குருமா வகைகள்

Discussion in 'Recipes' started by NATHIYAMOHANRAJA, Nov 8, 2018 at 4:18 PM.

  1. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    2,154
    Likes Received:
    74
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    கேரட் குருமா

    சமைக்க தேவையானவை

    • கேரட் - 1/4 கிலோ (நறுக்கியது)
    • வெங்காயம் ,தக்காளி - ஒன்று (பொடித்தது)
    • தேங்காய்- 1/2 கப்
    • இஞ்சி , பூண்டு- நான்கு பற்கள்
    • கசகசா- ஒரு டீஸ்பூன்
    • மஞ்சத்துள் ,தனியாத்துள்-அரை டீஸ்பூன்
    • பச்சைபட்டாணி - ஒரு கையளவு
    • பச்சைமிளகாய் – நான்கு
    • எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
    • கறிவேப்பிலை, கொத்தமல்லி - ஒரு பிடி
    • பட்டை, கிராம்பு, ஏலம் - தலா 2
    • சோம்பு - ஒரு டீஸ்பூன்
    • உப்புத்துள் - இரண்டு டீஸ்பூன்

    உணவு செய்முறை : கேரட் குருமா

    • Step 1.

      முதலில் மிக்ஸ்சியில் தேங்காயுடன் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கசகசா ஆகியவற்றைச் சேர்த்து மையா அரைத்து வைக்கவும். பிறகு வாணலியில் எண்ணெய் சூடானதும் சோம்பு மற்றும் வாசனைப் பொருட்களைப் போட்டு வறுக்கவும்.பின்பு வெங்காயத்தைப் போட்டு அது வதங்கியவுடன் தனியாத்துளைப் போட்டு பின்பு கறிவேப்பிலை மற்றும் தக்காளியை போட்டு குழைய வதக்கவும்
    • Step 2.

      பின்பு தக்காளி நன்கு குழைந்தவுடன் கேரட்டைக் கொட்டி வதக்கவும்.அதைத் தொடர்ந்து தேங்காய் கலவையைப் போட்டு, உப்பு மற்றும் மஞ்சள்துளையும் போட்டு இரண்டு கப் நீரைச் சேர்த்து கொதிக்கவிடவும்.கேரட் நன்கு வெந்தவுடன் பச்சைபட்டாணியைப் போட்டு ஒரு கொதி வந்தவுடன் கொத்தமல்லியைத் துவி இறக்கவும்
     
  2. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    2,154
    Likes Received:
    74
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    கடலைக்கறி குருமா

    சமைக்க தேவையானவை

    • கறுப்பு கொண்டைக்கடலை - 300 கிராம்
    • வெங்காயம் - 2
    • தக்காளி - ஒன்று
    • காய்ந்த மிளகாய் - 6
    • மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
    • மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
    • கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
    • தனியா - 3 தேக்கரண்டி
    • தேங்காய் - அரை மூடி
    • கடுகு - அரை தேக்கரண்டி
    • சீரகம் - அரை தேக்கரண்டி

    உணவு செய்முறை : கடலைக்கறி குருமா

    • Step 1.

      முதலில் கறுப்புகொண்டைக்கடலையை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 8 மணிநேரம் ஊற வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். தேங்காய், காய்ந்த மிளகாய் மற்றும் தனியாவை வெறும் கடாயில் வறுத்து அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்,
    • Step 2.

      தக்காளி சேர்த்து வதக்கி விட்டு அதனுடன் தூள் வகைகள் சேர்த்து வதக்கி தண்ணீர் சேர்த்து பச்சை வாசம் போக கொதிக்க விடவும், வதக்கி கொதிக்க வைத்தவற்றுடன் பிறகு அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க விடவும். இந்த கலவையில் வேக வைத்து எடுத்து வைத்துள்ள கடலை சேர்த்து அதன் பின் மேலும் சிறிது நேரம் கொதிக்க விடவும்.கலவை நன்கு கொதித்து கெட்டியாகி வந்ததும் இறக்கவும்.
     
