கருவாப்பையா !! / Karuvaapaiyaa By Chandrika Krishnan

Discussion in 'Serial Stories' started by Tamilsurabi, Jan 24, 2019.

 1. Rabina

  Rabina Well-Known Member

  Joined:
  Aug 14, 2018
  Messages:
  433
  Likes Received:
  252
  Trophy Points:
  63
  Gender:
  Female
  sema meenu matikitta
   
 2. Chandrika krishnan

  Chandrika krishnan Member

  Joined:
  Jan 22, 2019
  Messages:
  51
  Likes Received:
  50
  Trophy Points:
  18
  Gender:
  Female
  கருவாப்பையா – 17

  தன் கையை பற்றிய மனோவை ஏறெடுத்து பார்த்தவள், அவன் பார்வையின் வீச்சு தாளாது, கண்மூடினாள். கண்மூடி தன்னருகே அமர்ந்திருந்தவளை இமை கொட்டாது பார்த்தவனுக்கு, அவளை கட்டியணைக்க வேண்டும் என மனம் பரபரத்தது. ' டேய் மனோ, வெண்ண திரண்டு வரும்போது தாளிய ஒடச்சராத டா ' என்றவன் மனசாட்சி எரிச்சரிக்கவும், தன்னை கட்டுப்படுத்தி கொண்டான்.


  கடந்த ஒன்றரை மாதமாக தன்னிடம் முகம் கொடுத்து கூட பேசாது அவள் சுற்றியதும் , மீனுவின் பாராமுகமும் மனோவிற்கு வேதனையையே தந்தது. 'ஆனால் அவளிடம் அதுகுறித்து அவன் பேசுவதோ, ஏன் அவளை பற்றி அவன் கண்டுகொள்வதோ, காரியத்தையே கெடுத்துவிடும்', என்றெண்ணியவன் அவளை கண்டுகொள்ளாமலேயே சுற்றினான்.


  ' சரக்கு மலிந்தால் சந்தைக்கு தானே வந்தாகணும் ' என்று அவனும், அவளாகவே வரட்டும் என்றெண்ணினான். கல்யாணத்திற்கு ஒரு வாரம் இருக்கும்போதே, எப்படியும் அவனறிந்த மீனு கண்டிப்பாக தன்னை தேடி யாரும் அறியாமல் வருவாள் என்று நம்பி காத்திருக்க தொடங்கினான். நாள் செல்ல செல்ல அவனுள் சிறிது பயம் குடிவர தொடங்கியது.


  இன்றும் அதே போல அவளுக்காக அவன் காத்திருக்கும் போது , பின்கட்டில் சின்ன சலசலப்பு கேட்டது. மீனுவாக தான் இருக்கும் என்று நிச்சியமாக நினைத்தவன், அவள் வருகைக்காக காத்திருந்தான். அவன் அறை அருகில் பூனையை போல் பதுங்கி பதுங்கி மீனு வருவதை கண்டவனுக்கு, சிரிப்பை அடக்க முடியவில்லை. சற்றென்று தனது கைபேசியை எடுத்து புகைப்படத்தை பார்த்து ரசிப்பவன் போல சிரித்து கொண்டான்.


  அவளது நடவடிக்கையை அரைக்கண் மூடி கண்காணித்தவன், தன்னை வேவு பார்க்க வந்த டிடெக்டீவ், தன்னை மறந்து தூங்குவதை கண்டு ரசித்தான். அவளையே பார்த்திருந்த மனோ, தீடிரென மீனு கண் விழிக்கவும் தூங்குவது போல பாசாங்கு செய்தான். அவன் எண்ணியது போலவே மீனு அவனது கைரேகையை கைப்பற்றி தன் கைபேசியை கையாள முயற்சிக்கவும், அவளது கையை பற்றினான்.


  பற்றிய கையை பத்திரமாக தன் பத்துவிரலுள் பதுக்கியவன், மீனு இன்னும் கண் திறவாது இருப்பதை கண்டு, மெல்ல அவளருகே சென்றான். " மீனு " என்று அவள் காதருகே அவன் மெல்ல கிசுகிசுக்கவும், காதுமடல் சிவக்க "ஹ்ம்ம்ம் " என்று மட்டும் கூறினாள் மீனு. அவளது 'ஹ்ம்ம்ம் ' என்ற ஒற்றை சொல்லே அவனை கிறங்க வைத்தது. ' இதுக்கு மேலயும் அவ கண் மூடி இருந்தா, உன் பாடு திண்டாட்டம் தான் டா ' என்றெண்ணியவன் ' மீனு ' என்று உரக்க அழைத்தான்.


