குந்தவி - கண்டேனடி உன் காதலை

Discussion in 'Serial Stories' started by Kundavi, Apr 28, 2018.

 1. Kundavi

  Kundavi Well-Known Member

  Joined:
  Feb 24, 2018
  Messages:
  405
  Likes Received:
  347
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Occupation:
  Teaching
  வணக்கம் நண்பர்களே,

  கடவுள் அருளால் என் முதல் கதையை முடித்து விட்டேன். இப்பொழுது என் இரண்டாம் கதையை நான் ஆரம்பிக்க போகிறேன். கண்டிப்பா முதல் கதைக்கு நீங்கள் கொடுத்த ஆதரவு இந்த கதைக்கும் கொடுப்பிர்கள் என்று நம்புகிறேன் தோழமைகளே.

  கதையின் தலைப்பு :கண்டேனடி உன் காதலை


  நாயகன்: சூர்யா


  நாயகி: மலர்விழி

  மே மாதம் முதல் வாரம் என் கதையின் முதல் அத்தியாயத்தை பதிவிடுகிறேன்.

  உங்கள் குந்தவி.
   
 2. malarmathi

  malarmathi விழுந்தால் அழாதே, எழுந்திரு!

  Joined:
  Feb 6, 2018
  Messages:
  414
  Likes Received:
  334
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Occupation:
  இல்லத்தரசி
  Location:
  கோவை
  வாழ்த்துக்கள் குந்தவி.
   
  Kundavi likes this.
 3. Kundavi

  Kundavi Well-Known Member

  Joined:
  Feb 24, 2018
  Messages:
  405
  Likes Received:
  347
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Occupation:
  Teaching
  Thanku malarmathi
   
 4. Kundavi

  Kundavi Well-Known Member

  Joined:
  Feb 24, 2018
  Messages:
  405
  Likes Received:
  347
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Occupation:
  Teaching
  Thanku malarmathi
   
 5. saravanakumari

  saravanakumari Administrator Staff Member Manager

  Joined:
  Nov 12, 2014
  Messages:
  2,278
  Likes Received:
  1,039
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  home maker
  Location:
  villupuram
  All The Best Kundavi  [​IMG]
   
 6. Kundavi

  Kundavi Well-Known Member

  Joined:
  Feb 24, 2018
  Messages:
  405
  Likes Received:
  347
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Occupation:
  Teaching
  Thanku malarmathi
   
 7. Kundavi

  Kundavi Well-Known Member

  Joined:
  Feb 24, 2018
  Messages:
  405
  Likes Received:
  347
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Occupation:
  Teaching
  Thanku malarmathi
   
 8. Kundavi

  Kundavi Well-Known Member

  Joined:
  Feb 24, 2018
  Messages:
  405
  Likes Received:
  347
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Occupation:
  Teaching
  Thanku mam.
   
  saravanakumari likes this.
 9. Kundavi

  Kundavi Well-Known Member

  Joined:
  Feb 24, 2018
  Messages:
  405
  Likes Received:
  347
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Occupation:
  Teaching
  KUK – 1
  கண்கள் மூடி பிள்ளையாரின் முன் அமர்ந்து இருந்த கங்காவுக்கு கடந்த பத்து வருடமாக ஒரே வேண்டுதல் தான், பிரிந்து போன தன் அண்ணன் குடும்பம் தன் குடும்பத்துடன் சேர்ந்து விட வேண்டும் என்ற வேண்டுதல் மட்டும் தான்.


  கீழே இறங்கி வந்த சங்கர் தன் மனைவி பூஜை அறையில் இருப்பது தெரிந்து வரண்டாவில் அமைதியாக இருந்து செல் போன் நோண்டி கொண்டு இருந்தார். அவருக்கு தெரியாதா அவர் பதி என்ன வேண்டி கொண்டு இருப்பார் என்று. அவரும் தேடாத இடம் இல்லை தன் செல்வாக்கை பயன் படுத்தி முடிந்த மட்டும் தேடி பார்த்து விட்டார்.... ஆனால் பலன் என்னவோ பூஜ்யம் தான்.

  பூஜை அறையில் இருந்து வந்த கங்காவின் முகம் பார்த்தே அவர் எந்த நிலையில் இருக்கிறார் என்று கண்டு கொண்டார் சங்கர்.

