குந்தவி - கண்டேனடி உன் காதலை

Discussion in 'Serial Stories' started by Kundavi, Apr 28, 2018.

  1. kannamma 20

    kannamma 20 Active Member

    Joined:
    May 14, 2017
    Messages:
    312
    Likes Received:
    241
    Trophy Points:
    43
    Gender:
    Female
    Super episode . Surya ku kovam vara enna karanam...
     
  2. Kundavi

    Kundavi Active Member

    Joined:
    Feb 24, 2018
    Messages:
    294
    Likes Received:
    239
    Trophy Points:
    43
    Gender:
    Female
    Occupation:
    Teaching
    Thanku nithya.... Haha next epla therijirum.
     
  3. Kundavi

    Kundavi Active Member

    Joined:
    Feb 24, 2018
    Messages:
    294
    Likes Received:
    239
    Trophy Points:
    43
    Gender:
    Female
    Occupation:
    Teaching
    Thanku sis. Next udla therijirum sis.
     
  4. Kundavi

    Kundavi Active Member

    Joined:
    Feb 24, 2018
    Messages:
    294
    Likes Received:
    239
    Trophy Points:
    43
    Gender:
    Female
    Occupation:
    Teaching
    KUK - 5

    1526411807959.jpg


    போன் பேசிவிட்டு வந்தவன் தூரத்தில் மலருடன் ஒரு சில பேர் வம்பு இழுத்து கொண்டு இருப்பதை பார்த்தவன் கோபம் தலைக்கு ஏற அவர்கள் இருக்கும் இடம் நோக்கி சென்றான்.

    “மலர்” என்று சூர்யா அழைத்த அடுத்த கணம் அது யார் குரல் என அறிந்தவள் நொடியும் தாமதியாது அவன் புறம் திரும்பி தாயை தேடிய கன்று போல் அவனிடம் சென்று சரணடைந்தாள்.

    தன் கையை இறுக்கி பிடித்து இருந்த அவளது கரத்தில், அழுத்தம் கொடுத்தவனாக அவள் புறம் தலையை மட்டும் திருப்பி பார்த்தவாறு “இங்கே, என்ன செய்கிறாய் மலர்... அம்மா உன்னை அங்கே தேடுகிறார் போ” என்று அவள் பயத்தை கருத்தில் கொண்டு கோபத்தை அடக்கி தன்மையாக சொன்னான்.

    அவன் சொல்லவும், அங்கு நின்று கொண்டு இருந்த ஐந்து நபர்களில் நடுநாயகமாக நின்று கொண்டு இருந்தவன் மீது பயத்தோடு மலரின் பார்வை செல்வதை அறிந்தவன்.... அவள் முன்னாடி எதுவும் கேட்காது “நீ, அம்மாவிடம் செல் நான் வருகிறேன்” என்று அவளை அங்கு இருந்து அனுப்புவதில் கவனமாக இருந்தான்.

    ஆனால், மலரின் நிலை தான் பரிதாபமாக இருந்தது.... சும்மாவே அவள் பயந்த சுபாவம், இப்போ கேட்கவே வேண்டாம்.... ஏதோ சூர்யா பக்கத்தில் இருக்கிறதால் இன்னும் மயக்க நிலைக்கு செல்ல வில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

    “இல்லை அத்தான், நீங்களும் என்னுடன் வாருங்கள்... என்னை அத்தையிடம் கொண்டு சேர்த்துவிட்டு நீங்கள்.....” என்று அவள்
    முடிப்பதற்குள் “போடி... அம்மாவிடம், நான் வருகிறேன்” என்று கோபத்துடன் கடித்த பற்களுக்கு இடையே வார்த்தைகளை அமைதியாக அவளுக்கு மட்டும் கேட்கும் படி சொன்னான்.


    அவனின் கோபமான பேச்சில் அரண்டு போனவள் பட்டென்று அவன் கரங்களை விடுத்து.... மலங்க மலங்க விழித்து பார்த்தபடி தன் அத்தையிடம் கிட்டதட்ட பயந்து ஓடிவிட்டாள்.

    அவள் சென்றதும் நிதானமாக திரும்பி அங்கு நடுவில் கருப்பு மற்றும் சிகப்பு கலந்த உடை அணிந்தவனின் புறம் பார்வையை திருப்பி அவனை கூர்ந்து கவனித்து கொண்டு இருந்தான்.... அவன் பேச வாய் திறக்கவும் “ஹோ.. நீங்கள் இரண்டு பேர் இங்கு தான் உள்ளீர்களா” என்றபடி அனிக்கா சூர்யா பக்கத்தில் வந்து நின்று கொண்டாள்.