  வந்த காரியத்தை மறந்து விட்டு ' ஞான்னு ' முழித்தவளை, கஷ்டப்பட்டு உறுத்து விழித்தவன், " எதுக்கு மீனு இந்த நேரத்துல இங்க வந்த? " என்று கேட்டான். அதுவரை தன் மனதில் வைத்து புழுங்கி கொண்டிருந்த அனைத்தையும் அவனிடம் சொல்ல வாய்திறந்தவளுக்கு, வார்த்தைகளுக்கு பதிலாக பெரிதாக ஒரு கேவல் மட்டுமே வந்தது. அதற்கு மேலும் தன்னை அடக்கிக்கொள்ள முயற்சிக்காதவள், கண்ணீர் விடலானாள்.


  மீனுவின் கோவத்தை எதிர்பார்த்திருந்தவனுக்கு, அவளது கண்ணீர் மனோவை கலங்க வைத்தது. முதலில் என்ன செய்வது என்று புரியாமல் தடுமாறியவன், அவளது கண்ணீரின் வேகம் அதிகரிக்கவும், யாதொன்றும் பேசாது அவளை அணைத்து கொண்டான். மீனுவிற்கும் அந்த அணைப்பு தேவையாய் இருந்தது. தொடக்கம் இருந்தால் முடிவும் இருக்கவேண்டுமல்லவா? அவளது கண்ணீரும் மெல்ல அடங்கி, விசும்பலாக தொடங்கியது.


  அவளை தன் அணைப்பில் இருந்து விலக்கிய மனோ, அவளது முகத்தை நிமிர்த்தி நெற்றியில் அவனது இதழ்களை ஒற்றி எடுத்தான். தன்னுள் மீண்டும் தோன்றிய இனம்புரியா உணர்வில் சிலிர்த்த அவள் மேனியை மீண்டும் அணைத்து சிலிர்க்க வைத்தான்.


  அவனது அணைப்பில் வாகாக ஒண்டிக்கொண்டாள் மீனு. மனோவின் மார்பில் தன் முகத்தை புதைத்து புதையல் தேடியவள், மீண்டும் தன் கண்ணீரால் அவன் நெஞ்சை ஈரமாக்கினாள். மெளனமாக அவளை அணைத்து தலையை வருடி கொண்டிருந்த மனோ, " அழாத மீனு, நானிருக்கேன் " என்று மட்டும் கூறினான்.


  அவனது மொழியில், அவனை நிமிர்ந்து பார்த்த மீனு, மீண்டும் அவன் மார்பில் தலை சாய்த்து, " மனோ, எனக்கு பயமா இருக்குடா... இத்தன வருசமா உன் கூடவே இருந்துட்டேன்.. இப்போ நீ வேறொரு பொண்ண கல்யாணம் பண்ணிக்க போற... அவ நம்மல பிரிச்சுட்டா என்ன பண்றது மனோ? உனக்கு எப்படினு தெரியல.. பட் என்னால உன்ன பிரிஞ்சுலா இருக்க முடியாது டா.. நான் உன்னையவே கல்யாணம் பண்ணிக்கறேன்.. என்னால லா நம்ம குடும்பத்தையும் உன்னையும் பிரிஞ்சுலா இருக்க முடியாது.. நீயே வீட்டுல சொல்லுடா.. நா சொன்னா நம்பமாட்டாங்க.. நீயே அத்தைகிட்டயும் அம்மாட்டையும் சொல்லுடா.. " என்று மெல்லிய குரலில் கெஞ்சினாள்.
  அப்பொழுதும் மௌனமாகவே இருந்த மனோவை நிமிர்ந்து பார்த்தவள், அவன் பார்வையில் இருந்த கேலியை கண்டு அசடு வழிந்தாள். " நீ பாட்டுக்கு உன்ன லவ் பண்றதால இப்படி சொல்றேன்னு நெனச்சுக்காத... ஏதோ பையன் பாவமாச்சே, யாரோ தெரியாத பொண்ணுக்கு வாக்கப்பட்டு அவன் வாழ்கை சீரழிய கூடாதேன்னு நல்ல எண்ணத்துல சொன்னேன், புரியுதா? அப்பறம் இன்னொன்னு, நான் இங்க வந்ததோ உங்கிட்ட பேசுனதோ யாருக்கும் தெரியவேண்டாம். ஏனா தெரிஞ்சா நாளைக்கு உனக்கு தான் ப்ரொப்லெம் " என்று கூறியவள் மகிழ்ச்சியோடு அங்கிருந்து ஓடிவிட்டாள்.


