கதை

Discussion in 'Short Stories' started by NATHIYAMOHANRAJA, Oct 13, 2018.

 1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  5,805
  Likes Received:
  489
  Trophy Points:
  83
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  *அருமையான உண்மை கதை*
  *தாம்பத்தியம்_என்பது*
  *வேலையிலிருந்து வந்ததும் நாற்காலியில் சாய்ந்து கொண்டு, மாற்றி மாற்றி தொலைக்காட்சி பார்த்துக் கொண்டு, கூடவே மொபைலில் முகநூலிலும் உலாவிக்கொண்டே சாப்பிடுவது அனேக ஆண்களின் வழக்கமாகி விட்டது..!*
  *மனைவி வந்து கேட்பாள்:* *"என்ன சாப்பிட்றீங்க?* *இட்லியா..?* *தோசையா என ..?”* *கணவனின் மனம் விரும்பும் தோசையை ...* *ஆனால் அவன் சொல்லுவான் “எது வேணாலும் பரவால என ..!.” அவள் தோசை வார்ப்பாள்*.
  *அவள் மறுபடி வந்து கேட்பாள்: “தோசைக்கு சட்னி செய்யவா, இல்ல மத்தியானம் வெச்ச சாம்பாரே போதுமா என ..?”*
  *அவன் மனம் நினைக்கும் ‘காரசட்னியையும், சாம்பாரையும் கலந்து சாப்பிட்டால் நன்றாக இருக்குமே என ..!’*
  *ஆனால் அவன் சொல்லுவான்: “சாம்பாரே போதும் என..!*
  *அவள் சுட சுட தோசையும் , சாம்பாரோடு, காரசட்னியும் செய்து எடுத்துக்கொண்டு வருவாள்..!*
  *கடைசி தோசைக்கு பொடி, எண்ணைய் இருந்தால் நன்றாக இருக்குமே..!’ என்று மனதில் தோன்றினாலும், ‘எதுக்கு ஒரு தோசை சாப்பிடுவதற்கு ஏகப்பட்ட வேலை..?’ என்று அவன் நினைத்துக்கொண்டே சாப்பிட்டால்........*
  *அவள் பொடியையும் எண்ணையையும் எடுத்துக்கொண்டு வருவாள்...!*
  *கணவனின் உரைக்காத மௌன சொற்களையும் உணரும் சக்தி சிறந்த தாம்பத்யத்துக்கு சிறப்பாக மனைவிக்கு உண்டு..*
  *ஏராளமான ஆண்கள் மனைவியிடம் அன்பை வெளிக்காட்டியதில்லை. உடல்நலன், மனநலன், உணவு, மாத்திரைகள், எல்லாம் அவனுக்கு தோதாய் நடக்க அவள் இருக்கிறாள் என்ற நம்பிக்கையிலேயே வாழ்கிறான்.*
  *மனைவியின் உடல்நலம், மனநலம், உணவு, சந்தோஷம், துக்கம் எல்லாம் அவளுக்கு அவள்தான் துணை ஆறுதல்... கணவன் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை.*
  *அவன் வாழ்நாள் முழுதும், அவன் தேவைகள் பார்த்துக் கொள்ளப்படும்; அவன் குணக்குறைகள் மன்னிக்கப்படும் என்று வாழும் ஆண்கள் அதற்கு அவளுக்கு ஒரு நன்றி கூட சொல்லாததை என்னவென்று சொல்லுவது.* ,
  *ஆண்களுக்கு பணிவிடை செய்யவென்று படைக்கப்பட்டவள் அல்ல பெண்.. ஆனாலும் செய்கிறாள்.*
  *ஆண்களுக்கு குழந்தை பெற்றெடுக்க என படைக்கப்பட்டவள் அல்ல பெண்... ஆனாலும் தாயாகிறாள் ஏன்?...*
  *ஏனென்றாள் அவள் மனித குலத்திற்கு தேவையான அத்தனை தகுதிகளுடன் படைக்கப்பட்ட ஒரு உயிருள்ள கடவுள்... அதனால்தான் பெண்களை தெய்வம் என்கிறார்கள். அந்த தெய்வம் தான் இன்று ஆண்களையும் இவ் உலகையும் குடும்பம் என்ற ஒரு வட்டத்திற்குள் வழிநடத்துகிறது...*
   

Share This Page