கலோரியை எரிக்க ஸ்கிப்பிங் பயிற்சி

Discussion in 'Fitness & Easy workouts' started by NATHIYAMOHANRAJA, Aug 13, 2018.

 1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  4,451
  Likes Received:
  469
  Trophy Points:
  83
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  இன்றைய காலகட்டத்தில் நம்மிடம் இருந்து தொலைந்துபோன, மறந்த ஓரு உடற்பயிற்சி தான் ‘ஸ்கிப்பிங்’. ‘ஜாகிங், ரன்னிங், சைக்கிளிங்கைவிட அற்புதமான விளையாட்டு ஸ்கிப்பிங். விளையாட்டு மட்டுமல்ல; சிறந்த உடற்பயிற்சியும்கூட.
  அந்தக் காலத்தில் ஒரு பொழுதுபோக்கு விளையாட்டாகச் செய்ததை, இன்றைக்கு உடலுக்கு ஆரோக்கியமானது என்று தெரிந்தும்கூட பலரும் செய்யத் தயங்குகின்றனர். ஸ்கிப்பிங் விளையாடுவதற்கான ஆர்வமும் குறைந்துகொண்டே போகிறது. ஒரு மணி நேரம் ஸ்கிப்பிங் செய்தால், 1,300 கலோரிகள் வரை எரிக்க முடியும்.
  ஸ்கிப்பிங் செய்வதால், நம் உடலில் உள்ள தசை, எலும்புப் பகுதிகள், கை கால்கள் என முழு உடலுமே வேலை செய்கிறது. இதனால், நம் உடலில் உள்ள ரத்த நாளங்களின் ரத்த ஓட்டத்தைச் சீராக வைக்க உதவுகிறது. நம் உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் ரத்தத்தைக் கொண்டுபோகும் ஒரு செயலாக ஸ்கிப்பிங் பயன்படுகிறது.
  ஸ்கிப்பிங் பயிற்சியின்போது நாம் குதிப்பதால், இடுப்புப் பகுதி வலுவடைகிறது. தொப்பை மற்றும் வயிற்றுப் பகுதியில் உள்ள தேவையற்ற கொழுப்பு குறைகிறது. உடலின் வளைந்துகொடுக்கும் தன்மையும் அதிகரிக்கிறது. இதயத்துக்கு மிகவும் ஏற்ற பயிற்சி.
  ஸ்கிப்பிங் செய்யும்போது, 70 சதவிகித உடலின் கீழ்ப் பகுதிகளும், 30 சதவிகிதம் இடுப்புக்கு மேல் உள்ள பகுதிகளும் வேலை செய்கின்றன. கால், குதிகால் மற்றும் கணுக்கால் பகுதிகள் வலுவடைகின்றன. தோப்புக்கரணம் மற்றும் ஸ்கிப்பிங் செய்யும்போது மட்டும்தான் இரண்டு கைகளும், கால்களும் ஒரே நேரத்தில் வேலை செய்கின்றன.
  இதனால், உடல் மட்டுமல்லாமல் மூளையிலும்கூட உடற்பயிற்சியின் தாக்கம் ஏற்பட்டு, ஞாபக சக்தி அதிகரிக்கும். ஸ்கிப்பிங் பண்ணும்போது ரெண்டு கைகளையும் சுழற்றுவதால், கைகளில் உள்ள தசைப்பகுதிகள், மணிக்கட்டு போன்றவை வலிமை பெறும்.
  ஜாகிங், உடற்பயிற்சி செய்யும்போது கழுத்துவலி, மூட்டுவலி ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆனால், ஸ்கிப்பிங் செய்யும்போது இதுபோன்ற வலிகள் ஏற்பட வாய்ப்பு இல்லை.
   

Share This Page