  படுக்கையில் சாய்ந்த மனோவின் உள்ளம் கனவுலகத்தில் சஞ்சரிக்க தொடங்கியது. மீனுவும் பலநாள் கழித்து அன்று நிம்மதியாக உறங்கினாள்.
  மறுநாள் காலை முதல்வேலையாக அந்த இருக்குடும்பமும் சேர்ந்து மாநாடு நடத்தியது.
  அப்பொழுதுதான் தூங்கி எழுந்து வந்த மீனு, ஒருவித எதிர்பார்ப்போடு அவர்களை கவனித்தாள்.
   
 3. Rabina

  Rabina Well-Known Member

  Joined:
  Aug 14, 2018
  Messages:
  433
  Likes Received:
  252
  Trophy Points:
  63
  Gender:
  Female
  nice ud
   
 4. Chandrika krishnan

  Chandrika krishnan Member

  Joined:
  Jan 22, 2019
  Messages:
  51
  Likes Received:
  50
  Trophy Points:
  18
  Gender:
  Female
  கருவாப்பையா – 18

  அன்று காலை கோழி கூவும் முன்பே மனோ எழுந்துவிட்டான். தூங்கினால் தானே எழுவதற்கு. அவனுக்கு அறையில் இருப்பு கொள்ளவில்லை.


  இறுகுடும்பத்தையும் ஒன்றுகூட்டியவன், முதல் வேலையாக நேற்றிரவு மீனு, திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததை கூறினான். அவனது மகிழ்ச்சி அவர்களையும் தொற்றிக்கொண்டது.


  முதலில் வைஷு இந்த திட்டம் பற்றி கூறியபோது, அவர்கள் யாருக்குமே அதில் நம்பிக்கை இல்லை.


  வைஷு தான் " மயிலே மயிலேனா இறகு போடாது அத்தை, மீனுக்குலாம் ஷாக் டிரீட்மென்ட் தான் லாயக்கு" என்று கூறி குமாரியை சம்மதிக்க வைத்தாள்.


  மனோ மூலம் மீனுவின் பெற்றோரையும் இதில் கூட்டுசேர்த்தாள்.
  அனைவரும் மீனு வழிக்கு வந்துவிடுவாள் என்ற நம்பிக்கையிலேயே திருமண வேலைகளை தொடங்கினார்கள்.


  ஆனால், திருமணத்திற்கு நான்கு நாட்களே உள்ள நிலையிலும், மீனுவின் மௌனம் அவர்களை பதற வைத்தது. 'மீனு திருமணத்திற்கு சம்மதிக்க வில்லையென்றால் என்ன செய்வது? ' என்ற கேள்வியும் அவர்களை மருட்டியது.


  ஏனெனில் நிச்சியம் செய்தது போல, திருமணத்தையும் அவள் விருப்பம் இன்றி நடத்த அவ்விரு பெற்றோருக்கும் மனமில்லை.


  அவர்களது ஆசைக்காக, அவ்விருவரின் வாழ்க்கையை பணயம் வைக்க அவர்களுக்கு விருப்பம் இல்லை.

  இத்தகைய நிலையில், அவர்கள் திட்டபடியே, மீனுவின் எண்ணப்போக்கும் அமைந்தது அவர்களின் அதிர்ஷ்டம்.


  அப்பொழுது தான் அங்கே வந்த மீனு, அவர்களின் சுவாரசிய பேச்சை கேட்பதற்காக, பேப்பர் படிப்பவள் போல அங்கியிருந்த சோபாவில் அமர்ந்தாள். செய்தித்தாளினுள் முகத்தை புதைத்துக்கொண்டு செவிகளை தீட்டிக்கொண்டாள் மீனு.


  அவளது செய்கையை கண்ட அனைவர்க்கும் சிரிப்பு பீறிட்டது. தங்களை கட்டுப்படுத்தி கொண்டவர்கள்,தங்களின் திட்டப்படி பேச தொடங்கினர்.