  3. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    2,154
    Likes Received:
    74
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    முழு பச்சைப் பருப்பு குருமா

    சமைக்க தேவையானவை

    • முழு பச்சைப் பருப்பு - ஒரு கப்
    • சின்ன வெங்காயம் -5 லிருந்து 10
    • தக்காளி -பாதி
    • இஞ்சி-ஒரு சிறு துண்டு
    • பூண்டு-2 பற்கள்
    • தேங்காய் கீற்று-2
    • உப்பு-தேவையான அளவு
    • மஞ்சள் தூள்-1/2 டீஸ்பூன்
    • மிளகாய்த் தூள்-2 டீஸ்பூன்
    • எலுமிச்சை சாறு-ஒரு டீஸ்பூன்
    • கொத்துமல்லி இலை-ஒரு கொத்து
    • பிரிஞ்சி இலை-1

    உணவு செய்முறை : முழு பச்சைப் பருப்பு குருமா

    • Step 1.

      முதலில் முழு பச்சைப் பயறை சுண்டலுக்கு அவிப்பது போல் வேக வை.குழைய வேக வைக்க வேண்டாம். ஊறிய(அ)முளை கட்டிய பயறு என்றால் வேக வைக்க வேண்டாம். பிறகு வெங்காயம்,தக்காளி பொடியாக நறுக்கி வை.இஞ்சி,பூண்டு தட்டி வை.தேங்காய் அரைத்துக்கொள்
    • Step 2.

      ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானவுடன் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கு.அடுத்து இஞ்சி,பூண்டு சேர்த்து வதக்கு.அடுத்து தக்காளி சேர்த்து வதக்கி,பயறைக் கொட்டிக் கிளறி,மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்துக் கிளறி கொஞ்சம் தண்ணீர் ஊற்றி வேக வை.பயறு,மசாலா எல்லாம் ஒன்றாகக் கலந்து வெந்த பிறகு தேங்காய் விழுதை சேர்த்து ஒரு கொதி வந்ததும் எலுமிச்சை சாறு விட்டு,கொத்துமல்லி தூவி இறக்கு. பின்பு இது சப்பாத்தி, பரோட்டா, நாண், இட்லி, தோசை இவற்றிற்கு நன்றாக இருக்கும்.
     
  4. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    2,154
    Likes Received:
    74
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    உருளைக்கிழங்கு குருமா

    சமைக்க தேவையானவை

    • உருளைக்கிழங்கு-2
    • வெங்காயம்-1
    • தக்காளி-1
    • உப்பு-தேவையான அளவு
    • மஞ்சள் தூள்-அரை டீஸ்பூன்
    • மிளகாய் தூள்-1 டேபிள்ஸ்பூன்
    • பச்சை மிளகாய்-2

    உணவு செய்முறை : உருளைக்கிழங்கு குருமா

    • Step 1.

      முதலில் அரைக்க வேண்டிய பொருட்கள்: சோம்பு-அரை ஸ்பூன் கசகசா-1 டீஸ்பூன் தேங்காய் துருவல்-அரை கப் இஞ்சி,பூண்டு விழுது-1 ஸ்பூன் எண்ணெய்-தேவையான அளவு பட்டை-2 கிராம்பு-2 முதலில் வெங்காயம்,தக்காளி மற்றும் பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.பின்பு உருளைக் கிழங்கை தனியாக வேக வைத்து கொள்ளவும்
    • Step 2.

      அதன் பின்பு அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து வைத்துக் கொள்ளவும்.பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை,கிராம்பு போட்டு தாளித்த, அதில் பச்சை மிளகாய் ,வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.பின்பு அதில் மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,உருளைக் கிழங்கு ,உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவையும் ஊற்றி நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.பின்பு உருளைக்கிழங்கு குருமா ரெடி.
     
  5. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    2,154
    Likes Received:
    74
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    பன்னீர் & பச்சைப்பட்டாணி குருமா

    சமைக்க தேவையானவை

    • பனீர்_சுமார் 100 g
    • பச்சைப் பட்டாணி_1/2 கைப்பிடி
    • சின்ன வெங்காயம்_10
    • தக்காளி_1 பெரியது
    • இஞ்சி_சிறு துண்டு
    • தேங்காய் பத்தை_3
    • பூண்டிதழ்_3
    • மிளகாய்த்தூள்_ஒன்றரை டேபிள்ஸ்பூன்
    • மஞ்சள் தூள்_சிறிது
    • எலுமிச்சை சாறு
    • கொத்துமல்லி தழை_ஒரு கொத்து
    • புதினா_ஒரு கொத்து
    • எண்ணெய்,உப்பு_தேவைக்கு

    உணவு செய்முறை : பன்னீர் & பச்சைப்பட்டாணி குருமா

    • Step 1.

