கிராமத்து இரவு உணவுகள்

Discussion in 'Recipes' started by NATHIYAMOHANRAJA, Apr 24, 2019.

  1. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    5,217
    Likes Received:
    486
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    தக்காளி அடை


    சமைக்க தேவையானவை

    • பழுத்த தக்காளி – 4
    • புழுங்கல் அரிசி – 200 கிராம்
    • காய்ந்த மிளகாய் – 4
    • இஞ்சி – ஒரு சிறு துண்டு
    • கறிவேப்பிலை – சிறிதளவு
    • எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

    உணவு செய்முறை : தக்காளி அடை

    • Step 1.

      முதலில் புழுங்கல் அரிசியை ஊற வைத்து இஞ்சி, காய்ந்த மிளகாய், தக்காளி சேர்த்து அடைமாவு பதத்தில் அரைக்கவும். கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிப் போடவும். உப்பு சேர்த்துக் கலந்து அடைகளாக வார்த்து, இருபுறமும் எண் ணெய்விட்டு, பொன்னிறமாக வேக விட்டு எடுக்கவும். சுவையான தக்காளி அடை தயார்.
     
  2. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    5,217
    Likes Received:
    486
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    சோள ரவை உப்புமா.


    சமைக்க தேவையானவை

    • சோளம் – 1 கப்
    • அரிசி ரவை – 1 கப்
    • கோதுமை ரவை – 1 கப்
    • பெரிய வெங்காயம் – 1
    • கறிவேப்பிலை – சிறிதளவு
    • இஞ்சி – சிறிய துண்டு
    • பச்சை மிளகாய் – 1
    • கடுகு – 1 டீஸ்பூன்
    • உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் – சிறிதளவு
    • தேங்காய் எண்ணெய், உப்பு – தேவையான அளவு

    உணவு செய்முறை : சோள ரவை உப்புமா

    • Step 1.

      முதலில் சோளத்தை ரவையாக உடைக்கவும். அரிசி ரவை, கோதுமை ரவை, சோள ரவை மூன்றையும் ஒன்று சேர்க்கவும். கடா யில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து பொடியாக நசுக்கிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றைச் சேர்க்கவும்
    • Step 2.

      கலந்து வைத்திருக்கும் ரவையின் அளவில் 1 பங்குக்கு மூன்று பங்கு என்ற விகிதத்தில் தண்ணீர் ஊற்றவும். பிறகு உப்பு சேர்த்து, கொதித்ததும் கலந்து வைத்திருக்கும் ரவையைத் தூவிக் கிளறி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டுக் கிளறி இறக்கவும். சுவையான சோள ரவை உப்புமா தயார்
     
  3. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    5,217
    Likes Received:
    486
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    உளுந்து களி

    சமைக்க தேவையானவை

    • பச்சரிசி – 1 கப்
    • நல்லெண்ணெய் – 1 குழம்பு கரண்டி அளவு
    • கருப்பட்டி – 1 கப்
    • கருப்பு உளுந்து – 1 கப்
    • தேங்காய் துறுவல் – அரை கப்

    உணவு செய்முறை : உளுந்து களி

    • Step 1.

      முதலில் அரிசி உளுந்து இரண்டையும் மெஷின்ல கொடுத்து நைஸா அரைத்து கொள்ளவும். பின்பு கருப்பட்டியை பொடிச்சு, அரை கப் தண்ணிவிட்டு கொதிக்க வைத்து வடிகட்டி ஆற வைக்கவும்
    • Step 2.

      அகலமான வட சட்டியில் மாவை கொட்டி அதனுடன் கருப்பட்டி தண்ணீர் மற்றும் தேங்காய் துறுவல் சேர்த்து அதனுடன் மேலும் 1கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கி வைத்து விட்டு பின்பு அந்த கலவையை அடுப்பில் வைத்து கட்டி விழாமல் நன்கு கிளர வேண்டும் சிறிது நல்லெணய் சேர்த்து அஞ்சு நிமிஷத்துக்கு கிளறவும் மாவு திரண்டு அல்வா பதத்திற்கு வரும்போது இறக்கவும். பின்பு பரிமாறவும்
     

Share This Page