  முதலில் பேசத்தொடங்கிய வைஷு, " என்னத்தை, இவ்ளோ நாள் ஒன்னும் சொல்லாம கடைசி நேரத்துல பொண்ணு வீட்டுல இப்படி கால வாரிடாங்களே? " என்று குற்றம் சாட்டினாள்.


  ' என்னடா நடக்குது இங்க? ' என்று மீனுவும் ஆவலாக கேட்க தொடங்கினாள்.
  " எனக்கு முன்னாடியே தெரியும் வைஷு, ஆனா இப்படி கடைசில அவளோட முறைப்பையன் வந்து சண்ட போட்டதும், சமந்தி வீட்டுல அந்த பக்கம் சாஞ்சுருவாங்கனு, நான் என்ன கனவா கண்டேன்? " என்று கவலை தோய்ந்த குரலில் கூறினார் குமாரி.
  " இப்போ நாம வருத்தப்பட்டு எதுவும் ஆகப்போறதில்லை.... ஆகவேண்டியதை பாப்போம்... ஊரகூட்டி கல்யாணத்துக்கு எல்லாம் பண்ணியாச்சு... இப்போ நாம பொண்ணுக்கு என்ன பண்றது? " என்று தன் கேள்வியை முன்வைத்தார் தமிழ்.


  ' என்ன பெர்போர்மன்ஸ் டா சாமி ' என்றெண்ணிய மனோ, தன் பங்குக்கு " நான் கல்யாணம்னு ஆரம்பிக்கறப்பவே மீனு பத்திசொன்னேன்...நீங்கலா தான் மீனுக்கு புடிக்கல அது இதுன்னு சொல்லி வேணாம்னு சொல்லி இந்த பொண்ண பாத்தீங்க... இக்கரைக்கு அக்கரை பச்சைனு சொல்ற மாறி.. இப்போ பாருங்க நம்ம குடும்ப மானமே போக போகுது " என்று சவடால் பேசினான்.


  இதை எல்லாம் கேட்ருந்த மீனு, " ஏய்ய் மீனு, காத்து உனக்கு சாதகமா தான் வீசுது டி.. அதும் இல்லாம இந்த பெருசுங்க பண்ணதுக்கு வீனா அந்த புல்லப்பூச்சிய சந்தேக பட்டுட்டியே.... " என்று எண்ணமிட தொடங்கினாள்.


  மனோவின் பேச்சை கேட்ட அவனது தந்தை, " நீ சொல்றது தான் பா சரி, கைலேயே வெண்ணையை வெச்சுகிட்டு நாம ஏன்மா நெய்க்கு அலையனும் தமிழு,அதான் மீனு இருக்காளே, நம்ம மனோக்கு " என்றார். " சபாஷ் மாமா " என்று குதிக்க வேண்டும்போல இருந்த உணர்வை மீனு கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தி கொண்டாள்.


  அவரது பேச்சை குமாரியும் ஆமோதிக்கையில்,
  " அண்ணா, எங்களுக்கும் ஆசை தான்... ஆனா அவளுக்கு மனோ மேல விருப்பம் இல்லைங்கங்கறப்பா, நாம ஏன் மனோ வாழ்க்கையை கெடுக்குனும்..? வேணா நம்ம வைஷுவை கட்டிவெக்கலாமே? " என்று தமிழ் ஆட்சேபித்தார்.

  அதைப்பற்றி அங்கே விவாதம் தொடங்கியது.

  " மீனு, உனக்கு எதிரி வேற யாரும் இல்ல, உன் மம்மி தான்.. இதுக்கு மேலையும் நீ அமைதியா இருந்தீன்னா.. மனோவை வைஷுக்கு தாரா வாத்தே குடுத்துருவாங்க... உசாரு அய்யா உஷாரு " என்ற மீனுவின் மனசாட்சியை ஏற்ற மீனுவும் பேச தொடங்கினாள்.
  " அம்மா " என்றவள் அழைத்தது யார் காதிலும் விழவில்லை. இரண்டு மூன்று முறை அழைத்தும் அதுவே தொடர்ந்ததால், கோபமான மீனு " அம்மா " என்று கத்தினாள்.


