கீழடி அகழாய்வு

Discussion in 'Short Stories' started by NATHIYAMOHANRAJA, Oct 21, 2019.

 1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,260
  Likes Received:
  512
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  கீழடியில் 1,2,4,5 ஆகிய கட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் கண்டறியப்பட்ட பல்வேறு பொருட்களை வகைப்படுத்தி, Royal Testing, Chemical Testing, Carbon Dating-க்கு உலகின் தலைசிறந்த ஆய்வுக்கூடங்களான அமெரிக்காவில் புளோரிடா – பீட்டா, இத்தாலி, இந்தியாவில் புனே – டெக்கான் யுனிவர்சிட்டி, பெங்களூரு – இக்பால் யுனிவர்சிட்டி ஆகிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டதாகவும் அதன் பின்னரும், சிலர் உலகமே ஏற்றுக் கொண்ட கார்பன் டேட்டிங் ஆய்வு முறையை ஏற்றுக் கொள்ளமுடியாது, அது நம்பகத்தன்மை அற்றது; Carban Dating முடிவை வைத்து காலத்தை முடிவு செய்ய முடியாது என்று வாதிடுகின்றனர்.

  1 of 17


  [​IMG]
  [​IMG]
  [​IMG]
  [​IMG]
  [​IMG]
  [​IMG]
  [​IMG]
  [​IMG]
  [​IMG]
  [​IMG]
  [​IMG]
  [​IMG]
  [​IMG]
  [​IMG]
  [​IMG]
  [​IMG]
  [​IMG]

  உலகம் முழுவதும் காலத்தின் தொன்மையைக் கணக்கிடுவதற்கு கரிம வேதியல் ஆய்வுமுறையே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுவே அறிஞர்களாலும் அறிவியலாளர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதை ஏற்க மறுப்பதன் மூலம் அவர்கள் தங்கள் அறியாமையை வெளிப்படுத்தியதாகவே அவர் குறிப்பிட்டார்.
  கார்பன் டேட்டிங் ஆய்வு முறையால் காலத்தை துல்லியமாக கணிக்க முடியாது என்றால் இதுவரையிலும் சொல்லப்பட்டு வந்த எகிப்து, ரோம், சுமேரிய, சிந்து ஹரப்பா நாகரிகங்களின் காலம் அனைத்தும் தவறு என்ற முடிவுக்குத் தான் வர முடியும். கீழடி நாகரிகத்தின் சான்றுகளை கேள்விக்கு உட்படுத்தும் அந்தக் கூட்டம் ரிக் வேத காலத்தை 3000 ஆண்டுகள் முற்பட்டது என்பதற்கு எந்த தொல்லியல் சான்றுகளை உலகின் பார்வைக்கு வைத்தனர்?
  கீழடியை விட்டு நகரும் முன் இந்த அகழ்வாராய்வுக்கு நிலம் தந்துதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்க வேண்டும் என்று விரும்பினோம். நிலம் தந்தவர்களில் பலரும் பல்வேறு ஊர்களில் இருந்ததால் தற்போது நடந்து முடிந்துள்ள 5-ம் கட்ட அகழாய்வுக்கு இடம் கொடுத்துள்ள மாரியம்மாள் அவர்களை மட்டுமே சந்திக்க முடிந்தது. 2 ஏக்கர் நிலத்தை ஆய்வுக்கு கொடுத்ததைப் பெருமையாகவே கருதினார்.
  [​IMG]அவரைப் பாராட்டி சால்வை போர்த்தியபோது அவர் அடைந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் அளவிட முடியாததாக இருந்தது. அதுபோலவே அங்கே பணியில் ஈடுபட்டிருந்தவர்களும் மகிழ்ச்சியாகவும் மக்கள் கேட்கிற கேள்விகளுக்குப் பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டும் இருந்தனர். இதுவரை இந்தியாவில் நடைபெற்றுள்ள அகழாய்வுகள் எதற்கும் இல்லாத சிறப்பு கீழடிக்குக் கிடைத்துள்ளது. தமிழர் நகர நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமையானது என்ற தகவல் ஊடகங்கள் வாயிலாகப் பரவியதை அடுத்து இலட்சக்கணக்கான மக்கள் வந்து பார்வையிட்டுச் சென்றுள்ளனர். அக்டோபர் 2 காந்தி பிறந்த நாளன்று 20 ஆயிரம் பேர்வரை வந்துள்ளனர்.
   