      முதலில் பச்சைப்பட்டாணியை முதல் நாளிரவே ஊற வைத்துவிட‌வும்.வெங்காயம்,தக்காளி இவற்றை நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ளவும்..இஞ்சி & பூண்டு தட்டிக்கொள்ள‌வும்.அடுப்பில் பாத்திரத்தை ஏற்றி எண்ணெய்விட்டு சூடானதும் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துவிட்டு,பின்னர் இஞ்சி பூண்டு போட்டு வதக்கவும்
    • Step 2.

      பிறகு வெங்காயம் & தக்காளி அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசம்போக நன்றாக வதக்கவும். அடுத்து பட்டாணியை சேர்த்து வதக்கிவிட்டு,பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி,மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து மூடி கொதிக்க விடவும்.குருமா கொதி வருவதற்குள் ஒரு கடாய் அல்லது தோசைக்கல்லை அடுப்பிலேற்றி சிறிது எண்ணெய் விடவும்.
    • Step 3.

      பனீரை சிறுசிறு துண்டுகளாக்கி,எண்ணெய் சூடானதும் கடாயில் போட்டு,பனீரின் எல்லா பக்கங்களும் லேஸாக நிறம் மாறும் வரை வதக்கி எடுக்கவும்.அல்லது நறுக்கிய துண்டுகளை அப்படியேகூட‌ சேர்த்துக்கொள்ள‌லாம்.குருமா கொதிக்க ஆரம்பித்ததும் பனீர் துண்டுகளை சேர்த்து கிண்டிவிட்டு கொதிக்க‌விடவும். குருமா நன்றாகக் கொதித்த பிறகு தேங்காய்,கஸகஸா,முந்திரி இவற்றை மைய அரைத்து குருமாவுடன் சேர்த்து கலக்கிவிடவும். எல்லாம் சேர்ந்து கொதித்ததும் எலுமிச்சை சாறு,கொத்துமல்லி,புதினா சேர்த்து இறக்கவும்.
     
  6. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    2,154
    Likes Received:
    74
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    கொண்டைக்கடலை குருமா

    சமைக்க தேவையானவை

    • கொண்டைக்கடலை-ஒரு கப்
    • சின்ன வெங்காயம்-10
    • தக்காளி-1
    • இஞ்சி-சிறிது
    • பூண்டு-3 பற்கள்
    • மஞ்சள் தூள்-1/4 டீஸ்பூன்
    • மிளகாய்த் தூள்-2 டீஸ்பூன்
    • உப்பு-தேவைக்கு
    • கொத்தமல்லி இலை-ஒரு கொத்து
    • எலுமிச்சை சாறு-ஒரு டீஸ்பூன்
    • தேங்காய்-3 துண்டுகள்

    உணவு செய்முறை : கொண்டைக்கடலை குருமா

    • Step 1.

      முதலில் கொண்டைக்கடலையை முதல் நாளிரவே ஊற வைத்து விடவும்.குருமா செய்யுமுன் கடலையைக் கழுவி விட்டு,அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு,சிறிது உப்பு சேர்த்து,வேக வைத்து,நீரை வடித்து வைக்கவும். வெங்காயம், தக்காளி இவற்றைப் பொடியாக நறுக்கிக்கொண்டு,இஞ்சி,பூண்டு தட்டி வைக்கவும்
    • Step 2.

      வெறும் வாணலியில் கசகசாவை லேசாக வறுத்து சிறிது சுடு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். பின்னர் ஊறியதும்தேங்காய்,பொட்டுக்கடலையுடன் சேர்த்து மைய அரைத்தெடுக்கவும்.ஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு சூடாக்கி, சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளிக்கவும்.
    • Step 3.

      தாளிப்பு முடிந்ததும் முதலில் இஞ்சி,பூண்டு சேர்த்து வதக்கிவிட்டு,அடுத்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.இவை வதங்கியதும் கடலையை சேர்த்துக் கிளறிவிட்டு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்துக் கிளறிவிட்டு,கடலை மூழ்கும் அளவு திட்டமாகத் தண்ணீர் விட்டு மூடி வேக வைக்கவும்.
    • Step 4.

