குழந்தை வளர்ப்பு பற்றிய குறிப்புகள் சில

Discussion in 'Children care' started by Thamaraikannan, Apr 28, 2019.

 1. Thamaraikannan

  Thamaraikannan Active Member

  Joined:
  Feb 8, 2019
  Messages:
  143
  Likes Received:
  80
  Trophy Points:
  28
  Gender:
  Female
  Occupation:
  Homemaker
  Location:
  Tamilnadu
  குழந்தைகளை ஆரம்ப காலத்தில் தனியே விடுவது தவறு. மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாட பழக்க வேண்டும்.
  குழந்தைகள் பேச ஆரம்பிக்கும் போது தாய்மொழியிலேயே அவர்களுடன் பேச வேண்டும். அவர்கள் நன்றாக பேச ஆரம்பித்ததும் பிற மொழிகளை பயிற்றுவிக்கலாம்.
  ஒரே குழந்தையாக இருக்கும் வீட்டில் பொதுவாக செல்லமாக வளர்பதாக எண்ணிக்கொண்டு அனைத்து வேலைகளையும் பிறர் செய்வதால் அவர்கள் எதற்க்கும் பிறரையே நாடுகின்றனர். அவ்வாறல்லாமல் அவர்களது வேலையை அவர்களே செய்ய பழக்க வேண்டும் (எ.கா) அவர்களையே உணவை உட்கொள்ள செய்தல், குளிக்க .செய்தல், அவர்கள் தேவைகளை வாய் விட்டு கேட்க செய்தல்.
  குழந்தைகள் கேட்க்கும் அனைத்தையும் வாங்கி அல்லது செய்து கொடுப்பது சரி அல்ல. அது அவர்களின் பிடிவாதத்தை அதிகரிக்கும். அவர்களுக்கு எது நல்லதோ அதையே செய்ய வேண்டும். மூன்று வயது உட்பட்ட குழந்தைகளிடம் இருந்து போன், டிவி மற்றும் கணிணி போன்ற அதிநவீன சாதனங்களை தவிர்க்க வேண்டும்.
   
  Tamilsurabi likes this.

Share This Page