 2. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,260
  Likes Received:
  512
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  அடுத்தகட்ட அகழாய்வுக்கு அரசு நிதி ஒதுக்கவில்லை என்றால் நாங்கள் நிதி தருகிறோம் என்று பலரும் கூறிச் சென்றுள்ளதாக அங்கே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மதுரை அமெரிக்கன் கல்லூரி ஆய்வு மாணவர் ராஜா தெரிவித்தார். ஒருவேளை அடுத்தகட்ட அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி வழங்க மறுத்தால் அதை எதிர்த்துப் போராடவேண்டும் என்றும் பலர் கருத்து தெரிவித்தனர். எனவே இந்த அகழாய்வு இப்போது மக்கள் இயக்கம் போல மாறியுள்ளது.
  தொல்லியல் அகழாய்வு என்பது மக்கள் ஆர்வத்தைத் தூண்டுகிற ஒரு செயல் அல்ல. அங்கே பல்வேறு நீள அகல ஆழங்களில் தோண்டப்பட்டுள்ள குழிகளைப் பார்க்கும் போது 2600 ஆண்டுகளுக்கு முந்தையது என்பது நம்ப முடியாத புதிர்போலத்தான் தோன்றுகிறது. ஆய்வு எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்று ஆய்வாளர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளும் போது தான் ஆர்வம் பிறக்கிறது.
  ஏற்கனவே முதல் கட்டமாகச் செய்து முடித்துள்ள கள ஆய்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்ற இடத்தில் குழி தோண்டப்படுகிறது. அது மேடான பகுதியாக இருக்கின்றது. மேட்டிலிருந்து நிலம் இருபுறமும் சரிந்து செல்கிறது. குறிப்பிட்ட ஆழத்தில் மண் தன் மண்ணாகக் (virgin Soil) காணப்படுகிறது. அதற்குக் கீழே மனிதர்கள் வாழ முடிந்திராத நிலை. மேல் மட்டத்திலிருந்து கீழ் நோக்கி மண், பல அடுக்குகளாக பல நிறங்களில் காணப்படுகிறது.
  [​IMG]ஒவ்வொரு அடுக்கும் (வைகை) நதியின் போக்கில் பல நூற்றாண்டு மாற்றங்களைத் தாங்கி நிற்கிறது. அந்த அடுக்கு அப்பகுதியில் எங்கே தோண்டினாலும் ஒரே மாதிரியாகவும் அதில் கண்டெடுக்கப்படுகிற பொருட்கள் பரிசோதனையில் ஒரே காலகட்டத்தைச் சேர்ந்ததாகவும் இருக்கிறது. ஆழம் கீழே செல்லச் செல்ல கிடைக்கும் பொருட்களின் காலமும் தொன்மையாகிறது. கீழடியில் நிலம் ஏழு, எட்டு அடுக்குகளாகக் காணப்படுகிறது.

  கீழடியில் இதுவரை கடவுள், சாதி, மத, அடையாளங்களைக் குறிக்கும் எந்தப் பொருளும் கிடைக்கவில்லை என்பது தமிழர்கள் பண்டை காலத்தில் சமத்துவ சமுதாயமாக வாழ்ந்திருக்கிறார்கள் என்கிற பெருமிதத்தைப் பறைசாற்றுகிறது. எனவே சதி செய்து கோவில் கடையிலிருந்து பொம்மை வாங்கி வந்து இடையே சாமி சிலைகளைப் புகுத்த வழியேதுமில்லை என்று தெரிய வருகிறது. கீழடி தமிழர் நகர நாகரிகத்தின் தாய்மடி. ஆரிய, சமஸ்கிருத, பார்ப்பனப் புரட்டுகள் தவிடுபொடி !
   