  அப்பொழுதுதான் அவளை அங்கே காண்பது போல அவர்களும் அவளை பார்த்து வைத்தனர்.
  தன் தாய் அருகே வந்த மீனு, " நீங்க சொல்றது உங்களுக்கே நியாயமா இருக்கா..? சொல்லுங்க? சின்ன வயசுல இருந்து அகத்தியர் படத்த போட்டு போட்டு காமிச்சு வளர்த்துனீங்களே... மறந்துடீங்களா? " என்று சம்பந்தம் இல்லாது பேச தொடங்கியள்., திடீரென்று
  ' தாயின் சிறந்த கோவிலும் இல்லை
  தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை ' என்று அந்த படத்தில் வரும் பாடலை பாட தொடங்கிவிட்டாள்.


  அவளை விசித்தரமாக பார்த்த பெரியவர்கள் கண்களில் சிரிப்பு பொங்கியது. சிரியவர்களோ,
  " ஆத்தி பைத்தியமா இது, இவ்ளோ நேரம் நல்லா தானடா பேசிட்டு இருந்துச்சு " என்பதுபோல வியந்தனர்.


  அங்கிருந்த அனைவருக்குமே சிரிப்பை கட்டுப்படுத்துவது பிரம்மபி்ரயத்தனமாக இருந்தது.


  ஒருவழியாக பாடிமுடித்த மீனு, " இந்த பாட்டுலா கேட்டு வளந்தவ மா உன் பொண்ணு. நீங்க நிச்சியம் பண்ணினப்போ கூட நான் உங்கள எதிர்த்து ஒரு வார்த்தை கேட்கலையே..இப்போ நம்ம குடும்பத்துக்காக நான் உங்க பேச்ச கேக்காம இருப்பனா? மனோ யாருமா? நம்ம பையன்... நம்ம வீட்லயே கால சுத்திட்டு திருஞ்சவன்...அவனுக்கு நான் வாழ்கை தரேன்... யாரும் கவலைப்படாம போய் கல்யாண வேலைய பாருங்க " என்று கூறி கூட்டத்தை அங்கிருந்து கலைத்தாள்.


  அனைவரும் சென்றதும் 'எப்படி என் ஆக்ட்டிங்? ' என்பதுபோல, மீனு மனோவை பார்க்க, அவனும் புன்னகைத்தவாறே ' சூப்பர் ' என்று கைஉயர்த்தினான்.


  அதிகாலை மலரும் மலரை எல்லாம் போட்டிக்கு அழைத்தவாறு, அழகே உருவாய் தன் அருகே மணவறையில் அமர்ந்திருந்த மீனுவை விட்டு மனோவின் பார்வை இப்புறம் அப்புறம் நகரவில்லை.


  கூடி இருந்தோரின் நல்லாசிகளோடும் மகிழ்ச்சியோடும், மீனாட்சியின் கழுத்தில் மனோரஞ்சன் மங்கலநாணை பூட்டினான்.


  நெற்றில் குங்குமம் இட்டு, கைபிடித்து அக்னி வலம் வருகையில், மீனுவிற்கு மீண்டும் உடல் சிலிர்த்தது, அன்றுபோல.

  திருமண சடங்குகள் எல்லாம் முடிந்து, மனோ முதல் இரவுக்காக அவனது அறைக்குள் நுழையும்முன்பே, அங்கே கட்டிலில் அமர்ந்து மீனு வாழைப்பழம் உண்டுகொண்டிருந்தாள்.
  அழகாய் அமர்ந்திருந்த மனைவியை ரசித்தவாறே உள்ளேநுழைந்த மனோ, அவள் உண்டு முடித்து எரிந்திருந்த தோலில் காலை வைத்தான்.
   
  kannamma 20 likes this.
 5. kannamma 20

  kannamma 20 Well-Known Member

  Joined:
  May 14, 2017
  Messages:
  440
  Likes Received:
  325
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Super story. Meenu build up overa than irukku. Oru vazhiya mano and meenu kalyanam mudinjathu.
   
  Chandrika krishnan likes this.
 6. Rabina

  Rabina Well-Known Member

  Joined:
  Aug 14, 2018
  Messages:
  433
  Likes Received:
  252
  Trophy Points:
  63
  Gender:
  Female
  mano and meenu marriage mudinchiduchi.. nice ud
   
 7. Chandrika krishnan

  Chandrika krishnan Member

  Joined:
  Jan 22, 2019
  Messages:
  51
  Likes Received:
  50
  Trophy Points:
  18
  Gender:
  Female
  Hahaha....
   
