATHIYAMOHANRAJA, Aug 14, 2018.

 1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  பேரிடர் காலங்களிலும் விழாக்காலங்களிலும் மீட்புப் பணி மற்றும் கண்காணிப்பு பணிகளுக்கு ட்ரோன் எனப்படும் ஆளில்லா குட்டி கண்காணிப்பு விமானம் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்த ட்ரோன் கண்டுபிடிப்புக்கான போட்டி தேசிய அளவில் சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்து முடிந்தது. தமிழக ஆளுநர் பன்வாரிவால் புரோகித் முன்னிலையில் நடைபெற்ற இப்போட்டியில் இந்திய அளவில் மொத்தம் 111 பொறியியல் கல்லூரிகள் பங்குபெற்றன.

  உற்சாகமாக குழுமியிருந்த மாணவர்களின் ஆர்ப்பரிப்பில் தமிழக ஆளுநர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட குட்டி ட்ரோன்கள் வானத்தில் பறந்துகொண்டிருந்தன. ஒரு ட்ரோன் மட்டும் 6 மணி நேரம் 47 நிமிடங்கள் வானில் பறந்து உலக சாதனையையும் இப்போட்டியின் முதல் பரிசையும் தட்டிச் சென்றது. இது மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி மாணவர்களின் தக் ஷா குழுவின் ‘ட்ரோன்’.

  ‘‘குரோம்பேட்டையில் இயங்கி வரும் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் ‘தக் ஷா’ எனும் பெயரில் அப்துல் கலாம் உருவாக்கிய மாணவர் குழுதான் இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.

  ஒவ்வொரு வருடமும் ஆளில்லா விமானம் Unmanned Aeriel Vehicles (UAVs) செய்வதில் தக் ஷா குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். கார், விமானம், மருத்துவப் பொருட்கள், செல்போன் என அனைத்து புது கண்டுபிடிப்புகளும் முதலில் ராணுவத்தில் தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

  பின்னர்தான் அவை மக்கள் பயன்பாட்டிற்கு வருகின்றன. அப்துல் கலாம் எங்கள் கல்லூரியின் பேராசிரியராக இருந்தபோது, ‘இனி நாம் கண்டுபிடிக்கக்கூடிய எந்த பொருளாக இருந்தாலும் அவை நேரடியாக மக்கள் பயன்பாட்டிற்குத்தான் வரவேண்டும். அந்த மாதிரியான ஆராய்ச்சிகளில்தான் நாம் ஆர்வம் கொள்ள வேண்டும்’ என அடிக்கடி சொல்வார். இதை கருத்தில்கொண்டு தொடர்ந்து பதினைந்து வருடமும் ஆண்டுதோறும் அந்த அந்த ஆண்டு மாணவர்கள் ட்ரோன் உருவாக்க முயற்சிகள் செய்துகொண்டே வந்தனர்.

  ஒவ்வொரு படியாக கடந்து இப்போது சாதித்துள்ளனர். இதுவரை உலக சாதனையாக இருந்த 2 மணி நேரம் 40 நிமிடங்கள் என்ற அமெரிக்க ட்ரோனின் சாதனையைக் கடந்த போட்டியில் 6 மணி நேரம் 47 நிமிடங்கள் என்ற அளவில் முறியடித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது தக் ஷா ட்ரோன்’’ என மகிழ்ச்சி பொங்க பேசிய பேராசிரியர் செந்தில்குமாரை தொடர்ந்த மாணவர்கள், விமானம் உருவாக்கும்போது எதிர்கொண்ட சவால்களைப் பட்டியலிட்டனர்.

  ‘‘சிறிய ரக ஆளில்லா விமானத்தை பறக்கவிடும்போது அதன் வேகத்தை கட்டுப்படுத்துவது என்பது ரொம்ப சிரமம். அதன் ஒவ்வொரு இறக்கையையும் கவனமாக கண்ட்ரோல் செய்து இலக்கு நோக்கி பறக்கவைக்க வேண்டும். இதற்கான டிப்ஸை நடிகர் அஜித்குமார் கொடுத்தார். வெளிநாடுகளில் அவர் பார்த்த / கேட்ட விஷயங்களை எங்களுடன் பகிர்ந்துகொண்டு மண் தரையில் அமர்ந்து எங்களுடன் சேர்ந்து விமான உருவாக்க பணிகளில் ஈடுபடுவார்.