 3. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,260
  Likes Received:
  512
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  சிந்து சமவெளி நாகரிகத்தின் தொடர்ச்சிதான் கீழடி நாகரிகம்


  ந்துத்துவ சக்திகளின் கைகளில் ஆட்சியதிகாரம் சிக்கியுள்ள இன்றைய நிலையில் இந்திய வரலாற்றையே உலுக்கி திருத்த வல்லமை கொண்ட இரண்டு ஆய்வுகள் மிக சமீபத்தில் நடந்தேறியுள்ளன. ஒன்று ராக்கிகர்கி மரபணு ஆய்வு மற்றொன்று கீழடி தொல்லியல் ஆய்வு. ஒன்று சிந்து சமவெளி நாகரிகத்திற்கு பின்னரே சமஸ்கிருதத்தை சுமந்துகொண்டு ஆரியர்கள் துணைக் கண்டத்திற்கு வந்தார்கள் என்பதை உறுதி செய்துள்ளது. மற்றொன்று சிந்து சமவெளி நாகரிகத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து கங்கை சமவெளியில் இரண்டாம் கட்ட நகர குடியேற்றம் நடந்த அதே காலகட்டத்தில் தமிழகத்திலும் அதே போன்றதான குடியேற்றம் நடந்தேறியுள்ளது என்றும் சிந்து சமவெளி குறியீட்டிற்கும் தமிழிக்கும் (தமிழ் பிராமி என்று தற்போது அழைக்கப்படுகிறது) உள்ள உறவை உறுதி செய்யும் பானை கீறல்களையும் கண்டறிந்துள்ளது.
  கீழடி அகழாய்வு மையத்தில் கி.மு 580-ம் ஆண்டைச் சேர்ந்த பானை உள்ளிட்ட தொல்பொருள்கள் தமிழக தொல்பொருள் அகழ்வாராய்ச்சி குழுவினால் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. அப்பானைகளில் உள்ள “கிராஃபிட்டி” குறியீடுகள் அல்லது கீறல்கள் சிந்து சமவெளி நாகரிக எழுத்து வடிவங்களின் தொடர்ச்சியை சுட்டிக்காட்டுவதாக அகழாய்வு குழுவின் சமீபத்திய அறிக்கை கூறுகிறது.
  [​IMG]
  சிந்து சமவெளி எழுத்துக்கள் கி.மு 5,000 முதல் கி.மு 1,500 வரை அம்மக்களால் பயன்படுத்தப்பட்டது. சிந்து சமவெளி நாகரிகம் வீழ்ச்சியடையத் தொடங்கிய காலத்தில்தான் ஸ்டெப்பி புல்வெளியில் இருந்து ஆரியர்கள் இந்திய துணைக்கண்டத்திற்கு வந்ததை மரபணு ஆராய்ச்சி உறுதி செய்துள்ளது.
  கீழடி அகழாய்வு அறிக்கைக்கு ஒரு அரசியல் முக்கியத்துவம் உள்ளது. சிந்து சமவெளி நாகரிக மக்கள்தான் தமிழர்களின் மூதாதையர்கள் என்றும் சிந்து சமவெளி மக்கள் பேசியது ஒரு திராவிட மொழி என்றும் நீண்ட நாட்களாகவே திராவிட அரசியல்வாதிகள் கூறி வருகின்றனர். மொழியியல் நோக்கில் ஆய்வாளர்கள் இதை உறுதிப்படுத்தியுள்ளனர். 1964-ல் இரசியாவையும் ஃபின்லாந்தையும் சேர்ந்த ஆய்வாளர்கள் தனித்தனியாக ஆய்வு செய்து சிந்து சமவெளி எழுத்து வடிவம் திராவிட எழுத்துதான் என்பதை நிறுவினர். பின்னர் சிந்து சமவெளி எழுத்து வடிவத்தின் முன்னனி ஆய்வாளரான அஸ்கோ பர்போலா சிந்து சமவெளி எழுத்து வடிவத்தை திராவிட எழுத்து வடிவத்துடன் ஒப்பிட்டு பிரபலமான கருதுகோளை முன்வைத்தார்.
  ஆனால் இதை உறுதிப்படுத்த இது மட்டுமே போதாது. ஏனெனில் சிந்து சமவெளி நாகரிகம் ஒரு நகர நாகரிகம். தமிழ் நாகரிகத்திற்கும் அதற்குமான தொடர்ச்சியை உறுதிப்படுத்துவதற்கான தொழில்நுட்ப வசதிகளும் போதுமான தொல்லியல் மற்றும் மரபணு சான்றுகள் அதுவரை கிடைக்காமலிருந்தன. முன்னதாக அரிக்கமேட்டில் 1947-லும், காவேரிப்பூம்பட்டினத்தில் 1965-லும், ஆதிச்சநல்லூரில் 2005-லும் நடந்த மூன்று அகழாய்வுகளில் ஒன்றுக்கூட நகர்புற குடியேற்றத்திற்கான உறுதியான சான்றுகள் எதையும் வழங்கவில்லை.
   