    “சூர்யா, இது விக்கி என்னுடைய கசின்... இவன் அப்பா, அம்மா இருவரும் லண்டனில் இருக்கிறார்கள் இவன் இங்கு எங்கள் கூடத்தான் இருக்கிறான்” என்றாள் சிரிப்புடன்.

    “விக்கி, இது சூர்யா என் காலேஜ் சீனியர்” என்றாள்.

    “ஓஹோ... இவன் உன் கசினா, கொஞ்சம் பார்த்து இருக்க சொல். நான் வருகிறேன்” என்று அவளிடம் சொல்லி விட்டு அவன் புறம் எச்சரிகையாக ஒரு பார்வையை செலுத்தி விட்டு நகர்ந்து விட்டான்.

    அனிக்கா பதட்டத்துடன் விக்கி அருகில் சென்று அவன் சட்டையை பிடித்து “டேய், அவனிடம் எதாவது வம்பு செய்தாயோ... இப்படி கோபத்தில் செல்கிறான், உன்னால் என் கனவு அழிந்து விடும் போலவே...” என்று புலம்பி கொண்டு இருந்தாள்.
     
  5. Kundavi

    Kundavi Active Member

    Joined:
    Feb 24, 2018
    Messages:
    294
    Likes Received:
    239
    Trophy Points:
    43
    Gender:
    Female
    Occupation:
    Teaching
    அவள் புலம்பலை கருத்தில் கொள்ளாது மெதுவாக அவளின் கைகளை தன் சட்டையில் இருந்து எடுத்துவிட்டபடி.... அவன் செல்லும் திசையை பார்த்தவாறு “ஓஒ... நீ சொன்ன சூர்யா இவன்தானா... ம்ம் நல்லாத்தான் இருக்கிறான். சரி, அந்த மஞ்சள் காட்டு மைனா யாரு” என்றான் கண்களில் ஆர்வம் மின்ன.

    “யாரு, அந்த மலரையா கேட்கிறாய்... அவள் இவன் வீட்டில் தான் வசிக்கிறாள். சிறுவயதிலே அப்பா, அம்மா இருவரும் இறந்துவிட்டதால் சூர்யா வீட்டில் தான் அவளை பார்த்து கொள்கிறார்கள்” என்றான் குரலில் சிறு எரிச்சலுடன்.

    பின்தான் நினைவு வந்தவளாக “அது இருக்கட்டும், நீ ஏன் அவளை பற்றி விசாரிக்கிறாய்” என்று அவன் முகம் பார்த்தவள் அதில் மின்னிய ஆசையில் ஒரு நிமிடம் அவள் இருதயம் நின்று துடித்தது என்று தான் சொல்ல வேண்டும்.

    “டேய், நீ அந்த மலரை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்... அவள் இருப்பது எனக்கு கூட ஒருவிதத்தில் பிரச்சனை தான், ஆனால் சூர்யாவிற்கு எதுவும் தெரியாத படி பார்த்துக்கொள்” என்றாள் விக்கியிடம் மன்றாடும் தோணியில்.

    “ஏன், இவன் இல்லாவிட்டால் வேறு பணக்காரன் கிடைக்க போகிறான்... ஹ்ம்ம், என்னமோ முதல் காதல் மாதிரி பினாத்தி கொண்டு இருக்கிறாய்” என்றான் உதடு சுளித்து அலச்சியமாக.

    ‘ஹ்ம்ம், சும்மாவே இவன் என்னை மதிக்க மாட்டான்... இதில் நான் போய் இப்படி கெஞ்சினால் இருக்கிற மரியாதையும் போய் விடும்’ என்று மனதிற்குள் நொந்து கொண்டாள்.

    “இங்கு பார் விக்கி, நீ என்ன வேண்டும் என்றாலும் செய்... ஆனால், உன்னால் என் விஷயத்தில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால்
    நான் சும்மா இருக்க மாட்டேன்” என்று மொழிந்து விட்டு அங்கு இருந்து சென்று விட்டாள்.


    அனிக்கா பேசியதை காது கேட்டாலும் விக்கியின் பார்வை எல்லாம் அங்கு தூரத்தில் தன் அத்தையின் அருகில் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்த மலர் மீது தான் இருந்தது.

    விருந்தில் இருந்து கிளம்பும் பொழுது சங்கர், கங்காவின் முகம் கறுத்து போய் இருந்தது. மற்ற நேரம் என்றால் சூர்யா இதை கவனித்து இருந்திருப்பான்... ஆனால் , இப்போ அவனே தன் சுயம் இல்லாது மலரின் மீது மற்றும் அந்த விக்கியின் மீது கோபத்தில் இருந்ததால் அவன் தன் பெற்றோரின் முகம் மாறுதலை கவனிக்க வில்லை.