  நாங்கள் வடிவமைத்த விமானத்தில் எரிபொருள் தீர்ந்து ரிசர்வில் வந்த பிறகு விமானம் தடுமாறாமல் இருக்க எரிபொருள் டேங்க் அருகில் சின்னதாக துணை எரிபொருள் டேங்கை வடிவமைப்பதற்கு அவர்தான் ஐடியா கொடுத்தார். இதனால்தான் தக் ஷா ட்ரோன் 6 மணி நேரம் விண்ணில் பறந்தது” என்றார் மாணவர் அருள் குமார். அவரை தொடர்ந்த பேராசிரியர் வசந்த், விமானத்தின் வடிவமைப்பைப் பற்றியும் செயல்படும் விதம் பற்றியும் விளக்கலானார்.

  ‘‘அதிக எண்ணிக்கையிலான இறக்கைகளைக் கொண்ட ஆட்டோமொபைல் மல்டி ரேடார் எனும் விமான வகையைச் சேர்ந்தது எங்களுடைய ட்ரோன். விமானத் துறையில் அடுத்த கட்ட முன்னேற்றம் இதுவாகத்தான் இருக்கும். உலக நாடுகளும் இந்த வகை கண்டுபிடிப்பில்தான் ஆர்வம் செலுத்தி வருகின்றன. அந்த வகையில் நாம் பெருமளவு முன்னேறியிருக்கிறோம்’’ என்கிறார் துறை சார்ந்த விஞ்ஞானியும், பேராசிரியருமான வசந்த்.

  மேலும் அவர் விமானத்தைப் பற்றி கூறும்போது, ‘‘இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ட்ரோன்கள் அனைத்தும் பேட்டரியில் இயங்கக்கூடியவை. ரிமோட் மூலம் ஆப்பரேட் செய்யக்கூடியவை. ஆனால், எங்கள் மாணவர் குழு கண்டுபிடித்த ட்ரோனானது பெட்ரோல் மூலம் இயங்குகிறது. எரிசக்தியை மின்சக்தியாக மாற்றி ட்ரோன்கள் இயங்குவதால் அவை அதிக நேரம் பறக்க முடிகிறது. மேலும் இவை கணினி மூலம் கட்டுப்படுத்தப்படுவதால் எந்த இடத்தில் எவ்வளவு உயரம் பறக்க வேண்டும் என்பதை கணினியில் பார்த்தே கணிக்க முடியும்.

  மேலும் இதன் மிகப்பெரிய பிளஸ் என்னவென்றால், பேரிடர், விபத்து காலங்களில் சிக்கலில் இருக்கும் மனிதர்களை/உயிர்களை இது வானத்தில் பறந்து அவர்கள் எந்த இடத்தில் சிக்கியுள்ளனர் என உடனுக்குடன் போட்டோ எடுத்து கணினிக்கு அனுப்பிவிடும். இதனால் ஆட்கள் எங்கு சிக்கியிருக்கிறார்கள் என திட்டமிட்டு அவர்களை காப்பாற்ற முடியும்.

  இந்த வகையான புது டெக்னாலஜி ட்ரோன்களைப் பயன்படுத்தி ஆபத்து காலத்தில் மருத்துவ உதவிகளை மேற்கொள்ள முடியுமா? மற்றும் எவர் உதவியுமின்றி முழுக்க முழுக்க இந்த விமானத்தைப் பயன்படுத்தி மட்டும் விபத்தில் சிக்கியவரை தூக்கிவர முடியுமா? அப்படியானால் அதற்கு என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும்? என்பன போன்ற ஆய்வுகளை மாணவர்களும், பேராசிரியர்களும் மேற்கொண்டு வருகின்றனர்’’ என்றார் பேராசிரியர் வசந்த்.
   

Share This Page