 4. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,260
  Likes Received:
  512
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  ஆனால் 2015-ம் ஆண்டில் கீழடியில் தொடங்கப்பட்ட அகழ்வாராய்ச்சி சிந்து சமவெளி மற்றும் கங்கை பகுதி நகர்ப்புற குடியேற்றம் போலவே தமிழகத்திலும் நடந்ததற்கான ஏராளமான சான்றுகளை தன்னுள்ளே புதைத்திருக்கிறது.
  “மறைந்து போன சிந்து சமவெளி குறியீடுகளுக்கும் பிராமி எழுத்து வடிவங்களுக்கும் இடைப்பட்ட எழுத்து வடிவத்தை கீறல்கள் (கிராஃபிட்டி) என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த கீறல்கள் சிந்து சமவெளி எழுத்து வடிவத்திலிருந்து தோன்றிய பிராமி எழுத்து வடிவங்களுக்கு இணைப்பு சங்கிலியாக இருந்துள்ளது. எனவே இதை வெறும் குறியீடாக கருத முடியாது. சிந்து சமவெளி குறியீடுகளைப் போலவே இவற்றை இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை” என்று அந்த அறிக்கை கூறுகிறது.
  [​IMG]
  சிந்து சமவெளி மற்றும் கீழடி எழுத்துக்கள் ஒரு ஒப்பீடு.
  முன்னதாக அகழாய்வு செய்யப்பட்ட ஆதிச்சநல்லூர், கொற்கை, ஆலங்குளம், கொடுமணல், கரூர், தேரிருவேலி, உறையூர், மங்குளம், பேரூர் மற்றும் ஏனைய பகுதிகளிலும் இது போன்ற குறியீடுகள் பொறிக்கப்பட்ட பானைகள் கிடைத்துள்ளன. தமிழ்நாட்டைத் தவிர, இந்தியாவின் வேறு சிலப் பகுதிகளிலும், இலங்கையிலும் பனையோட்டு கீறல்கள் கிடைத்துள்ளன. இந்திய துணைக் கண்டத்தில் இதுவரை கிடைத்த பனையோட்டு கீறல்களில் 75 விழுக்காட்டிற்கும் மேல் தமிழ்நாட்டை சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
  தமிழ் பிராமி (அசோக பிராமிக்கு 3 நூற்றாண்டுகள் முந்தையதால் இதை தமிழி என்றே அழைக்கலாம் என்று தமிழறிஞர்கள் முன் வைக்கின்றனர்) எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட 56 பானைகள் தமிழ்நாட்டு அகழாய்வு நிறுவனத்தால் கண்டறியப்பட்டதாக அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. இந்த ஆய்வுகளின் முடிவு தமிழ் எழுத்து வரலாற்றை கிமு ஆறாம் நூற்றாண்டு வரை முன் தள்ளியுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.
  கீழடியில் வாழ்ந்த மக்களுக்கு உயர்ந்த எழுத்தறிவு இருந்ததை அது சுட்டுகிறது. “பானைகளின் மேல் பகுதிகளில் கீறல்கள் பொறிக்கப்பட்டுள்ளன. பொதுவாக பானை ஈரமாக இருக்கும் போதோ அல்லது உலர்ந்த பிறகோ அதில் எழுத்துக்கள் பொறிக்கப்படும். கீழடியில் கண்டறியப்பட்ட பானைகளில் காய்ந்த பிறகே எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. எனவே பானையை விலைக்கு வாங்கிய பிறகு உரிமையாளர்களால் அவை பொறிக்கப்பட்டுள்ளன. மேலும் பானைகளில் உள்ள வித விதவிதமான எழுத்து பாணிகள் கிமு ஆறாம் நூற்றாண்டு தமிழ் சமூகத்தின் பரவலான எழுத்தறிவை பறைசாற்றுகிறது” என்று அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.

