குழந்தைகள் கதைகள்/children's story

Discussion in 'Entertainment' started by NATHIYAMOHANRAJA, Nov 30, 2018.

 1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  5,219
  Likes Received:
  486
  Trophy Points:
  83
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  வித்தைக்காரன்

  ஒரு நாள் கிருஷ்ண தேவராயருடைய அரசவைக்கு வித்தைக்காரன் ஒருவன் வந்தான்.அவன் தன்னுள் இருக்கும் திறமையை அந்த அரசவையில் வெளிபடுத்தினான்.அப்பொழுது அவன் அங்கு கூடியிருந்த மக்களிடம் ஒரு சவாலை தெரிவித்தான்.அது என்னவென்றால் "இந்த அரசவையில் என்னை வெல்ல யார் இருக்கிறீர்கள்?அப்படி யாரேனும் இருந்தால் என்னை வெல்லுங்கள் பார்ப்போம்" என்று கூறினான்.அந்த அரசவையில் இருந்த மந்திரிகளும்,மக்களில் யாரும் முன் வரவில்லை.அப்பொழுது அங்கு இருந்த தெனாலி "உன்னை வெல்ல நான் தயாராக உள்ளேன்" என்று கூறி அந்த வித்தைக்காரன் முன் வந்து நின்றான்.ஆனால் அந்த அவையில் இருந்த கிருஷ்ணதேவராயரின் மந்திரிகள் தெனாலியிடம் எங்களாலும் இங்கு இருக்கின்ற மக்களாளுமே முடியவில்லை ஆதலால் நீ சென்று தோற்றுப்போகாதே என்று கூறினார்கள்.ஆனால் தெனாலி அவர்கள் கூறியதை பொருட்படுத்தாமல் அந்த வித்தைக்காரனின் சவாலை ஏற்றுக்கொண்டான். தெனாலி அந்த வித்தைக்காரனிடம் "நான் கண்களை மூடிக்கொண்டு செய்யும் ஒன்றை நீ கண்ணைத் திறந்து கொண்டே செய்ய வேண்டும்" என்றான்.இவ்வளவு தானா என்று நம்மால் எதையும் செய்ய முடியும் என்ற தலைக்கனத்தில் அந்த வித்தைக்காரன் "சரி போட்டிக்கு நான் தயார்" என்றான். தெனாலி அங்கு இருந்த சிப்பாயிகளிடம் கொஞ்சம் மணலைக் கொண்டு வர சொன்னான்.பின் தெனாலி அந்த மணலைக் கையில் எடுத்து கண்களை மூடியவாறு அவன் கண்ணில் போட்டுக்கொண்டான்.அதேபோல் தெனாலி செய்ததை அந்த வித்தைக்காரன் கண்களை திறந்து கொண்டு செய்ய வேண்டும்.ஆனால் வித்தைக்காரன் தன்னால் முடியாது என்று தெரிந்து தலைகுனிந்து அந்த அரசவையை விட்டு வெளியேறினான். தெனாலியின் திறமையைக் கண்டு வியந்த கிருஷ்ணதேவராயர் தெனாலிக்கு புகழாரம் சூட்டி பொற்காசுகள் வழங்கினார்.அவையில் இருந்த மந்திரிகளும்,மக்களும் தெனாலியை போற்றினர்.
   
 2. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  5,219
  Likes Received:
  486
  Trophy Points:
  83
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  கழுதையிடம் கற்றுகொள்

