குழந்தைகளின் ஆற்றலை வளர்க்கும் இசை

Discussion in 'Children care' started by NATHIYAMOHANRAJA, Mar 14, 2019.

 1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  5,217
  Likes Received:
  486
  Trophy Points:
  83
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  இசையானது குழந்தைகளின் மொழி ஆற்றல், வாசிப்புத் திறனை வளர்ப்பது கண்டறியப்பட்டுள்ளது.

  பொதுவாகவே இசை என்பது உற்சாகத்தை தரக் கூடியது, கவலையை மறக்கடிக்கக் கூடியது. அதனால்தான் சிறியவர் முதல் பெரியவர் வரை இசையில் மயங்கிப் போய் கிடக்கிறார்கள்.

  தொடர்ச்சியான முறையில் இசையைக் கற்று வருவதன் மூலம் வாசிப்பு ஆற்றல் உட்பட மொழி அறிவை மேம்படுத்தக்கூடிய வகையில் மூளையில் மாற்றம் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

  அமெரிக்காவில் உள்ள மனோதத்துவ அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்விlல் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

  அந்த ஆய்வில், ஒரு வருடம் வரை இசைப் பயிற்சி பெற்ற பின்னர் 9 மற்றும் 10 வயதினர் வாசிப்பதில் அதிக திறனுடன் இருப்பதுடன், மொழி அறிவு மேம்பாடு, ஞாபக சக்தியில் சிறப்பாக இருக்கின்றனர் எனவும் தெரிவிக்கிக்கப்பட்டுள்ளது.

  இந்த ஆய்வுக்காக அமெரிக்காவின் சிகாகோ மற்றும் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த நூற்றூக்கணக்கான மாணவர்கள் பயன்படுத்தப்பட்டனர்.

  இசையில் பல நலல விளைவுகள் ஏற்படுவது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. மரம், செடி, கொடிகளைக் கூட இசை ஈர்பதாகவும் சில ஆய்வுகள் கூறுகின்றன.

  அந்த வகையில் தற்போதைய கண்டுபிடிப்பு, புதிய ஒரு நன்மையை எடுத்துரைக்கிறது. எனவே இனிமேல் பெற்றோர், இசைக்கும் முக்கியத்துவம் அளிப்பது அவர்களது குழந்தைக்கு நன்மை புரியும் எனலாம்.

  குழந்தைகளுக்கு இசை ஆற்றலை வளர்ப்பது பெற்றோர்கள் ஒவ்வொருவருடைய கடமையாகும்.

  [​IMG]
   

Share This Page