  2018-ல் ஆறு மாதங்கள் அகழாய்வு பணிகள் நடைபெற்றதாக தமிழ்நாட்டு தொல்பொருள் ஆய்வுகளின் மைய ஆணையர் டி. உதய்சந்திரன் கூறினார். 2015-ம் ஆண்டிலிருந்து மூன்று முறை அகழாய்வு செய்த பிறகு இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் ஆய்வுப்பணியை நிறுத்திவிட்டது.
  [​IMG]இந்திய வரலாறு என்பதே வேத கால நாகரிகம் என்று நிறுவ மோடி அரசாங்கம் துடித்துக்கொண்டிருந்த நேரத்தில், அதற்கான எந்தச் சான்றும் கிடைக்காத தருணத்தில், வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியதை போல 2016-ல் கி.மு 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தொல்பொருள்களை இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் கண்டறிந்திருந்தது. விளைவு தொல்பொருள் ஆய்வாளர் கே. அமர்நாாத் ராமகிருஷ்ணனை இடமாற்றம் செய்தது. பின்னர் இப்பணியை தமிழக தொல்பொருள் ஆய்வு மையம் எடுத்துக்கொண்டு நான்காம் கட்ட ஆய்வினை முடித்து “கீழடி – தமிழ்ப் பண்பாட்டின் வேர்களைத் தேடி” என்ற தலைப்பில் ஆய்வு நூலையும் வெளியிட்டிருக்கிறது.
  இது ஒருபுறமிருக்க கி.மு 2000-ம் ஆண்டில் சிந்து சமவெளி நாகரிகத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு சிந்து சமவெளி மக்கள் கிழக்கு மற்றும் தெற்கு நோக்கி நகர்ந்திருக்கக் கூடும் என்ற கருதுகோளை சமீபத்தில் செல் மற்றும் சயின்ஸ் அறிவியல் சஞ்சிகைகளில் வெளியிடப்பட்ட மரபணு ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன.
  தொல்பொருள் ஆய்வில் புதிய வெளிச்சத்தை கொடுத்த அதே நேரத்தில் ஆதித்தமிழர்களின் மரபணு ஆய்வுகளுக்கான கருவினை எலும்புக்கூடாக இன்னமும் கீழடி தன்னுள்ளே புதைத்து வைத்திருக்கும் என்பதை வரலாறு பதிலாகச் சொல்லும்.
   
 5. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,260
  Likes Received:
  512
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  கேள்வி பதில் : கீழடி ஆய்வுகள் காட்டுவது என்ன ?


  கேள்வி: //கீழடி அகழ்வாய்வுகள் காட்டுவது என்ன? கீழடி சான்றுகள் மூலம், ஆற்றங்கரையில் தங்கி வாழ்ந்த, விவசாயம் சார்ந்த சமூகமாக நகர நாகரீகம் கண்ட சமூகமாக வளர்ந்து உள்ளதை காட்டுகிறது.
  மற்றும் அணிகலன்கள், விளையாட்டுப் பொருட்கள் (குறிப்பாக: பகடைக் காய்கள், தாயக்கட்டைகள்) கிடைத்தமையை வைத்து உற்பத்தி சார்ந்த உழைப்பில் இருந்து சிலர் விலகி வாழ்ந்தனர் என புரிந்து கொள்கிறேன்.
  எனில், 2300-2600 ஆண்டுகளுக்கு முன் கீழடியில் வாழ்ந்த சமூகத்தின் உற்பத்தி முறை என்ன?
  1) முற்றிய நிலையில் உள்ள புராதன பொதுவுடமை சமூக உற்பத்தியா? அங்கே அப்போது தாய்வழிச் சமூகம் தான் நீடித்ததா?
  2) அடிமை உற்பத்தி முறையா? அல்லது வேறு ஏதாவதா?
  மேலும்..
  மத அடையாளங்கள் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை என்பது பற்றி ஒருபக்கம் மகிழ்ச்சி தான் என்ற போதிலும், இருபத்தைந்து நூற்றாண்டுகளுக்கு முந்தைய மனிதர்கள் அதிலும், எழுதத் தெரிந்த, விளையாடத் தெரிந்த மனிதர்கள் முற்றிலுமாக அறிவியல் அறிவு பெற்று இருப்பார்கள் என நம்ப முடியவில்லை.
  இதுவரை ஆய்ந்த இடங்கள் குடியிருப்புகள் மற்றும் தொழிற்கூடங்களாக இருக்க வாய்ப்பு உள்ளது என கூறுகிறார்கள்.
  எனில், மக்கள் கூடும் பொது இடங்களில் (மந்தை போன்று) கடவுள் வழிபாடு அல்லது மத அடையாளங்கள் கிடைக்கக் கூடும் எனவும் கருதுகிறேன்.
  தொகுப்பாக நீங்கள் விளக்கினால், புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும்.
   
