காதலர் தினத்தன்று உங்கள் காதலை வெளிப்படுத்த

Discussion in 'Memes and Funny Videos - Daily Updates' started by NATHIYAMOHANRAJA, Feb 14, 2019.

 1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  6,340
  Likes Received:
  505
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  1.நான் உன் மீது வைத்திருக்கும் அன்பை இந்த சிவப்பு ரோஜாக்கள் ரகசியமாய் வெளிப்படுத்தும்!

  2.வெவ்வேறு வழிகளில் அன்பை வெளிப்படுத்தலாம்
  அதில் ஒருவழி, தூரத்திலிருக்கும் உன்னை, இந்த செய்தியை வாசிக்கச் செய்வது!

  ஹேப்பி வேலண்டைன்ஸ் டே!

  3.எப்போதும் என் இதயம் பாட விரும்பும் பாடல் ‘நீ’ தான்!
  காதலர் தின வாழ்த்துகள்!

  4. நம் அன்பு ரோஜா மலரைப்போல் மென்மையானது!
  அதனால் எப்போதும் மலரட்டும்!

  5. அதிகளவு கசப்பில் கலந்த சிறிய அளவு இனிப்பு அதன் தன்மையை மாற்றும்!

  6.வம்பான
  பார்வையை
  அம்பாக
  எய்கின்றாய்

  7. நீ தூரமாக இருந்தாலும்
  உனது குரலை
  கேட்காத நொடிகள் இல்லை
  கேட்கிறேன் இதய துடிப்பில்
  ஏனென்றால் என் இதயம்
  துடிப்பது உனக்காக அல்லவா

  8. மனமும்
  மகிழ்வில்
  உன் விழிகளில்
  என்னை காண்பதால்

  9. என்னை மறந்து
  கொஞ்ச நேரம்
  உலகை ரசிக்க
  நினைத்தால்
  அங்கும் வந்துவிடுகிறாய்
  நானே...
  உன் உலகமென்று

  10. கொஞ்சும்
  மொழியில்
  கெஞ்சும்
  உன் வார்த்தைகளில்
  என் கோபங்களும்
  மறைந்து விடுகிறது

  11. மழைச்சாரலாய்
  நீவர கவிச்சோலையானேன்
  நான்...!

  12. மனதிலிருக்கும்
  ஆசைகளையெல்லாம்
  கொட்டி தீர்த்தவன்
  அயர்ந்து போனான்
  குழந்தையாய்...!

  13. காற்றோடு
  பேசும் மலராய்
  உன் மனதோடு
  பேசி கொண்டிருக்கின்றேன்
  நான்...!

  14. நான்
  மறைந்தாலும்
  உன் மனதில்
  மறக்கப்படாதளவுக்கோர்
  அழகிய வாழ்க்கையை
  வாழ்ந்திட வேண்டும்

  15. பார்க்க
  மறுத்த விழிகளும்
  காத்துக்கிடக்கு உன்னன்பில்
  தொலைந்து...!

  16. இடைவெளி
  வலியை தருமென
  தெரிந்தும் பிடிவாதமாய்
  அனுபவித்திருக்கிறோம்
  இருவரும்...!

  17. விடைப்பெறட்டும்
  நாணம்
  விடைத்தருகிறேன்
  நானும்
  உன் பார்வையின்
  கேள்விக்கு

  18. உலகை
  காட்டியது
  பெற்றோரென்றாலும்
  அதை ரசிக்க
  வைத்துக்கொண்டிருப்பது
  நீ...!
   

Share This Page