குழந்தைகளுக்கு உங்கள் நேரம் வேண்டும்..! By Mrs.Mythili Ramjee

Discussion in 'Children care' started by saravanakumari, Dec 5, 2018.

 1. saravanakumari

  saravanakumari Administrator Staff Member Manager

  Joined:
  Nov 12, 2014
  Messages:
  2,278
  Likes Received:
  1,039
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  home maker
  Location:
  villupuram
  KUZHANDHAI NERAM IMAGE.jpg

  இந்தக் காலத்துக் குழந்தைகளின் முகத்தில் ஒரு ஏக்கம் இருந்துக் கொண்டே இருக்கின்றது! அந்த ஏக்கம் பெற்றோராகிய உங்கள் நேரத்திற்காக! ஆம்! இன்றைய அவசர வாழ்வில் நாம் குழந்தைகளுக்காக, குழந்தைகளுடன் செலவழிக்கும் நேரம் மிக மிக குறைவு. சில சமயங்களில் முற்றிலும் முடங்கிவிட்ட நிலை.

  காலத்தின் கோலம். வேலையின் பளு, அயராது உழைத்தல், தங்கள் சுகத்திற்காக உதாசீனப்படுத்துவது இது போல் பல பல காரணங்கள்.

  மாறுபட்ட அலுவலக நேரம், காலை ஷிப்ட், மாலை ஷிப்ட் , இரவு ஷிப்ட் இது போன்று பல நிர்பந்தங்கள். வெளியூரில், வெளிநாட்டில் வேலை.

  குழந்தை பிறக்கும் வரை ஒரு பெண் வேலைக்கு செல்கின்றாள். பிறந்ததும் கூடிய விரைவில் அதனை விட்டுவிட்டு மறுபடியும் வேலைக்கு செல்கின்றாள். அப்பொழுது அந்தக் குழந்தை அம்மாவின் அரவணைப்பு, பாசம் மற்றும் ஸ்பரிசத்திற்காக ஏங்குகின்றது என்பதை நம்மால் உணர முடிகின்றது. இது காலத்தின் கட்டாயம் என்று எடுத்துக் கொண்டாலும் அதன் விளைவுகள் என்ன என்பதை ஆராய்ந்து தீர்வு காணும் நிலையில் இன்று உள்ளோம். குழந்தையின் தாத்தா, பாட்டி இவர்களுக்கும் வயதாகிவிடுகின்றது. அதனால் அவர்களால் குழந்தைகளை பார்த்துக் கொள்வது சிரமம். அதனால் குழந்தையை காப்பகத்தில் விடுகின்றனர்.

  6 மாதங்கள் முதல் பிஞ்சு குழந்தைகளை இல்லத்து பராமரிப்பிலிருந்து ஒரு காப்பகத்திற்குள் கொண்டு அடைக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை! என்னதான் இருக்கும் நேரத்தில் குழந்தைக்காக செலவழிக்க முற்பட்டாலும், உடல் ரீதியாக, மனரீதியாக ஒரு பெண் எப்படி சமாளிக்க முடியும் என்பது ஒரு கேள்விக் குறி

  இது ஒரு புறம் இருக்க, வீட்டில் இருக்கும் பெண்கள் சிலர் குழந்தைகளுடன் செலவழிக்கும் நேரம் மிகவும் குறைந்துள்ளது. டீ. வி., சினிமா, மொபைல் இது போன்ற சமாச்சாரங்களில் ஈடுபடுவது மிகவும் அதிகரித்துள்ளது.

  குழந்தைகளுடன் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பேசுங்கள்

  அவர்களின் விருப்பு, வெறுப்பு என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்

  அவர்களுடன் தயவுசெய்து சிறுது நேரமாவது விளையாடுங்கள்.

  சிறு , சிறு கதைகளை அவர்களுக்கு சொல்லுங்கள்.

  உறவுகளை சொல்லுங்கள்.

  உறவு முறைகளை எடுத்துக் கூறுங்கள்.

  அவரகள் பள்ளியில் நடந்தவற்றை கேட்டு அறியுங்கள்.

  குழந்தையின் திறனை வெளி கொண்டு வாருங்கள்.

  பெற்றோர் இருவரும் முடிந்தவரை குழந்தையுடன் சேர்ந்து உணவு சாப்பிடுங்கள்.

  கூடிய வரை பெண்கள் நைட் ஷிப்ட் வேலையை தவிருங்கள்.

  எல்லா குடும்ப விசேஷங்களுக்கு அவர்களுடன் செல்லுங்கள்.

  பண்டிகைகளை உற்சாகமாக கொண்டாடுங்கள்.

  கிடைக்கும் நேரத்தில் கட்டாயம் குழந்தைகளுக்கு ஒதுக்குங்கள்.

  டீ. வி.,மொபைல் சாட், facebook இவற்றை சற்று தள்ளி வையுங்கள்!​

  பெண்களே, உங்கள் சம்பளத்தில் தான் குடும்பம் நடத்த வேண்டும் என்கின்ற நிர்பந்தம் இல்லை என்றால் சிந்தித்து தயவு செய்து குழந்தை பிறந்து இரண்டு வருடங்களாவது அவர்களுடன் இருங்கள்.

  பெண்கள் வேலைக்குச் செல்வது தவறில்லை. நானும் வேலைக்கு செல்லும் பெண்தான். நானும் என் அன்பு மகனின் ஏக்கத்தை நாள் கடந்து தான் உணர்ந்தேன். அதன் வலி என் அடி மனதில் ஆழமாக உள்ளது. முடிந்தவரை நான் திறம்பட என் கடமையை செய்தேன் என்றாலும் முற்றிலுமாக செய்தேனா என்பது கேள்விக்குறியே!! கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்.

  அவர்களுக்காக நிறைய துணிமணிகள், பொம்மைகள், இனிப்புகள் பலவற்றை கணக்கில்லாமல் வாங்குகின்றோம். ஆனால் அவர்களின் ஏக்கம் நம் நேரத்திற்காக. அவர்களுக்காக நாம் செலவழிக்கும் சில பொழுதுகள் பொக்கிஷமானவை. தவற விடாதீர்கள். அனுபவத்தில் கூறுகின்றேன்.

  முடிந்தவரை முயற்ச்சி செய்யுங்கள். குழந்தைகள் சிறியவர்களோ, வளர்ந்தவர்களோ உங்கள் நேரம் அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்!

  -article by
  Mrs.Mythili Ramjee
   
  Last edited by a moderator: Dec 5, 2018

Share This Page