 6. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,260
  Likes Received:
  512
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  கீழடியில் நடந்த நான்காம் கட்ட ஆய்வு குறித்த அறிக்கை தமிழக தொல்லியல் துறையால் வெளியிடப்பட்டிருக்கிறது. கீழடி குறித்த ஆய்வு முழுமை பெற பதினைந்து ஆண்டுகள் தேவைப்படும் என்கிறார் அமர்நாத் ராமகிருஷ்ணன். இந்த ஆய்விற்கு மத்திய அரசு காட்டும் பாராமுகம் ஒருபுறமிருக்க தமிழக தொல்லியல் துறை அளித்த அறிக்கை தமிழகத்தின் ஏடறிந்த வரலாற்றுக் காலத்தை கி.மு ஆறாம் நூற்றாண்டிற்கு முன் தள்ளியிருக்கிறது. கீழடி ஆய்விடங்களில் ஆழ் இடுக்கில் எடுக்கப்படும் கார்பன் வகை மாதிரிகளின் ஆய்வு இந்தக் காலத்தை இன்னும் துல்லியமாகக் தரும்.
  [​IMG]சங்க இலக்கியத்தின் படி குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை ஆகிய திணை வகைகளின் மக்கள் வாழ்க்கையை அறிவோம். முதலில் மலையில் வேடவர் வாழ்க்கை, பின்பு காடு சார்ந்த இடங்களில் கால்நடை வளர்ப்போர் வாழ்க்கை, அதன் பிறகு நிலம் சார்ந்த வேளாண்மை வாழ்க்கை என்று பரிணாம வளர்ச்சியில் மனித சமூகம் சென்றதற்கு இத்திணை வகைகள் ஒரு சான்று. இருப்பினும் ஒரே நேரத்தில் இந்த நான்கு திணைகளிலும் மக்கள் வாழ்க்கை முன்னேறியதும் இருக்கிறது. அவர்களுக்கிடையில் பண்ட மாற்று நடந்ததையும் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. அதனால்தான் சங்ககால இலக்கியங்கள் இந்நான்கு திணை வாழ்க்கை பற்றியும் எடுத்துக் கூறுகிறது.
  கீழடி ஆய்வறிக்கையை வைத்துப் பார்த்தோமானால் அங்கே வேளாண்மையும், கால்நடை வளர்ப்பும் வைகை நதிக்கரையில் இருந்திருப்பது தெளிவு. தொல்லியல் பொருட்களை வைத்துப் பார்த்தால் அது ஒரு நகர நாகரீகத்திற்கான அடிப்படைகளையும் கொண்டிருக்கிறது. எதிர்கால ஆய்வுகள் இதை துல்லியமாக உறுதிப்படுத்த வாய்ப்பிருக்கிறது.
  சங்க காலத்தில் மூவேந்தர் அல்லாத சிற்றரசர்கள், இனக்குழுத் தலைவர்கள் குறித்த பாடல்களை சங்க கால இலக்கியம் கூறுகிறது. அதன்படி புராதான பொதுவுடைமை இனக்குழு சமுதாயம் வளர்ச்சி அடைந்து சமூகம் வர்க்கங்களாய் பிரிந்து குழுக்களுக்கு தலைவன் அல்லது அரசன் தோன்றும் காலமாக பார்க்கலாம்.
  கீழடியில் அணிகலன்களும், தாயக்கட்டைகளும் கிடைத்திருப்பதால் அங்கே சிறு அளவிலான உபரி உற்பத்தி இருக்கவும், இனக்குழு வாழ்க்கை முதிர்ச்சியடைந்து அடுத்த கட்ட சமூக மாற்ற நகர்விற்கு மக்கள் செல்லும் காலமாகவும் பார்க்கலாம். சங்ககால இலக்கியங்களின் படி ஐந்திணைகளுக்கும் கடவுள் உண்டு. கீழடியில் கடவுள் குறியீடுகள் கிடைக்கவில்லை என்பதால் அம்மக்கள் ‘பகுத்தறிவுடன்’ வாழ்ந்தார்கள் என்பது அபத்தம். கண்டிப்பாக இயற்கை வழிபாடும், திணைக்கேற்ற கடவுளர்களும் இருப்பார்கள். குறிப்பாக அங்கே மூத்தார் வழிபாடு இருந்திருக்கலாம் என்று ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கூறுகிறார். எனினும் கங்கைச் சமவெளியில் தோன்றிய பிற்கால வேத நாகரீகம் போன்று கடவுள், புராணம், மந்திரங்களை முதன்மைப்படுத்திய சனாதன தர்மம் போன்று இங்கில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம்.
  கீழடியின் காலத்தில் தாய்வழிச்சமூகம் முதிர்ச்சியடைந்து தந்தை வழிச் சமூகமாக மாறும் காலகட்டமாக இருக்கலாம். அணிகலன்கள், தாயக்கட்டைகளை வைத்துப் பார்க்கும் போது அங்கே சிறு அளவிலான உபரி உற்பத்தி இருப்பதையும், அதை வைத்து சமூகம் எளிய வர்க்கங்களாக பிரிவதையும் அவதானிக்கலாம். ஒரு நதிக்கரை நாகரீகத்தின் வளர்ச்சி அனைத்தையும் கீழடி தொல்லியல் ஆய்வு எடுத்துக் காட்டுகிறது. மேலும் வணிகம் சார்ந்த பொருட்களும் கீழடியில் கிடைத்திருக்கிறது. சமூகம் வர்க்கரீதியாக பிரிய ஆரம்பித்திருப்பதற்கு இதுவும் ஒரு சான்று. வணிக சமூகத்தில் வர்க்கரீதியாக தோன்றும் பிரச்சினைகளுக்கான நீதி உபதேசங்களையும் சங்க கால இலக்கியம் முன்வைக்கிறது.
   