 8. Chandrika krishnan

  Chandrika krishnan Member

  Joined:
  Jan 22, 2019
  Messages:
  51
  Likes Received:
  50
  Trophy Points:
  18
  Gender:
  Female
  Tq pa
   
 9. Chandrika krishnan

  Chandrika krishnan Member

  Joined:
  Jan 22, 2019
  Messages:
  51
  Likes Received:
  50
  Trophy Points:
  18
  Gender:
  Female
  கருவாப்பையா – 19

  அன்று திருமணம் முடிந்த கையோடு, வாழ்த்த வந்த சொந்தங்கள் அனைவரும் விடைபெற்று செல்ல, அந்த இருகுடும்பங்களின் முக்கிய உறவுகள் மட்டுமே வீட்டிற்கு திரும்பினர்.


  புதுமணமக்களை ஆரத்தி சுற்றி வரவேற்ற குமாரி, மீனுவையும் மனோவையும் அழைத்து கொண்டு பூஜை அறைக்குள் சென்றார். அவளை விளக்கு ஏற்ற கூறியவர், கண்மூடி மனமுருக வேண்டினார்.


  வெளியே வந்ததும் தன் தாய் தந்தையை வணங்க மனோ சாஷ்டாங்கமாக விழுகையில் , அதுவரை அவன் அருகில் பவ்யமாக நின்ற மீனு, அடுத்த நொடியே அவளது அத்தை மாமா நடுவில் சென்று நின்றாள்

  .
  காலில் விழுந்து கண்மூடி வணங்கிய மனோ எழும் போதுதான், அது தன் அருமை மனைவியின் கால் என்பதையே உணர்ந்தான்.


  அதுவரை சிரிப்பை அடக்கி கொண்டிருந்த அனைவரும், குபீரென சிரிக்க தொடங்கினர். அவனுக்கு பழிப்பு காட்டிய மீனு அங்கிருந்தாள், 'உசுருக்கு உத்தரவாதம் இல்லை '
  என்பதை உணர்ந்தவளாக சிட்டாக சிதறிவிட்டாள்.


  மத்திய உணவு முடிந்து பெரியவர்கள் எல்லாம் அசதியில் கண்ணயறவும், அதற்காகவே காத்திருந்த அந்த இளையோர் கூட்டம் கும்மாளமிட தொடங்கியது.
  அது இது என்று பேசிக்கொண்டும், ஒருவர் காலை மற்றவர் வாருவதுமாக அங்கே மகிழ்ச்சிக்கும் சிரிப்பொலிக்கும் பஞ்சமில்லாமல் இருந்தது .


  அங்கே இங்கே சுற்றி கடைசியாக பேச்சு மீனுமனோ பக்கம் திரும்பியது. வரைமுறை இல்லாது அவர்களின் கேலி கிண்டலில் கொஞ்சநேரத்தில் எல்லாம் மீனு நெளிய தொடங்கினாள்.


  அவர்களின் சீண்டலுக்கு பதிலுக்கு பதிலுக்கு ஏட்டிக்கு போட்டியாக வழக்காடும் மீனுவை எதிர்பார்த்து ஆவலாக காத்திருந்த அனைவர்க்கும், அவளது நாணமும் நெளிவும் ஆச்சரியத்தை அளித்தது.


  அவளது வெட்கத்தை சற்றுநேரம் வேடிக்கை பார்த்த மனோ, மனைவிக்கு புதிதாக வந்துள்ள' வெட்கம் மடம் நாணம் பயிர்ப்பு ' என்ற பெண்களுக்கான குணங்களில், அவள் சிக்கி தவிப்பதை, கணவனுக்கு உரிய தாபத்தோடும் ஆசையோடும் ரசிக்கத்தொடங்கினான்.


  அவனது பார்வை மாற்றத்தை கவனித்த வைஷுவும் பூரணியும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்து கொண்டனர்.


  அங்கிருந்த மற்ற வாண்டுகளை ஓசை படாது அவ்விடம் விட்டு கிளப்பினார்.
  மற்றவர்கள் விலகி சென்றது கூட அறியாமல், இருவரும் தங்களுக்கே தங்களுக்கான உலகத்தில் உலா வந்தனர்.


