கற்பக விருட்சம்

Discussion in 'Poetry' started by raray, Sep 21, 2019.

 1. raray

  raray New Member

  Joined:
  May 22, 2019
  Messages:
  12
  Likes Received:
  3
  Trophy Points:
  3

  கல்லூரி நாட்களில் வீடு எடுத்து தங்கியிருந்தோம்
  அப்போது
  எங்களுக்கு சமையல் செய்ய வந்தாய்

  தாமதமாய் வரும் வேளையில் சிரிப்பினால் எங்கள் வசையை தவிர்த்தாய்
  சமையல் தாறுமாறாய் ஆன போது பேச்சால் சமாளித்தாய்


  நன்றாக இருக்கும் போது உணவு குறைவாய் இருக்கும்
  அதிகமாய் செய்யும் போது உப்போ
  , உரைப்போ தாறுமாறாய் இருக்கும்

  உன் சமையலால் பல புதிய சுவை உணவு வகைகளை உண்டோம்
  உன் ஊதியத்தை கொடுக்காவிட்டாலும் தவறாமல்
  வந்து சமைப்பாய்

  எல்லா மளிகை கடைகளிலும் எமக்காய் கணக்கு வைத்திருப்பாய்
  கடன் அதிகமானால் அண்டை வீட்டாரிடம் கடன் வாங்குவாய்


  எத்தனை பேர் இருந்தாலும் இன்முகத்தோடு சமைப்பாய்
  20 ஆட்கள் வந்தாலும் அசராமல் சமைக்கும் உன் திறனை வியந்ததுண்டு
  தேநீரை எத்தனை முறை கேட்டாலும் சளிக்காமல் தருவாய்
  உன் தேநீர், காரக்குழம்பிற்காக நண்பர்களின் கூட்டம் அலைமோதும்


  நாளாக, நாங்கள் உணவு விடுதிகளை மறக்க ஆரம்பித்தோம்
  எங்கள் வீடுகளில் அனைத்து காய்கறிகளையும் உண்ண ஆரம்பித்தோம்


  அறையில் தங்கியிருந்த அனைவரும் சற்று பெருத்தோம்

  இன்றும் உன் சமையல் எங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது

  நளதமயந்தியாய் எங்களை பேணிகாத்த கற்பக விருட்சமே
  எங்கிருந்தாலும்
  , நீ நீடுழி வாழ்வாய் என வாழ்த்தும்

  ராரே
   

Share This Page