    வீட்டிற்கு வரும் பொழுதும் அதே அமைதி தான் காருக்குள் நிறைந்து இருந்தது... மலருக்கு சூர்யாவின் புறம் திரும்பவே பயமாக இருந்தது, அவன் அத்தனை கோபத்துடன் வண்டி ஓட்டி கொண்டு இருந்தான். அவனின் கையில் கார் பறந்தது என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும்.

    அவன் கார் ஓட்டியதில் இன்னும் பயந்து போனவள்.. கொஞ்சம் துணிவை வரவளைத்து கொண்டு சூர்யாவிடம் திரும்பி “அத்தான், கொஞ்..சம் மெது...வாக செல்லுங்கள், எனக்கு பயமாக இருக்கிறது” என்றாள் திக்கி திணறி.

    உக்கிரமாக அவளை பார்த்து முறைத்தவன்.... எதுவும் பேசாது வண்டியின் வேகத்தை குறைத்தவாறு ஒட்டிக்கொண்டு இருந்தான். வீட்டிற்குள் வந்ததும் காரின் கதவை திறந்து வேகமாக அடித்து சாத்தியவன் மலரின் புறம் திரும்பாது தன் அறையை நோக்கி சென்று விட்டான்.
     
  6. Kundavi

    Kundavi Active Member

    Joined:
    Feb 24, 2018
    Messages:
    294
    Likes Received:
    239
    Trophy Points:
    43
    Gender:
    Female
    Occupation:
    Teaching
    மலருக்கு, அவனை எப்படி சமாதனம் படுத்துவது என்று தெரியவில்லை... ‘இன்னும் ஒரு நாள் தான் இருக்கிறது அவன் அமெரிக்கா செல்ல’ என வருந்தியவள், வரண்டாவில் பேச்சு குரல் கேட்டு உள்ளே சென்றாள்.

    “சூர்யா, காலையில் எழுந்ததும் என் அறைக்கு வந்து விடு உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்” என்றார் சங்கர் இறுகிய குரலில். சூர்யாவும் ஒன்றும் ஆராயாது “சரிப்பா” என்று விட்டு தன் அறைக்கு சென்று விட்டான்.

    ஆனால், மலர் அவரின் குரலின் வேறுபாட்டை அறிந்து கொண்டாள். பக்கதிலே அத்தையின் முகத்திலும் ஏதோ வருத்தம் போல் தெரிய அவரிடம் ஓடி சென்று “என்ன அத்தை, ஒரு மாதிரி தெரிகிறீர்கள்... எதாவது உடம்புக்கு சரி இல்லையா” என்றாள் பதட்டத்துடன்.

    அவளை பார்த்ததும் இருவருக்குமே தொண்டை அடைத்தது. சங்கர் தான் நிதானத்திற்கு வந்து “அது ஒன்றும் இல்லைடா கண்ணா, அங்கு ரொம்ப நேரம் இருந்தாள் அல்லவா அதான் ஒரு மாதிரி தெரிகிறாள், நான் பார்த்து கொள்கிறேன் உன் அத்தையை... நீ போய் தூங்கு” என்று அவளை அனுப்பி வைத்தார்.

    அவளும் மேலும் எதுவும் கேட்காது ‘சரி’ என்று தலை ஆட்டிவிட்டு யோசனையுடன் மாடி ஏறினாள். தன் அறைக்கு செல்லும் வழியில் சூர்யா நிற்பதை பார்த்தவள், அது வரை இருந்த மனநிலை மாறி பயத்துடன் அவனை ஏறிட்டாள்.... இன்னும் அவன் முகத்தில் கோபம் கனன்று கொண்டு தான் இருந்தது.
    அவள் புறம் திரும்பி நின்றவன் “உனக்கு அந்த விக்கியிடம் என்ன பேச்சு... அவனை பார்த்தாலே பொறுக்கி என்று தெரிகிறது
    பின் ஏன் அங்கேயே நின்று கொண்டு இருந்தாய்” என்றான் கோபத்தின் உச்சியில்.


    முதலில் மலர்க்கு ஒன்றுமே புரியவில்லை...’யார் அந்த விக்கி, யாரை பற்றி இவன் பேசுகிறான்’ என்று யோசித்தவளுக்கு பின்புதான் புலப்பட்டது அவன் யாரை சொல்கிறான் என்று.

    “அது வந்து அத்தான், நான் அங்கு சும்மா தான் நின்று கொண்டு இருந்தேன்... அவர்களால் தான் என்னிடம் வந்து பேச்சு கொடுத்தார்கள்” என்றாள் பயத்துடன்.