  ஒரு ஞானி இருந்தார் குடும்ப வாழ்க்கை வாழ்க்கை மேற்கொண்ட ஒருவர் அவரிடம் வந்தார் தான் ஞானம் பெற விரும்புவதாகவும் தாங்களே குருவாக இருந்து ஞானத்தில் சிறந்த ஞானம் எதுவோ அதை தெரிவிக்க வேண்டும் என கேட்டுகொண்டார்...! .உபதேசம் மூலம் ஞானத்தை இந்த குடும்பஸ்தருக்கு அறிய வைக்க முடியாது என ஞானி அறிந்தார் .தினமும் உன் வீட்டின் முன்னால் திண்ணையில் காலை முதல் மாலை வரை அமர்ந்திருக்கும்படியும் அந்த வழியாக சலவை தொழிலாளி கழுதையின் மீது பொதிகளை ஏற்றி வருவார் என்றும், காலையில் ஏற்றி வரும்போதும் மாலையில் திரும்பும்போதும் அதனை கவனிக்கும் படியும் கூறினார் .மறுதினம் பொழுது புலர்ந்தது குடும்பஸ்தர் திண்ணையில் அமர்ந்தார் சலவை தொழிலாளி அழுக்கு பொதிகளை கழுதை மேல் ஏற்றி வந்தார். மீண்டும் மாலையில் சலவை செய்த துணிகளையும் ஏற்றி சென்றார். .மறுநாள் ஞானியிடம் சென்றான், நீங்கள் சொன்னது போல் கலையிலும் மாலையிலும் கழுதைகள் சென்றதையும் திரும்பியதையும் கவனித்தேன், ஆனால் அதில் ஞானம் தொடர்பான செய்தி இருப்பதுபோல் தெரியவில்லையே எனக் கூறினான். ."அன்பனே குடும்பஸ்தானே!.... காலையில் கழுதைகள் அழுக்கு துணிகளை சுமந்து சென்றன. அப்போது "அழுக்கு துணிகளை சுமக்கிறோம் என்ற வருத்தம் இல்லை." அதே போல் மாலையில் "சலவை செய்த துணியை சுமக்கிறோம் என்ற மகிழ்ச்சியும் இல்லை" துன்பம் வரும்போது அதிகள் துன்பம்மின்மையும் இன்பம் வரும்போது அதிக சந்தோசம் இல்லாமலும், இன்பம் துன்பம் இரண்டையும் நடுநிலையான மனதுடன் என்று கொள்ள வேண்டும். இதுவே சிறந்த தானம். இந்த செய்தியையே அந்த கழுதைகள் மூலம் தரும் ஞானம் என்றார்.
   
 3. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  5,219
  Likes Received:
  486
  Trophy Points:
  83
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  கை

  அக்பர் சபையில் அமர்ந்து ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கும் போது ஒரு விநோதமான எண்ணம் தோன்றியது. அக்பர் சபையில் அமர்ந்து ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கும் போது ஒரு விநோதமான எண்ணம் தோன்றியது. உடனே அமர்ந்திருந்த அமைச்சர்களை நோக்கி, பொதுவாக ஒருவர் தானம் கொடுக்கின்றார் என்றால் அவரது கை உயர்ந்தும், வாங்குபவரின் கை தாழ்ந்தும் இருப்பது உண்மை! ஆனால் தானம் தரும் சமயத்தில் கை தாழ்ந்தும் பெறுபவரின் கை உயர்ந்தும் இருப்பது எந்த சமயத்தில்? இதற்கு சரியான விளக்கம் கூறுங்கள் என்றார் அக்பர். சக்ரவர்த்தி கேட்ட கேள்விக்கு அமைச்சர்கள் எவ்வளவு யோசித்தும் விடை சரியாகக் கிடைக்கவில்லை. ஆதலால் மன்னனின் கேள்விக்கு பதில் சொல்லாது மவுனமாக இருந்தனர். அச்சமயம் பீர்பால் சபையில் வந்து அமர்ந்தார் மற்ற அமைச்சர்களிடம் கேட்ட அதே கேள்வியை பீர்பாலிடம் அக்பர் கேட்டார். பீர்பால் சிரித்துக் கொண்டே சக்ரவர்த்தி அவர்களே எல்லோரும் எளிதாகப் பதில் சொல்லி விடுவார்கள். இதற்கு விடையளிக்க வேண்டும் என்பதினால் விடையளிக்கிறேன். ஒருவர் மூக்குப் பொடி டப்பியைத் திறந்து மூக்குக்குப் பொடி போடும்போது மற்றொருவர் கொஞ்சம் மூக்குப் பொடி தாருங்கள் என்று கேட்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அச்சமயம் அவர் அந்த டப்பியை அவர் முன் நீட்டுவார். மூக்குப் பொடியை எடுப்பவர் கொடுப்பவரின் கையைவிட எடுப்பவரின் கை சற்று மேலே இருக்கும். ஆகையினால் மூக்குப் பொடி தானம் தரும் சமயம் கொடுப்பவரின் கை கீழேயும் – வாங்குபவரின் கை மேலேயும் உயர்ந்திருக்கும் என்றார் பீர்பால். இந்த சின்ன விஷயம் கூட நமது அறிவுக்கு எட்டவில்லை என்று மற்ற அமைச்சர்கள் வருத்தப்பட்டனர். தன்னுடைய கேள்விக்கு சட்டென்று பதில் சொன்ன பீர்பாலை அக்பர் மிகவும் பாராட்டினார். உடனே அமர்ந்திருந்த அமைச்சர்களை நோக்கி, பொதுவாக ஒருவர் தானம் கொடுக்கின்றார் என்றால் அவரது கை உயர்ந்தும், வாங்குபவரின் கை தாழ்ந்தும் இருப்பது உண்மை! ஆனால் தானம் தரும் சமயத்தில் கை தாழ்ந்தும் பெறுபவரின் கை உயர்ந்தும் இருப்பது எந்த சமயத்தில்? இதற்கு சரியான விளக்கம் கூறுங்கள் என்றார் அக்பர். சக்ரவர்த்தி கேட்ட கேள்விக்கு அமைச்சர்கள் எவ்வளவு யோசித்தும் விடை சரியாகக் கிடைக்கவில்லை. ஆதலால் மன்னனின் கேள்விக்கு பதில் சொல்லாது மவுனமாக இருந்தனர். அச்சமயம் பீர்பால் சபையில் வந்து அமர்ந்தார் மற்ற அமைச்சர்களிடம் கேட்ட அதே கேள்வியை பீர்பாலிடம் அக்பர் கேட்டார். பீர்பால் சிரித்துக் கொண்டே சக்ரவர்த்தி அவர்களே எல்லோரும் எளிதாகப் பதில் சொல்லி விடுவார்கள். இதற்கு விடையளிக்க வேண்டும் என்பதினால் விடையளிக்கிறேன். ஒருவர் மூக்குப் பொடி டப்பியைத் திறந்து மூக்குக்குப் பொடி போடும்போது மற்றொருவர் கொஞ்சம் மூக்குப் பொடி தாருங்கள் என்று கேட்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அச்சமயம் அவர் அந்த டப்பியை அவர் முன் நீட்டுவார். மூக்குப் பொடியை எடுப்பவர் கொடுப்பவரின் கையைவிட எடுப்பவரின் கை சற்று மேலே இருக்கும். ஆகையினால் மூக்குப் பொடி தானம் தரும் சமயம் கொடுப்பவரின் கை கீழேயும் – வாங்குபவரின் கை மேலேயும் உயர்ந்திருக்கும் என்றார் பீர்பால். இந்த சின்ன விஷயம் கூட நமது அறிவுக்கு எட்டவில்லை என்று மற்ற அமைச்சர்கள் வருத்தப்பட்டனர். தன்னுடைய கேள்விக்கு சட்டென்று பதில் சொன்ன பீர்பாலை அக்பர் மிகவும் பாராட்டினார்.
   