  தோட்டத்தின் துவைக்கும்கல் மீது சாய்ந்து நின்று மீனுவை ரசித்து கொண்டிருந்தான் மனோ. அப்பொழுதும் கூட தன்னை நிமிர்ந்து பாராது அமர்ந்திருந்த மீனுவை கண்டவன் அவளருகே சென்றான்.


  படிக்கட்டில் அமர்ந்திருந்த மீனுவின் அருகே மனோ வர வர மீனுவின் இதய துடிப்பு அதிகரித்தது.

  அவளை நெறுக்கியபடி அமர்ந்தவன், மீனுவை தோளோடு அணைத்தவாறு, அவளது தலையின் மீது தன் கன்னத்தை சாய்த்து கொண்டவன், கண்மூடி நிம்மதி பெருமூச்செறிந்தான்.
  தான் ஆசைப்பட்டவளேயே குடும்பத்தினருடைய உதவியோடு மணமுடித்த மகிழ்ச்சியும் பூரிப்பும் அவனை நிறைத்தது. தன்னவளின் அருகாமையை அனுபவித்தவன், சொல்லொணாத ஆனந்தத்தில் திளைத்திருந்தான்.


  மீனுவின் மனமோ மனோவின் எண்ணத்திற்கு நேர் எதிராக இருந்தது. மனோவின் பிரிவை தாங்கயியலாது, அதை தடுக்கும் மார்கமாக அந்த திருமணத்தை அங்கீகரித்தவளுக்கு, அவர்களின் கேலியும் கிண்டலும், திருமணத்தை தாண்டி அவள் செய்ய வேண்டிய கடமையை அவளுக்கு உணர்த்தியது.


  மனோவை தன் நண்பனாகவும் தன் உயிரினும் மேலானவனாகவும் மட்டும் பார்த்த மீனுவால், அவனோடான தாம்பத்ய வாழ்க்கையை எண்ணிப்பார்க்க முடியவில்லை.


  " உன் சுயநலத்துக்காக அவன் வாழ்க்கையை பாலைவனமாக மாத்த போறியா மீனு? " என்று கேள்வி கேட்ட மனசாட்சியை அவளால் அலட்சியப்படுத்த முடியவில்லை.


  " ஏன் பாலைவனமாகனும்? உனக்கு அவனை பிடிக்கும் தானே? அப்பறம் என்ன தயக்கம்? அவனை கல்யாணம் பண்ணிகிட்டா...இந்த கடமைகளும் உனக்கு வரும்னு தெரியாதா மீனு? " என்று எதிர்த்த மூளையையும் அவளால் நிராகரிக்க முடியவில்லை.


  தன்னுளேயே இருவேறு போராட்டங்களை நடத்தி கொண்டிருந்தவள்,மனோவின் அருகாமையில் இன்னும் குழம்பினாள்.


  'உனக்கு தான் மனோ மீது காதல் இல்லையே? அப்புறமும் ஏன் அணைப்பை நிராகரிக்க மாட்டேங்கற? ' என்று மீண்டும் கேட்ட மனசாட்சியை, என்ன செய்வது என்றே அவளுக்கு தெரியவில்லை.


  மௌனமாகவே அவனது அணைப்பில் இருந்து தன்னை விடுபடுத்தி கொண்டவள், தன்னை பின்தொடர்ந்த மனோவின் பார்வையை கண்டுகொள்ளாமல் உள்ளே சென்று விட்டாள்.
  அன்றிரவு குறித்த பயம், அவளை கொஞ்சகொஞ்சமாக ஆட்கொள்ள தொடங்கியது. மனோவை இந்த நிலையில் சந்திக்கவும் அவளுக்கு பயமாக இருந்தது. பயம் அவள் மீதே தான்.
  தன் உள்ளம் என்னவென்று தெரியாமல் அவள் இருக்கும் இந்நிலையில், அவனை திருமணமும் செய்து கொண்டபின், அவனை வருத்தவும் அவளுக்கு விருப்பம் இல்லை. அதே போல, உண்மையான நேசமின்றி அவனோடு இணையவும் அவளுக்கு விருப்பம் இல்லை.


  யோசையோடே சுற்றியவள் இரவு உணவை தவிர்த்துவிட்டாள். இரவுக்காக அவளை தயார் படுத்திய போது சூழ இருந்தோரின் கிண்டல்கள் அவளை இன்னும் கலவரப்படுத்தியது என்றால், அத்தையின் ஆனந்த கண்ணீர் அவளை சிந்திக்க வைத்தது.