  “ என்ன கங்கா இன்று ரொம்ப வாட்டமாக தெரிகிறாய்... கண்டிப்பாக உன் அண்ணன் கிடைத்து விடுவார்... உன் இந்த நிலை நம் பையன் சூர்யாவை எந்தவிதமாகவும் பாதிக்க கூடாது. நேற்று வந்து அம்மா என்னிடம் சரியாக பேசவே இல்லை அப்பா என்று அவன் என்னிடம் சொல்லும் போது அந்த இடத்தில நான் ஒரு அப்பாவாக அவன் கஷ்டம் என்னால் தாங்க முடியவில்லை” என்று குரலில் கண்டிப்புடன் ஒரு வேதனை கலந்து கூறினார்.

  “ சாரி சங்கர் கொஞ்சம் நாளாக என் மனம் நெருடலாகவே இருக்கு. அதனால் தான் சூர்யாவை கூட என்னால் சரியாய் கவனிக்க முடியவில்லை... இனி இப்படி நடக்காது கவனமாக இருக்கிறேன் “

  அவள் குற்ற உணர்ச்சியில் கூறியதும் எழுந்து சென்று கங்காவை தன்னுடன் அணைத்த படி “ சாரி சொல்லும் அளவுக்கு நீ எந்த தவறும் செய்யவில்லை கங்கா உன்னை பற்றி எனக்கு நன்றாகவே தெரியும் நீ எதிலும் கவன குறைவாக இருப்பவள் அல்ல... இருந்தும் உன் அண்ணன் விஷயம் உன்னை ரொம்ப வாட்டுகிறது என்று எனக்கு தெரியும் அதை நான் பார்த்து கொள்கிறேன் நீ எதையும் போட்டு குழப்பிக்காதே என்ன புரியுதா “ என்றார் கனிவாக.

  கணவன் சொல்வதும் உண்மை தான் இப்போ கொஞ்சம் நாளாக தன் பிள்ளையின் மீது அவள் கவனம் இருப்பதே இல்லை அவள் அண்ணன் குடும்பத்தின் நினைப்பு மட்டும் தான். அவளும் என்ன தான் செய்வாள் இறந்து போன தன் அப்பாவின் கடைசி ஆசை அதை அவளால் எப்படி நிறைவேற்றாம இருக்க முடியும்.


  அவள் யோசனையை காலடி ஓசை கேட்டது. மாடியில் இருந்து அவன் வரும் அழகை ரசித்தவர் அப்பொழுது தான் அவன் முகம் வாட்டம் அவள் கண்களுக்கு தெரிந்தது எல்லாம் என் கவன குறைவால் வந்தது என்று நினைத்தவர் கணவனிடம் இருந்து விலகி சூர்யாவின் அருகில் சென்று நின்றாள்.

  தன் அன்னை வந்து நின்றதும் தன் முகத்தை திருப்பி கொண்டான் அந்த பத்து வயது வாண்டு. அதில் கணவன் மனைவி இருவர் முகத்திலும் ஒரு புன்னகை தோன்றியது. கோபத்தில் அப்படியே அவன் தாத்தாவை உரித்து வைத்து இருந்தான் சூர்யா... தன் அப்பாவின் இந்த கோபம் தான் தன் அண்ணன் இப்பொழுது தனியாக இருப்பதற்கு காரணம் என்று சுற்றி சுற்றி அவள் அண்ணன் விஷயத்திலே மனம் வந்து நின்றது. அதை ஒதுக்கியவள் சூர்யாவின் உயரத்துக்கு குனிந்து அவன் முன் மண்டியிட்டு அமர்ந்தவள் அவன் தாடையை பிடித்த,
   
  ramasamy6 and Tamilvanitha like this.
 10. Kundavi

  Kundavi Well-Known Member

  Joined:
  Feb 24, 2018
  Messages:
  405
  Likes Received:
  347
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Occupation:
  Teaching
  “ சாரி சூர்யா அம்மா கொஞ்சம் டிஸ்ட்ரப்பா இருந்தேன் அதான் உன்னை என்னால் கவனிக்க முடியவில்லை கண்ணா இனி இப்படி இருக்க மாட்டேன் சரியா செல்லம் ” என்று கொஞ்சி கெஞ்சி அவனை சமாதானம் செய்து கொண்டு இருந்தாள்.