 7. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,260
  Likes Received:
  512
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  எது எப்படி இருந்தாலும் பார்ப்பனியத்தின் வேதநாகரிகத்தை மறுத்து பண்டைய தமிழ் திராவிட நாகரிகம் முன்னோக்கிச் செல்வதை பாஜக அரசு ஒரு போதும் விரும்பாது. கீழடியில் இதற்கு மேல் ஆய்வுகள் நடத்தப்படுவதற்கே நாம் போராட வேண்டும்.

  அதைக் கீழடியில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டு பணியிடமாற்றத்துக்கு ஆளான அமர்நாத் ராமகிருஷ்ணனின் வார்த்தைகளிலேயே புரிந்து கொள்வோம்.
  கீழடி அகழ்வாய்வை இழுத்து மூட மோடி அரசால் இடமாற்றும் செய்யப்பட்ட அமர்நாத் ராமகிருஷ்ணன் பணியிட மாறுதல் பெற்ற சமயத்தில் நக்கீரன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு குறிப்பிடுகிறார் :
  “இதுவரை அகழாய்வு பணியில் உள்ள அதிகாரியை பணி நிறைவுபெறாமல் மாற்றுவது என்பது நடைமுறையில் இல்லை. வேண்டுமென்றே என்னை மாற்றியிருக்கிறார்கள். என் தலைமையில் இதுவரை கண்டுபிடித்த ஆவணங்களின் பட்டியலை அனுப்பியிருந்தேன். அப்போது மத்திய அரசிடம் இருந்து ஏன் சாமி சிலைகள் ஏதும் கண்டெடுக்கபடவில்லை என்ற கேட்டனர். அதற்கு நாம் சரியான பதிலை கொடுத்திருந்தோம் “திராவிட நாகரீகம் 2,500 வருடங்களுக்கு முன்னானது இப்போது உள்ள கடவுள் வணக்கம் அப்போது இல்லை. தமிழர்களிடம் முன்னோர்கள் வழிபாடு காணப்பட்டதால் தற்போதைய சாமி சிலைகள் இல்லை என்று பதில் அளித்திருந்தேன்” அதன் பின்பு இரண்டு நாட்களில் எனக்கு இடமாறுதல் தபால் வந்தது”.
   
