கூட்டுக் குடும்பம் ...!/ Koottu kudumbam....!

Discussion in 'Short Stories' started by Mythili Ramjee, Dec 15, 2018.

 1. Mythili Ramjee

  Mythili Ramjee New Member

  Joined:
  Oct 24, 2018
  Messages:
  21
  Likes Received:
  15
  Trophy Points:
  3
  Gender:
  Female
  கூட்டுக் குடும்பம் ...!
  Short story by Mythili Ramjee

  [​IMG]

  "மயூரி...... ! மாதவி..! சீக்கிரம் கிளம்புங்க....” சுமதி தன் பெண்களை கிளம்பினாள்.
  அது ஒரு பெரிய கூட்டுக குடும்பம்.... 4 பிள்ளைகள் , 2 பெண்கள்.... நால்வரும் இன்னும் ஒரே குடும்பமாய்...
  ராகவன் ( மயூரி, மாதவியின் அப்பா ) - மூன்றாம் பிள்ளை.... மாதவிக்கு அடுத்த வாரம் கல்யாணம்... சுமதியின் மாமியார் இந்தக் கோயில் , அந்தக் கோயில் என ஒரு லிஸ்ட் போட்டுவிட்டாள் ... தட்ட முடியாது.... மொத்தக் குடும்பத்தினரும் கிளம்பினர்...
  சுமதியின் உள் மனதில் கொஞ்சம் தயக்கமும், பயமும் இருந்துக் கொண்டே இருந்தது.....
  " நான்தான் சின்ன வயசிலேர்ந்து கூட்டுக குடும்பத்திலே புகுந்துட்டேன்... இப்ப இவளுமா? தப்பு எதுவும் இல்லை... இங்கே செல்லமா வளர்ந்துட்டா.... இத்தனைப் பேரோட வளர்ந்தவ தான்.. இருந்தாலும்? திரும்பவும் கும்பல், ஓயாத வேலை, ஓட்டம் ? நான் யோசிக்கறது சரியா இல்லையா? இங்கே பக்கத்தில் இருந்தாலும் தேவலாம்... அவா இருக்கறதோ பெங்களூர்ல..... உம...! சம்மந்தி ஆத்திலேயும் 2 பெரியப்பா, ஒரு சித்தப்பா அப்புறம் ஒரு அத்தை எல்லோரும் ஒன்னாதான் இருக்கா.... சரி நடக்கறது நடக்கட்டும்...." மனதை ஒரு நிலைப் படுத்துக்கொண்டாள். சுமதி
  பெரியோர்கள் ஆசீர்வதிக்க, சிறுவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்ய மாதவி கல்யாணம் இனிதே நடந்து முடிந்தது..
  புறப்பட்டாயிற்று பெங்களூருக்கு....
  சுமதி, ராகவன், மயூரி, பாட்டி, தாத்தா எல்லோரும் உடன் சென்றனர்...
  ஸ்டேஷனிலிறங்கி மினி பஸ்சில் செல்ல, சுமதி சற்று குழம்பினாள்.. மூன்று முறை சென்றிருக்கிறாள் சம்மந்தி அகத்திற்கு .. ஆனால் இந்த வழி இல்லையே.... அமைதியாய் இருந்தாள்.
  1 மணி நேரத்தில் வண்டி நின்றது.... எல்லோரும் இறங்க அங்கே வாசலில் 10- 15 பேர் ஆரத்தியுடனும் மேள தாளத்துடனும் இவர்களை வரவேற்றனர்....
  சுமதி குழம்புவதைப் பார்த்த சம்மந்தி " சுமதி என்ன? வாங்கோ இது புதுசா நாங்க எங்கப் பையனுக்காக வாங்கி இருக்கிற சிறிய வீடு... இதுலேதான் இவா குடுத்தினம் நடத்தப்போறா... நாமதான் வருஷக்கணக்காய் கூட்டுக குடும்பத்திலே இருந்துட்டோம்... இதுகள் கொஞ்ச நாளைக்கு தனியா என்ஜோய் பண்ணட்டுமே.... என் மாமியாரோட ஐடியாதான்...!
  நாங்க பக்கத்திலேதான் இருக்கோம்... அப்படியே விட்டுட மாட்டோம்... உங்களுக்கு ஒன்னும் வருத்தம் இல்லையே ? "
  அழகாய் , தெளிவாய் பேசிய சம்மந்தியின் கையை ஆனந்தக் கண்ணீருடன் பிடித்து உலுக்கினாள் சுமதி...
   
 2. Tamilvanitha

  Tamilvanitha Well-Known Member

  Joined:
  Dec 26, 2017
  Messages:
  471
  Likes Received:
  327
  Trophy Points:
  63
  Gender:
  Female
  wow ..semma
   
 3. Tamilvanitha

  Tamilvanitha Well-Known Member

  Joined:
  Dec 26, 2017
  Messages:
  471
  Likes Received:
  327
  Trophy Points:
  63
  Gender:
  Female
  super family. ipadi than irukkanum .
   
 4. Rabina

  Rabina Well-Known Member

  Joined:
  Aug 14, 2018
  Messages:
  855
  Likes Received:
  540
  Trophy Points:
  93
  Gender:
  Female
  super family..
   
 5. Sangee26

  Sangee26 Active Member

  Joined:
  Oct 26, 2017
  Messages:
  128
  Likes Received:
  69
  Trophy Points:
  28
  Gender:
  Female
  Occupation:
  Home maker
  Location:
  Chennai
  Super
   
 6. HELEN MARY

  HELEN MARY Member

  Joined:
  Jun 18, 2018
  Messages:
  78
  Likes Received:
  36
  Trophy Points:
  18
  Gender:
  Female
  Occupation:
  Workiing
  Location:
  Chennai
  நன்று.:clap:
   

Share This Page