      பிறகு எல்லாம் நன்றாகக் கலந்து,சிறிது நேரம் கொதித்து,வாசனை வந்த பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய்க் கலவையைக் குருமாவில் ஊற்றி கொதி வரும் வரை மூடி வைக்கவும்.கொதி வந்து பிறகு எலுமிச்சை சாறு, கொத்தமல்லி தூவிக் கிளறிவிட்டு அடுப்பை நிறுத்திவிடவும்.இப்போது அருமையான,வீடே மணக்கும் கொண்டைக்கடலை குருமா தயார்.இது பூரி,சப்பாத்தி,நாண்,சாதம் இவற்றிற்கு நல்ல பொருத்தமாக இருக்கும்.
     
  7. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    2,154
    Likes Received:
    74
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    பட்டாணி & மொச்சை குருமா

    சமைக்க தேவையானவை

    • மஞ்சள் பட்டாணி-ஒரு கைப்பிடி
    • மொச்சை-ஒரு கைப்பிடி
    • சின்ன வெங்காயம்-5
    • தக்காளி-பாதி
    • இஞ்சி-சிறிது
    • பூண்டு-2 பற்கள்
    • மஞ்சள் தூள்-1/4 டீஸ்பூன்
    • மிளகாய்த் தூள்-2 டீஸ்பூன்
    • கொத்துமல்லி இலை-ஒரு கொத்து
    • எலுமிச்சை சாறு-ஒரு டீஸ்பூன்
    • உப்பு-தேவைக்கு
    • தேங்காய்ப் பூ-ஒரு டீஸ்பூன்

    உணவு செய்முறை : பட்டாணி & மொச்சை குருமா

    • Step 1.

      முதலில் பட்டாணி,மொச்சையை முதல் நாளே ஊற வைத்து,குருமா செய்யும்போது சிறிது உப்பு போட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.பின்னர் வெங்காயம்,தக்காளி பொடியாக நறுக்கவும்.இஞ்சி,பூண்டு தட்டி வைக்கவும். கசகசா,தேங்காய் இரண்டையும் மைய அரைத்து வைக்கவும்.
    • Step 2.

      பிறகு ஒரு கடாயை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் சீரகம், பெருஞ்சீரகம் தாளித்து,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.அது வதங்கியதும் இஞ்சி,பூண்டு சேர்த்து வதக்கவும்.அடுத்து தக்காளி சேர்த்து வதக்கவும்.அடுத்து வேக வைத்த பட்டாணி,மொச்சையை சேர்த்து வதக்கவும்.
    • Step 3.

      பிறகு மஞ்சள் தூள்,மிளகாய்த் தூள்,உப்பு சேர்த்து வதக்கி கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு மூடி கொதிக்க விடவும். எல்லாம் ஒன்றாகக் கலந்து கொதித்து வெந்ததும் கசகசா,தேங்காய் விழுது சேர்த்து கொதிக்க விடவும்.பிறகு எலுமிச்சை சாறு,கொத்துமல்லி இலை சேர்த்துக் கிளறி இறக்கவும்.
     
  8. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    2,154
    Likes Received:
    74
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    கடலைக்கறி குருமா

    சமைக்க தேவையானவை

    • கறுப்பு கொண்டைக்கடலை - 300 கிராம்
    • வெங்காயம் - 2
    • தக்காளி - ஒன்று
    • காய்ந்த மிளகாய் - 6
    • மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
    • மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
    • கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
    • தனியா - 3 தேக்கரண்டி
    • தேங்காய் - அரை மூடி
    • கடுகு - அரை தேக்கரண்டி
    • சீரகம் - அரை தேக்கரண்டி

    உணவு செய்முறை : கடலைக்கறி குருமா

    • Step 1.

      முதலில் கறுப்புகொண்டைக்கடலையை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 8 மணிநேரம் ஊற வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். தேங்காய், காய்ந்த மிளகாய் மற்றும் தனியாவை வெறும் கடாயில் வறுத்து அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்,
    • Step 2.

      தக்காளி சேர்த்து வதக்கி விட்டு அதனுடன் தூள் வகைகள் சேர்த்து வதக்கி தண்ணீர் சேர்த்து பச்சை வாசம் போக கொதிக்க விடவும், வதக்கி கொதிக்க வைத்தவற்றுடன் பிறகு அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க விடவும். இந்த கலவையில் வேக வைத்து எடுத்து வைத்துள்ள கடலை சேர்த்து அதன் பின் மேலும் சிறிது நேரம் கொதிக்க விடவும்.கலவை நன்கு கொதித்து கெட்டியாகி வந்ததும் இறக்கவும்.
     

Share This Page