 8. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,260
  Likes Received:
  512
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  புனேவின் டெக்கான் கல்லூரியின் துணை வேந்தரான டாக்டர் வசந்த் ஷிண்டே ஒரு அகழ்வாராய்ச்சியாளர். இவரும் இவரது அணியினரும் ஹரியானாவின் ராகிகரி என்ற இடத்தில் அகழ்வாராய்ச்சியை 2015-ல் மேற்கொண்டனர். அந்த ஆய்வின் முடிவுகள் பெரும் தயக்கத்திற்குப் பிறகு இப்போது வெளியாகியிருக்கின்றன. இந்த முடிவை இந்துத்துவவாதிகள் எப்படி எதிர்கொள்வார்களோ என்பதுதான் தயக்கத்திற்குக் காரணம்.
  ராகிகடியில் இந்த அணி அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டபோது, 4,500 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடு ஒன்று கிடைத்தது. அந்த எலும்புக்கூட்டின் மண்டை ஓட்டில் உள்ள Petrous bone என்ற காதுகளைப் பாதுகாக்கும் பகுதியை பிரித்தெடுத்து, அதிலிருந்து அந்த எலும்புக்கூட்டின் மரபணு ஆராயப்பட்டது. அந்த ஆராய்ச்சியின் முடிவுகள் சில கேள்விகளுக்குப் பதில் அளித்திருக்கின்றன.
  கேள்வி: ஹரப்பா நாகரீகத்தைச் சேர்ந்தவர்கள்தான் சமஸ்கிருத மொழியையும் வேதகால இந்து மதத்தையும் உருவாக்கினார்களா ?
  பதில்: இல்லை.
  கேள்வி: அவர்களது மரபணு, ஆரியர் – திராவிடர் என்ற பிரிவில் யாரோடு பொருந்துகிறது ?
  பதில்: திராவிடர்கள்.
  கேள்வி: தற்போதைய காலத்தில் இவை தென்னிந்தியர்களுடன் அதிகம் பொருந்துகின்றனவா, அல்லது வட இந்தியர்களுடனா?
  பதில்: தென்னிந்தியர்கள்.
  எல்லாமே மிகச் சிக்கலான கேள்விகள், பதில்கள். இந்த ஆய்வின் முடிவுகள் விரைவில் Science இதழில் பதிப்பிக்கப்படவிருக்கின்றன.
  2015-லேயே ஆய்வு முடிந்துவிட்டது என்றாலும் விவகாரம் அரசியல் ரீதியாக உணர்ச்சிகளைத் தூண்டக்கூடியது என்பதால் ஷிண்டே முடிவுகளைப் பதிப்பிக்கத் தயங்கினார். ஹரப்பா தொடர்பான எந்த ஆய்வு முடிவானாலும் தற்போதை மத்திய அரசின் இந்துத்துவக் கருத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதாவது, வேத காலமும் அப்போதைய இந்து மதமும்தான் இந்திய நாகரீகத்தின் துவக்கம் என்பதைத்தான் தற்போதைய அரசு வலியுறுத்த விரும்புகிறது.
  ♦ சிந்துவெளி நாகரீகம் திராவிட நாகரீகமே
  இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது தென்னிந்தியாவில் மட்டுமல்ல, சிந்து நதிக்கரையில் துவங்கி வைகை நதிக்கரை வரை பார்ப்பனியத்திற்கு முன்பான, அதற்கு மாற்றான ஒரு நாகரீகம் இருப்பது தெள்ளத் தெளிவு. இந்த ஒரே காரணத்திற்காகத்தான் கீழடி ஆய்வை மத்திய அரசு புறக்கணிக்கிறது.
  எனவே கீழடியின் வரலாற்றை மீட்கும் போரை நாம் இந்துத்துவவாதிகளுடன் நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
   

Share This Page