  “ போதும் மம்மி நேற்று ஸ்கூலில் வருண் என்னுடன் சண்டை போட்டான் அதை உன்னிடம் சொல்ல வந்தாள் நீ முகத்தை சோகமாக வைத்து கொண்டு எங்கோ பார்த்து கொண்டு இருந்தாய். இனி உன்னிடம் நான் எதுவும் சொல்ல போவது இல்லை ”.

  மகனின் வேதனை மனதை சுட “ இனி இப்படி நடக்காது கண்ணா அம்மாவை இந்த ஒரு முறை மட்டும் மனித்து விடு ” என்று குரல் கம்ம கூறினாள் கண்களில் லேசாக துளிர்த்த கண்ணீருடன்.

  “நோ மம்மி நீ அழுகாத நான் கோப பட வில்லை” என்று கங்காவின் கண்ணீரை துடைத்து விட்டு அந்த பிஞ்சு கையால் அவளை அணைத்து கொண்டான். மகனின் செயலில் மனம் கனிந்தவள் அவனை தூக்கி சாப்பாடு மேஜை மீது அமர வைத்து அவனுக்கு சாப்பாடு ஊட்டி விட்டு அவனுக்கும் வருணுக்கும் இடையில் என்ன சண்டை என்று கேட்டாள்.

  “ என் பென்சிலை எடுத்து வைத்து கொண்டு அவனுடது அப்படின்னு பொய் சொன்னான். அது என்னுடையது என்று சொல்லியும் அவன் கேட்க வில்லை அதான் மிஸ் கிட்ட போய் சொன்னேன். மிஸ் அவன்கிட்ட இருந்து என் பென்சிலை வாங்கி கொடுத்தது அவனுக்கு பிடிக்க வில்லை அதான் மிஸ் போனதும் என்னை அடித்து விட்டான் ”.

  அவன் வாயை துடைத்தவாறு “ பதிலுக்கு நீயும் கை நீட்டினாயா ” என்று கடுமையான குரலில் கேட்டார் கங்கா. அவளை

  பொறுத்த வரை பொறுமைக்குதான் முதல் இடம். சூர்யக்கும் அவர் சொல்லி கொடுத்தது அதுதான்... ஆனால் கோபம் இந்த ஒரு விசயத்தில் மட்டும் அப்படியே அவன் தாத்தா மாதிரி உர்வெடுத்திருந்தான் கங்காவின் மைந்தன். அவளால் அவனிடம் இருந்து இந்த ஒரு குணத்தை மட்டும் மாற்ற முடியவில்லை.

  “ இல்லை மம்மி அதுக்குள் மிஸ் வந்துட்டாங்க அதனால் அவனை அடிக்க முடியவில்லை... ஆனால் இன்று அவன் என்னிடம் கண்டிப்பாக மாட்டுவான் ” என்றான் சிறு வயது கோபத்துடன்.

  “ இங்கு பாரு கண்ணா நீ வருணை அடித்தால் மம்மி உன்னிடம் பேச மாட்டேன்.... மம்மியின் கோபம் உனக்கு நன்றாக தெரியும். நீ அவனிடம் சண்டை போட்டது தெரிந்தால் கண்டிப்பாக உன்னிடம் பேச மாட்டேன் ” .

  கங்காவுக்கு நன்கு தெரியும் தான் எது சொன்னால் அவன் இந்த கோபத்தை கை விடுவான் என்று. அவன் வேண்டுமானால் சண்டை போட்டு அவன் அம்மாவிடம் பேசாது இருப்பான் அதுவும் ஒரு நாள் மேல் தாங்காது. ஆனால் கங்கவா கோபம் கொண்டு அவனிடம் பேசாமல் இருந்தால் கண்டிப்பாக அவனால் அதை தாங்க முடியாது.

  “ சரி மம்மி உனக்காக அவனிடம் நான் சண்டை போடாமல் இருக்கேன் ” என்றான் கோபத்துடன்.

  அப்பொழுதுதான் தன் கணவனும் இங்கே இருக்கிறார் என்ற நினைவு கங்காவுக்கு வந்தது. சங்கர் அமைதியாக இவர்களின் உரையாடலை கேட்டு கொண்டு இருந்தார். அவருக்கு இந்த விஷயம் நேற்றே மகன் சொல்லி தெரியும் இருந்தும் ‘நீயே இதை அம்மாவிடம் நாளை சொல்லி விடு’ என்று சூர்யாவிடம் சொன்னார்.
   

Share This Page