குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் தெரிந்து கொள்ளவேண்டியவை...

Discussion in 'Children care' started by NATHIYAMOHANRAJA, Mar 14, 2019.

 1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  6,340
  Likes Received:
  505
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  பொதுவாக நம் எண்ணங்களே செயலாகின்றது; செயலே பழக்கமாகின்றது; பழக்கமே வழக்கமாகின்றது; வழக்கமே ஒழுக்கம் ஆகின்றது; தனிமனித ஒழுக்கமே பண்பாடு ஆகின்றது. பண்பட்ட குழந்தைகளை உருவாக்கும் பொறுப்பு பெற்றோர்களாகிய நம்மிடம் தான் இருக்கிறது.

  சில பெற்றோர்கள் பிள்ளை மீதுள்ள பிரியத்தில் அவர்கள் போக்கிலேயே விட்டுப்பிடிக்க நினைப்பதுண்டு. அதனால் பிள்ளைகளுக்கு ஒரேயடியாக செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்டு பின்னர் சீரழிந்து போக நேரிடும்.

  எந்த வயது குழந்தையையும் திட்டவோ அடிக்கவோ கூடாது. அதாவது உடல் ரீதியாகவோ மனரீதியாகவோ துன்புறுத்தக் கூடாது.

  எந்தக் குழந்தையுடனும் உங்கள் குழந்தையைத் தொடர்புபடுத்திப் பேசாதீர்கள். அது குழந்தைகள் மனதில் ஏக்கத்தையும் தாழ்வுமனப்பான்மையையும் விதைத்து விடும்.

  குழந்தைகள் எதிரில் பெரியவர்களை மரியாதை குறைவாகப் பேசக்கூடாது. எல்லாருடைய நல்ல குணங்களை மட்டுமே குழந்தைகள் எதிரில் பேச வேண்டும். யாரையும் தாழ்த்திப் பேசக் கூடாது.

  குழந்தைகளைப் பாராட்டுவது வெகுமதி வழங்குவது போன்றவை அவர்களைக் கெடுத்துவிடும் என்று நம்புவது தவறான ஒன்றாகும். பெரும்பாலும் குழந்தைகள் எதைச் செய்தாலும் அதை விமர்சிப்பதை காட்டிலும், நல்லவற்றை எடுத்து கூறலாம்.

  குழந்தைகளுக்கும் விருந்தோம்பலைக் கற்றுத் தர வேண்டும். குழந்தைகளுக்கு உறவுகளின் அருமையையும் விட்டுக் கொடுத்தலையும் புரிய வைக்க வேண்டும்

  பிள்ளைகளின் வேலைகளை அவர்களே செய்யப் பழக்க வேண்டும். அவ்வாறு செய்தால் அவர்களுக்குப் பொறுப்புணர்ச்சி அதிகமாவதுடன் நமக்கும் வேலைப்பளு குறையும். அவர்கள் பெரியவர்களாக வளரும்போது, மற்றவர்களின் உதவியை எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது.

  ஆபத்தை விளைவிக்கும் எந்தப் பொருளையும் குழந்தைகள் கைக்கு எட்டும் தூரத்தில் வைக்கக் கூடாது. அதனால் ஏற்படும் ஆபத்தை அவர்களுக்கு விளக்குவது அவசியம் ஆகும்.

  [​IMG]
   

Share This Page