கார்த்தியின் 'தேவ்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Discussion in 'Celebrity Speech' started by NATHIYAMOHANRAJA, Oct 25, 2018.

  1. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    4,877
    Likes Received:
    477
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    'தேவ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியானது. சூர்யா தன் ட்விட்டர் பக்கத்தில் இதனை வெளியிட்டார்.
    அறிமுக இயக்குநர் ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் படம் 'தேவ்'. இதில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் நடிக்கிறார். ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தைத் தொடர்ந்து இருவரும் இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர்.

    கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ் ராஜ், ரேணுகா, அம்ருதா, ஆர்.ஜே. விக்னேஷ்காந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டெர்டெயின்மென்ட் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்து வருகிறது.
    உக்ரைன் படப்பிடிப்பைத் தொடர்ந்து, சென்னை மற்றும் ஹைதராபாத், குலுமணாலியில் சில முக்கிய காட்சிகளைப் படமாக்கவுள்ளனர். படப்பிடிப்பு, இறுதிக்கட்டப் பணிகள் உள்ளிட்டவை முடிக்கப்பட்டு டிசம்பர் 21-ல் படத்தை வெளியிடத் திட்டமிட்டு இருக்கிறது படக்குழு.
    கார்த்தி படங்கள் தெலுங்கிலும் வெளியாகும் என்பதால், அங்கும் இதே பெயரை வைக்கத் தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் 'தேவ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை சூர்யா தன் ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டார்.
     

Share This Page