 4. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  5,219
  Likes Received:
  486
  Trophy Points:
  83
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  அரசவை விகடகவியாக்குதல்

  அன்று கிருஷ்ணதேவராயரின் அரண்மனை அமர்களப்பட்டுக் கொண்டிருந்தது. அறிஞர் பெருமக்களும் மற்றவர்களும் மண்டபத்தில் குழுமியிருந்தனர். தெனாலிராமனும் ஓர் ஆசனத்தில் அமர்ந்தான்.
  மன்னர் கிருஷ்ண்தேவராயர் வந்தவுடன் சபை கூடியது. வேற்றூரிலிருந்து வந்த தத்துவஞானியை விழாவைத் தொடங்கி வைத்து விவாத மன்றத்தை ஆரம்பிக்கச் சொன்னர்.
  தத்துவ ஞானியும் ஏதேதோ சொன்னார். ஒருவருக்கும் ஒன்றும் விளங்கவில்லை. அவர் பேச்சின் இறுதியில் மாய தத்துவம் பற்றி நீண்ட நேரம் பேசினார். அதாவது நாம் கண்ணால் காண்பதும் மாயை, உண்பதும் மாயை என்று சொன்னார்.
  இதைக்கேட்ட அறிஞர்கள் முதல் அரசர்வரை எவருமே வாய் திறக்கவில்லை. ராஜகுரு மௌனமாகி விட்டார்.
  சுற்றும் முற்றும் பார்த்த தென்னாலிராமன் எழுந்து நின்றான்.
  தத்துவஞானியைப் பார்த்து, “ஐயா தத்துவ ஞானியாரே ஏன் பிதற்றுகிறீர் நாம் உண்பதற்கும் உண்பதாக நினைப்பதற்கும் வித்தியாசமே இல்லையா?” எனக் கேட்டான்.
  அதற்கு தத்துவஞானி வித்தியாசம் இல்லை என்றான்.
  அதை சோதிக்க தெனாலிராமன் அரசரிடம் ஒருவிருந்துக்கு ஏற்பாடு செய்யச் சொன்னார். விருந்து ஏற்பாடு ஆயிற்று.
  அனைவரும் பந்தியில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினார். தத்துவஞானிக்கு உணவு பரிமாறியும் சாப்பிடக்கூடாது எனக் கட்டளை இட்டுவிட்டனர். அதனால் தத்துவஞானி தன் தவறை உணர்ந்தான். இதைப்பார்த்த அரசர் தெனாலிராமனின் திறமையைப் பாராட்டி பொன் பரிசளித்தது மட்டுமில்லாமல் அன்று முதல் அவரது அரசவை விகடகவியாக்கினார்.
   

Share This Page