  நேரம் நெருங்க நெருங்க பரபரப்புற்றவள், அவன் முன்னே சென்று உளறிக்கொட்டிவதை விட, அவனுக்கு முன்பே அறைக்கு செல்வது மேல் என்று முடிவு செய்தாள்.
  " அத்தை, எனக்கு நேத்துல முழிச்சது ரொம்ப தூக்கமா வருது, நான் தூங்கபோறேன் " என்று அமைதியாக கூறி யோசனையோடு சென்ற மருமகளை கவனிக்க குமாரி தவறவில்லை.


  அறைக்குள் சென்று தனிமையில் தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்ட மீனுவுக்கு, பசி வயிற்றை கிள்ளியது.


  சுற்றும் முற்றும் பார்த்தவள் அங்கிருந்த வாழைப்பழத்தை எடுத்து உண்ணத்தொடங்கினாள். தோளை வழக்கம் போல் தூக்கிப்போட்டவள் அதில் உள்ளே நுழைந்த மனோவே வழுக்கி விழுங்கவும், இறுக்கம் எல்லாம் தளர்ந்து விழுந்து விழுந்து சிரிக்க தொடங்கினாள்.
  'அன்னிக்கு நான் கஷ்டப்பட்டு விருச்ச வலையில நீ என்ன மடவெச்சீல மனோ... இப்போ பாத்தியா..? ' என்று அவனை கிண்டல் செய்ய தொடங்கினான்.


  " லூசு, புருஷன் உழுந்து கிடக்குறான்... உத்தம பொண்டாட்டி சிரிக்கரியா? மொதல்ல வந்து தூக்கி விடுடி " என்று எறிந்துவிழுந்தவனை கைபிடித்தி தூக்கி கட்டிலில் அமரவைத்தாள் மீனு.
  ' ஐயோ அம்மா,' என்றவன் வலியில் முனங்க மனம்கேலாது மீனுவும், "நான் வேணா ஒத்தடம் கொடுக்கவடா மனோ? " என்று கேட்டாள்.
  " என்னத்தையோ பண்ணு " என்றுகூறி படுத்துகொண்டான் மனோ.
  ஹீட்டரில் சுடுதண்ணீர் பிடித்து அதை மேஜை மேல் வைத்தவள், அங்கிருந்த மனோவின் பட்டு அங்கவஸ்திரத்தை எடுத்து தண்ணீரில் நனைத்த மீனு, மனோவின் சட்டையை மட்டும் கொஞ்சம் மேலே தூக்கிவிட்டவள், ஈர துணியை அப்படியே அவனது இடுப்பின் மேல் வைத்தாள்.


  " அம்மா " என்று சூடு தாங்காது அலறிய மனோ,
  " அடிப்பாவி ஏண்டி இப்படி செஞ்ச? " என்று மீனுவை பற்றி இழுத்து படுக்கையில் தள்ளினான்.


  " மனோ உனக்கு ஒத்தடம் குடுக்கத்தான்டா
  அப்படி செஞ்சேன்.. சாத்தியமா இப்போ நடந்தது எதுவுமே நான் வேணும்னு பண்ணல மனோ " என்று மூக்கை உறுஞ்சியவாறு கூறியவளை, கூர்ப்பார்வை
  பார்த்தான் மனோ.


  "எனக்கு சுடுதண்ணி ஒத்தடம் லா வேணாம் குட்டச்சி, உன் உதட்டால ஒத்தடம் குடு " என்று கூறியவாறே அவனது விரல்கள் அவளது உதடுகளை அளவிட தொடங்கியது.


  அவனது தீண்டலில் தித்தித்த மனதை கஷ்டப்பட்டு கட்டுக்குள் கொண்டுவந்தவள்,
  " மனோ உன் கிட்ட கொஞ்சம் பேசணும்டா " என்று ஒருவாறு உள்ளே சென்ற தன் குரலை ஒன்றுதிரட்டி கூறியவாறு, அவனது விரல்களை விலக்கி எழுந்து அமர்ந்தாள்.
   
 10. Kavyakeerthi

  Kavyakeerthi Active Member

  Joined:
  Oct 15, 2018
  Messages:
  104
  Likes Received:
  68
  Trophy Points:
  28

Share This Page