    “அவர்கள் பேச்சு கொடுத்தால், நீயும் பேச வேண்டுமா என்ன அங்கு இருந்து நகர்ந்து வரை வேண்டியது தானே... அப்போ என்ன செய்து கொண்டு இருந்தாய்... ஹோ அவர்களின் பேச்சை காத்து குளிர கேட்டு கொண்டு இருந்தாயாக்கும்” என்றான் கிண்டலுடன்.

    அவன் அப்படி கூறியதும் மலர்க்கு கண்ணீர் வந்து விட்டது. அதை அவனுக்கு காட்டாது “ இல்லை, நான் அப்பொழுது நீங்கள் எங்கு உள்ளீர்கள் என்று தேடி கொண்டு இருந்தேன்.... அவர்கள் பேச்சை ஒன்றும் கேட்க வில்லை” என்றாள்.

    அவளின் அந்த பதிலில் அவன் மனதில் நிம்மதி எழுந்தது என்னமோ உண்மை, ஆனால் அது ஏன் என்று அவன் ஆராயவில்லை. ‘பயத்தில், என்னை தேடி இருக்கிறாள்’ என்று நினைத்தவன், அவளிடம் மேலும் எதுவும் கேட்காது “சரி, போய் தூங்கு” என்று விட்டு தன் அறைக்கு சென்று விட்டான்.
     
  7. Kundavi

    Kundavi Active Member

    Joined:
    Feb 24, 2018
    Messages:
    294
    Likes Received:
    239
    Trophy Points:
    43
    Gender:
    Female
    Occupation:
    Teaching
    அவளும் விட்டாள் போதும் என்னும் மனநிலையில் தான் இருந்தாள். அதுவும் அங்கு ரொம்ப நேரம் நின்றது கொண்டே இருந்தது கால் வேற அவளுக்கு வலிக்க ஆரம்பித்தது அதனால் தன்னை சுத்த படுத்தி கொண்டு உடனே தூங்கி விட்டாள்.

    இங்கு சூர்யா தான் தூக்கம் வராமல் தவித்து கொண்டு இருந்தான். அவனுக்கு அந்த விக்கியின் பார்வையை இப்பொழுது நினைத்தாலும் அவனை தூக்கி போட்டு மிதிக்க வேண்டும் என்ற அளவுக்கு கோபம் கட்டு கடங்காமல் வந்தது கூடவே விருந்தில் ரொம்ப நேரம் நின்றதால் அசதியும் வர, இந்த விஷயத்தை ஒதிக்கி வைத்துவிட்டு படுக்க சென்றான்.

    மறு நாள் காலையில் சீக்கிரம் குளித்து முடித்து கீழே தன் தந்தையின் அறையை நோக்கி சென்றான். உள்ளே சென்றவன், அங்கு தன் பெற்றோர் இருவரும் இருக்க.... யோசனையுடன் அங்கு இருந்த இருக்கையில் அமர்ந்தவன், தன் தந்தையை நோக்கி கூர் பார்வையுடன் “சொல்லுங்கள் அப்பா, ஏதோ பேச வேண்டும் என்று சொன்னிர்கள்” என்றான் அவர்கள் இருவரையும் ஆராயும் குரலில்.

    அதற்கு அவர் சொன்ன பதிலில் சூர்யாவும், காபி கோப்பையுடன் அறைக்கு உள்ளே வந்த மலரும்..... ஒருங்கே அதிர்ந்து நின்றனர்.

    மலரும்.......
     
  8. Kundavi

    Kundavi Active Member

    Joined:
    Feb 24, 2018
    Messages:
    294
    Likes Received:
    239
    Trophy Points:
    43
    Gender:
    Female
    Occupation:
    Teaching
    வணக்கம் நண்பர்களே,

    KUK -வின் அடுத்த பதிவை போட்டு விட்டேன், படித்து பார்த்து உங்கள் கருத்தை கூறுங்கள். போன பதிவிற்கு லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் போட்ட நண்பர்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    உங்கள் குந்தவி.....
     
  9. Nithyalakshmi

    Nithyalakshmi Member

    Joined:
    Nov 17, 2017
    Messages:
    89
    Likes Received:
    67
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Superb epi ​
     
  10. Prabha_kannan

    Prabha_kannan Active Member

    Joined:
    Oct 25, 2017
    Messages:
    384
    Likes Received:
    247
    Trophy Points:
    43
    Location:
    trichy
    superb update. amma appa ku surya love pathi therinjirukumo ? malar a kalyanam panna solli kekkurangalo. sekiram ud podunga ppa
     

Share This Page